Skip to main content

ஈழமும் தமிழ் மன்னர்களும்

என் நேசத்துக்குரிய கள உறவுகளுக்கு ,எனது முதல்பதிவான சங்கிலி மன்னரின் வரலாற்றப் பதிவுக்குக் கிடைத்த பெருமளவிலான வரவேற்பும், முக்கியமாக ஜஸ்ரின், ஆண்டவர் ,இணையவன், போன்றோரது ஊக்குவிப்பாலும் இந்த பதிவான "ஈழமும் தமிழ் மன்னர்களும்" என்ற வரலாற்றுத் தொடரை ஆரம்பிக்கின்றேன். இந்தப்பதிவின் நோக்கம், இளயவர்கள், குறிப்பாக 80களுக்குப் பிறகு பிறந்த தலைமுறைக்கு, வரலாறுகள் சரியாகப் போய்ச்சேரவில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.இந்தப் பதிவின் மூலம் அவர்களுக்கு தமிழ் இனத்தையும், அந்த இனத்தின் மொழியைபேசுகின்ற தமிழர்கள் யார்? எல்லோரும் கூறவதைப்போல நாம் ஒரு தேசிய இனம் இல்லாது ஒரு சிறகுழுமங்களா ? என்பதை தெளிவுபடுத்துவதாகும். பொதுவாக வரலாறு என்பது குளப்பமனது. அதில் பல வரலாற்றுப்பிறள்வுகளும் உண்டு. இயன்றவரையில் அவைகளைக் கருத்தில்க் கொண்டு நான் படித்த புத்தகங்களின் துணையோடும், தகவல் பெருங்களஞ்சியமான விக்கிபீடியாவின் தரவுகளையும் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.இதில் பிழைகள் இருந்தால் உரிமையுடன் சுட்டிக்காட்டினால் திருத்திவிடுகின்றேன். இனி..........  

**************************************


எமது தாயகபூமியை ஆண்ட மன்னர்களில் முதன்மையனவராக இவர் கருதப்படுகின்றார். இவர் ஒரு பேர்அரசராக இல்லாத ஒரு குறுநிலமன்னராக இருந்தாலும், இவரது ஆட்சி பரிபாலனமும், வீரம் என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் இனத்திற்கு இருந்தவர். யாழ்ப்பாண இராச்சியத்தின் வன்னிப்பெரு நிலப்பரப்பின் வணங்காமுடி அரசர், அன்னிய படையெடுப்புகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர், இறுதியில் காட்டிக்கொடுப்புகளால் பலியான பண்டாரவன்னியன்.

இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்கள் இணைந்த பகுதிதான் வன்னி நிலம் . வடக்கே கிளிநொச்சி, தெற்கே மதவாச்சி, கிழக்கு மேற்கு பகுதியில் கடலாகவும் உள்ள பிரதேசம் அது . அங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் கிணறுகள் வன்னியின் தொன்மையை உணர்த்தியுள்ளன .

கி.மு.543-ஆம் ஆண்டு இந்திய நாட்டில் இருந்த மகத நாட்டு மன்னன் ஒருவன் , மிருக குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தெரியாமல் மரக்கலத்தில் சென்ற விஜயனும் அவனது கொடுங்கோல் ஆட்களும் இலங்கையின் இன்று புத்தளம் என்று அழைக்கப் படும் பகுதிக்கு அடுத்த தம்பப்பண்ணை என்ற இடத்தில் கரை சேர்ந்ததாக இலங்கையின் வரலாறு சொல்லும் நூலாக சிங்களர்களே ஒத்துக்கொள்ளும் மகாவம்சம் என்ற நூல் கூறுகிறது .

அகதிகளாய் வந்திறங்கிய விஜயன் தமழினத்தின் மூத்த குடிகளில் ஒன்றாக வரலாறு கூறும் நாகர் இன இளவரசி குவேனியைப பணிந்து நயந்து பின்னர் ஏமாற்றி மணந்தான் .அதோடு அதற்கு வடக்கே மாதோட்டம் என்ற பகுதியில் இருந்த தமிழ்க் குறுநில மன்னனோடு நட்பு கொண்டான் . அவன் மூலம் அன்று , தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களோடு நட்பு கொண்டு இலங்கை மன்னனாக தன்னை  முடிசூட்டிக்கொண்டு முப்பதாண்டு காலம் ஆட்சி புரிந்ததாகக் கூறப் படுகிறது .

விஜயன் இலங்கைக்கு அகதியாய் வந்தபோது சிங்களம் என்றொரு இனமே அங்கிருக்கவில்லை. ஆனால் தமிழினத்தின் மூத்த குடிகள் இருந்தனர்.

உண்மையில் “சிங்களம்’ என்பதே மொழி, இனம், பண்பாடு சார்ந்த சொல் அல்ல. சிங்களம் என்றால் தமிழில் கறுவாப்பட்டை என்று பொருள் . அக் காலத்தில் கடலோடி வாணிபம் செய்தோர் அத் தீவுப் பகுதியை அதிகம் தேடிப் போனதே அங்கு கறுவாப்பட்டை என்ற தாவரம் கிடைக்கும் என்பதற்காகத்தான். கறுவாப்பட்டை அதிகம் கிடைத்ததால் அந் நிலப்பரப்பு சிங்களத் துவீபம் என அழைக்கப் பட்டது . புவியியலாளர் டாலமி இலங்கையில் தமிழர் பூமியை தனியாக காட்டி தமிழர் என்ற ஒரு இனம் அப்போது அந்த பிரதேசத்தில் இருந்ததாக் குறிப்பிட்டு உள்ளார் . வேறு எந்த இனமுமோ அப்போது இருந்ததாக அவர் கூறவில்லை .இருந்ததற்கான சான்றும் இல்லை .

கி.மு.205-வாக்கில் வட தமிழகம் தொண்டை நாட்டில் இருந்து ஏலேலன் என்ற இளவரசன் பெரும் படையுடன் திரிகோண மலைக்கு வந்தடைந்து மொத்த இலங்கைக்கும் தன்னை அரசனாய் அறிவித்தான். நடுநிலை தவறாமல் நீதி, நியாயம் , அருள், ஆண்மை, அறிவுடன் இலங்கைத் தீவு முழுமைக்கும் நல்லாட்சி தந்த ஏலேலன்தான் இலங்கைத் தமிழ் மன்னன் எல்லாளன் என்று அழைக்கப் படுகிறான் .

பிரபாகரன் கூட தனது போராட்ட அடையாளமாய் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்மன்னன் ஏலேலனை நிறுத்தவில்லை . பின்னாளில் வெள்ளைகாரர்கள் ஆட்சியை எதிர்த்து போரிட்டு இன்று போலவே அன்றும் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு, வீரமரணம் தழுவிய வன்னி நில மன்னன் பண்டார வன்னியனைத்தான் தனது போராட்டத்தின் அடையாளமாகக் குறிப்பிட்டார் . இன்றும் பண்டார வன்னியனின் அடையாளங்கள் சிதைக்கப் பட அதுதான் முக்கியக் காரணம் .

ஏலேலன் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்ப் பேரரசன்.ஆனால் பண்டார வன்னியனோ பாரம்பரியமாய் தன் மூதாதையர்கள் வாழ்ந்த சிறு நிலப்பரப்பில் தன்மதிப்போடும், சுய அதிகாரத்தோடும் வாழ விரும்பிய தமிழ் குறுநில மன்னன்

பண்டார வன்னியன் காலத்துக்கும் முன்பே , 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் அவர்களால் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள்தான் . டச்சுக்காரர்கள் இலங்கைத் தீவைக் கைப்பற்ற வந்த போதே தமிழர் ஆட்சி அங்கு நிலவியது என்பதை அவர்களின் சிலர் எழுதிய குறிப்பு ஏடுகளில் காணலாம்

1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் , "டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் புரிந்திருக் கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் வேறு எங்கும் அவர்கள் காணவில்லை" என்று குறிப்பிடுகிறார் .

இலங்கையின் வரலாற்றில் திருகோணமலையைக் கைப்பற்றவே பலரும் போரிட்டு மடிந்தது வழக்கம் . அதே காரணத்துக்காக பண்டார வன்னியன் வாழ்ந்த அதே காலத்தில் கண்டி மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையில் சண்டை நடந்தது . அந்த நேரத்தில் இருந்த சக்தி வாய்ந்த ஆங்கிலேயப் பிரதி நிதி ராபர்ட் நாக்ஸ் என்பவன் கண்டி மன்னனால் மூதூர் என்ற ஊரில் வைத்து சிறைப்பிடிக்கப்பட்டான் . பல வருடங்கள் சிறையில் கழித்த ராபர்ட் எப்படியோ சிறையில் இருந்து தப்பி அனுராதபுரத்தை நோக்கி ஓடினான் . அனுராதபுரத்தை அடைந்தவுடன் அங்குள்ள மக்களையும் ஆட்சியையும் பார்த்து வியப்படைந்தான் .அங்கு ஆட்சி செய்த மன்னனும் தமிழ் மன்னன்தான் . அவன் பெயர் கைலாய வன்னியன்.

ராபர்ட் நாக்ஸ் தனது குறிப்பேட்டில் தான் வடக்காக தப்பிச்சென்ற போது வயல்வெளிகளை எருதுகள் உழுவதையும் அங்குள்ள மக்கள் சிங்கள மொழியை பேசவில்லை என்றும் அவர்களுக்கு சிங்கள மொழியே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளான் .

மேலும் அங்கு கயிலாய வன்னியன் ஆட்சிசெய்த நாட்டை கயிலாய வன்னியன் நாடு என்றும் அவன் யாழ்ப்பாணத்தின் தெற்கு மற்றும் வன்னியின் கிழக்குப்பகுதியையும் ஆண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான் ராபர்ட் நாக்ஸ்.

டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னி மக்கள் இடைவிடாமல் போர் நடத்தி வந்தனர். அவர்களின் வழியில் வந்த மறக்க முடியாத மாவீரன்தான் பண்டார வன்னியன்.

வெள்ளையர்கள் முல்லைத்தீவில் அமைத்திருந்த கோட்டையை முற்றாக அழித்து நிர்மூலம் செய்தவன் பண்டார வன்னியன் .அவனது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்

முல்லைத்தீவில் இருந்து வற்றாப்பளை அம்மன் கோவில் வரை உள்ள 2000 சதுர மைல் நிலத்தை ஆட்சி செய்து வந்தான் பண்டார வன்னியன் . தனது சகோதரர்களை முக்கிய பதவிகளில் வைத்து ஆட்சி செய்து வந்தான் . தனது தம்பி கைலாய வன்னியனை அமைச்சராகவும் தனது இறுதி சகோதரன் பெரிய மன்னன் என்ற பெயருடையவனை தளபதியாகவும் நியமித்திருந்தான் .

அதே நேரம் காக்கை வன்னியன் எனும் இன்னொரு மன்னன் வன்னியின் இன்னொரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான் .

பண்டாரவன்னியனுக்கு நளாயினி என்ற சகோதரியும் உண்டு . நளாயினி தமது அவைப புலவர் மீது காதல் கொண்டிருந்தாள்.

மன்னன் காக்கை வன்னியன் நளாயினி மீது காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்து தரும்படி பலமுறை பண்டார வன்னியனுக்கு சேதி அனுப்பியிருந்தான் .ஆனால் பண்டாரவன்னியன் எதோ காரணத்தால் தயங்கி இருக்கிறான் .
இந் நிலையில் புலவரும் நளாயினியும் காதல் கொண்டுள்ளதை கண்ட காக்கை வன்னியன் கோபம் கொண்டு  புலவருடன் போரிட்டான் . போரில் வென்றது புலவன் ,எனினும் பக்கத்து நாட்டு மன்னன் என்பதாலோ என்னவோ , மன்னனை உயிரோடு திருப்பி அனுப்பினான் அனுப்பினான் . அதன்பின்புதான் புலவனும் அரச குலத்தில் வந்தவன் என்பது பண்டார வன்னியனுக்குத் தெரிந்திருகிறது . எனவே தனது சகோதரியின் காதலுக்கு சம்மதித்தான் பண்டார வன்னியன் .

விஷயம் அறிந்த காக்கை வன்னியன் பொருமினான் . பண்டாரவன்னியன் மீது வெளையர்கள் பல முறை படை எடுத்து தோல்வி அடைவதைப பார்த்த காக்கை வன்னியன் , தன் ஆசையின் தோல்விக்குப் பழி தீர்க்க வெள்ளையர்களுடன் சேர்ந்து சதி செய்து பண்டார வன்னியனை கொல்ல திட்டமிட்டான் .

நல்லவன் போல நடித்து பண்டார வன்னியனிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து கொண்டு சமயம் பார்த்து ஆங்கிலப் படைகளிடம் பண்டார வன்னியனை சிக்க வைத்தான்

பலமுறை படை எடுத்து வந்தும் வெல்ல முடியாத பண்டார வன்னியனை மூன்று ஓரத்தில் இருந்தும் படை எடுத்து வந்து தாக்கி வென்றனர் .

1803 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் கற்சிலைமடு என்ற இடத்தில் அங்கிலேய தளபதி ரிபேக் என்பவனால் பண்டார வன்னியன் கொல்லப்பட்டான் .

எனினும் அவனது வீரத்தை வியந்து அவனைக் கொன்ற அந்த ஆங்கிலேயத் தளபதி ரிபேக்கே பண்டார வன்னியனுக்கு சிலை ஒன்றும் நடுகல் சின்னமும் வைத்தான்

ஒருவனுக்கு அவனுக்கு பிடித்தவர்கள் உறவினர்கள் யார் வேண்டுமென்றாலும் சிலை வைக்கலாம் ஆனால் எதிரியாலேயே வைக்கப்பட்ட சிலை பண்டாரவன்னியன் சிலை .

முல்லைமணி என்பவர் மற்றும் அவர்களின் சக நண்பர்களின் முயற்சியின் விளைவாய் எத்தனையே ஆண்டுகளுக்குப் பிறகு 2002ம் ஆண்டு கற்சிலைமடுவில் பனை மரக் காட்டில் பண்டார வன்னியனுக்கு புதிய சிலை ஒன்றும் நிறுவப்பட்டது .

பண்டார வன்னியன் ஆண்ட நாட்டின் எல்லையாக இருந்த வற்றாப்பளையில் உப்பு நீரிலே விளக்கெரியும் கண்ணகி அம்மன் ஆலயம் ஒன்றும் இருந்தது .இப்போது அவை எல்லாம் என்ன ஆயின என்பதே தெரியவில்லை.     
  


Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்


000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…