Thursday, March 24, 2011

நாங்களும் மகப்பேறும்

நாங்களும் மகப்பேறும்
கடந்த இரண்டு தசாப்தங்களாக இங்கு புலம்பெயர்ந்த திருமணமான
தம்பதிகள் மத்தியில் குழந்தை பேறு தள்ளிப்போதல் அல்லது குழந்தைப் பேற்றிக்கான வாய்புகள் குறைவடைந்து போதல் பாரிய உளவியல் சமூக பிரச்சனகளாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலும் இந்தப் பிரச்சனைகள் உள்ள தம்பதிகளுக்கு மகப்பேற்று நிபுணர்களால் பெரிதும் சிபார்சு செய்யப்படுவது பரிசோதனைக் குழாய் [(IN VITRO FERTILIZATION ( IVF) ]குழந்தை முறையே ஆகும்.

முதலில் இந்த தம்பதிகளை பல்வேறு கட்ட பரிசோதனைகழுக்கு உட்படுத்தி இறுதியிலேயே இந்த முறை மகப்பேற்று மருத்துவ நிபுணர்களால் சிபார்சு செய்யப் படுகின்றது.இந்த முறையில் பல நிறைகளும் குறைகளும் காணப்படுகின்றன.நிறைகளாக தம்பதிகள் இரட்டைக் குழந்தைகளாகவோ(TWINS BABY) அல்லது மூன்று குழந்தைகளாகவோ[ (TRIPILE BABY) (இதற்கு எனக்கு சரியான தமிழ் தெரியவில்லை) பெற்றுக்கொள்ள முடியும்.

குறைகளாக தம்பதிகளது கருமுட்டையும் உயிரணுவும் செயற்கைமுறையில் கருத்தரிக்கப்பட்டு தாயின் கருப்பையில் வைக்கப்பட்டு குழந்தை உருவாகுவதில் பிரச்சனைகள் இல்லை.மாறாக தம்பதிகளது கருமுட்டையும் உயிரணவும் வங்கிகளில்(SPERM BANK) பெறப்படும் பொழுது தான் பிரச்சனையே உருவாகின்றது.பரம்பரை அலகுகளை கடத்தவது குரோசோம்கள் என்பது எல்லோருக்கும் தேரிந்த விடையம்.வங்கிகளில் இருந்து பெறப்படும் பொழுது அம்மா அப்பா பக்கத்து குணாம்சங்கள் எதுவுமே இல்லாது குழந்தை பிறக்கின்றது.மேலும் உயிரணு கொடுத்தவரது பௌதீகரீதியலான விபரங்கள் பெரும்பாலும் மறைக்கப்பட்டே இருக்கும்.வங்கியில் உயிரணுவைப் பெற்று செயற்கை முறையில் கருத்தரிக்கும்பொழுது, மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத பரம்பரைஅலகு நோய்கள்(GENETIC DECICES) , உயிர் கொல்லி நோயான 0+[ (HIV 0+ ) (எயிட்ஸ்) போன்ற நோய்கள் பிறக்கப் போகின்ற குழந்தைக்கு கடத்தப்பட பெருமளவு வாய்புகள் உள்ளன.மேலும் குழந்தை வளர்ந்து சட்டச்சிக்கல்களை சந்திக்கும் பொழுது மரபணு பரிசோதனைக்கு (DNA TEST ) உட்படுத்தப் பட்டால் பாரிய உளவியல் தாக்கத்தைப்பெறுகின்றது .இவை பற்ரிய போதிய அறிவு எம்மவரிடையே போதிய அளவு இல்லமை ஒரு பெரிய குறைபாடு.

அண்மைக் காலங்களில் எமது மக்கள் தமிழகத்தில் உள்ள மகப்பேற்று மருத்துவ மனைகளில் இந்த சிகிச்சைளை மேற்கொள்வது அதிகரித்துள்ளது.இதற்கு முக்கிய காரணிகளாக தாம் வாளுகின்ற நாடுகளில் உள்ள மொழிகளை சரளமக கதைக்க முடியாத நிலமையே காணப்படுகின்றது.இந்தத் தம்பதிளது ஆசைகளை மூலதனமாக வைத்து பணம் பண்ணும் பல மகப்பேற்று மருத்துவமனைகள் தமிழத்தில் களான்கள் போல் உருவாகுவதைக் காணக்கின்றோம்.நாங்கள் கஸ்ரப் பட்டு உழைத்த யூரோக்களும் டொலர்களும் இவர்களுக்குப் போவது விமர்சனத்திற்குரிய விடையம்.இதற்குத் தீர்வே இல்லயா என்ற கேள்வி வருவது இயல்பே.முதலாவது திர்வாக இங்குள்ள மகப்பேறு மருத்துவ நிபுணர்களது ஆலோசனைகளையும் அதிநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தல்(மொழியறிவு இல்லாதவர்களுக்கு விரும்பினால் மொழிபெயர்பளர்களை மருத்தவ மனைகளே ஏற்பாடு செய்கின்றன).மேலும் தம்பதிகளுக்கு மூன்று முறைகள் சிகிச்சை பெறுவதற்கு முற்ரிலும் இலவசமாக அந்தந்தநாடுகளது மருத்துவக் காப்புறதிகள்(MEDICAL CARE) அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்கின்றன.இரண்டாவது தீர்வாக தாயகத்தில் பல பிஞ்சுகள் அம்மா அப்பாவை இளந்து நடுவீதியில் நிற்கின்றார்கள் இவர்களை முறையாக சட்டப்படி தத்து எடுத்து வளர்த்தல்.இது ஒரு சரியான தீர்வாக எனக்குப்படுகின்றது.இருந்தாலும் பெற்ற பிள்ளைபோல வருமா என்ற கேள்வி வருவது இயல்பே இது ஓர் பழமைவாதக் கருத்தாகும்.ஏனெனில் இன்றய நட்களில் பெற்ற குழந்தைகளே அம்மா அப்பாக்களின் கடைசிக்காலங்களல் சரிவரப்பர்காத நிலைகளை நங்கள் கண்கூடாகப் பார்கின்றோம். ஆக தத்துப் பிள்ளைகள் எங்களைப் பார்பார்களா என்பது இல்லை கேள்வி மாறாக நாம் இந்தப் பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகின்றோம் என்பதே எங்கள் முன்னால் உள்ள வரலாற்றுக் கேள்வியாகும்.