Friday, July 6, 2012

கள்ளி நீ

கள்ளி நீ


பாலைவனத்தில் முளைத்த கள்ளியாய்
என் மனதில் முளைத்த கள்ளி நீ .
பருவத்தின் வாசலில்
எனக்கு நீ ராணி தான் .
உன் உதடும் என் உதடும் பற்றியவேளை ,
உலகமே எமக்கில்லை .

வளர் பிறை போல் எம்காதல் மலர
பிடித்தது சனி உன்னப்பனுக்கு .
தன்னையும் உன்னையும்
பிரிக்கவந்த சுவர்
நான் என்றான் .
இனிப்பான பேச்சினால்
தந்திரமாய் உனை மாற்றி ,
மாணவர் விசாவில் பறக்கவைத்தான் .

உன் தொடுகைச் சூடும் ,
உன் முத்தத்தின் இனிப்பும் ,
இனியவையாகவே
என்மனதில் இருக்கும் .
உன் பிரிவு வாட்டினாலும்
உன் நினைவுடன்
நான் இருப்பேன் கள்ளி ....................

கோமகன்
06 ஆடி 2012