Skip to main content

Posts

Showing posts from May, 2012

அவன் யார்? -சிறுகதை - கோமகன்.

அவன் யார் ?


1989 ஞாயிறு அதிகாலை புறநகர் பகுதி ஒன்றில் குளிருக்கு போர்வையினுள் சூட்டை தேடிக்கொண்டிருந்த என்னை , தொலைபேசி மணி எடுக்குமாறு அடம்பிடித்துக் கடுப்படித்தது . வேண்டாவெறுப்பாக தொலைபேசியை எடுத்து "கலோ........" என்று மெதுவாக இழுத்தேன் . " மச்சான் நான் குகன் கார் து லியோன் இலை இருந்து பேசிறன் . கோச்சி இபத்தான் லியோனாலை வந்தது . உன்ரை அப்பார்மன்ற் கோட் நம்பறை சொல்லு " என்றான் . நான் நம்பரைச் சொல்லியவாறே ," எத்தினை மணிக்கு இங்கை வாறாய் என்று கேட்டேன் " ? " இன்னும் அரைமணித்தியாலத்திலை உங்கை இருப்பன் " என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான் . நான் படுக்கையில் இருந்துகொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன் . குகன் எனது வகுப்புத்தோழன் .நானும் அவனும் சிறுவயதிலிருந்தே ஒரே வகுப்பு . இங்கு இருப்பது வேறுவேறானாலும் எங்கள் கூட்டு உடையாது இறுகித்தான் இருந்தது . சிறுவயதில் காதலித்தவனுக்கு தாய் முறுகியபொழுது அவாவைச் சமாதானம் செயது குகனுக்குக் கலியாணம் செய்வித்ததும் நான் தான் . பின்பு 87களில் மனைவியையும் பிள்ளையையும் விட்டுவிட்டு இங்கு என்னிடம் வந்துவிட்டான் .ஆரம்பத்த…

என்ரை முதல் அனுபவம்-பத்தி - கோமகன்.

நேற்று இரவைக்கே என்ரை மனிசி சொல்லிப்போட்டா,நாளைக்கு வேலையால வரேக்கே வோட் பண்ணவேணும் எண்டு.நான் போவம் எண்டு சொல்லிப் போட்டு யாழ் இணையத்தை நோண்டிக் கொண்டிருந்தன்.விடிய எழும்பி ரெண்டு பேரும் வேலைக்கு போகேக்கை என்ரை வாக்காளர் அட்டையை மறக்காமல் மனிசி தந்தா.நான் வேலை செய்யேக்கை என்ரை மண்டையுக்கை சுருள் சுருளாய் வட்டம் போச்சுது .
அப்ப நான் ஏழாம் வகுப்பு படிச்சுக் கொண்டிருக்கறன்.எங்கடை கோப்பாய் தொகுதிக்கு கதிரவேற்ப்பிள்ளை ஐய்யா தான் கூட்டணி வேட்பாளர். லெக்சன் கிட்டிது. கண்ட றோட்டில எல்லாம் நோட்டிசும் பசைவாளியோடையும் நோட்டிஸ் ஒட்டிக் கொண்டிருந்திச்சினம் பேரவை அண்ணைமார். நாங்கள் சின்னப்பெடியள் எண்டபடியால விடுப்பு மட்டும் தான் பாப்பம். லவுஸ்பீக்கர் வேற வாத்தியாற்ரை பாட்டுகளை போட்டு சனங்களை குசி ஏத்தீச்சிது.சில பேர் கள்ளைப் போட்டிட்டு வாத்தியார் மாதிரி அபினயிச்சு பாடீச்சினம்.நான் வாயைப் பிளந்து கொண்டு நிண்டு லவுஸ்பீக்கறையும் கட்டின தோறணங்கள்,கடுதாசிப் பேப்பர் அலங்கரிப்புகளை எல்லாம் பிராக்கு பாத்தன்.லெக்சன் தொடங்க முதல் நாளைக்கு முதல் நாள் கோப்பாய் கந்தசாமி கோயலடியில பெரிய கூட்டம். செல்வநாயகம்,அம…