Monday, June 18, 2012

நம்பிக்கை

நம்பிக்கை

என் வானமும் என் தரையும்

கந்தக நெடிகளாகி

வாழ்வின் அர்தத்தையே

அகலப்படுத்தின

தூரத்தே நாளை என்னும்

நம்பிக்கைப் பொட்டுகள்

கண்சிமிட்டும் நட்சத்திரமாய்

கண்ணாம் மூஞ்சி காட்டும் எனக்கு


எட்டுப்பட்டிச் சுற்றமும்

ஏறுதளநாருமாய் இருந்த

நாங்கள் இன்று நானாகி போனதில்

இறுக்கமான வலி

இறுகியே பாயும் என் மனதில்

இன்பமும் துன்பமும்

காலதேவன் வகுத்த சுற்றில்

என்கால் நாளையை நம்பி

உரமாகவே நடைபயிலும்


கோமகன்

Monday, June 4, 2012

ஏக்கம்

ஏக்கம்



ஒரே ஒரு வெய்யில் காலம் எனக்கு கொடு!

விதவைகளாய் இருந்த மரங்கள் பச்சை போர்க்க ,

ஊரெல்லாம் பண்பாடியே பறவைகள் பறக்க ,

சூரியனும் பனிக்கு பாய் ( bye ) சொல்லி ;

சூட்டுக்கு ஹாய் (hi )சொல்ல ,

அது கண்டு என் மனம் உவகை பொங்கும் .

மெலிதாகவே என் மனம் வருடும்

மெல்லிய காட்சிகள் நிறைந்த ஒரே ஒரு

வசந்தம் எனக்குக் கொடு !

அந்த காட்சிகளை நிரவிக் கொண்டபின் ,

சந்தோசத்துடன் என் இதயம்

சத்தத்தை அடக்கத் தயார் .

கோமகன்