Skip to main content

நெருடிய நெருஞ்சி-குறுநாவல் 03.மாலை 6 மணியானாலும். வெய்யிலின் அகோரம் அடங்கவில்லை. அந்த பஸ் குளீரூட்டிய சொகுசு வண்டியானாலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. மனைவி தந்த தேங்காய்ப்பூ சிறிய துவாய் வியர்வையில் தோய்ந்து ,சிறியதாக வியர்வை மணத்தது.
"இவங்கள் எப்ப வெளிக்கிடுவங்கள் " ?
"ஆக்கள் சேரத்தான் பஸ்சை எடுப்பினம்".

பஸ் போறணை மாதிரி இருந்தது. ஒருவாறு பஸ் வெளிக்கிடத் தொடங்கியதும் முகத்தில் அடித்த காற்று வெக்கைக்கு இதமாக இருந்தது . ஆனாலும் நல்ல வடிவாக இரவு 10 மணிவரையும் பஸ் கொழும்பைக் காட்டியது எனக்கு எரிச்சலாக வந்தது. பின்பு அது கண்டி வீதியில் வேகமெடுத்தது. இருட்டில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. மனைவி களைப்பின் மிகுதியால் எனது தோழில் நித்திரையாகி விட்டா. எனக்கு நித்திரை வரமறுத்தது. பஸ்சில் ஏறும் போதே மனைவி அழுத்தமாக சொல்லியிருந்தா 

" யாரோடையும் தேவையில்லாமல் கதைக்கக் கூடது".

குறுகிய ஏ9 வீதியல் பஸ் இருளைக் கிழித்துப் பறந்தது. பல இடங்களில் புதிய சிறிய விகாரைகள் முளைத்து இருந்தன. புத்தரும் அகதியாகி இருக்க இடமில்லாமல் மீள்குடியேற்றப்பட்டுள்ளாரோ ? பஸ்டைறவரும் பஸ்சை நிப்பாட்டி நிப்பாட்டி எல்லாப் புத்தரையும் கும்பிட்டுக் கொண்டு வந்தார். பஸ்சில் நான் ஒருவன் தான் முழிப்பாக இருந்தேன், என்னடைய நிலையப்படி. என்வாழ்க்கையில் கால் நூற்றாண்டைத் துலைத்து புதிய ஐரோப்பிய முகத்துடன் வருவது மனதை பிழிந்தது. என்னுடன் கூடப்பிறந்தவர்களும், உறவுகளும் என்னை ஏற்றுக்கொள்வார்களா ? எப்படியாயினும் கண்ணரில் பங்காளியில்லாதவன் தானே. என்னால் கண்ணீரைத் தடுக்கமுடியவில்லை. இருபக்கமும் அடர்ந்த காடுகளின் எச்சசொச்சங்கள் கரைகட்டி நின்றன. இதில் தானே பரணி பாடினோம். தரணியைத் திரும்ப வைத்தோம். எத்தனை பேர் எங்களைப் பார்க்க வரிசையில் நின்றார்கள். அதில் சூது இருந்ததை எப்படி பகுத்தறியாது விட்டோம்? பஸ் வேகத்தைக் குறைத்தது. தூரத்தே இருளில் பல உருவங்களும், வீதியை மறைத்த வீதித்தடையும் தெரிந்தது. எந்த இடம் என்று சரியாகவும் தெரியவில்லை. நேரம் அதிகாலை 1.30 ஐக் காட்டியது. கலவரத்துடன மனைவியை எழுப்பினேன். மற்வர்களும் பரபரப்பானார்கள்.

"இது எந்த இடம்"? 

"ஏன் பஸ் மெதுவாகப் போகின்றது"? 

சற்றுமுற்றும் பார்த்த மனைவி,

" இதுதான் ஓமந்தைசோதனைச்சாவடி"

"நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ நான் பாத்துக்கொள்ளுறன், நீங்கள் கதைக்கப்படாது". 

எனக்குப் பயத்தில் வியர்த்துக்கொட்டியது.மனைவி நிதானமாகத் தனது இலங்கை அடையாள அட்டையையும் இருவரது கடவுச்சீட்டுக்களையும் எடுத்து வைத்துக்கொண்டா. எமது பஸ்சின் முன்னே பல வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. தூரத்தே ஐந்தாறு வரிசைகளில் வாகனங்கள் சோதனையிடப்பட்டுக் கொண்டிருந்தன. பஸ் முற்றாகவே தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. அந்த இடம் ஒரு நிரந்தர படைமுகாமைற்குத் தேவையான வசதிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வாகனத்தையும் நிறதுத்தி சோதனையிட்டவாறே சாரதிகளை போய் தங்கள் விபரங்களைப் பதியுமாறு கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்கள் இராணுவச் சிப்பாய்கள். எமது பஸ்சில் ஏறிய சிப்பாய்கள் உள்ளூர் ஆட்களை இருக்கும்படியும் வெளிநாட்டவர்களைப் பதியும் இடத்திற்குப் போகும்படி சிங்களத்தில் சொன்னார்கள் . பஸ்சில் இருந்தவர்கள் எங்களை விரோதமாகப் பாரத்தது அப்பட்டமாகவே தெரிந்தது. எங்களால் தங்களுக்குத் தொந்தரவு வரும் என நினைத்தார்களோ? எங்களுடன் இருவருமாக 4 பேர் பஸ்சைவிட்டு இறங்கினோம். மனைவியை முன்னே விட்டு நான் பின்னே வலிந்த புன்னகையுன் நின்று கொண்டேன். மனைவியின் விபரங்களைப் பதிந்து கொண்டே சிங்களத்தில் உரையாடத் தொடங்கினாள் அந்தப் பெண் அதிகாரி.கோமகன் 
தொடரும்.
Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…