Skip to main content

ஆண்டவரின் எச்சங்கள் பாகம் 09

பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை.



பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் குடாநாடு தலை நிலத்துடன் இணையும் இடத்துக்கு அருகே, அமைந்துள்ள ஒடுங்கிய நிலப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கோட்டை ஆகும். இக்கோட்டையும், ஆனையிறவுக் கோட்டை, பைல் கடவைக் கோட்டை என்பனவும் யாழ்ப்பாண நீரேரியின் ஆனையிறவுக்குக் கிழக்கேயுள்ள பகுதிக்கு வடக்கே ஒரே கோட்டில் வரிசையாக அமைந்துள்ளன. தலைநிலத்திலிருந்து குடாநாட்டுக்கான நுழைவழியைக் கண்காணித்துப் பாதுகாப்பதே இக் கோட்டைகளின் நோக்கம்.

இக் கோட்டைகள் அமைக்கப்பட்டதன் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சியைப் பாதுகாத்தல், ஒல்லாந்தரின் வணிக நலன்களைப் பாதுகாத்தல், மக்களைப் பாதுகாத்தல் என்னும் நோக்கங்கள் இருந்ததாகத் தெரிகிறது. யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாக இருந்த என்றிக் சுவார்டெக்குரூன் தற்காலிகமாக யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்றபோது 1897 ஆம் ஆண்டில் எழுதிய நினைவுக் குறிப்பில் காணப்படும் பின்வரும் விவரங்கள் இக் கோட்டைகளின் நோக்கங்களைத் தெளிவாக விளக்குகின்றன .

சிங்களவர்கள் சதிவேலைகளில் ஈடுபடும்போது வன்னியர்களையும் நம்பமுடியாது
என்பதால், வன்னியர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு இக்கோட்டைகள் பெரிதும் உதவும்.

இக்கோட்டைகளின் முக்கிய நோக்கம் யாழ்ப்பாணத்துக்குள் வன்னியர்கள் நுழையாமல் பார்த்துக்கொள்வதும்,

சிங்களவர்களின் படையெடுப்பில் இருந்து மக்களைப் பாதுகாப்பதும்.

மக்கள் கடவுச் சீட்டு இன்றி இப்பகுதிகளூடாகப் போக்குவரத்துச் செய்வதைத் தடுத்தல்.

அனுமதிச் சீட்டுக்கள் இன்றிப் பொருட்களை மக்கள் வெளியே கொண்டு செல்வதையும் உள்ளே கொண்டு வருவதையும் தடுத்தல்.

அடிமைகளைக் கடத்திச் செல்லாமல் பார்த்துக்கொள்ளுதல்.

யானை முதலிய காட்டு விலங்குகள் யாழ்ப்பாணப் பகுதிக்குள் ஊடுருவுவதைத் தடுத்தல்.

பிரித்தானியர் காலத்திலேயே இக்கோட்டை அழிந்துவிட்டது .
பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை ஆனையிறவுக் கோட்டையைப் போல் சதுர வடிவம் கொண்டது. ஒல்லாந்தர் காலத்தில் வரையப்பட்ட இதன் வரைபடங்களில் இருந்து இக்கோட்டை எல்லா வகைகளிலும் ஆனையிறவுக் கோட்டையைப் போலவே இருந்ததாகத் தெரிகிறது .இதன் வடக்குத் தெற்கு மூலைகளில் கொத்தளங்கள் அமைந்துள்ளன. கிழக்குச் சுவரோடு அண்டி படையினருக்கான தங்குமிடங்கள் காணப்படுகின்றன. இச்சுவர் தவிர்ந்த மற்றச் சுவர்ப் பகுதிகளின் உட்புறம் தடித்த மண் சுவர்கள் உள்ளன. கோட்டையின் வாயில் இதன் மேற்குப்புறச் சுவரில் உள்ளது.
http://ta.wikipedia....்_கடவைக்_கோட்டை     


இதுசம்பந்தமான கருத்துக்களை அறிய இங்கே அழுத்துங்கள்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102630


              
Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்














000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…