Wednesday, March 14, 2012

எனக்கு பிடிக்கும்

எனக்கு பிடிக்கும்

 


என்னை நம்பவைத்து

என் கழுத்து நரம்புகளை

நறநற வென அறுக்கும்

உன்னை எனக்கு பிடிக்கும்.


எதிர்பார்த்து காத்திருந்த

என் கண்களை கூரிய முனையால்

குத்தியிழுத்தெடுக்கும்

உன்னை எனக்கு பிடிக்கும்.


நா நுனியில் நட்பென்று பேசி

நீ நிலைநாட்டும் நயவஞ்சகம்

எனக்கு பிடிக்கும்.


கனிவாய் நீ பேசி

கன்னத்தில் தடவி

கண்களால் சைகை செய்து

என் கணங்களை நீ

எண்ணிக் கொண்டிருப்து பிடிக்கும்


உன் வலையில் நான்

வீழ்ந்து விட்டதை உணர்ந்தும்

உண்ணாமல் உறங்குவது போல்

இரசிப்பது பிடிக்கும்


உன்குலமே அழிந்தாலும்

உன் காலம் கனிந்து வரும்வரை

உள்ளுக்குள் நகைத்தபடி

என்னை போட எத்தனிக்கும்

உன் குணம் பிடிக்கும்
என் முதுகை தடவியபடியே

எந்த இடத்தில் குத்தலாமென

சரியான இடம் தேடும்

உன்னை எனக்கு

மிக மிக பிடிக்கும்

கோமகன்

Monday, March 12, 2012

ஏக்கம்

 ஏக்கம்

 

பசியின் வலி
பார்வையில் தெறிப்பு ........
முல்லையின் மைந்தர்கள்
மற்றவர்களுக்கு
பசி போக்கிய காலம் போய் ,
ஒரு பிடி சோறுக்காய்
நாலுகால் பிராணிபோல்
ஆணவத்தின் பின்னால்
ஆரோகணிக்கும் அவலம்தான் என்ன ????

புலத்திலே புறணி படிக்காமல்
பேச்சைக் குறைத்து
செயலை கூட்டினால்
நாலுகால் இருகாலாக வருமே !!!!!!!

ஒருநாளிற்கு ஒரு யூறோ போக்கிடுமே
என் இனத்தின் இழிநிலையை...........
ஒருவேளை சிங்கவம்சங்களுக்கும்
நாளை இதே நிலை வரலாமோ??

இப்பொழுது சிங்கங்கள்
எம் நிலைகண்டு

சிங்காரமாய் சிரிக்கலாம்
ஆழிப்பேரலையாய் வந்தபொழுது

அவர்களுக்கும் பசி 
நாம்தானே கைகொடுத்தோமே

ஏனெனில் ...........
நாங்கள் தமிழர்!!!!!!!


கோமகன் 
12 பங்குனி 2012

Sunday, March 4, 2012

நடக்குமா??????????????

நடக்குமா????



பொய்மையும் கயமையும்

கொட்டமடிக்கும் வேளையில்

வாய்மையும் நீதியும்

நடைபயிலவேண்டும்


நாணிக் குறுகி நிற்கும் என் இனம்

வீறு நடைபோடவேண்டும்

அடிமைச் சங்கிலியை

உடைத்த தமிழச்சிகள்

தரணியில் வாழவேண்டும் 
கறையான் புற்றில்

குடியிருக்கும் பாம்புகள்

குளறியோடவேண்டும்

தகரக் கொட்டகை வாழ்வு

உக்கியே போகவேண்டும்
உழுத்த எம்வாழ்வு

உயரவே வேண்டும்

எங்கள் நண்டுக்குணம்

மாறி,

அடம்பன் கொடியும் திமிறித்

திரண்டால் நடக்கும்

இவை நடக்குமா ??????????

கோமகன்