Skip to main content

அன்பை துலைச்ச தோசையளும் வடையளும் -பத்தி - கோமகன்.


முந்தி என்ரை அம்மாவும் சரி , அம்மாச்சியும் சரி , வெள்ளைப் பச்சைஅரிசி ஊறப்போட்டு , உரலிலை இடிச்சு ஆட்டுக்கல்லுலை தோசைக்கு மா அரைச்சுத்தான் தோசை சுட்டுத்தாறவை . இதைமாதிரித்தான் அம்மாச்சியும் உனக்கு அப்பம் சுட்டுத்தாறன் பேரப்பெடியெண்டு , சுடச்சுட கள்ளு என்னைக்கொண்டு வாங்குவிச்சு அதுக்குள்ளை அம்மாச்சியும் தன்ரை பங்கை அடிச்சுப்போட்டு எனக்கு அப்பம் சுட்டுத் தந்தவா . அதுவும் அம்மாச்சியின்ரை பால் அப்பம் ( பாலுக்கு நடுவிலை கருப்பட்டியும் போட்டு ) . சொல்லிவேலையில்லை . இதுகளை ஏன் சொல்லிறன் எண்டால் அப்ப எல்லாருக்குமே இயற்கையா உடல் உழைப்பு இருந்தீச்சிது . அதாலை நல்ல மெல்லீசா 90 வயசுக்கு மேலையும் பொல்லு பிடிக்காமல் இருந்தீச்சினம் .

இண்டைக்கு எனக்கு என்ரை மனுசி ஒரு வீடியோ கிளிப் ஒண்டை காட்டிச்சிது . இதை ஒருக்கால் பாருங்கோப்பா எண்டு . எனக்கு ஐஞ்சும்கெட்டு அறிவுங்கெட்டு போச்சிது . இவளவை நோர்மலாயே சீரியலுகளுக்கை சிக்கெடுக்கிறவளவை ,  இதுகளையும் பாத்தாளவை எண்டால் எங்கடை நிலமையை யோசிச்சு பாத்தன் , எனக்கு கிறுதி அடிக்காத குறை கண்டியளோ . அலட்டாமல் நேரை மாற்றறுக்கு வாறன் . என்ரை அம்மாவும் அம்மாச்சியும் செய்து அன்பாய் தந்த சாப்பாடுகள் எல்லாம் மெசின் செய்யிது . இதைப் பாக்கேக்கை எனக்கு கொஞ்சம் குறுக்காலை போன கேள்வியள் வந்து துலைக்கிது பாருங்கோ . இந்த மெசினுகள் இருந்தால் என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த மனுசிமார் எண்ட கேள்வி வராதோ ?? எனக்கு அம்மாச்சியாலையும் அம்மாவாலையும் தந்த அன்பு பாசத்தை இந்த மெசினுகள் தருமோ ?? இப்பவே இந்த அலப்பரை விடுகிற மனுசிமார் இந்த மெசினுகளை வாங்கி போட்டு எங்களை என்ன பாடுபடுத்துவாளவை ?? இந்த மெசினாலை எத்தினை பேருக்கு வேலை இல்லாமல் போகிது ?? இப்பிடி கன கேள்வியள் எனக்கு மண்டையுக்கை அடிக்கிது . தாய்குலங்கள் என்னை கடிச்சு குதறாமல் உங்கைடை அபிப்பிராயத்தையும் சொல்லுங்கோவன் . அதுகாக சிங்கனுகள் பம்மிறதை விட்டிட்டு சிலுப்பிக்கொண்டு நீங்களும் உங்கடை பக்கத்து நியாயங்களை சொல்லுங்கோ . 






கோமகன் 





2 comments

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000



உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…