Skip to main content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்


வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே !ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஒரு மீனின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த மீனுக்கான தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட மீன் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே சிக்கிய மீன்கள் என் கையில் , சில்லெடுத்த பெயர்கள் உங்கள் கையில் ..............

நேசமுடன் கோமகன்

****************************************************************************
01 வஞ்சிரம் இந்த மீனைப் பிடிக்க முயற்சி செய்த நிழலி , குட்டி , தப்பிலி , அர்ஜுன் , சஜீவன் , கரு இசைக்கலைஞன் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் . இந்த மீனின் தூயதமிழ் " வஞ்சிரம் " ஆகும் . எங்களிடையே " அறக்குளா " என்றே பெயர் பெற்றது . தப்பிலி , கரு , ஆகியோர் எங்களது பாவனையில் உள்ள பெயரையும் , செம்பகன் தூயதமிழைத் தந்தாலும் , இழுவைப் படகில் உங்கள் எலோரையும் முந்திப்போய் மடிப்பு வலையை வீசி சுடச்சுட வஞ்சிரத்தைப் பிடிச்சது எங்கடை எல்லாள மகாறாஜாதான் :lol: :lol: :D :D . எனவே அவருக்கே போட்டிவிதியின்படி சிறப்புப் பரிசாக பச்சைப் புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் :) :) . இந்த மீனைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்துங்கள்.


02 அகலை அல்லது கானாங்கெளுத்தி ( RASTRALLIGER KANAGURTA or indian mackerel )


இந்த மீனின் தூய தமிழ் " அகலை " ஆகும் . இது தமிழ் நாட்டில் " கானாங்கெளுத்தி " என்றே அழைக்கப்படுகின்றது . அந்தவகையில் உடையார் வழக்கில் உள்ள பெயரைத் தந்நு பச்சைப்புள்ளியை பெறுகின்றார் .

இந்த மீனைப் பெரும்பாடு பட்ட புங்கையூரான் , செம்பகன் , உடையார் , அலைமகள் , மற்றும் கரையில நிண்டு விடுப்பு பாத்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் :lol: :D . கட்டுமரத்தோடை எல்லோருமே போனீர்கள் . ஆனால் உடையாரே நடுக்கடல் வரைபோய் இந்த மீனைப் பிடித்தார் . அவருக்கே சிறப்பு பரிசாக பச்சைப்புள்ளியை வழங்கிக் கௌவரவிக்கின்றேன் :) . இந்த மீனைப்பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே நுளையுங்கள்.


03 அயிரை அல்லது நொய் ( LOACH )


இந்த மீனுக்குரிய தூயதமிழ் " அயிரை மீன் " ஆகும் இதனை " நொய் மீன் " என்றும் சில இடங்களில் அழைக்கின்றார்கள் . மேலதிக தகவலுக்கு பின்வரும் இணைப்பினுள் செல்லுங்கள் .
  
04 அதல் மீன் ( halibut ) 

இந்த மீனுக்கான தூய தமிழ் அதல் மீனாகும் ( halibut ) வலைகளை பரவி விரித்த அனைத்து கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . தமிழரசுவினதும் , ஜீவாவினதும் வலையில் இந்த மீன் மாட்டினாலும் , ஜீவாவாவே தூண்டிலை சரியாக போட்டார் . பொதுவாக இந்தமீன் றோலர்களில் போயே பிடிப்பதுண்டு . அளவில் பெரியதும் எடையில் கூடிய மீன் அதல் மீன் . இது ஏறத்தாள 2.5 மீற்றர் நீளமும் 14 கிலோ எடையையும் கொண்டது . எனவே போட்டி விதிப்படி ஜீவாவிற்கு பச்சைப் புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் . அதல் மீன் பற்றிய மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணைப்பில் செல்லுங்கள் .


05 அரணை மீன் அல்லது தும்பிலி மீன் ( lizard fish ) இந்த மீனுக்கான சரியான தூயதமிழ் அரணை மீன் அல்லது தும்பிலி மீனாகும் . பலர் பல விதமாக வலைகளை வீசினாலும் , இந்த மீன் எல்லாருக்கும் தண்ணி காட்டியதே உண்மையாகும் :lol: :D :icon_idea: . ஆனாலும் கருத்துகளை சொன்ன அலைமகள் , நந்தன் 26 , குமாரசாமி அண்ணை , தமிழரசு , செண்பகன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் . யாருமே சரியான பதிலைத் தரததால் பச்சைப்புள்ளி வழங்கமுடியாமைக்கு வருந்துகின்றேன் :( .

இந்த மீன் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள் :) .


05 ஓங்கில் மீன் அல்லது ஓவாய் கடற்பன்றி ( Dolphin )


இந்த மீனுக்கான தூயதமிழ் ஓங்கில் மீன் அல்லது ஓவாய் கடற்பன்றி ஆகும் . உண்மையில் மல்லையூரான் இந்த சிக்கெடுத்த பெயரை தீர்ப்பதில் தனது கருத்துகளால் எனக்கு மிகவும் உதவி செய்துள்ளார் . அவருக்கு எனது நன்றிகள் . எனது தேடுதல்கள் , சான்றோரின் அறிவுரை அடிப்படையில், நந்தன்26 முதலாவது ஆளாக " ஓங்கில் மீன் " என்று பதில் தந்ததால் அவருக்கே சிறப்புப் பரிசான பச்சைப்புள்ளியை வழங்கி கௌவுரவிக்கின்றேன் . ஏனேனில் நன் இந்தப் பதிவைத் தொடங்கியதன் முக்கிய நோக்கம் , தமிழையும் அதன் பொருளையும் இளையவர்கள் எல்லோருக்கும் போய்ச்சேரச்செய்ய வேண்டும் என்பதே . உண்மையில் ஓங்கில் மீன் என்று சொல்லப்பட்டாலும் இந்த மீனுக்கு இலக்கியத்தில் " ஓவாய் கடற்பன்றி " என்றே வரையறை செய்யப்பட்டுள்ளது . ஓவாய் என்பது ஓங்கில் மீனின் நீண்ட கூரிய மூக்கைக் குறிக்கும் . கடற்பன்றி ஓங்கிலை ஒத்து இருந்தாலும் கூரிய மூக்கு அதாவது ஓவாய் இல்லை . எங்களால் " டொல்பின் மீன் " என்றே அறியப்பட்ட மீனுக்கு ஒரு நல்ல தமிழ் பெயர் கிடைத்தது மகிழ்ச்சி தானே . எனவே ஒரளவுக்கேனும் இனங்காட்டிய நந்தன்26 ன் ஆர்வத்தைப் பாராட்டியே இந்தப் பச்சைப் புள்ளியை கொடுக்கின்றேன் . மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்புகளுக்குச் செல்லுங்கள் .http://ta.wikipedia....rg/wiki/ஓங்கில்

http://ta.wikipedia..../wiki/கடற்பன்றி

06 ஆரல் மீன் ( Sand eel fish )  

  
இந்த மீனைப்பிடிக்க அயராது முயற்ச்சி செய்த அனைத்து கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . இதன் தூய தமிழ் " ஆரல் மீன் " ஆகும் . அலைமகள் " பாம்பு மீன் " என்று கூறியிருந்தீர்கள் . நீங்கள் கிட்ட நெருங்கியிருந்தாலும் கடல் பாம்பும் ஆரல் மீனும் உருவத்தில் வேறுபட்டாலும் முகத்தில் வேறுபடுகின்றன . எனவே யாருமே பச்சைப்புள்ளியை எடுக்க இம்முறை தெரிவாகவில்லை ஆனாலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் :) :) :) .

இலக்கியத்தில் இதன் பங்கு :

யாரும் இல்லை;தானே கள்வன்
தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள்அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகின்றான். இந்நிலையில் தலைவி, தோழியிடம் கூறியது. இப்பாடலை இயற்றியவர் கபிலர்.

கருத்து :

தலைவன் என்னைப் பிறர் அறியாதவாறு காண வந்தபோது என்னோடு கூடியிருந்தான். அப்போது அங்கே யாரும் இல்லை. என் நலன் நுகர்ந்த கள்வனாகிய தலைவன் மட்டுமே  இருந்தான்.(பிறர் அறியாதவாறு கூடியிருந்த தலைவன்,இன்று பிறரறிய மணம் செய்து கொள்ள காலம் நீட்டிக்கின்றான் என்றமையால் கள்வன் என்றாள் போலும்!) அவன் என்னிடம் செய்து கொடுத்த உறுதிமொழியிலிருந்து தவறினான் என்றால் நான் என்ன செய்வேன்?நான் அவனோடு இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற நீரில் செல்லுகின்ற ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகும் இருந்தது. (குருகுகூட எங்களைப் பார்க்கவில்லை.மீனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது என்று சொல்லும் போது சாட்சியாகக்கூட ஒருவரும் இல்லையே என்று மனம் குமுறும் ஒரு சாதாரண பெண்ணைப் பார்க்க முடிகிறது. சரி, பேசக்கூடிய சக்தியாவது குருகுக்கு இருக்குமானால் அவன் என்னிடம் சொன்ன உறுதிமொழியையாவது அது கூறும்.அதுவும் இல்லையே என்ற ஆதங்கம் பாடலில் தொனிக்கிறது.)http://kavinthamil.b...2010/12/25.html
    
07 ஆற்றிறால் அல்லது சிங்கறால் (scampi or Norway lobster)இந்தமீனுக்கான தூயதமிழ் " ஆற்றிறால் அல்லது சிங்கறால் " ஆகும் . பலர் முயன்றும் குமாரசாமியரே முதலாவதாக சரியான பதிலைத் தந்திருந்தார் . அவரே சிறப்பு பரிசான பச்சைப்புள்ளியினைப் பெறுகின்றார் . பின்பு வந்த நிலமதி அக்கா இசைக்கலைஞன் ஆகியோர் லொவ்ஸ்ரர் குஞ்சு என்று சொன்ன போதிலும் , போட்டிவிதிப்படி குமாரசாமி அண்ணையே பரிசைப் பெறுகின்றார் . மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .... http://en.wikipedia.org/wiki/Scampi

போட்டியில் பங்குபற்றியோருக்கு மிக்க நன்றிகள் .

08 இருங்கெளுத்தி அல்லது பூனை மீன் 
(PLOTOSUS CANIUS or cat fish )  இந்த மீனுக்கான தூயதமிழ் "இருங்கெளுத்தி "அல்லது "பூனை மீன்" ஆகும் . இந்த மீனை பிடிக்க பலரும் கட்டுமரமேறி வலையை வீசினார்கள் . எல்லோரது வலையிலும் வகையாகவே இந்தமீன் மாட்டியது . ஆனாலும் மல்லையூரானின் வலையில் முதலாவதாக இந்த மீன் சிக்கியதால் , அவருக்கு சிறப்பு பரிசான பச்சைப் புள்ளியைக் கொடுத்து கௌரவிக்கின்றேன் . மற்றையவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் . இந்த மீன்பற்றிய மேலதிக தகவல்களுக்குப் பின்வரும் இணைப்புகளுக்குச் செல்லுங்கள்.

09 உணர்கொம்பு மீன் - சுரணைக்கொம்பு மீன்( tentacle or octopus) 


இந்த மீனுக்கான தூய தமிழ் "உணர்கொம்பு மீன் அல்லது சுரணைக்கொம்பு மீன் " ஆகும் . ஆனால் இது எம்மிடையே "கணவாய் மீன் " என்றே பிரபல்யமானது . இதில் பலவகையான கணவாய்கள் உள்ளன . எல்லோருமே ஒருமித்து விடையைச் சொன்னாலும் , நிலாமதி அக்காவே முதலாவதாகச் சொல்லி சிறப்புப் பரிசான பச்சைப்புள்ளியை பெறுகின்றார் . அவருக்கும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் .

இந்த மீன்பற்றிய மேலதிக விபரங்களுங்கு இந்த இணைப்பில் நுழையுங்கள் .http://en.wikipedia.org/wiki/Octopus  

10 ஊசிக்கவலை மீன் ( deepbody sardine )


இந்த மீனுக்கான தூயதமிழ் ஊசிகவலை மீன் Bigbody Sardine ) ஆகும் . இது பலருக்கும் டிமிக்கி கொடுத்ததால் பச்சைப்புள்ளி வழங்கமுடியாமைக்கு வருந்துகின்றேன் .இந்த மீன் பற்றிய மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணைப்பில் செல்லுங்கள் .http://parisaramahit...in/fish/m53.htm

http://en.wikipedia....wiki/Sardinella     


    Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்


000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…