Skip to main content

Posts

Showing posts from 2012

வேட்டை.............பத்தி - கோமகன்.

1977 ல் ஒருநாள் காலைமை எங்கடை வீட்டு கோலிலை இருந்து படிக்கிறன் எண்டு அப்பாவுக்கு படம் காட்டிக்கொண்டிருந்தன் . எனக்கு அப்பாவிலை செரியான கோபம் . நான் தமிழிலை 85 மாக்ஸ் எடுத்தனான் . அவருக்கு நான் 98 மாக்ஸ் எடுக்கேலையெண்டு தென்னம்பாழையாலை தன்ரை கோபத்தை என்னிலை தீத்து போட்டார். நான்தான் வகுப்பிலை கெட்டிக்காறன்.எல்லாப்பாடத்திலையும் 80க்கு மேலை எடுப்பன் . நல்லாய் விளையாடுவன் . நான்தான் உயரம் பாயிறதிலையும் சரி , குண்டு எறியிறதிலையும் சரி , உதைபந்து அடிக்கிறதிலையும் சரி முதல் ஆள் . இதாலை பெட்டையளிட்டை போட்டி ஆர் என்னோடை கூடப் பழகிறதெண்டு . இந்த குவாலிபிக்கேசன் எல்லாம் என்ரை அப்பரை குளித்திப்படுத்தேலை.என்னை தென்னம்பாழையாலை வகுந்து போட்டார். அப்பர் அடிச்ச காயம் எனக்கு செரியான கோபத்தை கிளறி போட்டுது . நான் சாப்பிடாமல் அடம் பிடிச்சன் . அம்மாச்சி வேப்பண்ணை பூசி சமாதானத்துக்கு வந்திது . நான் அம்மாச்சியோடையும் கதைக்கேலை . இண்டைக்கு காலமை எழும்பி தமிழ் புத்தகத்தை துறந்து வைச்சுக்கொண்டு சும்மா படம் காட்டிக்கொண்டிருந்தன் . சந்திரனும் முயலும் பாட்டும் எனக்கு மண்டையிலை ஏறேலை . எங்கடை க…

அன்பை துலைச்ச தோசையளும் வடையளும் -பத்தி - கோமகன்.

முந்தி என்ரை அம்மாவும் சரி , அம்மாச்சியும் சரி , வெள்ளைப் பச்சைஅரிசி ஊறப்போட்டு , உரலிலை இடிச்சு ஆட்டுக்கல்லுலை தோசைக்கு மா அரைச்சுத்தான் தோசை சுட்டுத்தாறவை . இதைமாதிரித்தான் அம்மாச்சியும் உனக்கு அப்பம் சுட்டுத்தாறன் பேரப்பெடியெண்டு , சுடச்சுட கள்ளு என்னைக்கொண்டு வாங்குவிச்சு அதுக்குள்ளை அம்மாச்சியும் தன்ரை பங்கை அடிச்சுப்போட்டு எனக்கு அப்பம் சுட்டுத் தந்தவா . அதுவும் அம்மாச்சியின்ரை பால் அப்பம் ( பாலுக்கு நடுவிலை கருப்பட்டியும் போட்டு ) . சொல்லிவேலையில்லை . இதுகளை ஏன் சொல்லிறன் எண்டால் அப்ப எல்லாருக்குமே இயற்கையா உடல் உழைப்பு இருந்தீச்சிது . அதாலை நல்ல மெல்லீசா 90 வயசுக்கு மேலையும் பொல்லு பிடிக்காமல் இருந்தீச்சினம் .
இண்டைக்கு எனக்கு என்ரை மனுசி ஒரு வீடியோ கிளிப் ஒண்டை காட்டிச்சிது . இதை ஒருக்கால் பாருங்கோப்பா எண்டு . எனக்கு ஐஞ்சும்கெட்டு அறிவுங்கெட்டு போச்சிது . இவளவை நோர்மலாயே சீரியலுகளுக்கை சிக்கெடுக்கிறவளவை ,  இதுகளையும் பாத்தாளவை எண்டால் எங்கடை நிலமையை யோசிச்சு பாத்தன் , எனக்கு கிறுதி அடிக்காத குறை கண்டியளோ . அலட்டாமல் நேரை மாற்றறுக்கு வாறன் . என்ரை அம்மாவும் அம்மாச்சியும் செய…

நாயன்மார்கள் அறுபத்துமூவர் - மெய்யியல் கட்டுரை - பாகம் 06.

60 . மூர்த்தி நாயனார் .

"மும்மையாலுல் காண்ட மூர்த்திக்கு மடியேன்” – திருத்தொண்டத் தொகை.
மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார். அவர் சிவபெருமான் திருவடிகளையே மெய்யடியாக பற்றினவர். அத்திருவடிகளே தமக்குத் துணையும், தாம் அடையும் பொருளும் எனக் கொண்ட கொள்கையினாராய் வாழ்ந்தவர். அவர் திருவாலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குத் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார்.
அந்நாளில் வடுகக் கருநாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் நன்நெறியாகிய திருநீற்றுச்சார்புடைய சிவநெறியில் செல்லாது தீ நெறியாகிய சமணர் திறத்தில் ஆழ்ந்து சிவனடியார்களையும் அவர்களது அடிமைத்திறம் செல்லவொட்டாது தீங்கு செய்வாயினான். அவ்வாறு சமணத்திற்கு உட்படுத்த எண்ணி, மூர்த்தியாரையும் பல கொடுமைகள் செய்தான்.
அவர் அவற்றால் ஒன்றும் தடைப்படாது தமது நியதியான திருப்பணியைச் செய்து வருவா…

நாயன்மார்கள் அறுபத்துமூவர்- மெய்யியல் கட்டுரை - பாகம் 05 .

51 புகழ்ச்சோழ நாயனார் .

“பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ் சோழற்கடியேன்” – திருத்தொண்டத் தொகை .
சோழநாட்டு உறையூர்த் தலைநகரில் இருந்த அரசாண்ட மன்னர் புகழ்ச்சோழர், அவர் தமது தோள்வலிமையினால் உலக மன்னர்கள் தமது பணிகேட்டுத் தமது பணிகேட்டுத் தமது ஆணையின் கீழ் அடங்கி நடக்கச் செங்கோல் ஆட்சி புரிந்தனர்.
சிவாலயங்களில் எல்லாம் பூசனை விளங்கச் செய்வித்தும், அடியார்க்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தும், திருநீற்று நெறி விளங்கச் செய்தார். இவ்வாறு உறையூரில் இருந்து செங்கோல் செலுத்திய புகழ்ச்சோழர் கொங்கரும், குடபுலமன்னவர்களும் ஆகிய சிற்றரசர்களிடம் திறைபெறற் பொருட்டுத் தமது மரபின் தலைநகராகிய கருவூரை அடைந்தார். கருவூர் ஆனிலைக் கோயிலில் வழிபட்டு அத்தாணி மண்டபத்தில் அரச கொலு வீற்றிருந்து அம்மன்னர்கள் கொணர்ந்த திறை கண்டிருந்தனர். திறை கொணர்ந்து பணிந்த மன்னர்களுக்குச் செயலுரிமைத் தொழில் அருளினர். அவ்வாறு திறை கொணரா மன்னர் உளராகில் தெரிந்துரைப்பீர் என்று அமைச்சருக்குக் கட்டளை இட்டார்.
இவ்வாறு கருவூரில் தங்கிய நாட்களில், சிவகாமி ஆண்டார் என்னும் அடியார் சிவனுக்குச் சாத்தக் கொணர்ந்த பூவைப் பறித்துச் சிந்தியதனால் …

மறந்த நாயன்மார்கள் அறுபத்துமூவர் -மெய்யியல் - கட்டுரை- பாகம் 04.

31 சத்தி நாயனார் .

“கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்” – திருத்தொண்டத் தொகை .
சோழ நாட்டில் வரிஞ்சை ஊரில் வாய்மை வேளாண் குலம் விளங்க அவதரித்தார் சத்தி நாயனார். அவர் சிவனிற்கு ஆட்சி செய்யும் திறத்தினர். யாவரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ்துரைப்பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சத்தியார் எனப் பெயர் பெற்றார். சத்தியார் இகழ்வோர் நாவை குறடாற்பற்றி இழுத்து கத்தியால் அரிந்து தூய்மை செய்வார். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவன் திருவடி சேர்ந்தனர்.
32 சாக்கிய நாயனார் .
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் – திருத்தொண்டத் தொகை .
சாக்கிய நாயனார் திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார். எவ்வுயிர்க்கும் அருளுடையாராய்ப் பிறவாநிலை பெற விரும்பிக் காஞ்சிநகரத்தை அடைந்து புத்தசமயத்தை மேற்கொண்டிருந்தார். இறைவன் திருவருள் கூடுதலாற் புத்தம் முதலியன புறச்சமயச் சார்புகள் அல்ல என்றும், ஈறில் சிவநன்நெறியே பொருளாவதென்றும் துணியும் நல்லுணர்வு கைவரப்பெற்றார். “செய்யப்படும் வினையும…