Skip to main content

ஆண்டவரின் எச்சங்கள் பாகம் 03

ஆனையிறவுக் கோட்டை .






1776 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் இக் கோட்டையை நிறுவினர். இக் கோட்டை அமைக்கப்பட்ட காலத்தில் ஆனையிறவுக்கும் தலை நிலத்துக்கும் இடையே ஆழம் குறைவான நீரேரி இருந்தது. கோடை காலத்தில் மட்டும் நீர் வற்றிக் குறுகிய நிலத்தொடர்பு இருக்கும் இப்பகுதியூடாக முறையான சாலைகள் எதுவும் இருக்கவில்லை. வற்றுக் காலத்தில் ஏற்றுமதிக்காக வன்னிப் பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் யானைகளை இவ்வழியூடாகவே ஊர்காவற்றுறைக்குக் கொண்டுவந்தனர். இது தவிர பிற வணிகப் பொருட்களும் இவ்விடத்தினூடாக வன்னிக்கும், யாழ் குடாநாட்டுக்கும் இடையே எடுத்துச் செல்லப்பட்டன. இவ்வாறான வணிகக் கட்டுப்பாட்டுத் தேவைகளுக்காகவே ஒல்லாந்தர் ஒரு கோட்டையை ஆனையிறவில் நிறுவினர்.

இக் கோட்டையின் தள அமைப்பு ஏறத்தாழச் சதுர வடிவானது. இதன் பக்கங்கள் 50 அடி நீளம் கொண்டவை. இக் கோட்டையின் வடமேற்கு மூலையிலும், தென்கிழக்கு மூலையிலும் இரண்டு கொத்தளங்கள் உள்ளன. கொத்தளங்களின் முகப்பகுதி 30 அடி நீளமானவை, கோட்டைச் சுவர்களில் இருந்து 8 அடிகள் முன்தள்ளி உள்ளன. 2-1/2 அடிகள் தடிப்புக் கொண்ட கோட்டைச் சுவர்கள் முருகைக் கற்களும், செங்கற்களும் கலந்து கட்டப்பட்டவை. 7 அடி உயரமான கோட்டை வாயில் கிழக்குப் புறச் சுவரில் அமைந்துள்ளது.

பிரித்தானியர் இதன் ஒரு பகுதியைச் சிறிய ஓய்வுவிடுதியாக மாற்றியமைத்தனர். ஓய்வுவிடுதியின் அமைப்புக்காகத் தென்புறச் சுவரும், மேற்குப் புறச் சுவரின் பெரும் பகுதியும் உடைக்கப்பட்டன. கொத்தளச் சுவர்கள் இருந்தவாறே பேணப்பட்டாலும், வடமேற்குக் கொத்தளப் பகுதியில் நிரப்பியிருந்த மண் அகற்றப்பட்டு அப்பகுதியில் ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டது.

1980 களுக்குப் பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது ஆனையிறவுப் பகுதி பெருமளவு தாக்குதலுக்கு உட்பட்டது. இதனால் ஆனையிறவுக் கோட்டையும் பெரும் சேதத்துக்கு உள்ளானது. 2004 ஆம் ஆண்டுக்கு முன்னரே இக் கோட்டை முற்றாக அழிந்துவிட்டது.

மூலம் விக்கி பீடியா .


இதுசம்பந்தமான கருத்துக்களை அறிய இங்கே அழுத்துங்கள்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102421

Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்














000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…