Skip to main content

Posts

Showing posts from October, 2011

நெருடிய நெருஞ்சி-குறுநாவல் 22.

எல்லோரும் அவதிப்பட்டு பஸ்சை விட்டு இறங்கினார்கள் . நாங்கள் நிதானமாக கடைசியாக இறங்கினோம் . காலை வேளை செம்மஞ்சள் பூசிச் சூரியன் சுட்டெரித்தான் . பஸ்ராண்ட் ஞாயிற்றுக் கிழமையானதால் தூங்கி வழிந்தது . எனக்கு நன்றாக வியர்த்து ஊத்தியது . தண்ணி விடாயால் நாக்கு வறட்டியது . நான் அம்மன் கோயில் மூலையில் இருந்த கடைக்குத் தண்ணிப் போத்தில் வாங்கப் போனேன் . பெறாமக்களும் என்னுடன் ஒட்டிக்கொண்டார்கள் ரொபி வாங்க . அவர்கள் கையில் ஏற்கனவே வல்லிபுரக் கோயிலில் வாங்கிய விளையாட்டுச் சாமான்கள் நிறைந்திருந்தன . எனக்கு தண்ணிப் போத்திலையும் , அவர்கள் கேட்ட ரொபியையும் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி அம்மன் கோயில் வீதியால் நடந்தோம் . வழக்கத்துக்கு மாறாக இன்று அம்மன் கோயில் வீதி வெறிச்சென்று இருந்தது . அங்கொன்றும் இங்கொன்றுமாக சனங்கள் சைக்கிளில் போய் கொண்டிருந்தனர் . நாங்கள் வீதியால் நடப்பது இலகுவாக இருந்தது . வீதியைக் கடந்து ஒழுங்கையில் இறங்கியபொழுது , அங்காங்கே ஆடுகளும் இப்பிலிப்பில் குழைகளைக் கடித்தபடியே எங்களுடன் நடை பயின்றன . பெறாமக்கள் அவைகளுடன் சேட்டை விட்டுக் கொண்டு எங்களுடன் நடந்தார்கள் . நாங்கள் வீட்டை அடைந்தப…

நெருடிய நெருஞ்சி-குறுநாவல் 21.

கடைவாசலில் கடல் காத்துத் தென்றலாக வீசியது , நடந்து வந்த வியர்வைக்கு இதமாக இருந்தது . ஆவிபறக்கும் தேத்தண்ணியையும் ,றோல்ஸ்சையும் உள்ளே தள்ளினோம் .வெளியே சிறிது தூரத்தில் பஸ்ராண்ட் தனது பரபரப்புகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டிருந்தது .குடிமகன்கள் தங்கள்பாட்டிற்கு தமிழை வளர்த்துக் கொண்டு கடைவீதியால் ஊர்ந்துகொண்டிருந்தார்கள். ஒருசிலரில் இன்றைய சூழ்நிலையின் மனவெக்கை போதையினூடாக வாயால் வெளிவந்துகொண்டிருந்தன. அவர்களைப் பார்கும்பொழுது பாவமாக இருந்தாலும் , கிடைக்கின்ற சிறிய வருமானத்தை இப்பிடி அனியாயமாக்கின்றார்களே என்று கோபம் கோபமாக வந்தது . ஆனால் எனது மனமோ என்னிடம் சண்டை பிடித்தது .< நீ என்ன பெரிய திறமா ? நீயும் கடையில வந்து ரீயும் றோல்ஸ்சும் சாப்பிடுறாய்தானே > என்றது. நானும் அதனுடன் சமரசம் செய்துகொண்டிருந்தேன் . எனது சிந்தனையை கடைப் பெடியனின் குரல் கலைத்தது.
" என்ன அண்ணை யோசினை? எப்ப போறியள் "?
நான் சிரித்தேன் .
"உங்களிட்டை ஒண்டு கேக்கவேணும் எண்டு இருந்தனான் ".
"சொல்லும்".
"இல்லையண்ணை வெளீல வந்தால் நல்லாய் உளைக்கலாமே"? 
"ஏன் இப்ப உமக்கு என்ன ப…

நெருடிய நெருஞ்சி-குறுநாவல் 20.

ஏழாலை தொட்டதெல்லாம் பொன்கொழிக்கும் சிவந்தபூமி அரசபதவிகளில் பலர் இருந்தாலும் அவர்களது பக்கவருமானம் தோட்டமே முக்கியமாக சிறுதோட்டப்பயிர்களே அவர்களது முயற்சியாகும். அண்ணையும் இதற்கு விலக்கு இல்லை. நாங்கள் வீட்டை அடந்தபொழுது அந்தச்சூழல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது வீடு எங்கும் பசுமை போர்த்தி மனதிற்கு இதமாக இருந்தது. பலாவும், மாவும் ,கமுகுவும், அழகான பூக்கண்டுகளும் அணிவகுத்தன. ஒரு பலாவில் பழம் பழுத்ததால் அதன் வாசம் எங்கும் பரவியிருந்தது. கமுகுவில் பாழை பிளந்து அழகாக இருந்தது .நான் வீட்டிற்க்குள் போகமல் வளவைச்சுற்ரி வந்து கொண்டிருந்தேன். பிலாமரத்துக்கு அடியில் ஒரு கூட்டிலே, இரண்டு அடுக்கு வசதிகளுடன் பத்துப் பதினைந்து முயல்கள் துள்ளி விழையாடின .அவைகளில் பலவிதமான தரங்களில் புல்லுகளை மேய்ந்து கொண்டிருந்தன. கூட்டுக்குள் அவை இருந்தாலும், அம்மா, அப்பா, அக்கா, அண்ணை, தங்கைச்சி, என்று உறவுகளுடன் சந்தோசமாகத் துள்ளி விழையாடின .எனக்கு இல்லாத ஒன்றை அந்த முயல்கள் பெற்றதை நினைக்கும்பொழுது, மனதில் முள் ஒன்று ஆழமாகக் கோடுபோட்டு இழுத்தது. எனது சிந்தனையை அண்ணையின் குரல் கலைத்தது,

"இங்கை என்னடாப்பா …