Wednesday, April 24, 2013

மனமே மலர்க 13

நிதானம்


எத்தனை முறை அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்கிறோம்! அதற்கான தண்டனையை எத்தனை முறை அனுபவித்திருக்கிறோம்! ஆனாலும் நாம் சாமானியமாய் மாறுவதில்லை. எந்த ஒரு பிரச்சினையானாலும் அதற்கு முரட்டுத்தனமான தீர்வையே முதலில் மேற்கொள்கிறார்கள், சில பேர். வேறு வழியே இல்லாவிடில் கடைசி பாணமாக அதை வைத்துக் கொள்ளலாம் என்று ஏனோ அவர்களுக்குத் தெரிவதில்லை.

ஒரு பிரச்சினை வந்ததுமே அதைத் தீர்க்க என்னென்ன வழியெல்லாம் உண்டு என்று சிந்திக்கத் துவங்குபவனே புத்திசாலி. ஒவ்வொரு வழியையும் தீர ஆலோசித்து அது எப்படி முடியும் என மறுப்பு அசை போட்டு கடைசியில் எது சிறந்த வழியோ அதையே நடைமுறைப் படுத்த வேண்டும்.

உடலில் கொசு உட்கார்ந்ததும் அதைப் பட்டென்று அடிப்பதுபோல ஒவ்வொரு விசயத்திலும் முடிவு எடுத்தால் வரும் தொல்லை முன்னிலும் பலம் அதிகரித்து இருக்கும். பிரச்சினைக் கோட்டையிலிருந்து வெளிவர ஒரே வழிதான் என்று நம்புபவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நான்கு புறங்களிலும் வழிகள் இருக்கின்றன. அவற்றுள் எது ஆபத்துக் குறைவான வழியோ அதைத்தான் யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

மிக எளிதாக இருக்கிறதே என்று பலர் ஆபத்தான வழிகளைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். சற்றே சுற்றிப் போனாலும் பரவாயில்லை என்று நிதானத்தைக் கடைப் பிடிக்க வேண்டியது அவசியம்.

பரபரப்பு அடைவதாலும் அவசரப் படுவதாலும் ஒரு வேலையும் ஆவதில்லை. அப்படி தப்பித்தவறி ஆகிற வேலையும் அபத்தமாகவோ, ஆபத்தனமானதாகவோதான் இருக்கும். இந்தப் பரபரப்பிலும் குழப்பத்திலும் இருப்பவர்கள்தான் 'எனக்கு ஒன்றும் புரியவில்லை,''என்றும்,'எனக்குக் கையும் ஊட வில்லை, காலும் ஓடவில்லை'என்றும் புலம்புகிறார்கள். இது கூடத் தேவலை சிலர் நிதானத்தை இழக்கும்போது நாம் என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறார்கள்.

தோன்றியதைச் செய்துவிடுவோம், அப்புறம் வருவது வரட்டும் என்கிற மன நிலையும் தவறு. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் செயலாலும் சொல்லாலும் நிதானத்தை இழந்து விடக் கூடாது. நிதானத்தை இழக்காதவர்கள், மற்ற அனைத்தையும் காப்பாற்றத் தெரிந்தவர்கள்.

அடக்கம்

கோயில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்ததாம். ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம். யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டதாம்.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம்,

“பார்த்தாயா, அந்த யானை என்னைக்கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை,

“அப்படியா! நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டதாம்.

அதற்குக் கோயில்யானை கீழ்க்கண்டவாறுபதில்சொன்னதாம்.

“நான் சுத்தமாக இருக்கிறேன், பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சம்மாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.”

கழுதையை முட்டாள் என யார் சொன்னது?
ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை அவன் கரிசனத்தோடு உழுது பயிரிட்டு விளைத்து வந்தான். அப்படி விளைந்த தானியத்தை மூட்டையாக கட்டி தூக்கி வர ஒரு கழுதையை பயன்படுத்தி வந்தான். கழுதையும் எஜமானருக்கு விசுவாசமாக உழைத்து வந்தது. அந்தக் கழுதைக்கும் வயசானது. ஒரு நாள் கழுதை வழி தவறி ஒரு பாழுங் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டது.

கிணற்றுக்குள் விழுந்த கழுதை குய்யோ முறையோ என கூச்சல் போட்டது. எஜமான் எட்டிப் பார்த்தான். என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தான். கழுதையை மீட்க முடியாமல் கண் கலங்கினான். பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சென்று கழுதையை மீட்க உதவி கோரினான்.

அவர்களும் வந்தார்கள். கிணறோ பாழும் கிணறு , பயன்படாதது. கழுதையோ வயதாகி போனது. இனி அதனால் உழைக்க முடியாது. இனி அது இருந்தும் என்ன பயன் என ஊரார் அவனிடம் கூறினார்கள். மண், கல், செடி செத்தைகளைப் போட்டு கிணறையும் மூடி விடுவோம், மாட்டிக்கொண்ட கழுதையும் இறந்து விடும் என கூறி அதற்கான செயல்களில் இறங்கினார்கள்.

தன் மேலே ஊரார் கற்களையும், மணலையும் செடி செத்தைகளையும் போடும் போதெல்லாம் வலி தாங்காமல் துடிதுடித்து அழுதது கழுதை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கழுதைக்கு ஒரு யோசனை உதித்தது. அது என்னவெனில், இவர்கள் போடும் பொருட்களின் மேல் நாம் ஏறிக் கொள்ள வேண்டும். வலித்தாலும், காயம்பட்டாலும் பரவாயில்லை. இந்த வலிகளை எல்லாம் நாம் தப்பிக்கும் வழிகளாக மாற்றிக் கொள்வோம் என எண்ணியது. அதன் படியே மண், கல், செடி, செத்தைகள் மேலே வலியையும் பொறுத்துக் கொண்டு ஏறி ஏறி நின்றது. தன் உடம்பை உலுப்பி உலுப்பி கிணறு நிறையும் வரை இப்படியே செய்தது. ஒரு கட்டத்தில் கிணறும் நிரம்பியது. கழுதையும் மேலே வந்தது. அனைவரும் அதிசயத்துடன் மகிழ்ந்தார்கள்.

நீதி: வெற்றியின் ரகசியம் என்பது பொறுமையில், சகிப்புத் தன்மையில், வலி தாங்கி வாழ்வதிலும் இருக்கிறது.
நன்றி  : http://jeyarajanm.blogspot.fr/2014/02/blog-post.html


Sunday, April 21, 2013

அன்பை துலைச்ச தோசையளும் வடையளும் !!!!!!!!!

அன்பை துலைச்ச தோசையளும் வடையளும் !!!!!!!!!முந்தி என்ரை அம்மாவும் சரி , அம்மாச்சியும் சரி , வெள்ளைப் பச்சைஅரிசி ஊறப்போட்டு , உரலிலை இடிச்சு ஆட்டுக்கல்லுலை தோசைக்கு மா அரைச்சுத்தான் தோசை சுட்டுத்தாறவை . இதைமாதிரித்தான் அம்மாச்சியும் உனக்கு அப்பம் சுட்டுத்தன் பேரப்பெடியெண்டு , சுடச்சுட கள்ளு என்னைக்கொண்டு வாங்குவிச்சு அதுக்குள்ளை அம்மாச்சியும் தன்ரை பங்கை அடிச்சுப்போட்டு எனக்கு அப்பம் சுட்டுத் தந்தவா . அதுவும் அம்மாச்சியின்ரை பால் அப்பம் ( பாலுக்கு நடுவிலை கருப்பட்டியும் போட்டு ) செய்து தாறவா . சொல்லிவேலையில்லை . இதுகளை ஏன் சொல்லிறன் எண்டால் அப்ப எல்லாருக்குமே இயற்கையா உடல் உழைப்பு இருந்தீச்சிது . அதாலை நல்ல மெல்லீசா 90 வயசுக்கு மேலையும் பொல்லு பிடிக்காமல் இருந்தீச்சினம் .

இண்டைக்கு எனக்கு என்ரை மனுசி ஒரு வீடியோ கிளிப் ஒண்டை காட்டிச்சிது . இதை ஒருக்கால் பாருங்கோப்பா எண்டு . எனக்கு ஐஞ்சும்கெட்டு அறிவுங்கெட்டு போச்சிது . இவளவை நோர்மலாயே சீரியலுகளுக்கை சிக்கெடுக்கிறவளவை இதுகளையும் பாத்தாளவை எண்டால் எங்கடை நிலமையை யோசிச்சு பாத்தன் எனக்கு கிறுதி அடிக்காத குறை கண்டியளோ . அலட்டாமல் நேரை மாற்ற்றுக்கு வாறன் . என்ரை அம்மாவும் அம்மாச்சியும் செய்து அன்பாய் தந்த சாப்பாடுகள் எல்லாம் மெசின் செய்யிது . இதைப் பாக்கேக்கை எனக்கு கொஞ்சம் குறுக்காலை போனகேள்வியள் வந்து துலைக்கிது பாருங்கோ . இந்த மெசினுகளால் ஏன் மண்ணாங்கட்டிக்கு மனுசிமார் எண்ட கேள்வி வராதோ ?? எனக்கு அம்மாச்சியாலையும் அம்மாவாலையும் தந்த அன்பு பாசத்தை இந்த மெசினுகள் தருமோ ?? இப்பவே இந்த அலப்பரை விடுகிற மனுசிமார் இந்த மெசினுகளை வாங்கி போட்டு எங்களை என்ன பாடுபடுத்துவாளவை ?? இந்த மெசினாலை எத்தினை பேருக்கு வேலை இல்லாமல் போகிது ?? இப்பிடி கன கேள்வியள் எனக்கு மண்டையுக்கை அடிக்கிது . தாய்குலங்கள் என்னை கடிச்சு குதறாமல் உங்கைடை அபிப்பிராயத்தையும் சொல்லுங்கோவன் . அதுகாக சிங்கனுகள் பம்மிறதை விட்டிட்டு சிலுப்பிக்கொண்டு நீங்களும் உங்கடை பக்கத்து நியாயங்களை சொல்லுங்கோ . இதுதான் மனுசி எனக்கு கீல் ஏத்தின வீடியோ. 
கோமகன்
23 மார்கழி 2012


என் வலி

என் வலி 


சொல்லிச் சொல்லி

சொல்லால் அடித்தாயே

அடியே

சொல்லால் அடித்தாயே


பொட்டுப் பொட்டாய்

உடைந்ததுவே என் இதயம்

சொட்டுச் சொட்டாய் வடிந்ததே

வலியாய் ரத்தம்


நீயும் நானும் கூடிய வாழ்க்கை

ஒருவரை ஒருவர்

உயர்த்திய வாழ்க்கை

தெளிந்த ஓடைபோல்

நகர்ந்த எம் வாழ்வில்

கல்லை எறிந்தது யார் சொல்


விழுந்த கல் தந்தது

அலையை மட்டுமா

எம் வாழ்வின் வேரையே

ஆட்டியதை நீ அறியாயோ

அடி கிளியே நீ அறியாயோ


என் மூச்சிருக்கும் வரை

உன் பேச்சு இருக்கும்

என் இதயத்தின் ஓரத்தில்

உன் பேச்சு இருக்கும்

என்னதான் நீ என்னை

சொல்லால் சுட்டாலும்

என் இதயத்து சிம்மாசனத்தில்

நீதானே நித்திய கல்யாணியடி


நித்தம் நான் காணும்

உன் முகம் வாடவும் விடுவேனோ

அடியே வா

நாம் இருவரும் சேர்ந்தே நடப்போம்

கைகள் பிணையவே

நம் மனமும் இணையவே

கோமகன்
21 சித்திரை 2013

Thursday, April 18, 2013

வில்லண்டம் பிடிச்ச விலங்கும் லவட்டின பச்சையும்!!!!! 01

11 மரநாய் (ஆண் ) ( Least weasel or Mustela )


படத்தில் உள்ள விலங்கின் பெயர் மரநாய் ( ஆண் ) ஆகும். இவற்றில் பலவகைகள் காணப்படுகின்றன .
இந்த முறை அரும்பொட்டிலை தப்பி இருக்கிறியள் :lol: . பிடியுங்கோ பச்சையை . என்னதான் மல்லையர் சரியா சொன்னாலும் , நேரத்தை கோட்டை விடுறார் இந்த இடத்திலை . இந்த மரநாய் உண்மையிலை ஆங்கிலத்திலை நல்லாய் குளப்பி போட்டுது :( . weasel உம் , polecat உம் எண்டு இதுக்கு ரெண்டு பேர் கிடக்கு . இதுகளிலையும் கனசாதியள் இருக்குது . ஏன் இப்பிடி ஒரே மிருகத்துக்கு ரெண்டு பேர் வைச்சிருக்கினம் ?? எண்டு குளப்பமாய் கிடக்கு . இதுக்குள்ளை ஒருபகுதி இந்த படத்தை " இராசகீரி " எண்டு சொல்லுறாங்கள் :unsure: . மல்லையர் சரியா சொன்னாலும் அவருக்கு மனசாலை சப்போர்ட் செய்யிறன் :) . என்னிலை கோபிக்காமல் தொடந்து இருங்கோ என்ன ?? அப்ப அடுத்த வில்லண்டத்துக்கு போவம் :D .

இதனைப்பற்றிய தகவலை தமிழில் அறிய இங்கே அழுத்துங்கள் :http://ta.wikipedia....org/wiki/மரநாய்
ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்துங்கள்:http://en.wikipedia.org/wiki/Weasel

12 காட்டுக் கழுதை அல்லது இந்தியன் காட்டுக் காட்டுக் கழுதை ( wild ass , Equus hemionus khur)


இந்த விலங்கிற்கான சரியான பெயர் காட்டுக் கழுதை அல்லது இந்தியக் காட்டுக் கழுதை ஆகும் .சரி இந்தமுறை சபைக்கு முந்தீட்டியள் நவீனன் . பிடியுங்கோ பச்சையை  :)  . தமிழினியும் மிச்ச ஆக்களும் சரியாத்தான் சொன்னீங்கள்  . உங்களுக்கு பாராட்டுக்கள் :) . ஒராள் கோவேறு கழுதை எண்டு சொன்னார்  :o  . அது முகத்திலை கொஞ்சம் வித்தியாசம் இருக்கு . என்னமொராள் நெடுந்தீவு கழுதை எண்டு சொன்னார்  :o  . நெடுந்தீவிலை குதிரைதான் கண்டிருக்கிறன் . அப்ப அடுத்தவரை சந்திப்பமோ  :lol:  :D  ??   இந்த விலங்கைப்பற்றிய தகவலுக்கு இங்கே செல்லுங்கள்: http://en.wikipedia....Indian_wild_ass

13 ஆபிரிக்கப் புனுகுபூனை (  civet cat  or Viverricula )


படத்தில் உள்ள விலங்கிற்குச் சரியான பெயர் ஆபிரிக்க புனுகு பூனையாகும் . இதிலிருந்து புனுகு தைலமும்,  இது தின்ற பழக்கொட்டைகளில் இருந்து உலகின் உயர் ரக காப்பியும் தயாரிக்கப்படுகின்றது .

இதுபற்றி தமிழில் அறிய இங்கே அழுத்துங்கள் : http://ta.wikipedia....ki/புனுகுப்பூனை
ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Civet

14 முயலெலி ( Chinchilla or Chinchillidae )


இந்தப்படத்திலுள்ள விலங்கின் பெயர் முயலெலியாகும் . இது அதிகமாக தென்அமெரிக்கநாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றது .காவாலி கையைக்குடுங்கோ . பிடியுங்கோ பரிசை :icon_mrgreen: .  அனேகமாய் எல்லாரும் இசையின்ரை ஸ்ரைலிலை ஆங்கிலத்திலை " சின்சிலா " எண்டு சொன்னியள்  :D  . நல்லவிசையம் . ஆனால் தமிழிலை எனக்கு பெயர் தரவேணும் . சிலபேர் சின்சிலா முயல் , எலி எண்டெல்லாம் சொன்னியள் .  நண்டர் சொன்னமாதிரி இந்த வில்லண்டம் எலியும் முயலும் ஓடிப்பிடிச்சு விளையாட வந்திருக்கலாம்  :lol: . அப்ப அடுத்தவரை பாப்பமோ :D :D ???  இது பற்றிய தகவலை அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia....wiki/Chinchilla

15 நவ்வி மான் ( gazelle or Bovidae  )


படத்தில் உள்ள விலங்கின் பெயர் நவ்வி மான் ஆகும் .
மல்லையர் சும்மா சொல்லக்கூடாது கிட்டமுட்ட வந்திருக்கிறியள் , பச்சையை லவட்டுறதுக்கு :icon_mrgreen: . எல்லாரும் சரியான பெயரைத்தான் சொல்லியிருக்கிறியள்  :)  . சுருள் கொம்பு மான்  ,கொம்புள்ள அழகான மான் எண்டெல்லாம் சொன்னியள் . அது அளாப்பல் விளையாட்டு  :lol:  . அப்ப அடுத்தவருக்கு போவமோ  :lol:  :lol:  ??

இது தொடர்பான ஆங்கில விளக்கத்திற்கு இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Gazelle

16 மலை அணில் ( Marmot or Marmota )இந்தப்படத்தில் உள்ள விலங்கின் பெயர் மலை அணில் ஆகும்.
குடுங்கோ கையை நவீனன் . பிடியுங்கோ பச்சையை :icon_mrgreen: . உங்கை கனபேர் ஒருவகையான அணில் , ஒருவகையான கீரி , சடை அணில் எண்டெல்லாம் ஏரியாவை குழப்பி விளையாடீச்சினம்  :lol: :lol:  . நீங்கள் அங்காலை இங்காலை அரக்காமல் நிண்டியள்  :)   .  சரி அடுத்த வில்லண்டதை ஆர் லவட்ட போறியள்  :lol: :D ???

இதனுடைய விபரங்களை அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Marmot

16 சடைஎருது ( Yak , Bos grunniens or  Poephagus grunniens ) 
இந்தப் படத்திலுள்ள விலங்கின் சரியான பெயர் சடைஎருது ஆகும் இது கவரிமா அல்லது யாக் என்றும் அழைக்கப்படும் இது இமயமலைப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றது .மல்லை கையைக்குடுங்கோ . இந்தாங்கோ பிடியுங்கோ பரிசை  :)  .  நவீனன் , காவாலி , சுமே சரியா மறுமொழி சொன்னனிங்கள் தான் :wub: . ஆனால் நீங்கள் கையாலை வாயிலை துப்பலை தடவி அழிச்சு எழுதி எல்கேஜி பிள்ளையள் மாதிரி நடந்திருக்கிறியள்  :lol:  :icon_mrgreen:  . நான் போட்ட புதுச் சட்டம் நேற்று அமூலுக்கு வந்ததாலை உங்களுக்கு பச்சை தரேலாது . அதாலை மல்லையர் இந்தமுறை லவட்டிப்போட்டார் :D . சரி அப்ப அடுத்த கிரகத்தை பாப்பமோ  :lol:  :icon_idea:  ??? இதுபற்றிய தகவலைத் தமிழில் அறிய இங்கே அழுத்துங்கள் :http://ta.wikipedia....a.org/wiki/யாக்

இதுபற்றிய தகவலைத் ஆங்கிலத்தில்  அறிய இங்கே அழுத்துங்கள்  : http://en.wikipedia.org/wiki/Yak

17 கழுதைப்புலி ( H. hyaena or Hyaena hyaena )


படத்தில் உள்ள விலங்கின் பெயர் கழுதைப்புலி ஆகும் . இது கடுவாய், கொடுவாய், தரக்கு, புலிக்குடத்தி, வங்கு என்றும் அழைக்கப்படும் .உங்களுக்கு பச்சை தராட்டில் வெட்டி கொத்திப்போடுவியள்  :o  . அதாலை இந்தமுறை உங்களுக்கு தாறன் . மற்றவை என்னை நாறல் லுக் விடாதையுங்கோ  :icon_mrgreen:  . எல்லாருமே விடையை சொல்லியிருக்கிறியள் . ஆனாலும் மல்லையர் போட்ட மறுமொழியாலை எனக்கு கிறுதி அடிக்காத குறை :lol: . பேந்து அகராதியை புரட்டினால் இதுக்கு நாலைஞ்சு பேர் . அதிலை ஒண்டுதான் கடவாய் . அவருக்கு சிறப்பு பாராட்டை தாறன்  . அப்ப அடுத்த வில்லண்டம் வெயிற்றிங்கிலை நிக்கிறார் . பாப்பமோ  :D  :icon_idea:  ???????இதுபற்றிய தகவல்களை தமிழில் அறிய இங்கே அழுத்துங்கள்:http://ta.wikipedia....iki/கழுதைப்புலி

இதுபற்றிய தகவல்களை ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்துங்கள்:http://en.wikipedia.org/wiki/Hyaena

18 நீர்யானை Hippopotamus or Hippopotamus amphibius )படத்தில் உள்ள விலங்கின் பெயர் நீர்யானை ஆகும் . உலகில் அதிக ஆயுட்காலமான 50 ஆண்டுகளையும் , அதிக எடையும் 3000 kg கொண்ட தாவரபட்சணி இதுவாகும் .
எல்லாரும் அனேகமாய் சரியாய் சொல்லியிருக்கிறியள் .  நிலாமதியக்கா காண்டாமிருகம் எண்டியள்  :o  . அது வேறை சாமான் .நானும் தமிழினியை எவ்வளவோ குளப்பிப் பாத்தன் பிடிச்சபிடியா நிண்டியள்  :icon_mrgreen:  . இந்தாங்கோ பிடியுங்கோ பச்சையை . அப்ப அடுத்தவரை பாப்பமோ :lol: :D ???

இதுபற்றிய தகவலைத் தமிழில் பெற இங்கே அழுத்துங்கள் :http://ta.wikipedia....g/wiki/நீர்யானை

இதுபற்றிய தகவலைத் ஆங்கிலத்தில் பெற இங்கே அழுத்துங்கள் :http://en.wikipedia....ki/Hippopotamus

19 வன்சிறுத்தை அல்லது கறுப்புச்சிறுத்தை ( Jaguar , Black panther or Panthera onca ) படத்தில் உள்ள விலங்கின் பெயர் வன்சிறுத்தைகளில் ஒன்றான கறுப்புச்சிறுத்தை அல்லது கருஞ்சிறுத்தை ஆகும் . இதை ஜகுவார் என்றும் அழைப்பார்கள் . இவை தற்பொழுது மத்திய அமெரிக்காவிலேயே அதிகம் காணப்படுகின்றது . இந்த இனம் அழிந்து கொண்டிருக்கின்ற இனமாகும் . ஜகுவார் காரிலை போய் இந்த வில்லண்டத்தை பிடிசிருக்கிறியள் போலை கிடக்கு நவீனன்  :icon_mrgreen: . பிடியுங்கோ பச்சையை .  எல்லாரும் சரியாத்தான் சொன்னாலும் நவீனன் பந்திக்கு முந்தீட்டாரே , நான் என்ன செய்ய  :(  ? அதாலை மற்றவைக்கு என்ரை மனசுநிறைஞ்ச பாராட்டுக்களை தாறன் :lol:  . அப்ப அடுத்தவர் வெயிற்ரிங்கில நிக்கிறார் பாப்பமோ :D :lol: :icon_idea: ???

இதுபற்றிய விபரங்களை தமிழில் அறிய இங்கே அழுத்துங்கள் :http://ta.wikipedia....g/wiki/ஜாகுவார்

இதுபற்றிய விபரங்களை ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்துங்கள்: http://en.wikipedia....i/Black_panther

 http://en.wikipedia.org/wiki/Jaguar

20 மரமேறிப் பைம்மான் (  koala or Phascolarctos cinereus ) படத்தில் உள்ள விலங்கின் பெயர் மரமேறிப்பைமான் ஆகும் . இது அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் தாவரபட்சணி ஆகும் . இதை கூலா அல்லது மரக்கரடி கோவாலாக்கரடி என்றும் அழைக்கின்றனர் . இது உலகில் அழிந்துகொண்டிருக்கின்ற விலங்கு இனமாகும் .
மரத்திலை ஏறித்தான் இந்தக் கிரகத்தை அமத்தி இருக்கிறியள் மல்லையர் :lol: .  நீங்கள் பட்ட கஸ்ரத்துக்கு பிடியுங்கோ பச்சையை . எல்லாரும் சரியாத்தான் சொல்லியிருக்கிறியள் . பண்டா கரடி எண்டும் ஒரு குரல் கேட்டிது  :o  . பண்டாகரடி வேறை . அப்ப அடுத்தவரை சந்திப்பம் என்ன :lol: :D :D ???
இதுபற்றிய விபரங்களை தமிழில் அறிய இங்கே அழுத்துங்கள் :  http://ta.wikipedia....org/wiki/கோவாலா

இதுபற்றிய விபரங்களை ஆங்கிலத்தில்  அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Koala