Skip to main content

Posts

Showing posts from September, 2012

விசா' கன் - சிறுகதை - கோமகன்.

விசா' கன் ஒரு பேப்பறிற்காக கோமகன் .

பாரிஸின் நெரிசலான கட்டிடத் தொகுதி ஒன்றின் நாலாம் மாடியில் இருந்தது அந்த அறை . வெறும் முப்பது சதுர மீற்றரில் ரொயிலட் குளிக்கும் அறை என்று சகலதையும் அடக்கியிருந்தது அந்த அறை . அந்த அறையின் மூலையில் குசினி இருந்தது . அறையின் கீழே கார்ப்பெற்றில் கிழங்கு அடுக்கியமாதிரி இருபது மனித உடல்கள் குறட்டைப் போட்டி நடத்திக் கொண்டிருந்தன . இரவு குடித்த வைன் போத்தில்களும் , ஜே பி போத்தில்களும் அவர்கள் அருகே சிதறிக்கிடந்தன . அறையின் இன்னொரு மூலையில் இருந்த ரீவியில் , நீலப்படமொன்று வெக்கமின்றி ஓடிக்கொண்டிருந்தது . அறையின் சுவர்களில் கரப்பான் பூச்சிகள் பரவலாக ஓடி அறைக்கும் சுகாதாரத்திற்கும் வெகுதூரம் என்பதை உறுதிப்படுத்தின .

அந்த அறையில் பெரும்பாலோர்கள் வேலையற்றவர்கள் . அரச உதவித்தொகையில் காலம் தள்ளுபவர்கள் . 90 களில் பிரான்சில் வேலை முயல்கொம்பாகவே அவர்களுக்கு இருந்தது . ஒருசிலரே அந்த அறையில் சிவப்பு பேப்பரில் , ரெஸ்ரோறண்டில் குறிப்பறிந்து கோப்பை கழுவி 5,000 பிராங்கில் சம்பளத்துடன் ஹீரோவானார்கள் . அறையில் அவர்களுக்கு விசேட கவனிப்பும் உண்டு . எல்லோரது காசுப் பிரைச்னைகள…