Skip to main content

Posts

Showing posts from January, 2013

Chéf இன் பக்குவம் 13

வ‌ஞ்‌சிர‌ம் ‌பி‌ரியா‌ணி

தேவையானவை:
வ‌ஞ்‌சிர‌ம் ‌- 1/2 ‌கிலோ
பாசும‌தி ‌அ‌ரி‌சி - 1/2 ‌கிலோ
வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி - 5
ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌ஞ்‌சி இலை - தேவையான அளவு
இ‌ஞ்‌சி, பூ‌ண்டு வ‌ிழுது - 3 தே‌க்கர‌ண்டி
பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி - ‌1 க‌ப்
த‌‌யி‌ர் - 1 கப்
ப‌‌ச்சை‌மிளகா‌ய் - 4
‌மிளகா‌ய்‌த்தூ‌‌ள் - 3 தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு - தேவையான அளவு
எ‌ண்ணெ‌ய் - 1 க‌ப்
எலு‌மி‌ச்சை - 1

பக்குவம்:

‌மீ‌ன் து‌ண்டுகளை சு‌த்த‌ம் செ‌ய்து உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் போ‌ட்டு ஊற‌விடவு‌ம். வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளியை நறு‌க்கவு‌ம். கு‌க்க‌‌ரி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் ஊ‌ற்‌றி ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌‌ஞ்‌சி இலை, பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி போ‌ட்டு‌த் தா‌ளி‌க்கவு‌ம். வெ‌‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, இ‌ஞ்‌சி பூ‌ண்டு ‌விழுதை போ‌‌ட்டு வத‌க்கவு‌ம். த‌யி‌ர், ‌உ‌ப்பு, மிளகா‌ய்‌த் தூ‌ள், அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌கிள‌றி‌விடவு‌ம். த‌ண்‌ணீ‌‌ர் கொ‌தி‌‌க்கு‌ம் போது வ‌ஞ்‌சிர‌ம் ‌மீ‌ன் து‌ண்டுகளை பர‌ப்‌பி கு‌க்கரை மூடவு‌ம். ‌ ஒரு ‌வி‌சி‌ல் வ‌ந்தது‌ம் கு‌க்கரை இற‌க்‌‌கி எலு‌மி‌ச்சை‌சாறை ‌பி‌ழி‌‌ந்து பரிமாறவு‌ம்.

http://www.yarl.co…

பூவுக்கும் பெயருண்டு 05

41 செங்கோடுவரிப் பூ .42 செம்மல்ப் பூ .செம்மல் என்னும் மலரை ஒரு தனி மலராகச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது. உதிர்ந்த பழம்பூக்களைச் செம்மல் எனக் குறிப்பிடும் சொல்லாட்சியும் உள்ளது.
செந்நிறத்தில் காடுமேடுகளில் பூத்துக் கிடக்கும் மலரே செம்மல் எனல் பொருத்தமானது. குறிஞ்சிநிலக் கோதையர் இந்தச் செம்மல் மலரையே குவித்து விளையாடினர். அவர்கள் குவித்து விளையாடிய 99 வகையான மலர்களில் செம்மல் என்பது ஒன்று.
http://ta.wikipedia....rg/wiki/செம்மல்

43 செருந்திப் பூ .


அகநானூறு 150, குறுவழுதியார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக்
கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி,
‘எல்லினை பெரிது’ எனப் பன்மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,
அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல்
வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக்,
கனைத்த நெய்தற் கண்போன் மாமலர்
நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ,
மாலை மணியிதழ் கூம்பக் காலைக்
கள்நாறு காவியொடு தண்ணென் மலருங்
கழியுங், கானலுங் காண்தொறும் பலபுலந்து;
வாரார் கொல்? எனப் பருவரும்
தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே!

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 12

ஆடிக்கூழ் .

தேவையானவை:
ஒரு கைப்பிடி வறுத்த பயறு
கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக
வெட்டியது
ஒரு பேணி – பச்சரிசி மா
அரைமூடித்தேங்காய்ப்பால்

பனங்கட்டி
(கருப்பட்டி)…-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு
மிளகுத்தூள் தேவையான அளவு
சீரகத்தூள் தேவையான அளவு
ஏலக்காய் – தேவையான அளவு

பக்குவம்:

முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச் சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச் சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது
கலவை:

இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்துகொள்ளவும்.பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும். எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும் அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள்,
சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்…

படிமானம்:

பூவரசம் இலை அல்லது பிலா இலையிலை தொன்னை செய்து எல்லாரும் சுத்திஇருந்து கூழ் குடியுங்கோ

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105065

பூவுக்கும் பெயருண்டு இறுதிப்பாகம்

வணக்கம் வாசகர்களே , மற்றும் கள உறவுகளே ,
வேரிப் பூவைப் பதியன் இடுவதன் மூலம் இந்தத் தொடரை நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தப் பதிவின் பெருமைகள் எல்லாம் கடந்த நான்கு மாதங்களாக இந்த நந்தவனத்திலே உலாவிப் பூக்களின் வாசங்களையும் அவை சொல்லும் சிறிய தங்கள் வரலாறுகளையும் கேட்டு அனுபவித்த வாசகர்களுக்கும் , என்னை அன்புடன் ஊக்குவித்து , உரிமையுடன் சரி பிழைகளைப் பகிர்ந்த கள உறவுகளயுமே சாரும் . நான் இந்த நந்தவனத்தின் காவலாளி மட்டுமே . மீண்டும் ஓர் சுவாரசியமான தொடரில் சந்திக்கும் வரை.........

நேசமுடன் கோமகன் 
******************************************************************

95 வேரிப் பூ ( செங்கொடு வேரிப் பூ ) 

வேரி என்னும் சொல் ஒருவகை மலரையும், தேனையும் குறிக்கும். மகளிர் வேரி மலரைக் கூந்தலில் சூடிக்கொள்வர். இரு காதுகளிலும் தொங்கவிட்டுக்கொள்வர் .


மதுரை மகளிர் கார்காலத்தில் சூடும் பூக்களில் ஒன்று ‘செங்கோட்டு வேரிப் பூ மாலை.

இருந்தையூரில் திருமாலின் படுக்கை பாம்பை வழிபட்டவர்கள் இரு காதுகளிலும் வேரி மலரைத் தொங்கவிட்டிருந்தனர்.

குரவை ஆட ஆய்ச்சியர் 7 பெண்களை நிறுத்தினர். அவர்களில் ஒருத்தி காரிக்காளையை அடக்…

ஈழமும் தமிழ் மன்னர்களும்

என் நேசத்துக்குரிய கள உறவுகளுக்கு ,எனது முதல்பதிவான சங்கிலி மன்னரின் வரலாற்றப் பதிவுக்குக் கிடைத்த பெருமளவிலான வரவேற்பும், முக்கியமாக ஜஸ்ரின், ஆண்டவர் ,இணையவன், போன்றோரது ஊக்குவிப்பாலும் இந்த பதிவான "ஈழமும் தமிழ் மன்னர்களும்" என்ற வரலாற்றுத் தொடரை ஆரம்பிக்கின்றேன். இந்தப்பதிவின் நோக்கம், இளயவர்கள், குறிப்பாக 80களுக்குப் பிறகு பிறந்த தலைமுறைக்கு, வரலாறுகள் சரியாகப் போய்ச்சேரவில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.இந்தப் பதிவின் மூலம் அவர்களுக்கு தமிழ் இனத்தையும், அந்த இனத்தின் மொழியைபேசுகின்ற தமிழர்கள் யார்? எல்லோரும் கூறவதைப்போல நாம் ஒரு தேசிய இனம் இல்லாது ஒரு சிறகுழுமங்களா ? என்பதை தெளிவுபடுத்துவதாகும். பொதுவாக வரலாறு என்பது குளப்பமனது. அதில் பல வரலாற்றுப்பிறள்வுகளும் உண்டு. இயன்றவரையில் அவைகளைக் கருத்தில்க் கொண்டு நான் படித்த புத்தகங்களின் துணையோடும், தகவல் பெருங்களஞ்சியமான விக்கிபீடியாவின் தரவுகளையும் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.இதில் பிழைகள் இருந்தால் உரிமையுடன் சுட்டிக்காட்டினால் திருத்திவிடுகின்றேன். இனி..........  
**************************************

எமது தாயகபூமியை ஆண்…

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 11

gratin de courgettes ( courgette gratin , இதுக்கு எனக்கு சரியான தமிழ் தெரியேலை ) 
என்ரை மனுசிக்கு இதை ஆள் முறுகிற நேரங்களில செய்து குடுத்து கூல் பண்ணுவன். செய்ய இலகுவான சத்தான , செமிக்கக் கூடிய மரக்கறிப் பக்குவம் . கிக்கினிக் காயிற்குப் பதிலாக நீங்கள் உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய மரக்கறிகளின் கலவை போன்றவற்ரையும் பாவிக்கலாம் .

தேவையான பொருட்கள் :

கிக்கினி காய் 6 .  
உள்ளி 7 - 8 பல்லு .
கிறாம் லிக்கியுட் ( créme liquide ) ( liquid cream ) 10 cl .
உப்பு தேவையான அளவு .
முட்டை 3 .
போர்மாஸ் துருவல் ( fromage rapé ) ( grated cheese ) 100 கிறாம் .
கறுவாப் பட்டை தூள் தேவையான அளவு .
வெங்காயம் 1 - 2 .ஓலிவ் எண்ணை 3 - 4 மேசைக்கறண்டி.

பக்குவம் :

கிக்கினிக் காயைக் கழுவி வட்ட வடிவில் வெட்டவும் .உங்கள் வெதுப்பியை 200 c யில் விட்டு சூடேற்றவும் . உள்ளியை உடைத்து நசிக்கவும் . முட்டையை உடைத்து கிறாம் லிக்கியுட் உடன் சேர்த்து நன்றாக அடிக்கவும் . நசித்த உள்ளி , உப்பு , கறுவாத் தூள் எல்லாவற்றையும் போட்டு நன்றாக அடியுங்கள் . வெங்காயத்தை துப்பரவு செய்து வெட்டவும் . ஒலிவ் எண்ணையை ஒரு தாச்சியில் விட்டு சூடாக்கவும் . சூடா…

பூவுக்கும் பெயருண்டு 10

91 வானிப் பூ  .


வானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று. இளஞ்சேரல் இரும்பொறை ‘சாந்துவரு வானி நீரினும் தண் சாயலன்’ எனப் போற்றப்படுகிறான்.  வானியாறு இக்காலத்தில் சிறுவானியாறு என வழங்கப்படுகிறது. இது கோயமுத்தூருக்கு நீர் வழங்கும் ஆறு. இந்த ஆற்றுப்படுகையில் வானி மலர் மிகுந்திருந்தது பற்றி இவ்வாற்றுக்கு இப் பெயர் தோன்றியது.
http://ta.wikipedia..../wiki/வானி_மலர்92 வெட்சிப் பூ .

வெட்சி (இட்லிப் பூ அல்லது இட்லி பூ) என்பது ரூபியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். என்றும் பசுமையான மலர்ச்செடிகளான ரூபியேசியே குடும்பத்தில் 529 சிற்றினங்கள் காணப்படுகின்றன. 

உலகெங்கிலுமுள்ள அயன மண்டலம், உப அயன மண்டல நாடுகளில் தோன்றினாலும் அயன மண்டல் ஆசியா, குறிப்பாக இந்தியா இதன் பல்வகைமை செறிந்து காணப்படும் நாடாகும். இப்போது ஐக்கிய அமெரிக்கா நாடுகளிலும் வெட்சி வளர்க்கப்படுகிறது.

இத்தாவரம் 3-6 அங்குலம் நீளமுள்ள தோல் போன்ற இலையையும் சிறு பூக்களின் கொத்துக்களால் ஆனது. அமில மண்ணுக்கு பொருத்தமான இத்தாவரம் பொன்சாய் செய்கைக்கு ஏற்றது.
http://ta.wikipedia....org/wiki/வெட்சி

வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப…