Skip to main content

நெருடிய நெருஞ்சி-குறுநாவல் 20.ஏழாலை தொட்டதெல்லாம் பொன்கொழிக்கும் சிவந்தபூமி அரசபதவிகளில் பலர் இருந்தாலும் அவர்களது பக்கவருமானம் தோட்டமே முக்கியமாக சிறுதோட்டப்பயிர்களே அவர்களது முயற்சியாகும். அண்ணையும் இதற்கு விலக்கு இல்லை. நாங்கள் வீட்டை அடந்தபொழுது அந்தச்சூழல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது வீடு எங்கும் பசுமை போர்த்தி மனதிற்கு இதமாக இருந்தது. பலாவும், மாவும் ,கமுகுவும், அழகான பூக்கண்டுகளும் அணிவகுத்தன. ஒரு பலாவில் பழம் பழுத்ததால் அதன் வாசம் எங்கும் பரவியிருந்தது. கமுகுவில் பாழை பிளந்து அழகாக இருந்தது .நான் வீட்டிற்க்குள் போகமல் வளவைச்சுற்ரி வந்து கொண்டிருந்தேன். பிலாமரத்துக்கு அடியில் ஒரு கூட்டிலே, இரண்டு அடுக்கு வசதிகளுடன் பத்துப் பதினைந்து முயல்கள் துள்ளி விழையாடின .அவைகளில் பலவிதமான தரங்களில் புல்லுகளை மேய்ந்து கொண்டிருந்தன. கூட்டுக்குள் அவை இருந்தாலும், அம்மா, அப்பா, அக்கா, அண்ணை, தங்கைச்சி, என்று உறவுகளுடன் சந்தோசமாகத் துள்ளி விழையாடின .எனக்கு இல்லாத ஒன்றை அந்த முயல்கள் பெற்றதை நினைக்கும்பொழுது, மனதில் முள் ஒன்று ஆழமாகக் கோடுபோட்டு இழுத்தது. எனது சிந்தனையை அண்ணையின் குரல் கலைத்தது,


"இங்கை என்னடாப்பா செய்யிறாய் ? "

"உனக்கு என்னம் சின்னப்பிள்ளைக் குணம் விட்டுப்போகேல".

என்றவாறே கோப்பியைத் தந்தார்.

நான் வலிந்து சிரித்தேன் எனது முகமாற்ரத்தை உணர்ந்த அண்ணை,

" என்னடாப்பா நானும் நீ வந்தநேரம் தொட்டு பாக்கிறன் நீ சந்தோசமாய் இல்லை . என்ன பிரச்சனை ? அண்ணைதானே சொல்லு ".

" இல்லை அண்ணை எனக்கு எதிலையும் இங்கை ஒட்டுதில்லை ".

ஏன் அப்பிடி சொல்லுறாய் ? நாங்கள் உன்னை வித்தயாசமாய்ப் பாக்கேலையே ?

" எனக்கும் உங்கள் எல்லாரோடையும் நேரடி தொடர்பு விட்ட காலம் கூட அண்ணை அதால எல்லாமே இயந்திரத்தனமாக் கிடக்கு " .

" நீ தேவையில்லாமல் குளம்புறாய் . கதையோட கதையா நான் என்ர இலக்கிய கூட்டுகள் கொஞ்சப்பேரை நீ வந்திருக்கிறாய் எண்டு வரச்சசொல்லியிருக்கிறன் அவையும் வாறதாய் சொல்லீச்சினம் ".

" ஏன் அண்ணை ? நான் ஒண்டும் எழுதிப் பெரிசாய் வெட்டிக்கிளிக்கேல .

"அவை வாறதாய் சொல்லியிருக்கினம். நீயும் அவையளோட நாலு கதையளைக் கதைச்சால் தானே உனக்கும் இங்கைத்தையான் நிலமையள் விளங்கும் ".

"சரி அண்ணை அவையைச் சந்திப்பம்"

அண்ணையின் பிள்ளைகள் என்னுடன் ஒட்டிக்கொண்டார்கள் . எல்லோரும் என்னைப்பற்ரி நன்றாகக் கற்பனை பண்ணி வைத்திருந்தார்கள் . எனது நிஜம் அவர்களுக்கு ஒரளவு ஏமாற்ரத்தையே தந்திருந்தது . அவர்கள் என்னை ஒரு வெள்ளையாக , நெடியவனாக , உருவகப்படுத்தியிருந்தார்கள் . அவர்களது சிறிய மனதின் கற்பனை அப்படி!!! . நான் அவர்களது கற்பனையைக் கேலி பண்ணிக்கொண்டு இருந்தேன் .நேரம் 11 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது . அண்ணையின் கூட்டுகள் ஒவ்வொருத்தராக வந்து சேர்ந்தார்கள் . வீட்டின் பிலாமரத்தின் கீழ் அரட்டை தொடங்கியது . நான் அண்ணைக்கு வாங்கியந்த ஜே பி யும் , மெண்டிஸ் ஸ்பெசலும் ஒரு சிறிய மேசையில் நடுநாயகமாக இருந்தன . பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு தொடங்கியது எங்களது அரட்டை .

எல்லோரும் எனது பார்வையில் இன்றய நிலமையை அறியவே ஆர்வம் காட்டினார்கள் . என்னுடன் சில இடங்களில் உடன்பட்டாலும் , பலதிற்கு அவர்கள் தங்களது வியாக்கியானங்களையே தந்தார்கள் . அவர்களின் வாதங்களில் இருந்து அவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவே தெரிந்தது .போரின் அவலங்களும் வன்னிப்பேரவலமும் அவர்களிடம் ஆறாவலியாக கீறிக் கிழித்திருந்தது.எனது கேள்வியான இளையசமூகத்தின் கலாச்சார சீர்கேட்டிற்கான அவர்களது பதில் ஏற்ருக் கொள்ளக்கூடியதாகவே இருந்தது . அதாவது ,< ஓர் இறுக்கமான சூழலில் வளர்ந்த இந்த இளையவர்கள் அபரீதமான தொடர்பாடலின் வளரச்சியில் இவர்கள் அள்ளுப்படுவது தவிர்க முடியாததே . ஆனால் , இவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறை இதில் தெளிவுடன் இருக்கும்> என்றார்கள் . அத்துடன் புலம்பெயர் சமூகத்தையும் அவர்கள் ஒரு பிடி பிடிக்கத்தவறவில்லை .< புலம் பெயர் சமூகத்தின் அளவில்லாத காசு இவர்களை அடைவதும் ஒருகாரணம் என்று குறிப்பிட்ட அவர்கள் , வடக்கு கிழக்கு மக்களை ஒரு இரக்கத்துக்குரிய நபர்களாகப் பார்பதும் , அதைக் காரணங்காட்டி அந்த மக்களுக்குப் பணத்தை வாரியிறைப்பதாலும் , இந்த இளயசமூகம் திசைமாறுவதற்கு ஒரு காரணியாக இருந்தது என்று குமுறினார்கள் >. ஆனால் , எனக்கு அவர்களது வாதம் இறுதியில் இரசிக்கும்படியாக இருக்கவில்லை . இவர்களுக்கு இன்னல்கள் வரும்பொழுது கைகொடுக்கின்ற எங்களுக்கு ,அவர்களிடம் கேள்வி கேட்கின்ற உரிமைகளை அவர்கள் மறுத்தது எனக்கு வலியை ஏற்படுத்தியது . எம்முடன் உள்ள தொடர்புகள் பணத்தின் அடிப்படையில் தானா உருவானது ? அப்போ நாங்கள் இவர்களின் இரத்த உறவுகள் இல்லையா ? எனது மனம் இரத்தம் வழிந்து உறைந்தது .நான் அமைதியாக இருந்ததை பார்த்த அண்ணை என்னை நிஜத்திற்குக் கொண்டு வந்தார்.

"அப்ப எல்லாரும் சாப்பிடுவமே"?

" ஓம் அண்ணை எனக்கும் பசிக்கிது".

எல்லோரும் சாப்பிட இருந்தோம் . அண்ணியின் சமையல் கைப்பக்குவம் ஏனோ அம்மாவை நினைவிற்குக் கொண்டு வந்தது. அன்று இரவு அங்கேயே நின்று அடுத்த நாள் காலை பரித்தித்துறைக்கு வெளிக்கிடத் தயாரானோம். இந்தமுறை அண்ணை எங்களை பஸ் எடுக்கவிடவில்லை. நண்டுபிடித்து நின்று தனக்கு தெரிந்தவரின் ஓட்டோவைப் பிடித்து விட்டு, எங்களிடம் காசு கேட்கக் கூடாது என்று அவரிடம் சொல்லிவிட்டார். எங்களை ஏற்ரிக்கொண்டு ஓட்டோ அந்தக் காலை வேளையில் பரித்தித்துறைக்கு வெளிக்கிட்டது. ஓட்டோ உள்ள ஊரி சந்து பொந்துக்களில் எல்லாம் புகுந்து போனது. எல்லா இடமும் தோட்டங்கள் பசுமை போத்தியிருந்தன. தோட்டத்திற்கு அடித்த மலத்தியனின் நெடி மூக்கை அடைத்தது. ஒழுங்கைகளின் இருபக்கமும் ஏழ்மையும் பணக்காரத்தனமும் போட்டி போட்டு வீடுகளில் அணிவகுத்தன. சில மணி நேர ஓட்டத்திற்குப் பின்பு பரித்தித்துறையை வந்தடைந்தோம்.நாங்கள் மீண்டும் கொழும்பு போகின்ற நாள் நெருங்குகிறதால் மாமி பரித்திதுறை வடை மாலுக்குள் சுட்டுக்கொண்டிருந்தா .அன்ரி வடகம் காயப்போட்டுக்கொண்டிருந்தா .மாமா சாய்மனைக்கதிரையில் இருந்து கொண்டு இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் .


நேரம் மதியத்தை நெருங்கிக்கொண்டிருந்தது .வெக்கை அனல் பறத்தியது. நான் மாமரத்தடியில் கதிரையைப் போட்டுவிட்டு , வரும் வழியில் வாங்கி வந்த உதயன் பத்திரிகையை மேய்ந்தேன். எனக்கு வந்த களைப்பால் நித்திரை எட்டிப்பார்தது. அப்படியே நித்திரையாகி விட்ட என்னை மனைவி எழுப்பினா. நான் எழும்பி சாப்பிட்டுவிட்டுத் திரும்பவும் படுத்து விட்டேன்.நான் மீண்டும் நித்திரையால் எழும்பியபொழுது பின்நேரம் 4 மணியாகியிருந்தது ஓரளவு வெக்கை அடங்கிக் கடல் காத்து வீசியது நான் கிணற்ரடியில் போய் வாளியால் அள்ளிக் குளித்தேன்.குளித்து வெளிக்கிட்டு நானும் மச்சானும் பஸ்ராண்டுக்கு வெளிக்கிட்டோம் எமது வழமையான பாதையால் நடக்கத்தொடங்கினோம் நாங்கள் பஸ்ராண்டை அடைந்தபொழுது வழமையான பரபரப்பில் அது அமிழ்ந்து போய்இருந்தது. நாங்கள் பஸ்ரண்டில் வவுனியா போவதிற்கு முற்பதிவு செய்தோம்பின்பு பிளேன் ரீ அடிக்க மீன்சந்தைக்குப் பக்கத்திலுள்ள ரீகடைக்குள் உள்ளட்டோம் பிளேன் ரீயையும் றோல்ஸை யும் எடுத்துக்கொண்டு கடைவாசலுக்கு வந்து நின்று கொண்டோம்.கோமகன் 
தொடரும்


Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…