Monday, February 2, 2009

தமிழ் பெயர்கள்

தமிழ் பெயர்கள்தமிழின் இலக்கண, ஒலிப்பியல், மரபு முறைகளுக்கு அமைய அமைந்த பெயர் தமிழ்ப் பெயர் ஆகும்.

ஒரு நபரின் பெயர் அவரின் பின்புலத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும். ஒரு அடிமைக்கு அவரின் ஆண்டையே பெயர் வைக்கும் உரிமையைப் பெறுகிறான். அதனால் அடிமைப் பெயர்களை பல கறுப்பின மக்களும், காலனித்துவ அரசால் வேற்று நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தென்னிந்திய மக்களும் தாங்க வேணியதாகிற்று. அதே போல் அண்மைக்காலம் வரை தமிழ்ச் சூழலில் பல பெயர்கள் சாதியையும் சேர்த்துக் குறித்து நின்றன. பிள்ளை, ஐயர், படையாச்சி போன்ற பெயர் இணைப்புகள் சாதியைச் சுட்டுகின்றன.

சமயம் குறித்தும் பெயர்கள் அமைவதுண்டு. குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த தமிழர்கள் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறிய பொழுது, தமது தாழ்வுநிலையை சுட்டி நிற்கும் சாதிப் பெயர்களை விடுத்து மேற்குநாட்டு பெயர்களை ஏற்றுக் கொண்டார்கள். சிலர் சாதியைச் சுட்டாத தமிழ் பெயர்களுடன் மேறுகுநாட்டு பெயரையும் இணைத்துக் கொண்டார்கள். தமிழ் இஸ்லாமியர்களும் தமது சமயத்தை சுட்டும் வண்ணமே பெரும்பாலும் பெயர்களைக் கொண்டிருக்கின்றார்கள்.

பிற மக்களுடான தொடர்புகள் விரிவடையும் பொழுது ஒரு பெயர் வட்டம் வேற்று பெயர் வட்டத்தோடு கலப்பதும் மருபுவதும் வரலாற்று இயல்புதான். சில வேளைகளில் இது ஆக்கிரமிப்பாலும் நிகழ்வதுண்டு. சில தனித்தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மக்களிடையே காணப்படும் சமஸ்கிரத அல்லது வட மொழிப் தோற்றப் பெயர்கள் இவ்வாறு ஆக்கிரமிப்பால் சேர்த பெயர்களே என்று சுட்டி, தனித் தமிழ் பெயர்களை வைக்க ஊக்கப்படுத்துகின்றனர்.

ஒரு பெயர் தமிழ் பெயரா இல்லையா என்று அறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும் வரலாற்று, மரபு, மொழிக் குறுப்புகளை வைத்து இவை தமிழ்ப் பெயர் இவை அன்று என குத்து மதிப்பாக சொல்ல முடியும். எடுத்துக்காட்டாக யோன், யோர்டன், டேவிட் போன்றவை தமிழ் பெயர்களாக கருதப்பட வாய்ப்புக்கள் குறைவு.

புகலிடத் தமிழர்களிடம் தமிழ்ப் பெயர்கள் நீண்டதாகா இருப்பதாக கருத்து நிலவுகின்றது. விண்ணப்ப படிவங்களில் கொடுக்கப்பட்ட இடங்களுக்கு மேலாக தமிழ்ப் பெயர்கள் நீண்டு செல்வதுண்டு. இதனால் சுருக்கமான பெயர்களை இவர்கள் விரும்புகின்றார்கள். இவ்வாறான தமிழ்ப் பெயர்கள் அரிது என்ற தவறான கருத்தும் புகலிட மக்களிடம் இருக்கின்றது.
வடக்கிருத்தல்

வடக்கிருத்தல்


முற்காலத் தமிழகத்தில், போர்களின்போது முதுகிலே புண்பட்டவர்கள், அதை அவமானமாகக் கருதுவர். இதனால், அப் போர்க்களத்திலேயே வடக்கு நோக்கியபடி பட்டினி கிடந்து தமது உயிரைப் போக்கிக் கொள்வது உண்டு. இவ்வழக்கமேபழங்காலத் தமிழகத்திலே போர்களுக்குக் குறைவு இருக்கவில்லை, முடியுடை மூவேந்தர்கள் எனக் குறிப்பிடப்படும் சேரர், சோழர், பாண்டியர் என்போரும், அவர்களுக்கு அடங்கிய குறுநில மன்னரும், ஒருவருடன் ஒருவர் போரில் ஈடுபட்டனர். வீரம் என்பது ஆண்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. புகழ் பெற்ற மன்னர்கள் பெரும் வீரர்களாக இருந்தார்கள். இத்தகைய வீரர்கள் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். போர் வரும்போது புறமுதுகிடாமல் (பயந்து ஓடாமல்) முன் நின்று போர் செய்வது வீரர்களுக்கும் அவர்களது ஆண்மைக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. மார்பிலே புண்பட்டு இறப்பது புகழுக்குரியது, முதுகிலே புண்படுவது, வீரத்துக்குக் களங்கம் என்று கருதப்பட்டது. முதுகிலே புண்படுவது புறமுதுகிட்டதன் விளைவாக இருக்கலாம் என்பதனால் போலும் இவ்வாறு கருதப்பட்டது வடக்கிருத்தல் எனப்படுகின்றது.சங்க காலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் வரும் பாடல்கள் இரண்டில், சேர மன்னனான பெருஞ்சேரலாதன், கரிகால் சோழனுடன் ஏற்பட்ட போரின்போது முதுகில் புண் பட்டதனால் வடக்கிருந்து உயிர் துறந்தது பற்றிய செய்தி வருகிறது . அவ்வாறு வடக்கிருந்து உயிர் விடுவதன் மூலம், வீரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பதும், முதுகிலே அம்பெய்தவனுக்கு அது ஒரு களங்கமாகக் கருதப்பட்டது என்பதும் இப்பாடல்கள் மூலம் தெரிய வருகிறது