Thursday, February 28, 2013

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .

வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே !

ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . எமது வாழ்வில் பாதியை புலத்தில் துலைத்து நிற்கின்ற நாங்கள் , எமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து தாயகத்து வான்வெளிகளில் சுதந்திரமாகப் பறந்த பல குருவிகளது பெயர்கள் பலதை எமது ஞாபகத்தில் தொலைத்து நிற்கின்றோம் . போனவருடம் நான் தாயகம் சென்ற பொழுது எனது அண்ணையின் உதவியுடன் ஒரு சில குருவிகளை அடையாளம் காணமுடிந்தது . ஆயினும் பல குருவிகளைக் காண முடியவில்லை என அறிந்து வேதனையடைந்தேன் . மேலும் இந்தக் குருவிகளுக்கு சங்க இலக்கியங்களில் சுத்தமான தூய தமிழ் பெயர்கள் இருந்ததையும் அண்ணை தந்த புத்தகம் மூலம் அறிந்து கொண்டேன் .எனது சிற்றறிவின் தேடல்களை உங்களுக்குத் தருகின்றேன் . இந்தக் குருவிகள் பல ஊர்களில் பலவகையான பெயர்களில் அழைக்கப்படுகின்றன .

போட்டி விபரம்:


நான் ஒரு குருவியின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்தக் குருவிக்கன தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட குருவிப் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே மறந்த குருவிகள் என் கையில் , பறந்த பெயர்கள் உங்கள் கையில் ..............

நேசமுடன் கோமகன்

*******************************************

01 செம்பூழ் ( செம்பகம் , செம்போத்து )02 மனையுறைக் குரீஇ , உள்ளுறைக் குரீஇ , உள்ளூர்க் குரீஇ (அடைக்கலாங்குருவி , சிட்டுக் குருவி , ஊர்க்குருவி ) .03 அரசவால் ஈபிடிப்பான் ( ஆண் ) குருவி .
04 கொண்டலாட்டிக் குருவி ( red - vented bulbul ) 05 அன்றில் பறவை (Plegadis falcinellus) ( அரிவாள் மூக்கன் )  அன்றில் பறவை (Plegadis falcinellus) திரெஸ்கியோர்நித்திடே(Threskiornithidae) என்ற அரிவாள் மூக்கன் குடும்பத்தைச் சார்ந்த ஒரு கரைப்பறவை (shore bird or wader) ஆகும்.

அன்றில் பறவை போல மகன்றில் பறவையும் இணைபிரியாமல் வாழும் இயல்பினை உடையது.

இப்பறவையே ஐபிஸ் இனத்தில் பரவலாகக் காணப்படும் இனனமாகும். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் பகுதிகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இது பழைய உலகின் பகுதிகளில் தோன்றிப் பின் இயற்கையாக ஆப்பிரிகாவிலிருந்து 19ம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவிற்குப் பரவியதாக நம்பப்படுகிறது. இவ்வினமானது புலம் பெயரக்கூடியது; ஐரோப்பிய இனம் குளிர்காலங்களில் ஆப்பிரிக்காவிலும், வட அமெரிக்க இனம் கரோலினாவின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் பெயர்கின்றன. பிற இனங்கள் இனச்சேர்க்கைக் காலங்கள் அல்லாத பிறகாலங்களில் பரவலாகப் பெயர்கின்றன.

அன்றில் பறவை மரக்கிளைகளில் பிற கொக்குகளோடு கூட்டமாக முட்டையிடுகின்றன. சதுப்பு நிலங்களில் மந்தையாக இறை தேடக்கூடியவை இவை; மீன், தவளை மற்றும் பிற நீர்வாழ் உயிர்களையும், அவ்வப்போது பூச்சிகளையும் இரையாகக் கொள்கின்றன.

இவ்வினம் 55–65 செ.மீ. நீளமும் 88–105 செ.மீ. இறக்கை வீச்சளவும் கொண்டிருக்கும். பருவம்வந்த பறவைகள் செந்நிற உடலும் ஒளிரும் கரும்பச்சை இறக்கைகளையும் கொண்டிருக்கின்றன. பருவம் வராத இளம் பறவைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இவ்வினம் மரப்பழுப்பு நிற அலகினையும், கறுத்த மேற்புறமும், நீலப் பழுப்பு நிறத்திலிருந்து நீலம் வரையிலான கீழ்ப்புறமும், சிவந்த பழுப்பு நிறக் கால்களையும் கொண்டு காணப்படுகிறது. கொக்குகளைப் போல் அல்லாமல், அன்றில் பறவைகள் கழுத்தை நீட்டியும், பெரும்பாலும் வரிசைகளிலும் பறக்கின்றன. பொதுவாக அமைதியான அன்றில் பறவை இனப்பெருக்கக் காலங்களில் கரகரப்பான உறுமல் போன்ற கிர்ர்ர் என்ற ஒலியினை ஏற்படுத்துகின்றது.

அன்றில் நெய்தல் நிலத்தில் வாழும் பறவையினம். இதன் தலை சிவப்பு நிறம் கொண்டது. இதன் அலகு இறால்மீனுக்கு உள்ளதுபோல் இருக்கும். மேலும் வளைவானது. கூர்மையானது. கடலோரப் பனைமரக் கொம்புகளில் கூடுகட்டிக்கொண்டு வாழும். நாரையைப்போல் இதன் உணவு மீன். அன்றில் தன் துணையுடன் சேர்ந்தே வாழும். துணையில் ஒன்று பிரிந்தாலும் குரல் எழுப்பும். இந்தக் குரலை ‘அகவல்’ என்பர். ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும்போது எழுப்பும் குரலை ‘உளறல்’ என்றும், பெண் கருவிற்றிருக்கும்போதும் எழுப்பும் குரலை ‘நரலல்’ என்றும் சங்கத்தமிழ் பாகுபடுத்தி வழங்குகிறது.

தன்னைப்போல் துணையைப் பிரிந்து அகவுகிறதோ என்றும், தான் துணையைப் பிரிந்திருப்பதால் தன்மேல் இரக்கப்பட்டு அகவுகிறாயோ என்றும் இரவில் எழுப்பும் இதன் குரலை அகப்பாடல் தலைவிகள் கற்பனை செய்து பேசுகின்றனர்.

http://ta.wikipedia....rg/wiki/அன்றில்

06 ஊதாத் தேன் சிட்டு ( Purple Sunbird )மேலதிக தகவலுக்கு இங்கே சுட்டுங்கள் .

http://en.wikipedia..../Purple_Sunbird     

07 வலியான் குருவி அல்லது ஆனைச்சாத்தான் குருவி(Black Drongo, Dicrurus macrocercus) இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவி (Black Drongo, Dicrurus macrocercus) என்பது ஆசியக் கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு பாடும் பறவை. இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி என்றும் அழைக்கப்படும். திவ்யப் பிரபந்தங்களில் வழங்கப்படும் ஆனைச்சாத்தன் என்ற பெயரும் இப்பறவையைக் குறிப்பதே என மா. கிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார் . இது தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது தென் மேற்கில் ஈரான் தொடங்கி இந்தியா, இலங்கையிலும் கிழக்கில் சீனா, இந்தோனேசியா வரையிலும் காணப்படுகின்றது.

இப்பறவை முழுவதும் கருப்பு நிறத்திலும் வால் பகுதி நுனியில் இரண்டாகப் பிரிந்தும் இருக்கும். வாலின் நீளம் ஏறத்தாழ 28 செ.மீ இருக்கும். பூச்சிகளை இரையாகக் கொள்ளும் இப்பறவை பொதுவாக திறந்தவெளியான வேளாண்மை நிலங்களிலும் அடர்த்தியற்ற காடுகளிலும்வசிக்கறது. இவை பயமற்ற பறவைகளாகும். இது தனது கூட்டின் எல்லைக்குள் வரும் தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட இப்பறவை தாக்கும் குணம் கொண்டது.

http://ta.wikipedia....ட்டைவால்_குருவி     

08 அக்காக்குருவி அல்லது பெண்குயில் ( Eudynamys scolopacea )மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும். சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும். குயிலின் முட்டையினையும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலத்தன் கத்தும் கட்டைக் குரலில். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும்.

ஆண் குயில் பளபளப்பான கருமை நிறமுடையது; அலகு மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் கண்கள் இரத்தச்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

பெண் குயில் பழுப்பு நிற உடலும் அதில் வெண் புள்ளிகள் நிறைந்தும் இருக்கும்.
தனியாகவோ இணையுடனோ மரங்கள் நிறைந்த தோட்டம், தோப்புகளில் இவற்றைக் காணலாம்.

இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் பார்த்தால் மூன்று வகைக் குயில்கள் உள்ளன. அவற்றுள் scolopacea வகை தென்னிந்தியாவிலும் சிறிலங்காவிலும் காணப்படுகின்றன.

குயில் ஒரு அடையுருவி ('brood parasite').

இது மரத்தில் வாழும் பறழ்பறவை -- அதாவது தரையில் காணப்படாது.

பழங்களும் சிறு கனிகளும் நிறைந்துள்ள தோட்டம், தோப்பு ஆகிய இடங்களே குயில்களின் வருகைக்குகந்தவை.

(பெண்களின்) இனிமையான குரல் வளத்திற்கு உவமையாக குயிலின் கூவலைக் கூறுதல் வழக்கத்தில் இருந்தாலும், உண்மையில் இனிமையான குவூ குவூ சத்தத்தை எழுப்புவது ஆண்குயிலே.

தாழ்ந்த ஒலியுடன் இனிமையாகத் துவங்கும் குவூ கூப்பாடு படிப்படியாக சத்தம் அதிகரித்து, ஏழாவது அல்லது எட்டாவது கூப்பாட்டுடன் திடுமென நின்று விடும்; பிறகு மீண்டும் அதே கதியில் பாடல் ஆரம்பிக்கும்.

ஆண் குயிலின் சங்கீதக்குரலுடன் ஒப்பிட்டால் பெண் குயிலின் கிக் - கிக் - கிக் என்ற கூப்பாடு வெறும் கத்தல் எனலாம்.http://ta.wikipedia....(ஆசியக்_குயில்)     


09 கருங்கொட்டு கதிர்க்குருவி ( Zitting Cisticola ) கருங்கொட்டு கதிர்க்குருவி (ஆங்கிலம்: Zitting Cisticola) தென் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் ஆசியா தொடங்கி வட அவுஸ்திரேலியா வரை காணப்படும் ஒரு சிறிய பறவை. இது மேய்ச்சல் நிலங்களில் காணப்படும். சிவப்பு கலந்த பழுப்பு நிறப் பின்புறம், கழுத்துப் பகுதியில் குறைவான பொன்னிறம், வெள்ளையுடன் சேர்ந்த பழுப்பு என்பனவற்றால் இதனை எளிதில் அடையாளம் காண முடியும். இனப்பெருக்க காலத்தில், ஆண் வளைந்து நெளிந்து பறந்து ஒருவித ஒலியெழுப்பும்.

கருங்கொட்டு கதிர்க்குருவியின் மேற் பகுதி பழுப்பு நிறமும் கருமையான கோடுகளும் உடையது. கீழ்ப் பகுதி வெள்ளையும் அகன்ற வாலையும் உடையது. ஆண் தலையில் குறைந்த கோடுகளைக் கொண்டும், பெண்ணை விட அதிக அடையாளத்தைக் கொண்டும் காணப்படும். ஆனாலும், அவை பெரிய வித்தியாசமாக இருப்பதில்லை. இனப்பெருக்கமற்ற காலங்களில் பற்றைகளுக்குள் மறைவாக வாழும் இவற்றைக் காண்பது கடினம்

இவை பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களிலும் நீர் நிலைகளை அண்மித்தும் காணப்படும். இவை நிரந்தரமாகத் தங்கி வாழ்பவை. ஆனால் சில கிழக்காசியப் பறவைகள் குளிர் காலத்தில் வெப்பத்திற்காகத் தென் பகுதிக்குச் செல்கின்றன.
கருங்கொட்டு கதிர்க்குருவி சிறிய பூச்சியுண்ணும் பறவையாகும். சில நேரங்களில் சிறு கூட்டமாக வாழும். மழைக்காலமே இவற்றின் இனப் பெருக்க காலமாகும். பல பகுதிகளில் உள்ள இப் பறவைகள் வருடத்திற்கு இரு முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

ஆண்கள் பல பெண்களோடு இனப்பெருக்கத்திற்காக இணையும். ஆனாலும் சில ஒன்றுடன் மட்டுமே சேரும்.பற்றைகளின் ஆழத்தில் ஆரம்ப கூடு கட்டலை ஆண்களே செய்து, சிறந்த காட்சியுடன் பெண்ணை அழைக்கும். ஆணை ஏற்றுக் கொண்ட பெண் கூடு கட்டலை நிறைவு செய்யும். மெல்லிய நார், சிலந்தி வலை, புற்கள் மற்றும் பச்சை இலைகளினால் கூடு கட்டப்படும். கிண்ணம் போன்ற அமைப்புடைய கூடு புற்கள் அல்லது இலைகள் மூலம் மூடப்பட்டு உருமறைப்புச் செய்யப்பட்டு காணப்படும். அதனுள் 3 தொடக்கம் 6 வரையான முட்டைகளை இடும். பெண்கள் அடிக்கடி தன் துணையினை மாற்றிக் கொள்ளும். அத்துடன் அவை குறித்த பிரதேசத்தில் வசிப்பது மிகக் குறைவு. ஆனால், ஆண்கள் இடம்மாறுவது குறைவு.


http://ta.wikipedia....ு_கதிர்க்குருவி   

 10 . சிவப்பு மூக்கு ஆள்காட்டி ( Red wattled Lapwing ) சிவப்பு மூக்கு ஆள்காட்டி ( Red wattled Lapwing ) என்பது ஒரு கரைப்பறவை. இது மனிதர்களையோ அல்லது எதிரிகளையோ கண்டால் ஒலிஎழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்தும். இதனால் இப்பறவை ஆள்காட்டி என்றும் ஆள்காட்டிக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பறவை தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.

ஆட்காட்டிகள் அளவில் பெரிய கரைப்பறவைகளாகும். இவை 35 செமீ நீளம் இருக்கும். இதன் இறக்கைகளும் முதுகுப் பகுதியும் ஊதா நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் தலை, மார்பு, கழுத்தின் முன்பகுதி ஆகியன கருப்பு நிறத்திலும் இவ்விரண்டு நிறங்களுக்கு நடுவில் உள்ள பகுதி வெண்ணிறமாகவும் இருக்கும். இதன் கண்ணைச் சுற்றிலும் சிவப்பு நிறத்திலான தோல் இருக்கும். அலகுகள் சிவப்பாக நுனி மட்டும் கருப்பாக இருக்கும். கால்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

ஆட்காட்டிகள் பலவகையான பூச்சிகள், நத்தைகள், மற்றும் சிறு நீர்வாழ் உயிரினங்களை உணவாகக் கொள்ளும். இவை தானியங்களையும் சில சமயம் உண்ணும். பெரும்பாலும் இவை பகலிலேயே இரை தேடும்.

http://ta.wikipedia....ூக்கு_ஆள்காட்டி

     

மனமே மலர்க 06

இலக்கின்றி பறக்கும் சிந்தனைப் பறவை


வாழ்க்கையில் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத செல்வம் எது ? - என்னுடைய வாழ்வியல் பயிற்சி முகாமுக்கு வருபவர்களிடம் நான் வழக்கமாகக் கேட்கும் கேள்வி இது .

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள். நான் சொல்வது - இந்தக் கணம்.. இந்த விநாடி.. இதுதான் நிலையானது. இந்த விநாடியை யாருமே நம்மிடமிருந்து பிரிக்க முடியாது. ஆனால், இந்தக் கணத்தை இதோ நம்மைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் இந்த விநாடியை நம்மில் பலர் முழுமையாக அனுபவிப்பதில்லை என்பதுதான் நெஞ்சைச் சுடும் உண்மை. ஏனென்றால், நமது சிந்தனை பாதி வேளை, கடந்த காலத்தில் நிலைத்து இருக்கிறது.. அல்லது அது வருங்காலத்தைப் பற்றிய கவலையில் தோய்ந்து போயிருக்கிறது.

வீட்டில் இருக்கும்போது, ஆபீஸைப் பற்றிச் சிந்திக்கிறோம். சாப்பிடும்போது கூட நமது சிந்தனை சாப்பாட்டில் இருப்பதில்லை. குளிக்கும்போது கூட, ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கும் அற்புதமான உடம்பை நாம் பார்த்து ரசிப்பதில்லை. அது இன்றைய தேதிக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருப்பதை எண்ணி சந்தோஷப்படுவதில்லை. அப்போதுகூட இலக்கில்லாமல் பறக்கும் பறவையாக மாறி எங்கேயோ சிறகடிக்கிறது . இதனால் ஏற்படும் விளைவு என்ன என்று சிந்தித்துப் பாருங்கள் . எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டு ரோட்டில் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படுகிறதே. அதே மாதிரி விபத்துக்கள் நம் வாழக்கையில் வேறுவேறு விதமாக நடந்து விடும். இப்படி நான் சொல்வதால், இறந்தகாலத்து நினைவுகளைப் புறக்கணிக்கச் சொல்லவில்லை. வருங்காலத்தைப் பற்றித் திட்டம் போட வேண்டாம் என்றும் தடுக்கவில்லை. ஆவி பறக்கும் சூடான ஃபில்டர் காபியைச் ருசித்து ருசித்து அதன் ஒவ்வொரு துளியையும் நாக்கின் சுவை மொட்டுக்களால் உணர்ந்து சாப்பிடுவதைப் போலத்தான் ஆண்டவன் நமக்கு அளித்திருக்கும் வாழ்;க்கையையும் விநாடி, விநாடியாக அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

வாழ்க்கை என்பது காபியைவிடப் பல ஆயிரம் மடங்கு சுவையானது. காபியின் முதல் சிப்புக்கும் இரண்டாவது சிப்புக்கும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை. ஆனால், வாழ்க்கையில் ஒரு விநாடியைப் போல் அடுத்த விநாடி இருப்பதில்லை. ஒவ்வொரு விநாடியும் வித்தியாசமானது. ஒரே நதியில் நீ இரண்டு முறை குளிக்க முடியாது என்று ஜென் புத்திசத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, நதியில் ஒர் இடத்தில் ஓடுகிற நீர். அடுத்த விநாடி வேறு இடத்துக்கு மாறி விடுவது மாதிரி. வாழ்க்கையும் விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டே இருக்கிறது.

படிப்பு, அறிவு, ஆற்றல் மட்டும் இருந்தால் போதாது, நிகழ்காலத்துக்கு ஏற்ப விழிப்பு உணர்வும் வேண்டும். விழிப்பு உணர்வு மட்டும் இல்லையென்றhல் ஒருவன் எத்தனை திறமைகள் படைத்திருந்தாலும். அது அவனுக்குப் பலன் தராமல் போய்விடும். அதனால்தான் பொpய கம்பெனிகளில் வேலைக்கு மனுச் செய்திருப்பவர்களுக்கு Presence of Mind இருக்கிறதா என்று பல்வேறு விதங்களில் சோதனை செய்கிறார்கள்.

ஒரு பெரிய இசை வித்தகர் இருந்தார். அவர் வயலினை எடுத்து வாசித்தால். பாலைவனத்தில்கூட மழை பெய்யும். ஒரு முறை அவர் ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்குப் போயிருந்தார். அங்கே ஒரு சர்க்கஸ் கலைஞர் வயலின் வாசிக்க, கரடி டான்ஸ் ஆடியது, சர்க்கஸ் பார்க்க வந்திருந்தவர்கள் ஒட்டு மொத்தமாக எழுப்பிய கரகோக்ஷம் கூடாரத்தையே அதிர வைத்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நமது வயலின் வித்தகர். அந்த சர்க்கஸ் கலைஞரை அணுகி. ஞநன்கு பழக்கப்பட்ட கரடியை மட்டும்தான் உன் வயலின் இசைக்கு ஏற்ப உன்னால் டான்ஸ் ஆட வைக்க முடியும். ஆனால், என் வயலின் இசை. எந்த மிருகத்தையும் நடனமாட வைக்கும்ஞ என்று கூறினார். சர்க்கஸ் கலைஞர் அதைப் பேத்தல் என்று மறுக்க இருவருக்கும் இடையே பேச்சு வளர்ந்து, அங்கே ஒரு போட்டியே ஆரம்பமானது.

வயலின் வித்வானின் எதிரில் சர்க்கஸ் கலைஞர், முதலில் ஒரு சிங்கத்தை அனுப்பினார். வித்வானின் வயலின் இசை கேட்டுச் சிங்கம் சுற்றிச் சுழன்று ஆடத் தொடங்கியது. சர்க்கஸ் கலைஞர், அடுத்த ஒரு சிறுத்தையை அனுப்பினார். அதுவும் வித்வானின் வயலின் இசைக்குத் தன்னை மறந்து ஆடியது. சர்க்கஸ் கலைஞர் அடுத்து ஒரு புலியை அனுப்பினார் வயலின் வித்வான் சற்றும் பதறhமல் வயலினை வாசிக்கத் தொடங்கினார் ஆனால், அந்தப் பாழும் புலி, வயலின் இசைக்கு மயங்கவில்லை, மாறாக அது வித்வானை நோக்கி ரத்த வெறியோடு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது, பதறிப்போன பார்வையாளர்கள் கூட்டம் சிதறி ஓடியது. நமது வித்வானும் தனது வயலினைக் காற்றிலே வீசிவிட்டு கடைசி நிமிடத்தில் தலைதெறிக்க ஓடி, அதிர்ஷ்டவசமாக அந்தப் புலியிடம் இருந்து தப்பித்துக் கொண்டார்.

புலி, பயிற்சியாளர்களால் சாமார்த்தியமாக மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டது, மரண பயத்திலிருந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட வயலின் வித்வான், சர்க்கஸ் கலைஞரிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் என்றாலும், தனது இசை அந்தப் புலியைக் கட்டுப் படுத்தாது தனக்குப் பெரிய புதிராகவே இருப்பதாக அவர் சொல்ல சர்க்கஸ் கலைஞர் சிரித்தபடியே கூறினார்.

காரணம் ரொம்ப எளிமையானது, அது செவிட்டுப் புலி அதுமட்டுமல்ல, பிறவியிலேயே அதற்குக் காது துவாரமும்... ஏன், காது மடல்களே கூடக் கிடையாது. வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் கூட புலிக்குக் காது இல்லை என்பதைச் சில விநாடிகளுக்குள் கவனித்து தப்பிக்க முயன்று ஓடியது. ஆனால், உங்கள் வாசிப்பின் மீது வைத்த அபார நம்பிக்கையால், நீங்கள் கடைசி நிமிடம் வரை கண் திறந்து புலியைச் சரியாகப் பார்க்கத் தவறிவிட்டீர்கள் .

இதயமும் மூளையும்.

இந்த உலகம் முழுவதும் அன்பினால் செலுத்தப்படவில்லை. அது தந்திரத்தால் செலுத்தப்படுகிறது. இந்த உலகில் வெற்றி பெற உங்களுக்கு அன்பு தேவையில்லை. உங்களுக்குக் கல்லாகிப் போன ஒரு இதயமும் கூரிய புத்தியும் தான் தேவை. சொல்லப்போனால் உங்களுக்கு இதயமே தேவையில்லை.ஏனெனில் நீங்கள் வளரும் முறை, கலாச்சாரம்,சமுதாயம் ஆகியவை அன்பு செலுத்தும் திறனைக் கொன்று விட்டன. இதயம் உள்ள மனிதர்கள் நசுக்கப்பட்டு சுரண்டப்பட்டு அடக்கியாளப் படுகின்றனர். இந்த உலகம் தந்திரக்காரர்களால் இதயமில்லாத கொடூரமானவர்களால் நடத்திச் செல்லப்படுகிறது. எனவே வளரும் பிள்ளையும் தனது இதயத்தை இழக்கும்படி இந்த சமூகம் செய்கிறது. எனவே அவனது சக்தி முழுவதும் மூளையை நோக்கி செலுத்தப்படுகிறது. இதயம் அலட்சியப்படுத்தப் படுகிறது. இதயம் எப்போதாவது ஏதாவது சொன்னாலும், அது உங்கள் செவியை வந்து அடைவதில்லை. உங்கள் தலையில், மூளையில் ஒலிஅதிகம் இருப்பதால் இதயத்தின் குரல் எழும்பாது. மெல்ல மெல்ல இதயம்,அது அலட்சியப் படுத்தப் படுவதால் சொல்லுவதை நிறுத்தி மௌனமாகி விடுகிறது. சமூகத்தைப் புத்தி நடத்திச் செல்கிறது. அன்பு நடத்திச் சென்றால் நாம், முற்றிலும் மாறுபட்ட, அதிக அன்பு கொண்ட,குறைந்த வெறுப்பு கொண்ட, போர்களற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருப்போம். அழிக்கும் முறைகளை உருவாக்குவதை என்றும் இதயம் ஆதரிக்காது. அது வாழ்விற்காக மட்டுமே உயிர்க்கிறது; துடிக்கிறது.

இறைவன் ஏன் இதயத்தில் இருக்கிறான் ?

ஆண்டவன் இந்த உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். ஆண்டவனை அடையாளம் கண்டு கொண்ட பக்தர்கள, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை காசு கேட்டுத் துரத்தும் உள்ளூர் பிச்சைக்காரர்கள் போல ஆகிவிட்டார்கள் .  "எனக்கு நிறைய நகை கொடு.. பணம் கொடு.." என்று வகைவகையாகக் கேட்டு ஆண்டவனைத் துரத்த ஆரம்பித்ததார்கள் .  இவர்களைச் சமாளிக்க முடியாமல் மண்டபம் சத்திரம், கிராமம், நகரம் என்று எங்கெங்கோ ஓடிப்பார்த்தார் ஆண்டவன் .  ஆனால் அவரால் மனிதர்களின் "அதைக் கொடு.. இதைக் கொடு.." என்ற பிக்கல் பிடுங்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை . அவர் கோயிலை நோக்கி ஓடினாராம்.  அங்கேயும் தட்டு ஏந்தியவாறு எதிர் கொண்டது பிச்சைக் காரர்கள் கூட்டம். ஆண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை .  கடைசியில் அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. "மனிதன்தான் உள்நோக்கிச் சிந்திப்பதே இல்லையே.. சுயமதிப்பீடும் செய்து கொள்வதில்லையே .  தன்னுடைய இதயத்தைத்தான் எந்த மனிதனும் பார்ப்பதில்லையே .  அதனால் அங்கே ஒளிந்து கொண்டால் யாருமே தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள்" என்று எண்ணி மனிதனின் இதயத்திலே போய் ஒளிந்து கொண்டாராம்.

"கடவுள் ஏன் நம் இதயத்தில் குடியிருக்கிறhர்..?" என்ற சீரியஸான கேள்விக்கு கிண்டலாகச் சொல்லப் படுகிற கதை இது .

"யாரிடமிருந்து எதை வாங்கலாம்.. பெறலாம்" என்ற மனநிலையிலே நம்மில் பலர் இருந்து வருகிறோம். அதனால் பிறருக்கு என்ன கொடுக்கலாம் என்றே நாம் நினைப்பது இல்லை .

தப்பித் தவறி நாம் கோயிலுக்கு ஒரு டியூப்லைட் வாங்கிக் கொடுத்தால் லைட் வெளிச்சமே வெளியில் வராத சைஸுக்கு அதன் மேல் நம் பெயரைக் கொட்டை எழுத்துக்களில் எழுதிவிடுவோம்.

இந்து சாஸ்திரப்படி ஒரு பொருளைத் தானமாகக் கொடுக்கும்போது "இனிமேல் இது என்னுடையது இல்லை " என்று சொல்லிவிட்டுத்தான் கொடுக்க வேண்டும்.

சமஸ்கிருதத்தில் "நமமா" என்றல், "என்னுடையது இல்லை" என்று அர்த்தம். என்னுடையது இல்லை என்று சொல்லி, ஒரு டியூப்லைட்டைக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்து விட்டு "இது என்னுடையது " என்று பெருமைப்பட்டுக் கொள்வது எந்த  வகையில் தர்மம்..?

யோசித்துப் பாருங்கள்.. காலையில் எழுந்தவுடன் பல் விளக்க நாம் பயன்படுத்தும் பற்பசையிலிருந்து இரவு தூங்கும் போது உபயோகப்படுத்தும் கொசுவர்த்திச் சுருள் வரை.. கண்ணுக்குத் தெரியாத யார்யாரோ நமக்காகச் செய்து கொடுத்திருக்கும் பொருட்கள் எத்தனை..? எத்தனை..?

"இந்தச் சமூகத்திடமிருந்து இத்தனை பொருட்களை இன்று பெற்றுக் கொண்ட நான, அதற்கு பதிலாக இந்த உலகத்துக்கு என்ன கொடுத்தேன்..? என்று யோசித்துப் பார்த்தாலே போதும்.. நாம் இந்த உலகுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்பது புரியும் .

அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறர்.  இந்த உலகில் இருக்கும் அத்தனை தலை சிறந்த விஞ்ஞானிகளும் ஒன்று கூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஓர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார். நாம் உண்ணும் உணவிலிருந்து உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை,  நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை ? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறேhமே..? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடங்களில் முக்கியமானது "நன்றியோடு இருக்கக் கற்றுக் கொள் என்பதுதான் "நமஹ" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் "போற்றி" என்றhலும் இதை நன்றிப் பெருக்கோடுதான் உச்சரிக்க வேண்டும் .

ஆனால், உதட்டளவில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கணக்கிலெடுத்தால், அந்த வரிசையில் முதலில் நிற்பது "நன்றி."

ஒரு முறை, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், பயணிகளே.. பயப்படாதீர்கள்.. விமானத்தில் சின்னக் கோளாறுதான்.. விமானி சரிசெய்து, சமாளித்து விடுவார்.." என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக, விமானம் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது. அப்போது,

"அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமைமிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும் , விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறி விடப் போகிறது. Any way thank you for flying with our Airlines.. (எங்கள் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி) என்று சொல்லி, பயணிகளை அதோகதியாக விட்டு விட்டு விமானப் பணிப்பெண் பாராட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்துவிட்டாளாம் .

நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் "நன்றி" பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன "நன்றி" மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது.

அவநம்பிக்கை

ஒரு பெரிய வியாபாரி. வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து பெரும் லாபம் சம்பாதிப்பவர் அவர் அவ்வப்போது வெளி நாடுகளுக்குப் பயணம் செய்வதுண்டு. ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார். அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன. கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது.  அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது. அந்த ஆள் பார்ப்பதற்கே படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். பெரிய மீசை , தலை வழுக்கையுடன் ஒற்றைக் கண்ணனாய் இருந்தார். ஆள் மிக பலசாலியாகவும் உடலில் ஆங்காங்கே காயம் பட்ட வடுக்களுடனும் இருந்தார். வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.  எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,

''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் தெரியவில்லை.''

பெட்டகக் காப்பாளர் சொன்னார்,

''பரவாயில்லை,கொடுங்கள். நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று. உங்கள் அறைக்கு வந்திருப்பவரும் சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''


நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.ஏற்றுக் கொள்வதுமில்லை.

வெற்றுப்படகு

ஒருவன் படகின் மேல் ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வெற்றுப்படகு அவனுடைய படகை மோதினால் அவன் எவ்வளவு கெட்டகுணம் உள்ள மனிதனாக இருந்தாலும் அவன் கோபப்படமாட்டான். ஆனால் அவன் அந்தப் படகில் யாரேனும் ஒருவர் இருப்பதைப் பார்த்தால் படகை சரியாக செலுத்தும்படி கூச்சலிடுவான். அவன் கூச்சலிடுவது கேட்கப் படாமல் இருந்தால் அவனைத் திட்ட ஆரம்பித்து விடுவான். இவை ஏன் நடக்கிறது என்றால் எதிரே வந்த படகில் யாரோ ஒருவன் இருக்கிறான். ஆனால் அந்தப் படகு வெறுமையாய் இருந்தால் அவன் கூச்சலிடமாட்டான். கோபம் அடைய மாட்டான்.

எப்பொழுதெல்லாம், யாரேனும் உங்கள் மீது கோபப்பட்டால் அல்லது யாராவது உங்கள் மீது மோதினால், நீங்கள் இதற்குப் பொறுப்பு அவர்தான் என்று எண்ணுவீர்கள். இப்படித்தான் அறியாமை முடிவு செய்கிறது. இப்படித்தான் அறியாமை மாற்றிக் கூறுகிறது.அறியாமை எப்போதும் சொல்லும்,

''மற்றவர் தான் இதற்குப் பொறுப்பு.காரணம்''ஆனால் விவேகம் சொல்கிறது,''

மற்றவர்கள்தான் இதற்குப் பொறுப்பு,காரணம் என்றால் நானும் இதற்குப் பொறுப்பாவேன், காரணமாவேன்.

''மோதலைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி,'நான்'அங்கு இல்லாமல் இருப்பதுதான். நான் பொறுப்பு என்று சொன்னால் ஏதோ நீங்கள் செய்து விட்டதாகப் பொருள் அல்ல. நீங்கள் ஏதும் செய்யாதிருக்கலாம். ஆனால் அங்கே நீங்கள் இருப்பது ஒன்றே போதுமானது, அவர்கள் கோபமடைய. நீங்கள் நல்லது செய்கிறீர்களா, கெட்டது செய்கிறீர்களா என்பது கேள்வி அல்ல. நீங்கள் அங்கு இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி.

''நீ உன்னுடைய படகை வெறுமையாக இருக்கச்செய்ய முடியுமானால் இந்த உலக ஆற்றைக் கடக்கும்போது ஒருவரும் உன்னை எதிர்க்க மாட்டார்கள்.உன்னை ஒருவரும் துன்புறுத்தமாட்டார்கள்.''

நன்றி  : http://jeyarajanm.blogspot.fr/2014/02/blog-post.html

Tuesday, February 26, 2013

மனமே மலர்க 05

குரைக்காதே!


நாய் ஒன்று தன இன நாய்களுக்கு போதனை செய்து வந்தது. கடவுள் தன வடிவில் நாயைப் படைத்தார் என்று அது சொல்வதுண்டு. எல்லா நாய்களுக்கும் அதன் மீது ஒரு குருவுக்குள்ள மரியாதை உண்டு. அந்த நாய் மற்ற நாய்களிடம் எப்போதும் குரைக்கக் கூடாது என்று போதனை செய்து வந்தது. எந்த நாய் குரைப்பதைக் கண்டாலும் அந்த இடத்திலேயே அது குரைப்பது ஒரு பயனற்ற செயல் என்று போதிக்க ஆரம்பித்துவிடும்.

இந்த போதனை செய்பவர்களே இப்படித்தான்! எது ஒன்றை தவிர்க்க முடியாதோ அதைத்தான் செய்யக்கூடாது என்று வலியுறுத்துவார்கள். மற்ற நாய்களும் குரைப்பதைத் தவிர்க்க முயற்சித்தும் அவற்றால் முடியவில்லை. எனவே குற்ற உணர்வுடன் அவை ஒருநாள் ஒரு இடத்தில் கூடியபோது ஒரு நாய் ,

''நமது குரு சொல்வது உண்மை. குரைப்பது ஒரு தேவையற்ற செயல் அது நம் மரியாதையைக் குறைக்கிறது. எனவே நாம் நாளை ஒரு நாள் எங்காவது ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தாவது நாளை முழுவதும் குரைக்காமல் இருப்போம்,''

என்று கூற அனைத்து நாய்களும் அதை ஆமோதித்தன. மறுநாள் சொன்னதுபோல நாய்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு குரைக்காமல் இருந்தன. அப்போது அந்த குரு நாயானது வெளியே வந்தது.அதற்கு ஒரே அதிசயம். எங்குமே குரைப்பு சப்தம் கேட்கவேயில்லை. அதற்கு தெரிந்து விட்டது,தமது சொல்லுக்கு எல்லா நாய்களும் மதிப்புக் கொடுத்துள்ளனவென்று.  அதே சமயம் அதற்கு ஒரு பயமும் வந்துவிட்டது. எல்லா நாய்களும் குரைக்கவில்லை என்றால் தனக்கு வேலை எதுவும் இருக்காதே,யாருக்கும் ஆலோசனை கூற முடியாதே என்ற அச்சம் ஏற்பட்டது.

அப்போது தனக்கே குரைக்கவேண்டும்போலத் தோன்றியது. அருகில் நாய் எதுவும் இல்லாததால் தைரியமாக அது குரைத்தது. அவ்வளவுதான்.அடக்கிக் கொண்டிருந்த நாய்கள் அவ்வளவும் தங்களுக்குள் யாரோ கட்டுப் பாட்டை மீறி விட்டார்கள் என்ற தைரியத்தில் எல்லாம் ஒன்று சேரக் குரைத்தன. இப்போது குருவான நாய்க்கும் மகிழ்ச்சி, இனிமேல் எல்லோருக்கும் புத்திமதி சொல்லலாம் என்று; மற்ற நாய்களுக்கும் மகிழ்ச்சி, குரைப்பதை யாராலும் கட்டுப் படுத்த இயலாது,எப்போதும்போலக் குரைக்கலாம்என்று.

நிலையானது

எப்போது ஒரு மனிதனுக்கு 'நிச்சயமான இறப்பு'பற்றிய உணர்வு பிரக்ஞையாக மேலே எழும்புகிறதோ,அப்போது அவனுக்கு பிறர் மேல் ஏற்படும் பாச உணர்வு குறைகிறது.வேறு விதமாகச் சொன்னால்,நம்முடைய இறப்பின் மறதியே பாசப் பிணைப்புக்குக் காரணமாகிறது.நாம் எப்போது யார் மீதாவது அன்பு செலுத்துகிறோமோ,அப்போது நாம் தொடர்ந்து இறப்பை மறக்கவே முயல்கிறோம்.ஆகவேதான் அன்பு நிலையானது என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.நாம் ஆழ்ந்த அன்பு செலுத்துவோர் அனைவரும் இறக்க மாட்டார்கள் என்று நினைக்க ஆரம்பித்து விடுகிறோம்.

******

அடுத்தவரிடம் உள்ள நம்முடைய ஈடுபாடு,அடுத்தவரிடமிருந்து எதிர்பார்ப்பு, அடுத்தவரிடமிருந்து மகிழ்ச்சி ஆகியவை வரும் என்ற நம்பிக்கைகள்தான் நம்முடைய மகிழ்ச்சியற்ற தன்மைக்குக் காரணங்கள்.ஆகும்.நீங்கள் எந்த விதத்திலும் மகிழ்ச்சியை வெளியில் இருந்து அடையவில்லை.ஆனால் அந்த நம்பிக்கையில் வாழ்கிறீர்கள்.அந்த நம்பிக்கை உங்களை விட்டு விலகும்போது நீங்கள் விரக்தி அடைகிறீர்கள்.

******

முதன் முதலில் நம்மை நாமே சார்ந்து எதிர் கொள்ளும்போது மகிழ்ச்சிக்கு மாறாகத் துக்கமே ஏற்படுகிறது.விரக்தி மேலிடுகிறது.ஆனால் நம் முயற்சியைக் கைவிடாமல் இருந்தால்,மெல்ல மெல்ல ஆனந்தம் நம்மிடையே மலருகிறது.அதற்கு மாறாக அடுத்தவரை முதலில் நீங்கள் சார்ந்து நின்றால் ஆரம்பத்தில் மகிழ்ச்சி தோன்றலாம்.ஆனால்  முடிவில் நீங்கள் துக்கத்தைத்தான் சந்திக்க வேண்டி வரும்.

மனத்தின் குணம்

அவர் ஒரு புகழ்பெற்ற கவிஞர்.நிறைய கவிதைகள் புனைந்துள்ளார்.நிலாக் கவிதைகள் அவருடைய சிறந்த படைப்பு .நிலவைப் பல வகையில் வர்ணித்து எழுதிய கவிதைகள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன.

அவர் ஒருநாள் தன நண்பர்களுடன் ஒரு காட்டிற்கு பொழுது போக்க சென்றார். காட்டில் அவருக்கு வழி தவறிவிட்டது. தேடிப்பார்த்தும் நண்பர்களைக் காண முடியவில்லை. காட்டில் மனம் போன போக்கில் அவர் நடந்தார். அவருக்கு மிகுந்த களைப்பு ஆகி விட்டது. கடுமையாய் பசியும் எடுக்க ஆரம்பித்தது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. அதற்குள் இரவும் வந்துவிட்டது. அவர் ஒரு மரத்தில் ஏறி சாய்ந்து கொண்டார். அப்போது ஆகாயத்தில் பூரண நிலவு பிரகாசித்துக்  கொண்டிருந்தது.

வழக்கமாக நிலவைப் பார்த்தவுடன் அவருக்கு ஏற்படும் பிரமிப்பு இன்று அவருக்கு ஏற்படவில்லை. வயிறறுப் பசி ஒன்றுதான் அவர் நினைவில் இருந்தது. வேறு வழியில்லாமல் மீண்டும் அவர் நிலவைப் பார்த்தபோது அந்த நிலவு அவருக்கு ஒரு ரொட்டித் துண்டுபோலக் காட்சி அளித்தது. அதை நினைத்தவுடன் அவருக்கு சிரிப்பு வந்தது. நிலவு பற்றி அழகிய பல கருத்துக்களை எழுதிய தனக்கு இன்று நிலவு ஒரு ரொட்டித் துண்டு போலத் தோன்றுகிறதே என்று நினைத்தார். ஆம்,பசி வந்தவனுக்குக் காணும் பொருள் யாவும் உணவுப் பொருளாய்க் காட்சி அளிப்பதில் வியப்பேதுமில்லையே!

உண்மையில் எந்தப் பொருளையும் நாம் அதன் உண்மைத் தன்மையில் பார்ப்பதில்லை. நம் மனம் அதை எப்படி உருவகிக்கிறதோ அப்படித்தான் பார்க்கிறோம்.  மனதின் விந்தை இது.

தனித்தன்மை.

முனிவர் ஒருவர் ஒரு பாதையில் நடந்து கொண்டிருக்கையிலேயே திடீரென பாதையில் குப்புறப் படுத்து, அந்த நிலையிலேயே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அப்போது அந்த வழியே ஒரு குடிகாரன் வந்தான். கீழே கிடந்த முனிவரைப் பார்த்து,

''இவனும் நம்மை மாதிரி பெரிய குடிகாரன் போலிருக்கிறது இன்றைக்கு அளவுக்கு மீறி குடித்திருப்பான்.அதனால்தான் சுய நினைவில்லாமல் இங்கே கிடக்கிறான்,''

என்று சொல்லிக் கொண்டே கடந்து போனான்.

அடுத்து ஒரு திருடன் அந்த வழியே வந்தான்.அவன் அவரைப் பாரத்தவுடன்,

''இவன் நம்மைப்போல ஒரு திருடன் போலிருக்கிறது. இரவெல்லாம் திருடிவிட்டு களைப்பு மிகுதியால் நினைவில்லாமல் படுத்துக் கிடக்கிறான்,பாவம்,''

என்று கூறியவாறு அங்கிருந்து அகன்றான்.

பின்னர் முனிவர் ஒருவர் அங்கு வந்தார்.அவர்,

''இவரும் நம்மைப் போல ஒரு முனிவராகத்தான் இருக்க வேண்டும்.தியானத்தில் இருக்கும் இவரை நாம் தொந்தரவு செய்யலாகாது,''

என்று நினைத்தவாறு தன் பாதையில் சென்றார்.

ஆக ஒவ்வொரு மனிதரும் அவரவர் தனித்தன்மையில் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள். நாம்தான் நம் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களைப் பற்றி கற்பனைகள் செய்து கொண்டு அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று எண்ணிக் கொள்கிறோம். உறவுகள் சீர்கெடுவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

புதியதை தேர்ந்தெடு.

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் , மெல்ல மெல்ல அது பழக்கமாகி நிலை பெற்று விடுகிறது. அது நிலை பெற்ற பிறகு உங்களால் மாற முடிவதில்லை. மாறினால், புதிதாகக் கற்க வேண்டும், புதுப் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டும். இப்போது உள்ள நிலையில் பிரச்சினை எதுவும் இல்லை, எப்போது எந்த மாதிரியான பிரச்சினை வரும், அதற்கு விடை என்ன என்பது நமக்கு நன்கு தெரியும். ஒரு பாதுகாப்புக்குள் பத்திரமாக இருப்பதுபோல இது இருக்கிறது.  பழைய முறைகளில் வாழ்வது கதகதப்பானது. ஆனால் சுதந்திரப்பூ அங்கு மலராது. புதிய வானமும் திறக்காது. எதுவும் அசையாத புதைகுழி போலக் கிடக்க வேண்டியதுதான்.

புதியது அச்சம் தரக் கூடியது என்றாலும் புதியதையே தேர்ந்தெடு. உன் அச்சங்களை விடு. உன் சின்னச் சின்ன சௌகரியங்களை விட்டுத் தள்ளு. இவற்றை விலையாகக் கொடுத்துத்தான் நீ பெரிய மகிழ்வையும் எல்லையற்ற பரவசத்திற்கான வாய்ப்புகளையும் பெற முடியும். ஆரம்பத்தில் கொஞ்சம் இழப்பு ஏற்படும். ஆனால் முடிவில் நீ நஷ்டம் அடைய மாட்டாய்.

எருமைகளைப் பாருங்கள். பல லட்சக்கணக்கான ஆண்டுகளின் பரிமாணத்தில் அவை எப்போதாவது, இப்போது புசிக்கும் புல்லைத்தவிர வேறு எதையாவது புசித்திருக்குமா? ஒரு எருமை புத்தராக முடியாது. இந்தக் காரணத்தினால்தான் விலங்குகள் மனிதனைவிடத் தாழ்ந்து இருக்கன்றன. மனிதனோ புதியவை தேடுபவனாக இருக்கிறான். புதுமை நமது பகை அல்ல என்பதை ஒரு முறை கற்றுக் கொண்டால் அச்சம் பறந்தோடிவிடும்.

அனுபவம் இரண்டே வகைதான்

அமெரிக்கா - வியட்நாம் போர் நடந்த சமயம்.

யுத்தம், வியட்நாம் நாட்டை நார்நாராகக் கிழித்துப் போட்டிருந்தது. வீட்டை இழந்த மக்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள். கணவனை இழந்த மனைவி என்று நாடு முழுவதும் கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைந்திருந்தது. போரின் விளைவுகளைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிதற்காக அமெரிக்க அரசு, இரண்டு தளபதிகளை அப்போது வியட்நாமுக்கு அனுப்பியது.

கை. கால் சிதைந்து துடிக்கும் சிப்பாய்கள், குழந்தையின் பிணத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கதறும் தாய்மார்கள் என்று காட்சிகளைப் பார்த்த ஒரு தளபதியால் இந்தச் சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை தற்கொலை செய்து கொண்டு. அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்

இந்தத் தளபதி பார்த்த, அதே காட்சிகளை அடுத்த தளபதியும் பார்த்தார்.. பார்த்த பிறகு தனக்கிருந்த சின்னச் சின்னக் கவலைகளெல்லாம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை என்றாகி விட்டது அவருக்கு. ஊர் திரும்பியதும் அவர், 'கொடுத்த கடன் திரும்பி வரவில்லையே.. சொந்தமாக கார் வாங்க முடியவில்லையே..' என்பது போன்ற தினப்படிக் கவலைகளில் இருக்கும் மனிதர்களிடம்,. வியட்நாம் மக்களின் அவதிகளை எடுத்துச் சொன்னார். மக்கள் மனமுருகிக் கேட்டார்கள். அதன் பிறகு வியட்நாம் அனுபவம் பற்றிப் பேசச் சொல்லி இந்தத் தளபதிக்கு நிறைய அழைப்பு இதை வைத்தே அவர் பெரி ய பணக்காரராகி விட்டார்.

ஒரு தளபதி தற்கொலை செய்து கொள்கிறhர். அடுத்தவரோ, தனக்கிருந்த பிரச்னைகளையே மறந்து, மற்றவர்களின் பிரச்னைகளையும் மறக்கடிக்கிறhர். ஆனால். அடிப்படையில் இருவரும் பார்த்த காட்சிகள் ஒன்றுதான்.

இதே மாதிரியே இன்னொரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்-

அது ஷூ தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். தனது கம்பெனியின் ஷூக்களுக்கு குறிப்பிட்ட ஓர் ஆப்பிரிக்க நாட்டில் எவ்வளவு 'டிமாண்ட்' இருக்கிறது என்று தெரிந்து கொள்ள கம்பெனி முதலாளி அந்த நாட்டுக்கு ஒரு மேனேஜரை அனுப்பினார். போன வேகத்திலேயே தனது நாட்டுக்குப் பறந்து வந்த மானேஜர், 'அந்த நாட்டில் நாம் ஷூக்களையே விற்க முடியாது..' என்று ரிப்போர்ட் கொடுத்தார். 'ஏன்..?' என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.. 'அந்த நாட்டில் யாருமே ஷூ அணிவதில்லை*'

முதலாளி, 'முடியாது' என்ற வார்த்தையை அத்தனை சுலபமாக ஏற்றுக் கொள்ளும் ரகம் கிடையாது.அதே ஆப்பிரிக்க நாட்டுக்கு இன்னொரு மானேஜரை அனுப்பினார். அந்த நாட்டுக்குப் போய் ஸ்டடி செய்த இரண்டாவது மானேஜர் சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டு முதலாளியின் அறைக்குள் ஓடி வந்து சொன்னார்- 'நமது கம்பெனியின் ஷூக்களுக்கு அங்கே மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது '

'எப்படி..?' என்று அவரிடம் முதலாளி கேட்டார் அதற்கு இரண்டாவது மானேஜர் சொன்ன பதில்.. 'அந்த நாட்டில் யாருமே ஷூ அணிவதில்லை'

இதிலிருந்து நாம் படிக்கவேண்டிய பாடம் இதுதான், ஒவ்வொரு மனிதனும் அலுவலகம், வியாபாரம், வீடு என்று வகைவகையான சந்தர்ப்பங்களில் விதவிதமான அனுபவங்களுக்கு ஆட்படுகின்றான் ஆனால். என்னைப் பொறுத்தவரை, எல்லா அனுபவங்களையும் இரண்டே வகையாகத்தான் பிரிக்க முடியும்.

ஆட்படும் அனுபவம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து ஏதாவது ஒரு பாடம் படிக்க வேண்டும் அது - சிறப்பான அனுபவம். எந்த அனுபவத்திலிருந்து அவன் பாடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லையோ, அது - மோசமான அனுபவம்.

மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், தனது முதல் முயற்சியிலேயே வெற்றியைத் தொட்டு விடவில்லை. ஏற்க்குறைய ஆயிரம் சோதனைகளுக்குப் பிறகுதான் அவர் 'பல்ப்' கண்டுபிடித்தார். 'நீங்கள் ஆயிரம் சோதனை செய்தீர்கள்.. அதில் 999 சோதனைகள் தோல்வியடைந்தன. ஒன்றே ஒன்றுதான் வெற்றி பெற்றது* இல்லையா..?' என்று அவரிடம் யாரோ ஒருமுறை கேட்டார்கள,; அதற்கு எடிசன் சொன்னார் -

'முதல் 999 சோதனைகளிலும் நான் எதுவுமே கண்டுபிடிக்கவில்லை என்று யார் சொன்னது..? ஒரு பல்ப்பை உருவாக்கத் தவறாக முயற்சி செய்வது எப்படி..? என்று இந்த 999 சோதனைகளிலிருந்து நான் கற்றுக் கொண்டேனே'

மனதின் நிலை.

மனதினால் செய்ய முடியாத விஷயம் நடுநிலையில் இருப்பதாகும். ஒரு துருவத்திலிருந்து எதிர் துருவத்திற்கு செல்வது மனதின் இயல்பாகும். நீங்கள் நடு நிலையில் இருந்தால் மனது மறைந்துவிடும். இது கடிகாரத்தில் உள்ள ஊசலைப் போன்றது. ஊசல் நடு நிலையில் நின்று விட்டால் கடிகாரம் நின்று விடுகிறது. நடு நிலையில் நிற்பதே தியானம்.

இந்த மனம் அதிக தூரத்தில் உள்ளதையே நாடுகிறது. அருகாமை உங்களுக்கு சலிப்பைத் தருகிறது. தூரத்தில் உள்ளது நம்பிக்கை தருகிறது. கனவைத் தருகிறது. மிகவும் வசீகரமாக இருக்கிறது. நீங்கள் அந்தக் கோடிக்குப் போய்விட்டால் , நீங்கள் புறப்பட்ட இடம் மீண்டும் அழகாகக் காட்சி அளிக்கிறது.

மனம் முரண்பாடுகள் நிறைந்தது. மனம் முழுமையாக இருக்க முடியாது.  யாரையாவது நீங்கள் நேசிக்கும்போது உங்கள் வெறுப்புத் தன்மையை அடக்கி வைக்கிறீர்கள். நேசித்தல் முழுமையாக இல்லை. உங்கள் வெறுப்பு எந்நேரமும் வெளிப்படலாம். நீங்கள் ஒரு எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். எல்லா உறவுகளும் விருப்பும் வெறுப்பும் உடையவை.

மனம் உங்களுக்கு எதிரானதற்கே செல்ல வற்புறுத்தும். எதிரானதற்குச் செல்லாதீர்கள். மையத்தில் நின்று இந்த மனம் செய்யும் ஏமாற்று வேலையைக் கவனியுங்கள். இந்த மனம் உங்களை அதிகாரம் செய்து கொண்டிருக்கிறது.

பொய் சொல்லக்கூடாது

நமது பால்ய காலத்தை!
'பொய் சொல்லக்கூடாது... திருடக்கூடாது... கஷ்டம் வந்தால் மூட்டை தூக்கிக்கூடப் பொழைக்கலாம், தப்பில்லை...' என்று எத்தனை எத்தனை நல்ல விஷயங்களை நமக்குக் கற்றுத் தந்தார்கள்.

ஆனால், இன்று..? அந்த அடிப்படை நல்லொழுக்கமே மெள்ள மெள்ள நீர்த்துப்போய்க் கொண்டிருக்கிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. பாமரர்களைவிடப் படித்தவர்களும் விஷயம் தெரிந்தவர்களுமே அதிகம் பொய் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வீட்டில் போன் மணி அடித்தால், 'அப்பா வீட்டில் இல்லைனு சொல்லு' என்று குழந்தைகளுக்கு நாமே பொய் சொல்லக் கற்றுத் தருகிறோம்.

'ஏன் லேட்..?' என்று மனைவி கேட்டால், நம் கைவசம் ஏதோ ஒரு பொய் எப்போதும் தயாராக இருக்கிறது.

தெரிந்தே ஒரு பொய்யை மெய் என்று நம்புவதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது, தெரியுமா..?

இதோ, இந்தக் கதையைப் படியுங்கள்.

ஒரு முறை முல்லா, பக்கத்து வீட்டுக்காரரிடம் பானை ஒன்றை இரவல் வாங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, பக்கத்து வீட்டுக்காரர் தயங்கித் தயங்கி, ''என் பானையைத் திருப்பிக் கொடுக்க முடியுமா..?'' என்று முல்லாவிடம் கேட்டார்.

''அடடா... உங்களிடம் இரவல் வாங்கிய பானையை உடனே திருப்பிக் கொடுக்காமல் மறந்துபோனதிலும் ஒரு லாபம் இருக்கிறது. ஆமாம்... உங்கள் பானை ஒரு குட்டி போட்டிருக்கிறது, பாருங்கள்!'' என்று சொல்லி, தான் இரவலாக வாங்கிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையையும் கொடுத்தார் முல்லா. பக்கத்து வீட்டுக்காரருக்குத் தாங்கமுடியாத சந்தோஷம்.

அடுத்த வாரமே முல்லா மறுபடியும் பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று, ''போன தடவை கொடுத்ததைவிடப் பெரிய பானை ஒன்று இருந்தால், இரவலாகக் கொடுங்களேன்!'' என்று கேட்க... அவரும் 'ஒன்றுக்கு இரண்டாகப் பானை கிடைக்கும்' என்று சந்தோஷத்தோடு, வீட்டிலிருந்த மிகப்பெரிய பானையைத் தூக்கி முல்லாவிடம் கொடுத்தார். ஒரு வாரம் ஆயிற்று. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் சென்று, தான் இரவலாகத் தந்த பானையைத் திரும்பக் கொடுக்க முடியுமா என்று கேட்டார்.

''அதை ஏன் கேக்கறீங்க..? நேத்து உங்க பானை செத்துப்போச்சு!'' என்றார் முல்லா.
பக்கத்து வீட்டுக்காரருக்கு மகா எரிச்சலாகி விட்டது! ''என்னை என்ன மடையன்னு நினைச்சியா..? பானை எப்படிச் செத்துப்போகும்..?'' என்றார் கோபமாக.

''பானை குட்டி போட முடியும்னு உன்னால் நம்பமுடியுது. பானை செத்துட்டதுனு சொன்னா நம்பமுடியலையா..?'' என்று திருப்பிக் கேட்டார் முல்லா. பக்கத்து வீட்டுக்காரர் வந்த சுவடே தெரியாமல் நடையைக் கட்டினார்.

இப்போது புரிகிறதா..? பொய் சொல்வது எவ்வளவு தப்போ, அவ்வளவு தப்பு - பொய் என்று தெரிந்தும் அதை நம்புவது!

சரி, நாம் பொய் சொல்லும்படியான அவசியம் ஏற்படாதிருக்க என்ன வழி..?
இல்லை, முடியாது போன்ற வார்த்தைகளைச் சொல்லக் கற்றுக் கொண்டால், ஏறக்குறைய ஐம்பது சதவிகிதப் பொய்களைச் சொல்லவேண்டிய அவசியமே ஏற்படாது. ஆபீஸில் உடன் வேலை செய்பவர் மோட்டார்சைக்கிளை இரவலாகக் கேட்கிறார். 'ஸாரி... என் மோட்டார் சைக்கிளை நான் யாருக்கும் இரவல் கொடுப்பதில்லை' என்று நேரடியாகச் சொல்லிவிட்டால் எதிராளியின் முகம் வாடிப்போகுமே என்று பயந்து, 'இல்லைப்பா... பெட்ரோல் இல்லை, பிரேக் பிடிக்கலை...' என்று வாய்க்கு வந்த பொய்யைச் சொல்கிறோம். எதிராளியின் முகம் வாடிப் போய்விடக்கூடாது என்பதற்காக, நாம் பொய்யன் என்ற பட்டத்தைச் சுமப்பது எந்த விதத்தில் சரி..?

பொய் சொல்லக்கூடாது என்றால்... மனைவி, தாய், தந்தை, குடும்பத் தினர், நண்பர்கள் இவர்களிடம் எல்லாம் பொய் சொல்லலாமா..? அப்படியே பொய் சொன்னாலும், அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்..?

ஒரு சின்னக் கதை... ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தாவரவியல் மாணவர்கள். ஒரே ஒரு பரீட்சையைத் தவிர, மற்ற எல்லா பரீட்சையும் எழுதிவிட்டார்கள். மிச்சமிருந்த ஒரு பரீட்சைக்கு இன்னும் ஒருவார காலம் இருந்தது.
மேலும், அது சுலபமான பேப்பர்தான் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு மலைவாசஸ்தலத்துக்கு பிக்னிக் போனார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தார்கள். அவர்கள் கிளம்பவேண்டிய தருணம் வந்தது.

அப்போது ஒரு மாணவன், ''க்ளைமேட் அருமையாக இருக்கிறது. இன்றிரவும் இங்கேயே தங்கிவிட்டு, நாளை காலை ஆறு மணிக்கு காரில் கிளம்பினால் போதும்... பரீட்சை நேரத்துக்குக் கல்லூரிக்குப் போய்விடலாம்...'' என்றான்.

'அதுவும் சரிதான்' என்று மாணவர்கள் அன்று முழுவதும் அங்கேயே கோலாகலமாகக் கழித்துவிட்டு, இரவு தாமதமாகத் தூங்கினார்கள். நெடுநேரம் கழித்தே கண்விழித்தார்கள். 'சரி, புரொபசரிடம் ஏதாவது பொய் சொல்லி, மாற்றுப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்' என்று நம்பிக்கையோடு புறப்பட்டார்கள்.

புரொபசர் முன் நல்ல பிள்ளைகள் மாதிரி வந்து நின்றவர்கள், ''சார்... நாங்கள் அரிதான சில தாவரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு மலைவாசஸ்தலத்துக்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து நேராகப் பரீட்சை எழுதக் கல்லூரிக்கு வந்துவிடலாம் என்ற திட்டத்தில், விடியற்காலை காரில் கிளம்பினோம். வழியில் கார் பஞ்ச்சராகிவிட்டது. அதனால் பரீட்சை எழுத முடியவில்லை. நீங்கள்தான் பெரிய மனசு பண்ணி, எங்களுக்கு மாற்றுப் பரீட்சை வைக்க வேண்டும்...'' என்று பொய்யை மெய்மாதிரி உருகிச் சொன்னார்கள்.

பேராசிரியரும் ஒப்புக்கொண்டார். அந்த நான்கு மாணவர்களையும் நான்கு வெவ்வேறு அறைகளில் அமர வைத்து பரீட்சை எழுதச் சொன்னார். மாணவர்களுக்கு செம குஷி. உற்சாகத்துடன் பரீட்சை எழுத உட்கார்ந்தார்கள்.

முதல் கேள்வி மிகவும் சுலபமாக இருந்தது. மாணவர்கள் அதற்கு விடை எழுதிவிட்டு, அந்தக் கேள்விக்கான மார்க் என்ன என்று பார்த்தார்கள். ஐந்து. சரி என்று அடுத்த பக்கத்தைத் திருப்பினார்கள். 95 மார்க் என்ற குறிப்புடன் காணப்பட்ட அடுத்த கேள்வி, அவர்களின் முகத்தை அறைந்தது.

அந்தக் கேள்வி - 'உங்கள் காரில் பங்சரானது எந்த டயர்..?'பங்சர் என்று பொய் சொன்னார்களே தவிர... இப்படி ஒரு கேள்வி வரும், அதற்கு இன்ன டயர்தான் பங்சர் ஆனது என்று நாலு பேரும் ஒன்றுபோல் பதில் சொல்ல வேண்டும் என்று பேசி வைத்துக் கொள்ளவில்லையே!


பொய் என்பது தீக்குச்சியைப் போல. அது அந்த கணத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும். உண்மை என்பது சூரியனைப் போல... அது வாழ்நாள் முழுதும் மட்டுமல்ல, வாழ்ந்து முடிந்த பிறகும்கூடப் பலன் கொடுக்கும்.

சொர்க்கம்


ஒரு அரசியல்வாதி சாகும் தருவாயில் நினைத்தார்,

''நான் செய்த பாவங்களுக்குநரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.''

ஆனால் அவர் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார். அவருக்கு ஒரே வியப்பு. ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். அங்கிருந்தவர்களிடம் கேட்டார்,

''வாழ்நாள் முழுவதும் நான் நல்லசெயல்கள் எதுவும் செய்ததில்லை. எனக்கு எப்படி சொர்க்கம்...?''

அவர்கள் சொன்னார்கள்,

''வாழ்நாள் முழுவதும் நீ நரகத்தில் இருந்துவிட்டாய். அதனால் உனக்கு சொர்க்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீ இருந்தது ஒரு நவீன நரகம். இங்கு எங்கள் நரகம் எல்லாம் பழமையாகவே இருக்கிறது. இன்னும் இங்கே பழைய தண்டனைகளையே அளித்துக் கொண்டு இருக்கிறோம். பூமியில் நீங்கள் அதையெல்லாம் நவீனமாக மாற்றிவிட்டீர்கள். உன்னை நரகத்தில் போட்டால் இது தான் நரகமா என்று எங்களைப் பார்த்து சிரிப்பாய். அதனால் கடவுளுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை சொர்க்கத்திற்கு அனுப்பச் சொல்லிவிட்டார்.''

மக்கள் இன்னும் நரகம் எங்கோ இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் வாழ்வதே நரக வாழ்க்கைதான். இதை விடக் கொடிய நரகம் இன்னொன்று இருக்க முடியாது. ஆனால் நாம் வாழும் இடத்தை சொர்க்கமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.

யார் குற்றவாளி ?

பார்க்கும் சக்தி என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆனால் நாம் நமது கண்களின் முழு அருமையையும் உணருவது கிடையாது. கண்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்துவதைவிட தூங்குவதற்கு அதிகம் பயன்படுத்துகிறவர்கள் உண்டு. கண்கள் திறந்திருக்கும்போதே எதிரில் தெரியும் காட்சியைச் சரியாகப் பார்க்காமல் கனவுலகில் சஞ்சரிப்பபவர்களுக்கும் உண்டு .

சரி.. தூங்கவும் இல்லை ,கனவும் காணவில்லை அப்போதாவது எதிரில் தெரியும் காட்சி, நம் கண்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிகிறதா ? அதுவும் பலருக்குத் தெரிவதில்லை. கண்ணிலே ஏதாவது ஒரு கலர் கண்ணாடி மாட்டிக் கொண்டு பார்ப்பவர்கள் அதிகம். கலர் கண்ணாடி என்று நான் குறிப்பிடுவது அவரவரது Perception உறவினர்கள் , நண்பர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அறிந்தவர்கள, தெரிந்தவர்கள் விஷயங்களைப் பார்ககும்போது எந்தவித முழுமையான ஆதாரமும் இல்லாமல் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் அபிப்பிராயங்கள் தான் Perception .

நிர்வாக இயல் வொர்க் - ஷாப்களில் ஒவ்வொருவரின் Perception எப்படி இருக்கிறது என்பதைப் புரியவைக்க சின்ன சின்ன புதிர்கள் போடுவார்கள். அதிலிருந்து உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

ரோமானிய முறைப்படி ஒன்பது என்பதை IX என்று எழுதுவோம் இல்லையா ? இதில் எங்கேயாவது ஒரே ஒரு கோடு மட்டும் சேர்த்து இந்த ஒன்பதை ஆறு என்று மாற்ற வேண்டும் கட்டுரையை மேலே படிப்பதற்கு முன்பு இரண்டு நிமிடம் செலவு செய்து ஒரே ஒரு கோடு போட்டு ஒன்பதை ஆறாக மாற்றுவது உங்களால் முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.

விடை இதுதான்:

IX என்பது ரோமானிய முறைப்படி ஒன்பது சரி. இதையே ஆங்கில எழுத்துக்களாக நினைத்துக் கொண்டு இரண்டாம் முறை பாருங்கள் I மற்றும் Xஎன்ற இரு எழுத்துக்கள் தெரிகிறதா ? அதன் முன்னால் s என்ற ஆங்கில எழுத்தைச் சேருங்கள்.

ஆகா.. ஒன்பது ஆறாகிவிட்டது .

ஒரு கோடு மட்டும் சேர்க்கலாம் என்று சொன்னவுடன் நம்மில் பலருக்கு நேர்க்கோடுதான் நினைவுக்கு வரும் ஏன்.. S என்பது வளைவான ஒரே கோடுதான். ஆனால் அது சிலருக்கு அப்படி நினைவுக்கு வருவதில்லை. சிலருக்கு இது சட்டென்று தோன்றிவிடும். விடுகதைக்கு விடை கண்டுபிடிக்க Perception எப்படி நமக்குத் தடையாக இருக்கிறதோ அதே மாதிரிதான் கண்ணுக்கு எதிரே தெரியும் காட்சிகளின் உண்மையான பின் அர்த்தங்களையும் இந்த நமக்கு நிறம் மாற்றிக் காட்டிவிடும்.

இந்தக் கதையைப் பாருங்கள்............

அது கொடிய விலங்குகள் நிறைந்த பயங்கர காடு . அங்கே ஒரு விறகு வெட்டி . அவனுக்கு ஒரு மனைவி . அவள் ரொம்பவும் அழகானவளும் ஆனால், விறகு வெட்டும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் குடித்து விட்டு தன் மனைவியை அடிப்பதுதான் அவனுக்கு வேலை .  மனைவிக்கோ நாளுக்கு நாள் வாழ்க்கை கசந்துபோய்க் கொண்டிருந்தது. கணவன் வெட்டிப் போடும் விறகுகளை பரிசலில் ஏற்றிக் கொண்டு ஆற்றின் மறுகரைக்குப் போய் விற்று அதில் கிடைக்கும் காசிலிருந்து அரிசி, பருப்பு வாங்கி வந்து வீட்டில் சமையல் செய்ய வேண்டும். இதுதான் அவளது அன்றhட வேலை. காலப்போக்கில் எதிர்க்கரையில் இருந்த மளிகைக்கடைக்காரனுக்கும் விறகு வெட்டியின் மனைவிக்கும் மெள்ள ஒரு நட்பு துளிர்த்து வளர ஆரம்பித்தது.

அன்று அமாவாசை. வழக்கத்தைவிட அதிகமாகக் குடித்து விட்டு வந்த விறகுவெட்டி, மனைவியைக் கொடூரமாக அடித்து உதைத்துக் கொடுமை படுத்த ஆரம்பித்தான். இவனிடம் பட்ட அவஸ்தைகள் போதும் என்று மனைவி அந்த நட்ட நடு இரவில் வீட்டை விட்டு வெளியே வருகிறள். அப்போது அவள் மனதில் கரைக்கு அந்தப் பக்கம் இருக்கும் மளிகைக் கடைக்காரனிடம் போய் விடலாம் என்று ஆற்றைக் கடக்க பரிசல் வேண்டும் விறகு வெட்டியின் மனைவி பரிசல்காரனைப் போய் எழுப்புகிறாள். பரிசல்காரனோ இவளுக்காகத் தன் தூக்கத்தைத் தியாகம் செய்யத் தயாராக இல்லை.

பரிசல் இல்லை என்றால் என்ன ? இரண்டு மைல் தூரம் ஆற்றோரமாக நடந்தால் ஆற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் இருக்கிறது. அதன் வழியாகப் போய்விடலாம்ஞஎன்று இவள் நினைக்கிறள். மரப்பாலத்தின் அருகே சிறுத்தை ஒன்று உலவுவதாகப் பலர் சொன்னது இவளின் நினைவுக்கு வருகிறது என்றhலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அவள் மரப்பாலம் நோக்கி நடக்கிறhள் .

அடுத்த நாள் காலை புலியால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாக மரப்பாலத்தின் அருகே அவள் உடல்.

இந்தக் கதையை உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் படித்துக் காட்டுங்கள். கடைசியில் விறகு வெட்டியின் மனைவி சாவுக்கு யார் காரணம் என்று தனித்தனியே கேட்டுப் பாருங்கள்.

நாசமாகப் போன அந்தக் குடிகார விறகு வெட்டிதான்  என்பர் ஒருவர். இன்னொருவர் ஒழுக்கம் கெட்ட விறகு வெட்டியின் மனைவி, தானே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாள்  என்பார். மூன்றாமவர், உதவிக்கு வரமறுத்த இரக்கமற்ற பரிசல்காரன் என்பார்  விறகு வெட்டியின் மனைவியைத் தவறான நடத்தைக்கு ஈர்த்த மளிகைக்கடைக்காரன் தான் குற்றவாளி என்றும் யாராவது சொல்லக் கூடும் ஒரே கேள்விக்கு ஏன் இத்தனை விடைகள் ? ஏனென்றால் எல்லோருக்கும் ஒவ்வொரு Perception.

நள்ளிரவில் ஓங்கி உயர்ந்து நிற்கிற ஓர் அரசமரத்தின் அடியிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறபோது உங்களுக்கு முதலில் அதன் கிளைகள் தொய்யலாம். இலைகள் தொய்யலாம் அதையெல்லாம் ஊடுருவிப் பார்க்கிற போதுதான் இலைகளுக்கு அப்பால் மறைந்திருக்கிற நிலாவின் பிரகாசம் தெரியும்.

அதுபோல் எந்த விஷயத்திலுமே எடுத்த எடுப்பில் உங்கள் Perceptionஒரு மனிதன் அல்லது அவனது செயல் மீது படிந்து. உண்மைக்கு மாறான தோற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த முதல் பார்வையை மனதுக்குள் வாங்காமல், நிதானத்தோடு விருப்பு வெறுப்புகள் இல்லாமல் தெளிவான மனநிலையில் அதே காட்சியை மீண்டும் அசைபோட்டுப் பார்த்தால்தான் பார்த்ததன் உண்மை உங்களுக்கு புரியும்.

புனிதன்

மனிதர்கள் தங்களை அறிவாளிகள் போல உணர்ந்து கொள்ள வைக்கும் கேள்விகளைக் கேட்கிறார்கள். அவர்கள் பதில் பெறுவதற்காக கேள்விகள் கேட்பதில்லை. மாறாகத் தமது அறிவைக் காட்டிக் கொள்ளவே கேட்கிறார்கள் .ஒரு அறிவார்ந்த கேள்வியைக் கேட்கும்போது நீங்கள் பிரமாதமாக உணருவீர்கள்.

யாருமே மனந்திறந்து தான் யாரெனக் காட்டிக் கொள்ளத் தயாராயில்லை.  ஏனெனில் பல நூற்றாண்டுகளாக விஷயங்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளன.  நீங்கள் அவற்றை மறைத்தாக வேண்டும். யாருமே தாம் வெறுத்து ஒதுக்கப்படுவதை விரும்புவதில்லை. மேலும் புகழ்ந்துரைக்கப்பட விசயங்களும் உள்ளன. இவற்றை நீங்கள் காட்டிக் கொண்டாக வேண்டும்.  இவை உங்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பது பற்றிக் கவலையில்லை.

சமுதாயம் புகழ்ந்துரைக்கும் விஷயங்கள் உங்களிடம் இல்லையென்றால் இருப்பதுபோல் பாவனை செய்கிறீர்கள். இந்த பாவனை செய்பவர் சில சமயங்களில் உண்மையான நபரைவிட உண்மையாகத் தோற்றமளிப்பது சாத்தியமே. ஏனெனில் நிஜ மனிதர் ஒத்திகை பார்ப்பதில்லை. பாவனை செய்பவரோ , செய்து பழகுகிறார். தன்னைத்தானே ஒழுங்கு படுத்திக் கொள்கிறார். உள்ளே அவர்கள் எதிர்மறையான மனிதர்களே. கிரிமினல் குற்றவாளிகள் புனிதர்கள் ஆகிறார்கள் . நீங்கள் புனிதர்களிடம் எதிர்பார்க்கும் மதிப்பீடுகளை, ஒழுக்கங்களைப் பயிற்சி செய்தால் போதும். உங்களுக்குள் ஓர் ஆயிரக்கணக்கான குற்றம் சார்ந்த குணாதிசயங்களை நீங்கள் கொண்டிருப்பது பற்றி யாருக்குக் கவலை? மக்கள் உங்கள் முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள். யாரும் உள்ளுக்குள்ளே ஆழத்தில் குதிப்பதில்லை.

புனிதனாக இருப்பது போல நடிக்கும் ஒருவனால் அதை விரும்பி ரசிக்க முடியாது. ஏனெனில் அவனது இயல்பு அதற்கு எதிராக இருக்கும். அவன் தன்னுள்ளே ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பான். எனவே அவனால் மற்றவர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதைப் பார்க்க முடியாது. அவன் எப்போதும் சோகமாகவே இருப்பான்.

குற்றம் கண்டுபிடித்தல் 
குடும்பம், மனைவி, மக்கள் என்பதன் அருமையெல்லாம் நம்மில் பலருக்குத் தெரியாது. எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் பல குடும்பங்களைச் சுக்குநூறாக்கிக் கொண்டிருக்கிறது. இதோ, இந்தக் கற்பனைக் கதையைப் பாருங்கள்.

அவர்கள் இருவரும் வயதானவர்கள். நாற்பது வருடத் தாம்பத்தியம் நடத்தியவர்கள். மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்ற கனவில் மிதந்தவர் அவர். ஆனால், அவரது ஆசை நிறைவேறாமலேயே மரணப்படுக்கையில் விழுந்தார்.

அந்தக் கடைசிக் காலத்திலா வது மனைவியின் அன்பை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், உறவினர் ஒருவர் சொன்னார்... ''உன் மனைவி எத்தனை அன்பானவள் தெரியுமா? கல்யாணம் ஆன புதிதில், நீ உன் அலுவலகத்தில் பணத்தைக் கையாடல் செய்து வேலையை இழந்தாய். அப்போது உன் அப்பாவும் அம்மாவும்கூட 'நீ எனக்குப் பிள்ளையே கிடையாது' என்று சொல்லி, உன்னைப் பிரிந்து போனார்கள். ஆனால், உன் மனைவி மட்டும் உன்னோடுதான் இருந்தாள். பிறகு பிஸினஸ் செய்யப்போகிறேன் என்று பல லட்ச ரூபாயை வங்கிக் கடனாக வாங்கி ஒரு ஷோரூம் ஆரம்பித்தாய். அதில் பெரிய நஷ்டம் வந்து கடன்காரனாகி கடைசியில் அந்த பிஸினஸ#ம் கைவிட்டுப் போனது. உன்னோடு நெருக்கமாயிருந்த நண்பர்கள்கூட அந்த நேரத்தில் விலகிப் போனார்கள். அப்போதும் உன் மனைவி உன்னோடு இருந்தாள்.

பிறகு கெட்ட சகவாசங்கள், தீய பழக்கங்கள் வந்து சேர, ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை வாழ்ந்து வியாதியஸ்தனானாய். அப்போது நீ பெற்ற பிள்ளைகளே, உன்னை உதறிவிட்டுப் போனார்கள். ஆனால், அப்போதும் உன்னோடு இருந்தது உன் மனைவி மட்டும்தான். இதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது?'' என்று அந்தக் கணவனை நோக்கிக் கேட்டார் உறவினர். அதற்குக் கணவர் சொன்னார்: ''எனக்குக் கெட்டது நடந்த ஒவ்வொரு நேரத்திலும் இவள் என் பக்கத்தில் இருந்திருக்கிறாள். இவள் துரதிர்ஷ்டத்தால்தான் நான் இப்படிக் கஷ்டப் பட்டிருக்கிறேன்...''

இன்னொரு வகை தம்பதிகளும் இருக்கிறார்கள்.

கார் வாங்க வேண்டும். அபார்ட்மெண்ட் வாங்க வேண்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற வேண்டும் என்று சதா அலைந்து கொண்டே இருப்பார்கள். இந்த அலைச்சல் காரணமாக, கணவன் - மனைவி இரண்டு பேருக்கும் வீட்டில் பேசிக்கொள்ளக்கூட நேரம் கிடைக்காது. அப்படியே பேசினாலும் 'உன் பி.எஃப்-ல் எத்தனை பணம் இருக்கிறது? உனக்கு பாங்க்கில் எவ்வளவு கடன் கொடுப்பார்கள்?' என்று ஏதோ கம்பெனி ஆடிட்டர்கள் மாதிரிதான் பேசிகொள்வார்கள்.

'அன்பு, அந்நியோன்யம், குழந்தைகள் - இதற்கெல்லாம் எப்போது நேரம் ஒதுக்கப்போகிறீர்கள்?' என்று கேட்டால்... 'கார், அபார்ட்மெண்ட் பதவி உயர்வு எல்லாம் வாங்கிய பிறகு' என்று சொல்வார்கள்.
வெற்றியையும் செல்வத்தையும் வாழ்க்கையில் தேட வேண்டியதுதான். தப்பு என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், எதை விலையாகக் கொடுத்து இதையெல்லாம் வாங்கப் போகிறோம் என்பதை நாம் கணக்கிட வேண்டியது அவசியம் இல்லையா?

மும்பைவாசிகள் பற்றி ஒரு கிண்டல் உண்டு. அதாவது, பணிக் காலத்தில் தங்களின் ஆரோக்கியம் எல்லாவற்றையும் விலையாகக் கொடுத்து, ஐம்பது வயது வரை அவர்கள் பணம் சம்பாதிப்பார்கள். அதன்பிறகு இழந்த ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்காக, சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவழிப்பார்களாம் அது ஒரு கிராமம்... அங்கே ஒரு வீடு. அந்த வீட்டுக்கு ஒரு நாள் மூன்று பெரியவர்கள் வந்தார்கள். நீண்ட நேரம் பயணம் செய்த களைப்பு அவர்களிடம் தெரிந்தது.

இவர்களைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்மணி, 'உள்ளே வாருங்கள்... என் கணவர் வந்துவிடுவார் உணவருந்தலாம்...' என்று அழைத்தாள்.

'ஆண்மக்கள் இல்லாத வீட்டில் நாங்கள் உணவருந்த மாட்டோம். அதனால் உன் கணவன் வீடு திரும்பும் வரை, இங்கேயே காத்திருக்கிறோம்...' என்று அவர்கள் திண்ணையிலேயே இளைப்பாற ஆரம்பித்தார்கள்.
வயல்வேலைக்குப் போயிருந்த கணவன் மாலையில் வீடு திரும்பினான். உடனே அவனது மனைவி, திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த பெரியவர்களிடம் சென்று, 'என் கணவர் வந்துவிட்டார். இப்போது எங்கள் வீட்டுக்குள் வர உங்களுக்கு தடையில்லையே?' என்று கேட்க... அவர்கள், 'தடையில்லை... ஆனால், ஒரு நிபந்தனை. எங்களில் ஒருவர் மட்டுமே உங்கள் வீட்டுக்கு வரமுடியும்' என்றனர்.

அந்தப் பெண்மணி காரணம் புரியாமல் விழிக்க... அவர்களில் மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்த பெரியவர், 'என் பெயர் அன்பு. இவன் பெயர் வெற்றி. அவன் பெயர் செல்வம். எங்களில் ஒருவரைத்தான் வீட்டுக்குள் அழைக்க முடியும். அதனால் யாரை அழைப்பது என்று நீயே தேர்ந்தெடுத்துக்கொள்...' என்று சொல்ல, 'வந்திருப்பவர்கள் வழிப் போக்கர்கள் அல்ல... செல்வம், வெற்றி, அன்பு என்ற மூன்றுக்கும் அதிபதியாக இருக்கும் தேவர்கள்!' என்பது அந்தப் பெண்மணிக்குப் புரிந்தது.

பூரிப்போடு வீட்டுக்குள் ஓடிய பெண்மணி, விஷயத்தைக் கணவனிடம் சொன்னாள். கணவனுக்கு பரவசமும் பதற்றமும் தொற்றிக்கொண்டது. 'வாழ்க்கையில் வெற்றிதான் முக்கியம். அதனால் அவரை நம் வீட்டுக்கு அழைக்கலாம்' என்று யோசனை சொன்னான். அதற்கு இவள், 'வெற்றி வந்தால் மட்டும் என்ன பயன்? செல்வம்தானே முக்கியம். அதனால் செல்வத்தை அழைத்து வரலாம்' என்று பரபரத்தாள்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட அவர்களின் மருமகள் சொன்னாள்... 'வெற்றியையும் செல்வத்தையும்விட அன்பு இருந்தால்தான் கணவன், மனைவி, குழந்தை, மாமா, அத்தை என்று நாமெல்லாரும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்க முடியும். அதனால், அன்புதான் எல்லா வற்றுக்கும் அடிப்படை...' என்று சொல்ல, அந்த யோசனையை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

உடனே அந்த வீட்டின் தலைவி வீட்டுக்கு வெளியே சென்று, 'உங்களில் அன்பு யாரோ, அவர் உள்ளே வரலாம்...' என்று சொல்ல, அன்பு என்ற பெரியவர் வீட்டின் உள்ளே சென்றார். அன்பைத் தொடர்ந்து வெற்றி, செல்வம் என்ற மற்ற இரண்டு பெரியவர்களும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். இதைப் பார்த்த அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியம்! பிறகு அவர்கள் சொன்னார்கள் - 'நீங்கள் வெற்றியையோ, செல்வத்தையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வீட்டின் வெளியி லேயே தங்கிவிட்டிருப்போம். ஆனால், அன்பை நீங்கள் அழைத்ததால்தான், நாங்கள் இருவரும் உங்கள் வீட்டுக்குள் வந்தோம். காரணம், அன்பு எங்கு சென்றாலும் அதைப் பின்பற்றி, அதன் பின்னாலேயே செல்ல வேண்டும் என்பதுதான் ஆண்டவன் எங்களுக்கு இட்ட கட்டளை!'

உதாசீனம்

ஒரு அரசியல்வாதி மக்களால் போற்றப்பட்டான். பின் அவனுக்கு அதிகாரம் கிடைத்த உடன் எல்லோரும் அவனுக்கு எதிராகி விட்டார்கள். அவன் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டான். அவன் அந்த ஊரை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவன் ஊர் ஊராய் தன மனைவியுடன் சென்று வீடு தேட ஆரம்பித்தான். யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு ஊருக்குள் சென்றபோது அந்த ஊர் மக்கள் அவன் மீது கல்லெறிய ஆரம்பித்தார்கள். அவன் மனைவியிடம் சொன்னான்,

''இந்த ஊர்தான் நம் வாழ்வைத் தொடங்க சரியான இடம்,''என்றான்.

மனைவியோ,''உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?''என்று கேட்டாள்.

அவன் சொன்னான்,

''மற்ற ஊர்க்காரர்களைப் போல இந்த ஊர் மக்கள் நம்மை உதாசீனப் படுத்த வில்லையே? அவர்கள் நம்மை கவனிப்பதால் தான் கல்லை விட்டெறிகிறார்கள். ''உதாசீனத்தை விட எதிர்ப்பு மேலானது.

ஏற்பும் எதிர் விளைவும்

ஒன்றை ஏற்றல்(response) என்பது அனுபவ உணர்வு. ஏற்றலுக்கும் எதிர் விளைவுக்கும்(reaction) இடையே பெரிய வேறுபாடு உண்டு. ஒருவர் நம்மைத் திட்டினால்,பதிலுக்கு அவரைத் திட்ட வேண்டும் என்ற விருப்பம் நமக்குள் எப்போதும் இருக்கும். ஆனால் அதை எதிர்க்காமல் ஏற்கும்போது அது வேறு விதமாக அமையும். ஒருவர் நம்மைத் திட்டும்போது,

''பாவம்,இவர் இவ்வாறு திட்ட என்ன காரணமோ எனக்குத் தெரியவில்லையே,''

என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் அது ஏற்பு.

அவர் திட்டியதற்கு நாம் செயல்படவில்லை. உணர்வுபூர்ணமான நேர்விளைவு இது. பட்டனைத் தட்டியவுடன் மின்விசிறி சுழல ஆரம்பிக்கிறது. சுற்றலாமா வேண்டாமா என்று யோசிப்பதில்லை. மறுபடியும் அழுத்தினால் மின்விசிறி நிற்கிறது. அது போலவே நாம் திட்டப்படும்போது-பட்டன் அழுத்தப் படுகிறது. உடனே கோபம் வருகிறது.

ஒருவர் நம்மைப் பாராட்டுகிறார் பட்டன் அழுத்தப் படுகிறது. கோபம் நீங்குகிறது. ஆகவே நாம் ஒரு தனி மனிதனா அல்லது இயந்திரமா? நம் நடத்தை இயந்திரத்தனமாய் இருக்கிறது. ஏற்பு என்பது உணர்வின் அடையாளம். சிலுவையில் அறையப்படும்போது இயேசு ,

''கர்த்தரே,இவர்கள் தாம் செய்வது என்னவென அறியாதவர்கள்.இவர்களை மன்னியும்.''என்றார் . இது உணர்வுப் பூர்வமான பதில்.இதுதான் ஏற்பு.

தொடரும்

நன்றி  : http://jeyarajanm.blogspot.fr/2014/02/blog-post.html

Monday, February 25, 2013

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 02

சுருக்கு சுறுக்கர் பாகம் இரண்டு


வணக்கம் பிள்ளையள் நான் சுருக்கு சுறுக்கர் வந்திருக்கிறன் . நான் இண்டைக்கு மயிர் வெட்டப் போனனான் . அங்கை ரெண்டு பெடியள் இருந்தாங்கள் . நான் கிளீன் ஷேவ்இல போனதாலை , என்னை ஒருத்தருக்கும் அடையாளம் காணேலாமல் போச்சுது .  நான் மயிர் வெட்டிறவரிட்டை தலையை குடுத்துப் போட்டு இருந்தன் . அப்ப பாருங்கோ அதிலை ரெண்டு பேர் அரசியல் கதைச்சது என்ரை காதிலை எத்துப்பட்டுது . அதிலை ஒரு பெடி மற்றவனுக்கு தன்ரை அரசியலை எடுத்து விட்டான் . அது என்னண்டால் , நடைமுறைப் போராட்டம் எண்டால் என்ன நடைமுறைக்கு பணிஞ்ச போராட்டம் எண்டால் என்ன எண்டு ரெண்டாவது பெடிக்கு விளங்கப் படுத்தினான் . எனக்கு மண்டை கலங்கிப் போய் ஒரு கோதாரியும் விழங்கேலை . உங்களுக்கு ஏதாவது விளங்கீச்சுதோ பிள்ளையள் ??? விளங்கினால் இந்த சுருக்கு சுறுகருக்கும் சொல்லுங்கோ என்ன . அப்ப நான் வரட்டோ பிள்ளையள் ???

சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும்

 சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும்
ஐந்து முட்கள் கண்களில் குத்திக்கொண்டிருந்தன 

அது கனவு தான்

அவை சில நாட்களாக திரும்பத்திரும்ப

என் பார்வையில் பட்ட

காயங்களின் எண்ணிக்கைகளாயிருக்கலாம்.

அவன் தம்பியைப் போலிருந்ததாகவும்

மகனைப் போலிருந்ததாயும்

அயலானைப் போலுமென

எண்ணிக்கலங்குகின்றனர்

முகப்புத்தக நண்பர்கள்.

எனக்கும் அவனைப் போல மகன் .

பன்னிருவயதுக் குழந்தை

சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும்

பாசிசத்தின் நிழலும் புகைப்படத்தில்.

சரணடையும் குழந்தைகளின் சாவிற்கான குறியீடாக

யுத்த நியாயத்துக்கான கேள்வி அவன் பிணம்.

தொலைக்காட்சிச் செய்திகளில்

முந்த நாள் ஆந்திராவில்

நேற்று பாகிஸ்தானில்

இன்று சிரியாவிலென்று

நாளாந்தம் இரத்தங்கள், காயங்கள், மரணங்கள்.

கண்களைத் திருப்பியபடியே

உணவுத்தட்டிலிருந்து கை வாய்க்குப் போனது.

அடிக்கடி பார்த்தால் கனவு வரும்.

கனவுக்கென்ன பயம் எனக்கு?


நன்றி : தர்மினி- 

மனமே மலர்க 04


குறையொன்றும் உண்டோ?

இருட்டு அறை. அதன் ஒரு மூலையில் வெள்ளைத்திரை. எதிரே இருபது பேர் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். எல்லோருடைய கவனமும் அந்தத் திரையில் குவிந்திருந்தது.

சிறிது நேரத்தில் படம் தொடங்கியது. சினிமா இல்லை. நாடக பாணியில் காட்சிகளைக் கொண்ட ஆவணப் படம். சில நிமிடங்கள் கழித்து முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு பெண் நெளிந்தாள்.

‘என்னா படம் காட்டறானுங்க? ஒரு பாட்டு உண்டா, ஃபைட்டு உண்டா, காமெடி உண்டா, செம போர்!’ என்றாள்.

‘ப்ச், சும்மாயிரு.’ அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவள் கிசுகிசுத்தாள். ‘உனக்குப் பிடிக்கலைன்னா எழுந்து வெளியே போயிடு, மத்தவங்களைத் தொந்தரவு பண்ணாதே!’

அதற்குள் பின்னாலிருந்து யாரோ கத்தினார்கள்.

‘சைலன்ஸ்!’

‘இந்த குப்பைப் படத்தை எப்படிய்யா பொறுமையா உட்கார்ந்து பார்க்கறீங்க?’

‘படம் ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷம்கூட ஆகலை. அதுக்குள்ள நீங்களா முடிவுக்கு வந்துட்டீங்களா? கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பாருங்கப்பா!’

‘ஆமா, இவரு பெரிய ஷங்கரு. அட்வைஸ் பண்ண வந்துட்டார். போவியா?’

மறுநிமிடம் அங்கே பலத்த அடிதடி. ஒரு பெண் பாக்கெட்டிலிருந்த கத்தியை உருவிக்கொண்டு இன்னொருத்திமீது பாய்ந்து குத்த ஆரம்பித்தாள். ரத்தத்தைப் பார்த்து மற்றவர்கள் அலற, உடனடியாகப் படம் நிறுத்தப்பட்டது. கடைசியில் போலீஸ் வந்தபிறகுதான் நிலைமை கட்டுக்குள் வந்தது.

காவல்துறையினர் காயம் பட்ட பெண்ணுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். குத்திய பெண்ணைக் கைது செய்தார்கள். விசாரணை ஆரம்பமானது.

‘இங்கே என்னப்பா படம் காட்டினீங்க? எதுக்கு?’

’நாங்கல்லாம் ஒரு ட்ரெய்னிங்குக்கு வந்திருந்தோம் சார். அது தொடர்பான வீடியோதான் இது!’

‘என்ன ட்ரெய்னிங்?’

’கோபத்தை அடக்கறதுக்கான Anger Management ட்ரெய்னிங் சார்’ என்றாள் அந்தப் பெண். போலீஸ்காரர்கள் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டார்கள்.

இது கற்பனைக் கதை அல்ல. இரண்டு வாரம் முன்பாக அமெரிக்காவில் நிஜமாக நடந்த விஷயம்.

’யாருக்காகவும் நாம் வீண் வேஷம் போடவேண்டியதில்லை’ என்கிறது ஜென். நம்முடைய முதுகில் இருக்கும் அழுக்கை நாமே பார்க்கத் தவறினால், அல்லது நல்ல சட்டை போட்டு அதை மறைத்துக்கொண்டுவிட்டால் அதனால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அடுத்தவர்களுக்காகக் குறைகளைத் திருத்திக்கொள்வதுபோல் நடிப்பதற்கும் நாமே உணர்ந்து திருந்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ளாதவரை கோவிலில் சுவாமி தரிசனம் செய்துகொண்டிருக்கும்போதுகூட, நம் மனம் வாசலில் கிடக்கும் செருப்பைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கும்!

இரும்பு ஏன் அழுதது?


உலோகங்களில் உயர்ந்ததான தங்கத்திற்கு உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே வந்தது. ஒரு இடத்தில் யாரோ பெருமூச்சு விட்டு அழும் குரல் கேட்டது. யார் அழுகிறார் என்று பார்க்கும் நோக்கத்துடன் அழுகுரல் வந்த திசையை நோக்கிச் சென்றது. அங்கே கொல்லனுடைய உலைக்களம் இருந்தது. அங்கு இரும்புத் துண்டு ஒன்றை சம்மட்டியால் அடித்துக் கொண்டிருந்தார்கள். வேதனை தாங்க முடியாமல் அந்த இரும்புத் துண்டு அழுது புலம்பிக் கொண்டிருந்தது. அதை அன்புடன் பார்த்த தங்கம்,

“ இரும்பே அனைத்து உலோகங்களும் உன்னைப் போல் அடிபடப் பிறந்தவைகள்தான். இப்படி அழுது புலம்புவதால் என்ன பயன்? நானும் உன்னைப் போல் அடி வாங்குகிறேன். எனவே வேதனையைப் பொறுத்துக் கொள். அழாமல் இருக்கப் பழகிக் கொள்” என்றது.

அதைக் கேட்ட இரும்பு,

“தங்கமே, உனக்குக் கிடைக்கும் தண்டனை வேறு, எனக்குக் கிடைக்கும் தண்டனை வேறு. நீ பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கலாம். என்னால் அப்படி இருக்க முடியாது” என்றது.

உடனே தங்கம் “நானும் உன்னைப் போல்தான் அடி வாங்குகிறேன். இருவர் தண்டனையும் வேறு என்று எப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டது.

“தங்கமே, உன்னை, உன்னைப் போன்ற தங்கமா அடித்துத்து துன்புறுத்துகிறது? நமக்கு வேண்டாதவர்கள், பகைவர்கள் துன்புறுத்தும் போது தாங்கிக் கொள்ளலாம். என் நிலையைப் பார். என்னைப் போன்று இன்னொரு இரும்பு அல்லவா என்னைத் துன்புறுத்துகிறது. இதை என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?” என்றபடி மீண்டும் கண்ணீர்விட்டது.

கற்றுக் கொடுக்கும் திறனை விட...

ஒரு ஆசிரமத்தில் முனிவர் ஒருவர் தன் சீடர்களுக்கு தியானம், யோகா கற்றுக் கொடுத்தார். அவர் சாத்திரங்களைக் கற்றுக் கொடுத்து மாணவர்களை மிகவும் வல்லவராக்கினார். எனவே அவரது குருகுலத்தில் படிப்பதற்கு நிறைய போட்டி இருந்தது. அங்கு மன்னர், அமைச்சர், செல்வந்தர்கள் என வசதி படைத்தவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இந்த குருகுலத்தில் முனிவருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஒரே ஒரு ஏழை மாணவன் மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

அந்தக் குருகுலத்தில் முனிவர், அந்த ஏழை மாணவனை கடைசி வரிசையில் உட்கார வைத்தார். அவனுக்கு பல வேலைகளைக் கொடுப்பார். மிகவும் உதாசீனப்படுத்துவார்.

தேவலோக இந்திரன் ஒரு நாள் அந்த குருகுலத்தைப் பார்வையிட வந்தான். முனிவர் தன் குருகுலத்தை இந்திரன் பார்வையிட வந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்திரன் அவருக்கு ஒரு பெட்டியைக் கொடுத்தான்.

“சுவாமி! இதில் சில பொருட்கள் இருக்கின்றன. இதை ஒன்றாகப் பொருத்தினால், ஒரு அரிய பொருள் உங்களுக்கு கிடைக்கும்,'' என சொல்லி அவரிடம் அதைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.

முனிவர் அந்தப் பெட்டியை அவசர அவசரமாகப் பிரித்தார். ஏதோ விலை உயர்ந்த பொருள் இருக்குமென நினைத்தார். பெட்டியில் இருந்த பாகங்களை ஒன்று சேர்க்க முயற்சித்தார். அவரால் ஒன்று சேர்க்க முடியவில்லை அந்தப் பெட்டியை அப்படியே போட்டுவிட்டு வெளியில் சென்று விட்டார். திரும்ப வந்து போது, ஒரு தங்கக்கலசத்தில் அமுதம் இருப்பதைப் பார்த்தார்.

“யார் இதைப் பொருத்தியது?” என்றார்.

“நான் தான்” என்றான் அந்த ஏழைச்சீடன்.

“நான் மிகவும் கஷ்டப்பட்டும் இதைச் சேர்க்க முடியவில்லை. நீ எப்படி சேர்த்தாய்?” என்றார் முனிவர்.

அவன் அப்பாவியாக, “சுவாமி! பிறருக்கு கல்வி கற்றுக் கொடுக்குமளவு திறமை இருந்தால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்தக் கூடிய திறனும் இருக்க வேண்டும்” என்றான். முனிவருக்கு வெட்கமாகப் போய் விட்டது.

மனிதனும் விலங்கும்
மாறுபட்ட கருத்துடையவர்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்பதனை விளக்குவதற்காக ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரே கூட்டில் ஒரு புலியும் முயலும் சேர்த்து வைக்கப் பட்டிருந்தன.இந்த அதிசயக் காட்சியைக் காண தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.புலி படுத்திருக்கும்.அதன் வயிற்றில் சாய்ந்தவண்ணம் முயல் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்.ஒரு பெண்மணி இதை வியப்புடன் பார்த்து விட்டு நிர்வாகியிடம் சென்று,

''இது எப்படி சாத்தியம்? எப்படி இவ்வாறு பயிற்சி கொடுத்தீர்கள்?''என்று ஆர்வமுடன் கேட்டார்.அன்று அந்த நிர்வாகி பணியிலிருந்து ஓய்வு பெரும் நாள் எனவே அவர் அந்தப் பெண்ணிடம் மெதுவாக,'

'இதில் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை.தினசரி நாங்கள் ஒரு ஆட்டை மாற்றிவிடுவோம்,இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்,''என்றார்.

புலி விலங்குகளை அடித்துக் கொல்லும் கொடிய மிருகம்தான்.ஆனால் அது பசித்தால் மட்டுமே தேவைக்கேற்ப விலங்குகளைக் கொல்லும்.பசி தீர்ந்தால் அது சாதுவாகிவிடும்.மனித இனம் மட்டும் தான் காரணம் ஏதுமின்றி பிற மனிதர்களைக் கொல்லும் குணமுடையது..ஒரு அணுகுண்டைப் போட்டு பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்லுவான்.ஹிட்லர் போன்ற மனிதர்கள் தான் இனத்தின் பேரால் பல லட்சம் மனிதரைத் தீர்த்துக் கட்ட இயலும்.

ஒரு உணவு விடுதிக்கு திடீரென ஒரு சிங்கமும் முயலும் சேர்ந்து வந்தன.அனைவரும் அரண்டு போய் நின்றபோது விடுதி மேலாளர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முயலிடம் சென்று,

''நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?உங்கள் நண்பர் என்ன சாப்பிட விரும்புகிறார்?''என்று கேட்க முயல் சிரித்துக் கொண்டே சொன்னது,

''இங்கு நான் மட்டும் தான் சாப்பிட வந்தேன்.என் நண்பர் பசியுடன் இருந்தால் நான் உடன் வந்திருக்க முடியுமா?நானே உணவாகியிருப்பேனே!''என்று சொன்னதாம்.

தெளிவு

அவர் ஒரு அரசியல்வாதி.ஊரில் பெரிய மனிதன்.எப்பொழுதும் மன சஞ்சலத்திலேயே இருந்ததால் தெளிவு வேண்டி ஒரு ஜென் குருவை அணுகினார்.அவரும் சில பிரார்த்தனைகளையும்.பயிற்சிகளையும் தியானத்தையும் சொல்லிக் கொடுத்து அதை தினசரி செய்து வரச் சொன்னார்.சில நாட்களில் அவரிடம் மறுபடியும் வந்த அந்த பெரிய மனிதன்,

''நீங்கள் சொன்னதெல்லாம் செய்தேன்.ஆனால் தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே,''என்றார்.உடனே குரு,

''சரி,வெளியே சாலையில் ஒரு பத்து நிமிடங்கள் நில்லுங்கள்,''என்றார்.

அப்போது கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது.

''இந்த மழையிலா என்னை வெளியே நிற்கச் சொல்லுகிறீர்கள்?''என்று கேட்க,குருவும்,

''ஒரு பத்து நிமிடம் நின்றால் உங்களுக்குத் தெளிவு பிறக்கும்,''என்றார்.

''சரி பத்து நிமிடம் தானே,தெளிவு பிறந்தால் சரி,''என்று சொல்லிக்கொண்டே மழையில் நனைந்தபடி நின்றார்.அப்போது அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.பின் கண்களை மூடிக் கொண்டார்.பத்து நிமிடம் ஆயிற்று.கண்ணைத் திறந்து பார்த்தால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம்.அனைவரும் அவரை கேலியாகப் பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.பெரிய மனிதருக்கு கோபம் வந்துவிட்டது.உள்ளே விறுவிறுவென்று சென்று,

''தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே?''என்று கேட்டார்.

வெளியில் நின்றபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?''என்று குரு கேட்க அவர் சொன்னார்,

''எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்குமாறு செய்து விட்டீர்கள்.நான் ஒரு முட்டாள் போல உணர்ந்தேன்''

உடனே குரு சிரித்துக் கொண்டே சொன்னார்,

''பத்து நிமிடத்தில் நீங்கள் ஒரு முட்டாள் என்பதை உணர்ந்து கொண்டால் உங்களுக்கு பெரிய அளவில் தெளிவு பிறந்து விட்டது என்றுதானே பொருள்?''

நாய்வால்
ஒரு நாய் தன வாலைக் கடிக்க முயற்சி செய்து முடியாமல் தன்னைத்தானே சுற்றி சுற்றி வந்தது.என்ன முயற்சி செய்து அதனால் வாலைக் கடிக்க முடியவில்லை.இதை நீண்ட நேரம் கைவைத்துக் கொண்டிருந்த இன்னொரு நாய் இதனிடம் வந்து விளக்கம் கேட்டது.முதல் நாய் சொன்னது,

''ஒரு பெரிய மகானைப் பார்த்தேன்.அவர்,என் மகிழ்ச்சி என் வாலில் இருப்பதாகக் கூறினார்.அதனால் தான் வாலைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,''

இரண்டாவது நாய் சொன்னது,

''அன்பு நண்பனே,நானும் அந்த மகானைப் பார்த்தபோது என்னிடமும் அவர் இதையேதான் சொன்னார்.நானும் முயற்சி செய்து பார்த்துவிட்டு முடியாமல் சோர்வடைந்து போனேன்.ஆனால் அதற்குப்பின் அதைப் பற்றிக் கவலைப்படாமல் என்னுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டேன்.ஆனால் நான் எங்கே போனாலும் என் வாலும் பின்னாலேயே வருகிறது.அதாவது மகான் சொன்ன என் வாலிலுள்ள மகிழ்ச்சி என் பின்னாலேயே வருகிறது.''

நாம் மகிழ்ச்சியைத் தேடிப்போனால் கிடைக்காது.நாம் நம் கடமைகளை சரிவர செய்து வந்தால்,மகிழ்ச்சி தானே நம் பின்னால் வரும்.

மூன்று முறை

எப்போதும் தேவையானவை எல்லாம் உன் மனதிற்கு எதிரானவை. எனவே மனமானது எந்த ஒரு உண்மையையும் உன்னுள் நுழைய அனுமதிக்கப் பயப்படுகிறது. அது அந்த உண்மையைத் தட்டிக் கழிக்க ஆயிரத்தொரு காரணங்களைக் கண்டு பிடிக்கிறது. ஏனெனில் உண்மை உனது மனத்தைக் கலைத்துவிடும். அதனால் மனதிற்கு ஆதரவானதை மட்டுமே அது அனுமதிக்கிறது. மேலும் மனமே ஒரு குப்பை. அதனால் அது குப்பையைத்தான் சேகரிக்கும். அதையும் மகிழ்வோடு சேகரிக்கும்.
புத்தர் எதையும் மூன்று முறை கூறுவது வழக்கம் . காரணம் கேட்டபோது அவர் சொன்னார்

''முதல் முறை நீங்கள் கேட்பதே கிடையாது. இரண்டாம் முறை ஏதாவது ஒரு பகுதியைத்தான் கேட்பீர்கள். மூன்றாம் முறைதான் நான் கூறுவதை சரியாகக் கேட்கிறீர்கள் . முதல் முறை சொல்லும்போது நீங்கள் உட்கருத்தை உணர முடியாது. இரண்டாம் முறை,உணர்ந்தாலும் சரியான முறையில் கருத்தை உணர மாட்டீர்கள். மூன்றாம் முறை நான் என்ன எதிர் பார்க்கிறேனோ அதை சரியாகப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன்.''

ஏதாவது ஒன்று தேவையற்றது என்று நீ கண்டு கொண்ட கணமே அதன் மீது உன் கவனத்தை செலுத்தாதே. அதை விட்டு விலகிச் சென்றுவிடு. பொய்யைப் பொய் என்று கண்டு கொள்வதே மெய்யை மெய் என்று கண்டு கொள்வதற்கான ஆரம்பம்.

தடை

ஓவியரான ஒரு ஜென் குரு தன சீடரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்.சீடரும் அவ்வப்போது ஓவியத்தை விமரிசித்துக் கொண்டிருந்தார்.குரு எவ்வளவோ முயற்சி செய்தும் ஓவியம் சரியாக வரவில்லை.சீடரும் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது வண்ணப்பொடிகள் தீரும் நிலையில் இருந்ததால் குரு சீடரை வண்ணப்பொடிகள் வாங்கி வர அனுப்பினார்.சீடர் வெளியே சென்றார்.குருவும் இருக்கும் வண்ணங்களைக் கொண்டு ஓவியத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.வெளியே போய் வந்த சீடர் வந்ததும் அசந்து விட்டார்.குரு மிக அற்புதமாக ஓவியத்தை முடித்து வைத்திருந்தார்.ஆர்வத்துடன் குருவிடம் அது எப்படி சாத்த்யமாயிற்று என்று கேட்க குரு சொன்னார்,

''பக்கத்தில் ஒரு ஆள் இருந்தாலே ஒரு படைப்பு ஒழுங்காக உருவாகாது.உள்ளார்ந்த அமைதி உண்டாகாது.நீ அருகில் இருக்கிறாய் என்ற உறுத்தல்தான் ஓவியத்தைக் கெடுத்தது.நீ வெளியே சென்றதும் எனக்கு தடை நீங்கியது.ஓவியமும் ஒழுங்காக உருவானது.சிறப்பாக அமைய வேண்டும் என்ற நினைப்பே சிறப்பாக இல்லையோ என்ற குறைபாட்டை ஏற்படுத்தி விடும்..

குறைபாடு என்ற நினைவே ஒரு குறைபாடுதான்.அது இருக்கும்வரை முழுமைத்தன்மை வராது.குறை மனதோடு எதையும் அணுகக்கூடாது.இயல்பாகச் செய்யும் செயலே முழுமையைத் தரும்.''

மூன்று தலைகள்!

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்! இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது. ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார். அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.
நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.
ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.
புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது. ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர். மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம்,

“சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது. புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள். மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

தேவையும் ஆசையும்

நமக்குத் தேவைகள் என்பவை வெகு சிலவே. அவை எளிமையானவை. உங்களுக்கு என்ன தேவை? உணவு, நீர், உறைவிடம், உங்களை காதலிக்க ஒருவர்,அவரை விரும்ப நீங்கள். இவைதானே உங்களது தேவைகள். இந்தத் தேவைகளுக்கெல்லாம் மதங்கள் எதிரிகள். யாரையும் காதலிக்காதே, பிரம்மச்சாரியாக இரு என்கிறது மதம்.

தேவைக்கு உணவை உண்ணாதே,விரதம் இரு என்கிறது மதம்.தங்க ஒரு வீடு தேவை, ஆனால் எதிலும் பற்றில்லாமல் சந்நியாசியாகி நாடோடியாகசுற்றித் திரி என்கிறது மதம். நீங்கள் அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது மேலும் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறீர்கள் .

அதிலிருந்து மீள அந்த மதவாதிகளிடம் தஞ்சம் புகுகிறீர்கள் .மொத்தத்தில் அவர்கள் சொல்வதெல்லாம் நீங்கள் அவர்களை நம்பி இருப்பதற்காக உருவாக்கப் பட்டவை.
ஆசை என்பது என்ன?உங்களை காதலிக்க தேவை ஒரு பெண். கிளியோபாத்ராதான் வேண்டும் என்பது ஆசை..

தங்க இடம் வேண்டுவது தேவை.அரண்மனை வேண்டும் என்பது ஆசை. உன்ன உணவு வேண்டும் என்பது தேவை. ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்பது ஆசை. தேவைகள் எளிதில் அடையக் கூடியவை. ஆசைகள் அடைய முடியாதவை. உங்களுடைய எளிமையான தேவைகள் நிறைவேறினாலே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். புத்தருக்கே இந்த தேவைகள் உண்டு.

உங்களது ஆசைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறையுங்கள். ஆசைகள் செயற்கையானவை. தேவைகள் இயற்கையானவை. அதனால் உங்கள் தேவைகளைக் குறைக்காதீர்கள். அவற்றை நிறைவேற்றுங்கள்.

எதிர்பார்ப்பது தவறா?

மன்னன் ஒருவன் முனிவரிடம், கேட்டான், ''கீதையிலே, 'கடமையை செய், பலனை எதிர்பாராதே,' என்று கூறப்பட்டுள்ளது.நல்ல முறையில் ஆட்சி செய்ய வேண்டியது என்  கடமை. அதனை மக்கள் பாராட்ட வேண்டும் என்று நினைப்பது தவறா?''

முனிவர் அதற்கு,

'உன் கேள்விக்கு பதில் சொல்ல நீ ஒரு வாரம் என் ஆசிரமத்தில் சாப்பிட வேண்டும்,''என்றார்.

மன்னனும் அவ்வாறே அங்கு சாப்பிட்டு வந்தான். சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது. அதை ரசித்து அவன் சாப்பிட்டான். ஒரு வாரம் முடிந்தவுடன் முனிவர் கேட்டார்,

''இங்கு சாப்பாடு எப்படி இருந்தது?''

மன்னன் சொன்னான்,

''நானே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது. இதை சமைத்த சமையல்காரரை என் அரண்மனைக்கு அழைத்துச் சென்று தலைமை சமையல்காரராக நியமிக்கப் போகிறேன்,''

முனிவர் சொன்னார்,''சுவையாக சமைக்க வேண்டியது ஒரு சமையல்காரரின் கடமை. இந்த சமையல்காரன் தன் கடமையை செய்தான். இப்போது அவனுக்கு அரண்மனையில் வேலை கிடைத்துவிட்டது. கடமையை சரியாக செய்தவனுக்கு அதற்கான பலன் கண்டிப்பாக தேடி வரும்.''

ஆசையின் அடுத்த நிலைதான் எதிர்பார்ப்பு. ஆசைக்கு அளவில்லை. பலனை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டால் நம்மால் அந்த செயலில் நிச்சயம் வெற்றி பெற இயலாது. சரியாக செய்தால் அதற்கான பலன் நமக்குக் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

மகத்தான மனிதர்கள்.

இயேசு,கிருஷ்ணன் போன்ற மகத்தான மனிதர்கள் இன்றும் நம்மிடையே இருக்கிறார்கள். அமைதிப் புரட்சி நடத்தி வரும் அவர்களை நாம் அறியவில்லை. அவ்வளவுதான். ராமர், கிருஷ்ணர் போன்ற வாழ்ந்து முடிந்தவர்களைப் பற்றி சொல்லும்போது சுவாரஸ்யத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மிகைப் படுத்தி சொல்லலாம். கிருஷ்ணன் மலையைத் தூக்கினார், இயேசு கடலைப் பிளந்தார் என்றால் நாம் ரசிக்கிறோம். பிரமிக்க எதுவும் இல்லையெனில் நம்மிடையே ஆர்வம் வருவதில்லை.

நம்முள் ஒருவராக இருப்பவரை நாம் கடவுளாக ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. தங்களை ஆர்ப்பாட்டமாக அறிவித்துக் கொள்பவர்களைத்தான் நாம் கவனிக்கிறோம். பிரமிப்பு ஏற்பட்டால்தான் மரியாதையே வருகிறது. சாதாரணர்களாக வாழ்ந்து சப்தம் இல்லாமல் மாற்றம் நிகழ்த்துபவர்களை நாம் மதிப்பதில்லை. ராமன், இயேசு இவர்கள் வாழ்ந்தபோது கூட வெகு சிலர்தான் அவர்களுடைய உண்மையான மதிப்பை அறிந்திருந்தார்கள். மற்றவர்கள் அன்று அவர்களை ஏற்கத் தயாராயில்லை.

ராமனைக் காட்டுக்கு விரட்டி அடித்தார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். நபிகள் மீது கல்லெறிந்தார்கள். அவர்கள் மற்றவர்களிலிருந்து பெரிதும் வித்தியாசப்பட்டவர்கள், அற்புதமானவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. கடவுள் பெயரை சொல்லிக் கொண்டு சண்டை போடுவதன் மூலம் தான் கடவுளின் மதிப்பை நிலை நாட்ட முடியும் என்றல்லவா இன்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ள, பக்குவமான புத்திசாலித்தனமும் ஆழமான விழிப்புணர்ச்சியும் தேவைப்படுகிறது. அல்லாவிடில் நடமாடும் சில மகத்தான மனிதர்களை நாம் அடையாளம் காண முடியாது தவற விட்டு விடுவோம்.

கல்லெறிந்தவனுக்கு பழமா?

ஒரு கோவில் அருகே ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப்
பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசினான் அக்கல் துறவியின்

தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது.
துறவியின் துன்பத்தைக் கண்ட அவருடைய பக்தர்கள், அந்த இளைஞனைப்
பிடித்துத் தாக்கத் துவங்கினர்.  அதைக் கண்துறவி, அவனை அடிக்காமல் அழைத்து வருமாறு தெரிவித்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், அந்த  இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். துறவி, பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்

கொண்டே, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து
அவனிடம் கொடுத்தார்.  அவன் தயங்கினான்.

"அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி...." என்று பக்தர்கள்
கூச்சலிட்டார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்து,

"ஐந்தறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், என் மீது கல்லெறிந்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டாமா?" என்றார்.

துறவி கூறியதைக் கேட்ட அந்த இளைஞன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அவர் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கோரினான்.

விடுதலை

விடுதலை உள்ளபோது நீங்கள் ஏன் அடிமைத்தனத்தை தேர்வு செய்கிறீர்கள்? வானம் விரிந்து கிடக்கும்போது ஏன் கூண்டுகளை நாடுகிறீர்கள்? பதில் சிரமமானது அல்ல. கூண்டு பாதுகாப்பானது. அது, மழை , காற்று, வெயில், பகைவர்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. உங்களுக்கு என்று ஏதும் பொறுப்பு இல்லை. ஆனால் விடுதலை மகத்தான பொறுப்பு மிக்கது. அடிமைத்தனம் ஒரு வியாபாரம். நீ உன் விடுதலையை விற்று விட்டாய். வேறு யாரோ, உன் உணவுக்காக, இருப்பிடத்திற்காக, பாதுகாப்பிற்காக, உன் தேவைகளுக்காகப் பொறுப்பேற்றுக் கொண்டார். நீ இழந்தது உன் சுதந்திரத்தை. நீ உன் சிறகுகளை, நட்சத்திரம் மிக்க வானத்தை இழந்துவிட்டாய்.

கூண்டுக்குள் பாதுகாப்பாக இருந்தாலும் நீ இறந்தவன். நீ ஆபத்தில்லாத வாழ்வைத் தேர்வு செய்துவிட்டாய். உன் ஆழமான இதயம் அடிமைத்தனத்தை ஒப்பாதபோதும் நீ கூண்டுக்குள் திரும்பும் காரணம் அதுதான். நீ உன் சுதந்திரப் பாடல்களைக் கூண்டுக்குள் இருந்து பாடுகிறாய். கதவுகள் திறந்தே உள்ளன வானம் கைவசம் உள்ளது. நீயோ பொய்மையான வாழ்வுக்கு அடி பணிகிறாய். கூண்டு உனக்கு சோம்பலையும் பாதுகாப்பையும் தருகிறது. ஆனால் நீ விடுதலை, விடுதலை என்று கத்துகிறாய். இது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதாகும்.

நீங்கள் உங்கள் பாதுகாப்புகளை, சோம்பலை விட்டு வெளியேறுங்கள் . ஆகாயம் முழுவதும் உங்கள் வீடுதான். ஒரு பயணியாக, வாழ்வின் எல்லா ரகசியங்களையும் மர்மங்களையும் அறியப் புறப்படுங்கள். வாழ்வைத் துயரமான அம்சமாக மாற்றி விடாதீர்கள். அது உல்லாசமாக, சிரிப்பாக, விளையாட்டுத் தனமாக இருக்கட்டும். பிறகு ஒவ்வொரு கணமும் அரிதாக மாறும். நீங்கள் விடுதலைப் பாடல்களைப் பாட மாட்டீர்கள்  அதில் வாழ்வீர்கள். உண்மையைப் பற்றிப் பேச மாட்டீர்கள் அதை அறிந்திருப்பீர்கள். கடவுளை வணங்க மாட்டீர்கள் .  இருப்பு முழுவதும் எங்கெல்லாம் வாழ்வு இருக்கிறதோ, அங்கெல்லாம் அவனைக் கண்டு கொள்வீர்கள்.

பொறாமை

பொறாமை என்பது என்ன? அது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்தலேயாகும். நம்மை அடுத்தவர்களுடன் ஒப்பிடத்தான் நாம் கற்பிக்கப் பட்டிருக்கிறோம். ஒப்பிடுவது ஒரு முட்டாள் தனமான செயல். ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஒப்பிட முடியாதவர்கள். நீ எப்போதும் நீதான்.உன்னைப்போல யாரும் இல்லை. நீயும் யாரையும் போல இருக்கத் தேவையில்லை. கடவுள் எப்போதும் அசல்களையே உருவாக்குகிறார் . நகல்களை அல்ல.

பக்கத்து வீட்டைப் பார்த்தால் மிகப் பெரிய விஷயங்கள் நடப்பது போல நமக்குத் தெரியும். புல் பச்சையாகத் தெரியும். நமது வீட்டு ரோஜாவை விட அடுத்த வீட்டு ரோஜா அழகாகத் தெரியும். உன்னைத் தவிர மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றும். இதே கதைதான் மற்றவர்களுக்கும். அவர்களும் தங்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அவர்களுக்கு உன் வீட்டுப் புல் பச்சையாய்த் தெரியும். அவர்கள் நீ நல்ல மனைவியை அடைந்ததாக நினைக்கலாம். நீயோ அவளைப் பார்த்து சலித்துப் போயிருப்பாய்.

ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்பட்டு நரகத்தை உருவாக்கி விடுகிறோம். கீழ்த்தரமானவர்கள் ஆகி விடுகிறோம். எல்லோரும் துன்பப்பட்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். எல்லோரும் எல்லாவற்றையும் இழந்தால் நல்லது என்று நினைக்கிறோம். எல்லோரும் வெற்றி பெற்றால் நமக்கு கசக்கிறது.

நீ உனது உள் பக்கத்தை அறிவாய். ஆனால் அடுத்தவர்களின் வெளிப் பக்கத்தை மட்டுமே அறிவாய். அதுதான் பொறாமையை உருவாக்குகிறது. யாரும் உன்னுடைய உட்புறத்தில் எப்படிப்பட்டவன் என்பதை அறிவதில்லை. நீ உனது உட்புறத்தில் வெறுமையை, மதிப்பில்லாத தன்மையை உணர்கிறாய் . அதேபோல்தான் மற்றவர்களும் வெளியில் பார்த்தால் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். ஆனால் அவர்களது சிரிப்பு போலியாக இருக்கும். ஆனால் அது போலியானது என்று உன்னால் எப்படி கண்டு கொள்ள முடியும் ? ஒரு வேளை , அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி இருக்கலாம். ஆனால் நீ வெளியில் மட்டும் சிரிப்பது போலியானது என்பதை நிச்சயமாக உணர்வாய். ஏனெனில் உனது உள்ளத்தில் நீ மகிழ்ச்சியுடன் இல்லை. எல்லோரும் வெளித்தோற்றத்தை அழகாக, பகட்டாக ஆனால் எமாற்றிபவையாகக் கொண்டுள்ளனர்.

நினைத்தது கிடைத்ததா?

ஒர் ஊரில், ஏழை இளைஞன் ஒருவன் இருந்தான். விவசாயம் செய்து தன் பிழைப்பை ஓட்டிய அவனுக்குப் பணக்கரனாக வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. கூடவே பெரிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரனாக வேண்டுமென்ற ஆசையும் அவனுக்கு ஏற்பட்டது.

பாடுபட்டு சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்து, பல ஏக்கர் நிலம் வாங்க வேண்டுமென என்ணினான். ஒரு நாள் அவன், பக்கத்தில் உள்ள சிற்றூருக்கு சென்று கொண்டிருந்தான். பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப்படாமல் கிடந்ததைப் பார்த்தான்.

அந்த நிலம் விவசாயத்திற்கு சிறந்ததெனக் கருதியதால் அந்த நிலம் குறித்து விசாரித்தான். நில உரிமையாளரைத் தேடிச் சென்றான். நில உரிமையாளரிடம், அந்த நிலத்தைத் தனக்கு விலைக்குத் தரும்படி கோரினான். நில உரிமையாளர் அவனிடம், “நீ ஓடிவிட்டுத் திரும்பும் வரை எவ்வளவு துரம் உன் கால் படுகிறதோ அவ்வளவு தூரத்திற்கான நிலத்தை இலவசமாகவே நீ எடுத்துக் கொள்”, எனக் கூறினார்.  இதைக் கேட்ட அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சிறிது காலத்தில் தான் கோடீஸ்வரனாகி விடலாம் என்ற எண்ணத்தில், கற்பனையில் மிதந்தான்.

மறுநாள் காலையில், அந்த இளைஞன் ஓடி எவ்வளவு நிலத்தை அடையப் போகிறான் என்பதைக் காண அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று  திரண்டனர்.
நில உரிமையாளர் குரல் கொடுத்தவுடன் இளைஞன் ஓடத் தொடங்கினான். தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாக ஓடினான். பசி மயக்கம் எதையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே இருந்தான்.

உச்சி வெயில் சுல்லென்று அடிப்பதையும் பொருட்படுத்தாமல் ஓடினான். சூரியன் மறைவதற்குள் ஓடியவன் வந்துவிடுவான, இல்லையா என்ற சந்தேகமே எற்பட்டு விட்டது ஊர் மக்களுக்கு. மாலையில் திரும்பியவன் ஓட்டத்தை முடிக்க சிறிது தூரம் இருப்பதை உணர்ந்தான். இளைஞனைக் கண்ட ஊர் மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். அவனது உடல் வழுவிழுந்திருந்தது. கால்கள் தள்ளாடியது. மூச்சு திணறியப்டி கீழே விழுந்தான் விழுந்த சிறிது நேரத்தில் அவன் உயிர் பிரிந்தது.

இவ்வளவு தூரம் ஓடி பல நிலங்களை சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தவனுக்கு, கடைசியில் கிடைத்தது அவனை புதைப்பதற்கான ஆறு அடி நிலம்
மட்டுமே.

தொடரும்

நன்றி  : http://jeyarajanm.blogspot.fr/2014/02/blog-post.html