Skip to main content

நாங்களும் மகப்பேறும் - கட்டுரை .
நாங்களும் மகப்பேறும்


கடந்த இரண்டு தசாப்தங்களாக இங்கு புலம்பெயர்ந்த திருமணமான தம்பதிகள் மத்தியில் குழந்தை பேறு தள்ளிப்போதல் அல்லது குழந்தைப் பேற்றிக்கான வாய்புகள் குறைவடைந்து போதல் பாரிய உளவியல் சமூக பிரச்சனகளாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலும் இந்தப் பிரச்சனைகள் உள்ள தம்பதிகளுக்கு மகப்பேற்று நிபுணர்களால் பெரிதும் சிபார்சு செய்யப்படுவது பரிசோதனைக் குழாய் (IN VITRO FERTILIZATION ,-IVF) குழந்தை முறையே ஆகும்.

முதலில் இந்த தம்பதிகளை பல்வேறு கட்ட பரிசோதனைகழுக்கு உட்படுத்தி இறுதியிலேயே இந்த முறை மகப்பேற்று மருத்துவ நிபுணர்களால் சிபார்சு செய்யப் படுகின்றது.இந்த முறையில் பல நிறைகளும் குறைகளும் காணப்படுகின்றன.நிறைகளாக தம்பதிகள் இரட்டைக் குழந்தைகளாகவோ(TWINS BABY) அல்லது மூன்று குழந்தைகளாகவோ[ (TRIPILE BABY) (இதற்கு எனக்கு சரியான தமிழ் தெரியவில்லை) பெற்றுக்கொள்ள முடியும்.

குறைகளாக தம்பதிகளது கருமுட்டையும் உயிரணுவும் செயற்கைமுறையில் கருத்தரிக்கப்பட்டு தாயின் கருப்பையில் வைக்கப்பட்டு குழந்தை உருவாகுவதில் பிரச்சனைகள் இல்லை.மாறாக தம்பதிகளது கருமுட்டையும் உயிரணவும் வங்கிகளில்(SPERM BANK) பெறப்படும் பொழுது தான் பிரச்சனையே உருவாகின்றது.பரம்பரை அலகுகளை கடத்தவது குரோசோம்கள் என்பது எல்லோருக்கும் தேரிந்த விடையம்.வங்கிகளில் இருந்து பெறப்படும் பொழுது அம்மா அப்பா பக்கத்து குணாம்சங்கள் எதுவுமே இல்லாது குழந்தை பிறக்கின்றது.மேலும் உயிரணு கொடுத்தவரது பௌதீகரீதியலான விபரங்கள் பெரும்பாலும் மறைக்கப்பட்டே இருக்கும்.வங்கியில் உயிரணுவைப் பெற்று செயற்கை முறையில் கருத்தரிக்கும்பொழுது, மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத பரம்பரைஅலகு நோய்கள்(GENETIC DECICES) , உயிர் கொல்லி நோயான 0+[ (HIV 0+ ) (எயிட்ஸ்) போன்ற நோய்கள் பிறக்கப் போகின்ற குழந்தைக்கு கடத்தப்பட பெருமளவு வாய்புகள் உள்ளன.மேலும் குழந்தை வளர்ந்து சட்டச்சிக்கல்களை சந்திக்கும் பொழுது மரபணு பரிசோதனைக்கு (DNA TEST ) உட்படுத்தப் பட்டால் பாரிய உளவியல் தாக்கத்தைப்பெறுகின்றது .இவை பற்ரிய போதிய அறிவு எம்மவரிடையே போதிய அளவு இல்லமை ஒரு பெரிய குறைபாடு. 

அண்மைக் காலங்களில் எமது மக்கள் தமிழகத்தில் உள்ள மகப்பேற்று மருத்துவ மனைகளில் இந்த சிகிச்சைளை மேற்கொள்வது அதிகரித்துள்ளது.இதற்கு முக்கிய காரணிகளாக தாம் வாளுகின்ற நாடுகளில் உள்ள மொழிகளை சரளமக கதைக்க முடியாத நிலமையே காணப்படுகின்றது.இந்தத் தம்பதிளது ஆசைகளை மூலதனமாக வைத்து பணம் பண்ணும் பல மகப்பேற்று மருத்துவமனைகள் தமிழத்தில் களான்கள் போல் உருவாகுவதைக் காணக்கின்றோம்.நாங்கள் கஸ்ரப் பட்டு உழைத்த யூரோக்களும் டொலர்களும் இவர்களுக்குப் போவது விமர்சனத்திற்குரிய விடையம்.இதற்குத் தீர்வே இல்லயா என்ற கேள்வி வருவது இயல்பே.முதலாவது திர்வாக இங்குள்ள மகப்பேறு மருத்துவ நிபுணர்களது ஆலோசனைகளையும் அதிநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தல்(மொழியறிவு இல்லாதவர்களுக்கு விரும்பினால் மொழிபெயர்பளர்களை மருத்தவ மனைகளே ஏற்பாடு செய்கின்றன).மேலும் தம்பதிகளுக்கு மூன்று முறைகள் சிகிச்சை பெறுவதற்கு முற்ரிலும் இலவசமாக அந்தந்தநாடுகளது மருத்துவக் காப்புறதிகள்(MEDICAL CARE) அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்கின்றன.இரண்டாவது தீர்வாக தாயகத்தில் பல பிஞ்சுகள் அம்மா அப்பாவை இளந்து நடுவீதியில் நிற்கின்றார்கள் இவர்களை முறையாக சட்டப்படி தத்து எடுத்து வளர்த்தல்.இது ஒரு சரியான தீர்வாக எனக்குப்படுகின்றது.இருந்தாலும் பெற்ற பிள்ளைபோல வருமா என்ற கேள்வி வருவது இயல்பே இது ஓர் பழமைவாதக் கருத்தாகும்.ஏனெனில் இன்றய நட்களில் பெற்ற குழந்தைகளே அம்மா அப்பாக்களின் கடைசிக்காலங்களல் சரிவரப்பர்காத நிலைகளை நங்கள் கண்கூடாகப் பார்கின்றோம். ஆக தத்துப் பிள்ளைகள் எங்களைப் பார்பார்களா என்பது இல்லை கேள்வி மாறாக நாம் இந்தப் பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகின்றோம் என்பதே எங்கள் முன்னால் உள்ள வரலாற்றுக் கேள்வியாகும்.கோமகன்  
Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…