Skip to main content

Posts

Showing posts from March, 2013

மனமே மலர்க 10

தூணிலே ஒரு பூனை

பிரார்த்தனை என்பது என்ன ? இந்த இடத்தில் கடவுள் என்ற விஷயத்துக்கு நான் போகவில்லை. ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நம்மையே நாம் முழுமையாக உணர்ந்து கொள்வதுதான் பிரார்த்தனையின் சாரம். வார்த்தைகளிலோ, உருவ வர்ணனைகளிலோ, சத்தங்களிலோ மட்டும் பிரார்த்தனை இல்லை முக்கியமாக உணர்வதில்தான் இருக்கிறது. சம்பிரதாய சடங்குகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளாமல், அதற்குள் போய்ச் சிக்கிக் கொள்வது அல்லது பிரார்த்தனை. இந்த இடத்தில் வருத்தமான ஒரு விஷயத்தை நான் சொல்லவேண்டும் - சமீபத்தில் நான் ஒரு வீட்டுக்குச் சென்றபோது, வித்தியாசமான ஒரு சுப்ரபாதத்தைக் கேட்டேன்.
கௌசல்யா சுப்ரஜா... அலமேலு பால் பொங்குது. காஸை நிறுத்துடி... ராம பூர்வா... சந்த்யா... கோபு... ஃபேன் ஏன் வீணா சுத்திட்டு இருக்குது... ப்ரவர்த்ததே... உத்திஷ்ட்ட.... இதை நான் நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை.... பிரார்த்தனை என்பது மட்டுமல்ல, காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுதல்... மாவிலை கட்டுதல்... ஆராதனை செய்தல் போன்ற ஆன்மீகமான விஷயங்களையும் இப்போது அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமலே வெறும் சம்பிரதாயங்களாகவே பலர் செய்து வருகிறோம். நான் சொல்வது எல்லா சமுதாயத்தினருக…

என் வணக்கம்

என் வணக்கம்


தீஞ்சுவைத் தமிழால் உனைப்

பாட வந்தாரே அரசமகனார்

யாழே,

உனைப் பாட வந்தாரே!!!


எட்டுத்திக்கிலும்

பட்டி தொட்டியெங்கிலும்

உன் கால் பதித்து,

தமிழால் ஒன்றிணத்தாய்

எனைப்போல் பல தமிழரை .

இன்று,

நீ வாலைக் குமரியென்றும்

கட்டிளங்காளையென்றும்

அணிபிரிந்து அளக்கின்றனர்

உனைப்பற்றி .......


செந்தமிழ் மொழியாள்

உனக்கேது பால் ??

மொழிக்குமுண்டோ

ஆண்பால் பெண்பால்??

எனைகேட்டால் ,

தமிழ்மொழிப்பாலே

உன்பால் என்பேன் ........


நித்திரையிலும் எனைத் தட்டி

செல்லக்கதை பேசும்

என் இனத்து யாழ் நீ ....

உன் நரம்புகளை மீட்டியே

நாளும் ஒரு இசை படிப்பேன்

உன் மீது தூசு விழவும்

நான் விடேன் என் யாழே !!!!!!!


நீ ........

வாழிய வாழியவே

பல்லாண்டு நீ

வாழியவாழியவே
கோமகன் 26 பங்குனி 2013

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் ( இறுதிப் பாகம் )

வணக்கம் கள உறவுகளே!!!
வாடைக்காற்றுக் காலம் முடிவடைந்து கொண்டல் கற்று வீசுவதாலும் , எனது றோலறில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறினாலும் , எனது மடிப்பு வலையில் ஏற்பட்ட பொத்தல்களை சீர்செய்வதற்குமாக எனது றோலரை பிரான்சின் வடமேற்கு கோடியில் இருக்கும் லு ஹார்வ் ( LE HARVE ) இறங்கு துறைக்குத் திருப்புகின்றேன் . உண்மையில் இந்தப் போட்டி மிகவும் கடினமானது . ஏனேனில் மீன்களின் முக அமைப்பு எல்லாமே ஏறத்தாள ஒன்றாக இருக்கும் . அத்துடன் இந்த மீன்களைப் படம் பிடித்த புகைப்படக்கலைஞர்களது கோணங்களும் வித்தியாசப்படும்   . ஆனாலும் , ஆர்வமுடன் பங்குபற்றிய அனைத்துக் கள உறவுகளுக்கும் , கரையில் நின்று விடுப்பு பார்த்த கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . மேலும் இந்தப் போட்டியில் நான் யாரையாவது தெரிந்தோ தெரியாமலோ மனக்காயப்படுத்தியிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்க்கின்றேன் . இந்த இறுதிப் போட்டியிலே 4 மீன்களை இணைக்கின்றேன் .  யார் முதலில் 4 மீன்களின் பெயரைச் சொல்கின்றார்களோ ( தனிதனியாகவோ அல்லது மொத்தமாகவோ ) பச்சைப்புள்ளிகளை வழங்குகின்றேன் . நேர  காலங்கள் கூடி வரும் வேளையில் இன்னுமொரு போட்டித்தொடரில் உங்களைச் சந்தி…

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 03

31 கிளிமூக்கு மீன் அல்லது கிளி மீன் ( The bicolor parrot fish or Cetoscarus bicolor)


இந்தப் படத்தில் உள்ள மீனின் தூய தமிழ் பெயர் " கிளிமூக்கு மீன் " ஆகும் . இதை "கிளி மீன்" என்றும் சொல்வார்கள் . பலரும் படகுகளைச் செலுத்தினாலும் போட்டி விதிகளின்படி இசைக்கலைஞனே சிறப்புப் பரிசான பச்சைப் புள்ளிக்கு தெரிவாகின்றார் . அவரிற்கு எனது வாழ்த்துக்கள் . மேலும் இந்த மீனைப் பற்றி அறிவதற்கு இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .
http://en.wikipedia....iki/Parrot_fish
32 கொம்பன் சுறா அல்லது உழவாரச்சுறா ( HAMMERHEAD SHARK )   
இந்தப்படத்திலுள்ள மீனுக்குரிய தூய தமிழ் கொம்பன் சுறா மீன் ஆகும் இந்த மீனை உழவாரச்சுறா என்றும் அழைப்பார்கள் . இந்தவகையான சுறா மீன் அழிந்து கொண்டிருக்கும் இனமாக கண்டறியப்பட்டுள்ளது . சுறா மீன் பலவகைகளில் காணப்படுகின்றது . அதாவது , பால் சுறா ( Baby Shark ) , கட்டைச் சுறா, பெருந்தலைச் சுறா, கருமுடிச் சுறா ( black shark ) கோர சுறா ( Broadfin Shark ), குண்டன் சுறா ( black tip shark ,grey shark ) குமரிச் சுறா ( zebra shark ) பிள்ளைச் சுறா ( spade nose shark ) , புலிச்சுறா, வள்ளுவ…

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 02

21 களுவாய் அல்லது கச்சுளுவை மீன் ( Whitefin Wolf Herring or Guitarfish)

இந்த மீனுக்கான தூயதமிழ் " களுவாய் மீன் " ஆகும். இதை " திமிறி அல்லது கச்சுளவை " என்றும் அழைப்பர் . ஒரு சிலர் திருக்கை என்றீர்கள் . இதற்கும் திருக்கைக்கும் வாலில் வித்தியாசம் உண்டு . மல்லையூரான் இந்த மீனுக்கான மறுபெயரைத் தந்தாலும் , அவர் தந்த ஆதரத்தின் அடிப்படையில் போட்டி விதிப்படி சிறப்புப் பரிசான பச்சைப்புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இந்த மீன் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .
http://en.wikipedia....wiki/Guitarfish
22 கருவௌவ்வால் மீன் அல்லது கருவாவல் மீன் (black pomfret)

இந்த மீனுக்கான தூய தமிழ் " கருவௌவ்வால் மீன் " ஆகும் . இந்த மீன் " கருவாவல் " என்றும் அழைக்கப்படுகின்றது .நந்தன் , குமாரசாயண்ணை , மொசப்பத்தேமியா சுமேரியர் ,மல்லையூரான் , ஜீவா ஆகியோர் கடலுக்குள் சென்றாலும் , தப்பிலியின் வலையிலேயே இந்த மீன் சிக்கியது . எனவே போட்டி விதிப்படி தப்பிலிக்கே சிறப்புப்பரிசான பச்சைப்புள்ளியைக் கொடுத்து கௌரவிக்கின்றேன் .
23 கீச்சான் மீன் ( Tigerfish or The gol…