Skip to main content

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவையை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் பாகம் 04


இசைக்கலைஞன் ( அணித்தலைவர் ) :

பட்டிமன்றத்தை தலைமை தாங்கும் எனதருமை நடுவர்களே..! :D

யாழ் களத்தை இளமையோடும், பொறுமையோடு நடத்திக்கொண்டிருக்கும் மோகன் அண்ணா அவர்களே..! பொறுப்பாளர்களே.. மட்டுறுத்துனர்களே..! :D

எதிர்வரிசையில் உட்கார்ந்துகொண்டு "தேமே" என்று விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் எதிரணியினரே..! :D

பொருள் பொதிந்த இந்தப் பட்டிமன்றத்தைக் காண வந்திருக்கும் பெற்றோர்களே..! தாய்மார்களே..! தம்பிகளே..! தங்கைகளே..! மச்சாள்மாரே..! :wub:

உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்..!

நடுவர்களே..! இந்தப் பட்டிமன்றத்தின் தலைப்பு என்ன? :huh:

புலம்பெயர் தமிழரின் கவலை என்பது வெறும் பிரிவுகளின் கவலையா அல்லது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக வாழ்ந்திருப்போமா என்பதுதான்..! :unsure:

இரு அணியினருமே புலம்பெயர்ந்தவர்கள்தான்..! இரு அணியினரும் கவலைகளைக் கொண்டுள்ளார்கள் என்பது தலைப்பிலேயே உள்ளது..! ஆனால்  எதிரணியினரோ ஏதோ எங்களுக்கெல்லாம் கவலையே இல்லாததுபோல் பேசிவிட்டுச் சென்றுவிட்டார்கள்..! :D

எங்களுக்கும் கவலைகள் உண்டு நடுவர்களே.. கவலைகள் உண்டு..! :(

தாயகத்தைப் பிரிந்த கவலை.. உறவுகளைப் பிரிந்த கவலை.. நண்பர்களைப் பிரிந்த கவலை..! இப்படிப் பல கவலைகள் உண்டு..! :(
ஆனாலும் நடுவர் அவர்களே..! :unsure:

அதற்காக முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் உட்கார்ந்து மூக்கைச் சிந்த நாங்கள் தயாராக இல்லை என்பதே எங்களது வாதம்..! :D

எந்த நாட்டிற்குப் புலம்பெயர்ந்தாலும் தாயகம் பற்றிய கவலையை நெஞ்சில் சுமந்துகொண்டு அதேசமயம் நிலைமைகளை சமாளித்து செழிப்புற வாழ்வோம் என்பதே எங்கள் கட்சி..! புலம்பெயர்ந்துவிட்டதால் தினமும் மெகாசீரியல் கணக்கில் அழுது வடியச் சொல்கிறார்களா எதிரணியினர்? :D அவ்வாறுதான் அவர்கள் பிழைப்பைக் கொண்டு செல்கிறார்களா? :D கேட்டுச் சொல்லுங்க நடுவர் அவர்களே..! :D

தொடக்கத்தில் பேசிய வாத்தியார் முதற்கொண்டு கு.சா அண்ணா வரை வெளிநாட்டில் இயந்திர வாழ்க்கை என்று புலம்பித் தள்ளினார்கள்..! இங்கே இயந்திர வாழ்க்கை என்றால் அங்கே பயங்கர வாழ்க்கை..!  :(  அதைக் காரணம்காட்டித்தானே புலம்பெயர்ந்தோம் நடுவர்களே..! :(

இத்தகைய இயந்திர வாழ்க்கையையும் சுழித்து இன்புறுவோம் என்பதே எங்கள் கட்சி..! :D

பிடிச்ச ஃபிகர் கிடைக்காவிட்டால் கிடைச்ச ஃபிகரைப் புடி என்பது முதுமொழி நடுவர்களே..! :D நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம்..! தாயகத்தில்தான் பிடிக்க முடியல.. :( துரத்தி விட்டிட்டான்..! :( அதுக்காக ஃபிகரே இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியுமா நடுவர் அவர்களே..! :unsure: அதனால் வந்த இடத்தில் பிடித்துவிட்டோம் நடுவர் அவர்களே..! :lol:

நாளையே தாயகம் சென்றால் எங்கள் தாயக அன்னையின் மடியில் கண்ணயர்ந்து இளைப்பாறுவோம்..! :unsure: நாங்கள் எதற்கும் தயார்..! எங்கும் எதிலும் வெல்வோம்..! ஆனால் மூக்கைச் சிந்தி அழமாட்டோம்..! :lol:

வாத்தியாரின் பேச்சிற்குப் பிறகுதான் யோசித்துப் பார்த்தேன்..! :unsure: மூச்சே விட முடியல.. ஏனென்றால் சுத்தமான காற்று இல்லை.. :( வீட்டுக்கு வெளியே ஓடினேன்..! மரம் ஒன்றுமே ஆடவில்லை.. :( ஏனென்றால் இங்கே தென்றலே கிடையாதாம்..! :D

யாருக்கய்யா விடுறீங்க கதை..! :D தென்றல் மட்டுமில்லை.. புயலே வீசும்.. அதுவும் பனிப்புயல்..! :D

அதை விடுங்க.. ஊரில பனியைக் கண்ணால் கண்டிருக்கிறீங்களா? இல்லைதானே.. இங்கே இருக்கு.. அதை சந்தோஷமா அனுபவிக்கத்தானே சொல்லுறம்..! :D உறைபனி ஏரியில் மீன்பிடிக்கப் போங்க.. பனியில் சறுக்கப் போங்க.. அதை விட்டிட்டு உங்களை யார் நாலு வேலைக்குப் போகச் சொன்னது? :D

தெரியும் நடுவர் அவர்களே.. அதையும் கேட்பார்கள் எமது எதிரணியினர்.. நான்கு வேலைக்குப் போகாவிட்டால் துட்டுக்கு எங்கே போறதென்று..! :D அடிமை மாதிரி சிந்திச்சால் நாலு வேலைதான் பார்க்க வேண்டும்..! :D ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலம்.. குடு சம்பளத்தை என்று கேட்கிறமாதிரி வச்சிருக்க வேண்டும் நடுவர் அவர்களே..! :D அதற்குரிய வழிமுறைகளைப் பார்க்க வேண்டும்..! :D அதை விட்டிட்டு சும்மா நாலு வேலை, அஞ்சு வேலை என்று ஒரே புலம்பல்.. :D

அடுத்ததா வந்த பகலவன் கல்வி ஏதோ சரியில்லை என்று சொல்லி ஒரு நாடகத்தை ஆடினார் நடுவர் அவர்களே..! :D

இலங்கையில் படித்துவிட்டு வெளிநாட்டுக்குப் போனால் எவன் திரும்பிப் பார்க்கிறான்? :(  திரும்பவும் படி என்றுதான் சொல்லுறான்.. :( ஏன்..!? அங்குள்ள கல்வியின் லட்சணம் அப்பிடி..  :D  ஒரே மனப்பாடம்தான்..! சப்பித் துப்ப வேண்டியதுதான்..! :D செய்முறைப் பயிற்சி இல்லை.. ஏதாவது கட்டடம் கட்டுறானா எண்டு பார்த்தால் அதுவும் இல்லை.. இருந்தாலாவது அதைப் போய் பார்த்து செய்முறை விளக்கம் தெரிஞ்சு கொள்ளலாம்..! இருக்கிறதையும் இடிக்கிறதுதான் அங்கை நடக்குது..! :blink:

தரமில்லாத கல்வியோடு வந்தாலும் மூக்கைச் சிந்தக்கூடாது..! :D விடா முயற்சியோடு அதை தரமுள்ளதாக மாற்ற வேணும்..! :D அதை விட்டிட்டு அவன் வேலை தரமாட்டெங்குறான்.. இனவெறி என்று ஒரே புலம்பல்.. :D

அடுத்து வந்த எதிரணியின் தும்பளையான் சொன்னார்.. ஏதோ ஒரு வீட்டுக்குள்ளே நிறையப் பேர் நெருக்கிக் கொண்டு வாழ்கிறார்களாம்.. :unsure: இவர் சிங்கப்பூர் தேக்கா மார்க்கட்டை சொல்லுறாரா என்று கேட்டுச் சொல்லுங்கள் நடுவர் அவர்களே..!  :D

எனக்குத் தெரிந்து அப்படி யாரும் நெருக்கிக்கொண்டு வாழவில்லை..! அப்படி வாழ்பவர்கள் செலவைக் குறைத்து காசை மிச்சம் பண்ணி ஊருக்கு அனுப்புவதில் மும்முரமாக இருப்பவர்கள்தான்..! :unsure: அதாவது ஊரில் உழைக்காமல் இருப்பவர்களுக்கு காசு அனுப்புபவர்கள்..!

எனதருமை எதிரணியினரும் யாரையாவது உழைக்க விட்டிட்டு அங்கே போய் செட்டில் ஆகலாம் என்று உள்ளார்களா? :D கேட்டுச் சொல்லுங்கள் நடுவர் அவர்களே..!! :D

அடுத்ததா தும்பளையான் சொல்கிறார்.. வெளிநாடுகளில் அந்நியராகத்தான் பார்க்கப்படுவோமாம்.! வாழ்கிற நாட்டுக்கு ஏற்றமாதிரி நடை, உடை பாவனையை மாற்றிக்கொண்டால் ஏன் வித்தியாசமாகப் பார்க்கப்போகிறார்கள்? :blink:

சுடிதாரைப் போட்டுக்கொண்டு கடலில் குளிப்பது..! :D நண்டுக்கறி வாடையுடன் குளிர் ஆடைகளைப் போட்டுக்கொண்டு திரிவது..!  :(  வரி கட்டாமல் ஏய்ப்பது.. :blink: முகத்தில் ஒரு புன்முறுவல் இல்லை.. விட்டால் மூஞ்சியைப் பிளந்துவிடுவேன் என்பதுபோல் பிற நாட்டவரைப் பார்ப்பது.. :( வெயிலுக்கு இரண்டு துண்டு உடையுடன் அவள் போனால் :D நாக்கை தரை வரையில் நீள விடுவது..  :D 

இப்படி இருந்தால் அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் நடுவர் அவர்களே..! :D

அடுத்து வந்த கரும்பின் வாதம் மிக இனிமையாக இருந்தது..! :D கரும்பு என்றாலே இனிமைதானே..! :D ஆனால் அவரின் பேச்சுக்குப் பின், நான் எந்த ஊரில் இருக்கிறேன் என்பதே எனக்கு மறந்துவிட்டது நடுவர் அவர்களே..! :D

கடைசியாக வந்த குமாரசாமி அண்ணன் அவர்கள் ஏதோ இங்கே உணவுப் பொருட்களில் கான்சர் வருது அது இது என்றார்..!  :unsure:  அப்ப வெள்ளையன் எல்லாம் செத்தா போய்ட்டான் நடுவர் அவர்களே..? :D கான்சர் வந்தாலும் சிகிச்சை பெற்றுக்கொண்டு அதிக நாட்கள் வாழ்கிறான்..! ஊரிலே கான்சர் வாறதும் தெரியாது.. ஆள் போறதும் தெரியாது..! :unsure:

அதுமட்டுமில்லை நடுவர்களே..! இன்னும் எனக்கு நல்ல ஞாபகம்.. ஊரில் சந்தைக்கு வரும் கத்தரிக்காயில் வெள்ளையா ஒரு படலம் இருக்கும்.. :unsure: இப்பத்தான் கேள்விப்படுறன் அது பூச்சிகொல்லி இரசாயனம் என்று.. :( அதாவது கண்ணுக்கு முன்னே தெரிந்த இரசாயனத்தையே பொரிச்ச குழம்பு வைத்து சாப்பிட்டோம்..! :wub:  இதுதான் அங்குள்ள நிலைமை நடுவர் அவர்களே..! :(

இறுதியாக...

எங்கள் எதிரணியினர் இப்போது சொல்வது அவர்கள் ஊரில் இருந்திருந்தால் சிறப்பாக வாழ்ந்திருப்பார்கள் என்று..! அதை எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்கள்? :unsure: நாளையே அங்கு போனால் இதைவிட அண்டார்ட்டிக்காவுக்குப் போனால்  :D  சிறப்பாக வாழலாம் :unsure: என்று சிந்திப்பார்களா மாட்டார்களா நடுவர் அவர்களே..! :D இவர்களின் சிந்தனை மாறாட்டத்துக்கு ஒரு அளவே இல்லையா? :D

சிந்தனை மாறாட்டம் கொண்ட அணியை விடுத்து எங்கள் கவலைகளுக்கு வெறும் பிரிவுகளே காரணம் என தீர்ப்பளிக்குமாறு அன்புடனும், அதே சமயத்தில் சிறிது கறாராகவும் :lol: கேட்டுக்கொள்கிறேன் நடுவர் அவர்களே..!

நல்லதொரு சந்தர்ப்பத்தை எனக்களித்து இந்தப் பட்டி மன்றத்தில் பங்குகொள்ள என்னை அழைத்தமைக்கு மீண்டும் ஒரு நன்றி நடுவர்களே..! இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன்..! :D

வாழ்க நற்றமிழ்! வெல்க நம் தாயகம்..!

நன்றி..! வணக்கம்..! :D

 மெசொபொத்தேமியா சுமேரியர் ( நடுவர் ):

இசைக்கலைஞன் மேடையை விட்டு கட்டடம் கட்டுவதற்கு கொல்லைப் புறமாகச் சென்றதனால் பட்டி மன்றத்தின் சூடு தாங்க முடியாது சொல்லாமற் கொள்ளாமல் ஓடி விட்டார் என்றல்லவா நினைத்துவிட்டேன். இத்தனை விரைவில் வருவார் என்று எதிர் பார்க்கவில்லை.

ம்.... வேகத்துடன் தான் இருக்கிறார்.

கவலைகள் மனிதர்கள் அனைவருக்குமே உண்டுதான். அதற்காகக் கவலைகொண்டு ஒன்றும் செய்யாது இருக்க முடியுமா?? கவலைகள் ஆயிரம் இருந்தாலும் அதையே நினைத்து தலையில் துண்டுடன் மூலையில் முடங்குவதால் யாருக்கும் எப்பயனும் இல்லை என்னும் இசையின் வாதம் நியாயமானதுதான்.

கிடைத்த வாழ்வை நாம் பற்றிக்கொண்டு அதை மேலும் மேம்படுத்தவேண்டுமே தவிர இல்லாதவற்றை எண்ணி வாழ்வைக் கழிப்பதில் எப்பயனும் இல்லைத்தான்.

நாம் எங்கு வாழ்கிறோமோ அச்சூழலுக்கேற்ப எம்மை நாம் கொஞ்சமேனும் மாற்றிக் கொண்டாலன்றி, எம் வாழ்வு செழிப்புற மாட்டாது என்பது உண்மையிலும் உண்மை.

எனக்கு ஒரு சந்தேகம் இசை. கத்தரிக்காயை கழுவாமலா உங்கள் வீட்டில் பொரிச்சுக் குழம்பு வைப்பார்கள் ???

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியா எங்களிடமே கறாராக உங்கள் பக்கம் தீர்ப்பளிக்கும் படி கூற என்ன துணிச்சல்!

கோமகன் ( நடுவர் ):

இடையால் புகுந்து , குறுகுசால் எடுத்து தனது சிந்தனை தண்ணியை ஆங்காங்கே பொசியவிட்டுள்ளார் கனேடிய நாட்டு நகைச்சுவை அரசனும் , அணித்தலைவருமாகிய இசைக்கலைஞன் . இவரின் வியூகத்தைக் கண்டு நான் உண்மையிலேயே ஆடிப்போய் விட்டேன் .  தனது அணிக்கு சிரிப்புக்குறிகளைப் போட்டே பலத்தை சேர்த்திருக்கின்றார் . அதிலும், 

" வாழ்கிற நாட்டுக்கு ஏற்றமாதிரி நடை, உடை பாவனையை மாற்றிக்கொண்டால் ஏன் வித்தியாசமாகப் பார்க்கப்போகிறார்கள்? :blink:
சுடிதாரைப் போட்டுக்கொண்டு கடலில் குளிப்பது..! :D நண்டுக்கறி வாடையுடன் குளிர் ஆடைகளைப் போட்டுக்கொண்டு திரிவது..!  :(  வரி கட்டாமல் ஏய்ப்பது.. :blink: முகத்தில் ஒரு புன்முறுவல் இல்லை.. விட்டால் மூஞ்சியைப் பிளந்துவிடுவேன் என்பதுபோல் பிற நாட்டவரைப் பார்ப்பது.. :( வெயிலுக்கு இரண்டு துண்டு உடையுடன் அவள் போனால் :D நாக்கை தரை வரையில் நீள விடுவது..  :D  இப்படி இருந்தால் அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் நடுவர் அவர்களே..! :D "

என்று ஆள்பாதி ஆடைபாதி என்ற சொலவடையை எனக்கு நினைவூட்டினார்.  மனிதவாழ்வின் இயல்புத் தத்துவத்தை ,

" பிடிச்ச ஃபிகர் கிடைக்காவிட்டால் கிடைச்ச ஃபிகரைப் புடி என்பது முதுமொழி நடுவர்களே..! :D " ,

 என்ற சிறியவிளக்கத்தால் என்னைக் கிறுங்கடித்தார் என்றே சொல்லலாம் . என்றாலும் எதிரணியில் இருவர் இருக்கின்றார்களே ???  எங்கே யாழ்வாலி அழையுங்கள் உங்கள் இறுதி அஸ்திரத்தை ........... கிரகநிலைகள் எப்படி இருக்கின்றன ???? என்று பார்ப்போம் .

யாழ்வாலி அணித்தலைவர்:

நடுவர் அவர்களே, அடுத்ததாக எங்கள் அணியின் சார்பில் தமது வாதத்தை முன்வைக்க களத்தில் மூத்தவர், யாழ்கள நவரச நாயகன் புலனா(நா)ய் புகழ் சாத்திரி அவர்கள் வருகிறார்.
    
கோமகன் ( நடுவர் ):
வாங்கோ சாத்திரி ..........  எங்கே அவுழுங்கள் உங்கள் சாதகக்கட்டை !!!!!!!  எதிரணியின் கிரகநிலைகள் எப்படியிருக்கின்றன என்று பார்ப்போம் .

sathiri :
பதினைந்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்து இளமை மிடுக்கோடு நிமிர்ந்து நிற்கும் யாழ் களத்திற்கும். எத்தனையோ தடைகள் வந்தபோதும் நேர பண விரயங்களிற்கு மத்தியிலும் மன உழைச்சல் வந்தபோதெல்லாம் சோர்ந்து போகாமல் தொடர்ந்தும் உலகத் தமிழர் எல்லோரையும் தமிழால் இணைத்து வைத்து   இழுத்து செல்லும்  மோகனிற்கும்.  மேகனிற்கு  உதவியாக   கள உறவுகளிற்கு  இடையே வரும் ஆயிரம் பிரச்சனைகளையும்   தட்ட வேண்டிய இடத்தில் தட்டி  தழுவ வேண்டிய இடத்தில் தழுவி யாழ் இணையத்தின் தங்கு தடையின்றி  இயங்க வைக்கும் மட்டடிறுத்துனர்களிற்கும்.  யாழின் பதினைந்தாவது  வருடத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து  ஒஸ்ரேலியா பிறிஸ்பேண் கடற்கரையில் தனது சுண்டல் விற்பனையையும்  நிறுத்திவிட்டு  என்னை தொடர்பு கொண்டு பட்டி மன்றம் நடாத்த ஒழுங்கு செய்யச் சொல்லி கேட்ட சுண்டலிற்கும்.  பட்டி மன்னறத்தை  தலைமை வகித்து வழி நடாத்த சொல்லி கேட்டதும்  ஒத்து கொண்டு ஆர்வத்தோடு நடுவர்களாக இங்கு  அமர்ந்திருக்கும் இரு நடுவர்களிற்கும் எனது அன்பும் நன்றியும் கலந்த வணக்கங்கள் கூறிக்கொண்டு எனது அணித் தலைவர் யாழ் வாலிக்கும் நன்றி கூறி  நாம் புலம் பெயராது   தாயகத்திலே வாழ்ந்திருந்தால்  சிறப்பாக  வாழ்ந்திருப்போம்  என்கிற அணிக்காக எனது வாதத்தை இங்கு கொட்டுகிறேன்.

ஆகாயம் நீலம். ஆழ்கடல் நீலம். ஆதி பகாவன்  நீலம். அண்டசராசரமே  நீலம். வெள்ளைத் துணிகளை  மேலும் வெண்மையாக்க போடுவதும் நீலம்.எங்கள் அணியின் வாதங்களின்  நிறமும் நீலம். ஆனால் நீளம்  அல்ல  ஆழம்..நிலம்  எமது நிலம் நாம் அங்கிருந்தால் சிறப்பாக  இருந்திருப்போம்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு..எங்கள் பகைவர் ஓடி மறைந்தார்....எதிரணியினர் ஓடப் போகிறார்கள்..நடுவர்களே..

எதிரணியினரிற்கு  வாழ்வும் வளமும்  புலம் பெயர்ந்த பின்னர் தான் கிடைத்ததாம். எதிரணி சார்பில்  முதலாவது  வாதத்தை தைரியப் புயல் என்று அவர்களால் வருணிக்கப்பட்ட தமிழச்சி வைத்தார்.  ஒத்துக்கொள்ளுறம் ஜயா அவர் புயல்தான். அவர் சுற்றி சுழன்றடித்தில் குப்பை  கூழம் புழுதி எல்லாவற்றையும் இங்கு பட்டி மன்ற மேடையில் கொண்டு வந்து கொட்டிவிட்டு போயிருக்கிறார்.இன்னமும் எல்லோரும் கண்ணை கசக்கியபடியே இருக்கிறார்கள்.அவர் கேட்கிறார்  வெளி நாடு வந்தால் தானாம் கல்வியில் சிறந்து விளங்குகிறார்களாம்.  என்ன கொடுமை  இது  கல்வித் தாராதரம் என்பது  ஜரோப்பாவில் 60 வீதம் இருந்த பொழுது எமது தாயகத்தில்  95 வீதம்  இருந்திருக்கிறது.  தலைசிறந்த கல்லூரிகளையும் பல்கலை கழகங்களையும் கொண்டதாக  இருக்கிறது எமது நாடு. கல்வி என்பது இப்பொழுதும்  அதன் சிறப்போடுதான் இருக்கின்றது. . அடுத்ததாக அவர் சொல்கிறார் வெளிநாட்டில் தாராளமாக  மருத்துவ வசதி கிடைக்கிறதாம். உண்மைதான்   ஏனெனில் அதற்கு ஏற்ப  வியாதிகளும் தாராளமாய் கிடைக்கிறது..  அதனால்  மருத்துவ  வசதிகளும்  தாராளமாக கிடைக்கத்தானே வேண்டும்.   ஊரில் என்னுடைய  தாத்தா  இறக்கும் போது  அவரிற்கு வயது 96.  எனக்கு தெரிந்து  அவரிற்கு வந்த வியாதி என்றால்  தைமாதத்தில் வருகின்ற  தடிமன் காச்சல் மட்டும்தான்.  அதற்காக அவர்  கொஞ்சம் வேப்பம் பட்டை  மாதுளம் கொட்டை  தூதுவளை .மல்லி  இதையெல்லாம் அவித்து  வடிகட்டி  குடித்து விட்டு வாய் கச்சல்  போவதற்காக  கொஞ்சம் தேனை  தொட்டு நாக்கில் தடவிகொள்வார். அவ்வளவுதான்.

ஆனால் இங்கு  வருகின்ற வருத்தங்களிற்கும் பெயர் தெரியவில்லை . வருத்தங்களிற்காக  வைத்தியர் தருகின்ற  மருந்துகளின் பெயர்களும் புரிவதில்லை..இப்படித்தான் கடந்த மாதம் ஒருநாள் காலை  எழுந்து கண்ணாடியில் எனது முகத்தை பார்த்த எனக்கு அதிர்ச்சி.  உன்ரை மூஞ்சையை  நீயே கண்ணாடி பாத்தால் அதிர்ச்சி வராமல் பிறகு என்ன வரும் என எதிரணியினர் மனதிற்குள் நினைப்பது புரிகிறது. ஆனால் இது வேறை அதிர்ச்சி   எனது கழுத்தை சுற்றியும் உடலும் சிவந்து போய் சிறிய பருக்கள்  நிறைய இருந்தது . உடனேயே  பாதிநாள் வேலைக்கு லீவு போட்டு விட்டு எனது குடும்ப வைத்தியரிடம் ஓடினேன் அவரோ  வழைமைபோல  நாக்கை  நீட்டு  கண்ணை காட்டு என்று  எல்லா சோதனையையும் முடித்து  விட்டு  உதட்டை பிதுக்கி  எல்லாம் சாதாரணமாய் இருக்கு  எனவே போய் தோல் ஸ்பெசலிஸ்ற்  வைத்தியரை  பார் என்றதோடு தனது கட்டணத்தை கறந்து விட்டார்.  எல்லா வைத்தியருக்குமே தோல் இருக்கும்தானே  இவருக்கு மட்டும் ஸ்பெசலா  என்ன தோல் இருக்க போகுதென்று  நினைத்தபடி அடுத்நாள் மீண்டும் பாதிநாள் லீவு..  தோல் வைத்தியரிட்டை போய் காட்டினன். அவரும் தன் பங்கிற்கு  உருட்டி பிரட்டி  பார்த்திட்டு  நீ பாவித்த (ஸ்பிரே) வாசனை  திரவியம்  உனக்கு ஒத்து வரவில்லை  என்றவர்.  ஆங்கில எழுத்துக்கள் எல்லாத்தையும்  போட்டு  குலுக்கி கீழே போட்டது போலை  அதன் எல்லா எழுத்தையும் கலந்து  ஒரு பெயரை சொல்லி  அதுதான் உனது வருத்தம்  எனவே அந்த ஸ்பிறேயை பாவிக்காதே என்றதோடு  உடலில் பூசுவதற்காக இரண்டு வகை கிறீமும்  மூன்று வகை குளிசையும்  எழுதித் தந்தார்.

அந்த ஸ்பிறேயை நான் வாங்கியதற்கான காரணத்தையும் இங்கு சொல்லியாக வேண்டும்  அதற்கு காரணம் தொலைக்காட்சி விளம்பரம்தான். தொலைக்காட்சியில்  என்னைப்போல  கட்டழகான  ஆண்மகன் ஒருவர்  இந்த ஸ்பிரேயை  அடிப்பார்  உடனேயே வீதியால் போகும்  அழகிகள் எல்லாரும் அவரை ஓடிப்போய் தழுவுவார்கள். அந்த விளம்பரம்தான் என்னை  அந்த ஸ்பிரேயை  வாங்க வைத்தது.இப்படியான  விளம்பரமான போலி வாழ்க்கைத்தான்  நாம் வெளிநாட்டில் வாழ்கிறோம்.கடைசியாய்  வாங்கின ஸ்பிறேயை  எறியவும் மனம் வராமல் அதனை  ஆசையாய் நான் வளர்க்கும் பூனை  மீனுவிற்கு அடித்து விட்டேன் அது அப்படியே  ஓடிப்போனதுதான்  இரண்டு நாளாய் வீட்டுப் பக்கமே வரவில்லை. என்ரை நிலைமை இப்படி. அடுத்தாக தைரியப் புயல் அவர்கள் சொன்னது  வெளிநாட்டில்தான் சுத்தம் சுகாதாரமாக வாழ்கிறாராம் என்ன கொடுமை..  எதிரணியினர் ஊரில் குளிக்காமல் முகம் கழுவாமல். பல் தீட்டாமல். கூட்டி துப்பரவு செய்யாமல் இருந்ததற்கு  நாங்கள் என்ன செய்யமுடியும். வெளிநாட்டிற்கு வந்துதான் குளிக்கத்தொடங்கியிருக்கிறார்கள். என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.சரி  தைரிய புலலை  விட்டு விடுவோம்.ஆனால் எதிரணியினரிற்கு ஒரு  தகவலை சொல்கிறேன் ஒரு பலூனை ஊதிய பின்னர் கையை விட்டால் வேகமாக வரும்  சிறிய காற்றை  புயல் என்று நம்பி ஏமாந்து விட்டீர்கள்.

 அடுத்தாக   எதையோ பிரிந்த சோகத்தில் ஜுவா  அவர்கள்  வந்து சொன்னார்  ஊரிலை மட்டுமா  இயற்கையான  பொருட்கள் கிடைக்கிறது இங்கு வெளிநாட்டில  கூடத்தான் பயோ   தரமான இயற்கை  காய் கறி கிடைக்கிறது  என்கிறார்.  இங்கு ஒரு  சந்தையில் ஒரு தடைவை  சமான் வாங்க போயிருந்தபோது  ஒரே மாதிரியன  கத்தரிக்காயை  இரண்டாக பிரித்து  ஒன்றிற்கு பயோ என்று  எழுதியிருந்ததற்கு விலையும் அதிகம்.  சந்தைக்காரன் எனக்கு தெரிந்தவன்தான் அவனிடம்   இந்த பயோ கத்தரிக்காய்க்கும் சாதாரண கத்தரிக்காய்க்கும் என்ன வித்தியம் என்று கேட்டேன். அதற்கு அவன் பயோ என்று எழுதியிருந்த  மட்டையை எடுத்து விட்டு  இதுதான் வித்தியாசம் என்றான். ஜுவா தன்னுடைய கடையில்  காய்ந்து போன  காய்கறிகளையெல்லாம்  பயோ என்று எழுதிப்போட்டு  ஏமாற்றி வியாபாரம் செய்வதை  இங்கு வந்து கூறியுள்ளார் நடுவர்களே..தன்னுடை  வியாபார தந்திரத்தை நியாயப் படுத்துவதற்காக  டாவின்சியின்  கூர்ப்பு கொள்கையை  உதாரணம் காட்டிய ஒரேயொருவர் இவர்தான்.  எனவே அவரது கடையில் சமான் வாங்குபவர்கள் கவனமாக இருங்கள்.அடுத்தாக அவர் சொல்கிறார் ஊரில் கலர் கலராக மழை பெய்ததாம். உண்மைதான்  நல்லவர்கள் இருக்கும் ஊரில்தான் மழை பெய்யும்.  அதுவும் கலர் கலராக மழை பெய்கிறதென்றால் ஊரில் இருப்பவர்கள் எவ்வளவு றெம்ப நல்லவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஜுவா போன்றவர்கள் இருக்கும் நாட்டில் இயற்கையே பொறுக்க முடியாமல்தான்  மழையே இறுகிப்போய்  பனியாக கொட்டுகிறது.

அடுத்தாக எதிரணியில் பேசிய சுபேஸ் அவர்கள் வரும்போதே நடுவர்கள் நித்திரை கொள்கிறார்கள் என்றபடி  வந்தவர்  வாத்தியார்கள் என்றாலே ஏதோ அலர்ச்சி போல் இருக்கிறது எமதணி வாத்தியாரையே  குறிவைத்து தாக்கியிருக்கிறார்.இதிலிருந்தே  புலம்பெயர்ந்து வாழும் எமது  இளம் தலைமுறை  வயதானவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் பெரியவர்களிற்கும் எவ்லவளவு தூரம் மரியாதை தருகிறார்கள் என்பது புரிகிறது நடுவர்களே...இதுக்குள்ளை அவர் ஒரு கதை சொன்னார்  அவரது நண்பர் ஒருவர் விலாசம் காட்ட  ஊருக்கு போனாராம் அவரை யாரும் அங்கை மதிக்கேல்லையாம்.தெரியமல்தான கேக்கிறேன்  எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அகதி வாழ்க்கை வழும் ஒருவரிற்கு  ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அதனை எதிர்கொண்டு செந்த மண்ணில் வாழும் ஒருவர் எதற்கு  வெளிநாட்டில் இருந்து வந்தவரை ஆ..வென்று பார்க்கவேண்டும். என்று இவரை கேட்கிறேன்.அடுத்தாய் அவர்  சொல்லுறார் இங்கையும் ஆறு இருக்காம் காத்து  இருக்காம்.கடற்கரை இருக்காம். எல்லா வசதியும்  இருக்காம். ஆனால் அவரை பார்த்து  ஒரு கேள்வி  இங்கு முப்பது  வயதிற்கு மேல் எத்தனை ஆண்களிற்கு மண்டையில்  மயிர் இருக்கின்றது??? 

காரணம் என்ன?தேட தேட தேவைகள் அதிகம். ஆசைகள் அதிகம் அதற்காகவே ஓடுகிறார்கள். ஆளாளிற்கு இரண்டு வேலை  திருமணமானவர்கள்  தங்கள் உறவைக்கூட நாள் குறித்து  நேரம் குறித்து  செய்யவேண்டிய  வாழ்க்கை . இரவு வேலைக்கு போகும் கணவன் பகல் வேலை முடிந்து  வரும் மனைவியிடம்  இரயில் நிலையத்தில் பிள்ளையை கொடுத்து விட்டு போகின்ற நிலைமை. இப்படித்தான் எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில்  கணவன் இரண்டு  வேலை .மகன் நித்திரையால் எழும்ப முதலேயே  வேலைக்கு போனால் அவன் நித்திரையான பிறகுதான்  வீட்டிற்கு வருவான். ஒரு நாள்  இரவு நித்திரையில் திடுக்கிட்டு விழித்த மகன்  தாய்க்கு பக்கத்தில் படுத்திருந்தவரை பார்த்து பயத்தில் அலறியபடியே  தாயாரை  தட்டி எழுப்பி  அம்மா..அம்மா உனக்கு பக்கத்திலை யாரோ  கள்ளன் வந்து படுத்திருக்கிறான் என்று கத்தியிருக்கிறான்.  டேய் அது கள்ளன் இல்லை அதுதான்தான்ரா உன்ரை அப்பா என்று தாயார் மகனை சமாதானப்படுத்தியிருக்கிறார்.இதுதான் இங்குள்ள நிலைமை.எனவே தம்பி சுபேஸ் உங்களிற்கும் இந்த நிலைமை வராமல் பாத்துக் கெள்ளவும் என வேண்டி அடுத்ததாக. வந்தாரய்யா  யாழ் வாணன். உரை விட்டு பிரிந்த சோகத்தில் தன்னுடைய பெயரையே யாழ் வாணன்  எனவைத்துக்கொண்டு என்னமா பொய் சொல்லுறார்.அடுத்தாய் இவர் பட்டி மன்றத்திலை பேசவந்தாரா  அல்லது  தைரியப் புயல். தைரிய லக்சுமிசி  என்று  மிக்சி  அரைத்து போல் தமிழிச்சி புகழ் பாட வந்தாரா??என்று சந்தேகமாய் இருக்கிறது.அதே நேரம்  வெளிநாடு வந்ததால் தானாம்  மாணவர்கள் சாதனை செய்தார்களாம். பாவம் இவர் தாயக செய்திகளையே படிக்கிறேல்லையெண்டு நினைக்கிறேன்.கடந்த  பரீட்சையில்  கல்வியில் தமிழ் மாணவர்கள் எவ்வளவு சிரமத்தின் மத்தியிலும் அதிகளவு புள்ளிகள் எடுத்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது இவரிற்கு புரியவில்லை.அதைவிட  புலம்பெயர் தேசத்தில் தான் பிள்ளைகள் பெற்றோர்களோடு  அன்பாகவும் தோழமையோடும் இருக்கிறார்களாம். உண்மைதான்  மகன் சிகரற்றை  வாயில் வைத்துக்கொண்டு அப்பாவிடம் நெருப்பு கேக்கிறான்.அம்மா தான் குடித்த பாதி வைனை மகளிடம் நீட்டுகிறார்.இதைவிட அன்பாகவும் தோழமையாகவும இருக்க முடியுமா?? அடுத்ததாக சொல்கிறார் ஊரில் இருந்திருந்தால் எமது பெண்கள் ஆணாதிக்கத்தால் பாதிக்கப் பட்டிருப்பார்களாம்.ஜயா உலகத்திற்கே பெண்கள் என்றால் எப்படி தைரியமாக இருக்கவேண்டும் என்று நிலத்திலும் காடுகளிலும் ஏன் கடலிலும் சாதனைகளை நிகழ்த்திய காட்டியவர்கள் எங்கள் தமிழ்பெண்கள்  இன்னமும் தங்கள் வாழ்விற்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் இதெல்லாம்  இந்த பாழ்வாணணிற்கு தெரியாதா??இதெல்லாவற்றிக்கும் ஒரு படி மேலே போய் எங்கள் நடுவர்  கோமகனிற்கே கற்ற கசடற  என்று திருக்குறள் விளக்கம் கொடுத்திருக்கிறார் என்றால் பாருங்கள்.ஆனால் கடைசிலை  எங்கள தரப்பு நியாயங்களை புரிந்து கொண்டு தான் ஊரில் போய் வாழத் தயார் என்று  சேம் சைற் கோல் அடித்து விட்டார். இவர் தனது அவதாரில் திருச்செந்தூர் முருகன் படத்தை போட்டிருக்கிறார் ஆனால் இவரிற்கு பழனி முருகனே பொருத்தமாக இருக்கும் என்று பரிந்துரை செய்து  அடுத்ததாக  வில்லே இல்லாமல் வித்தை காட்டும் அர்ஜுன் என்ன சொல்கிறார் என்று பாக்கலாம்.

பாவம் தனக்கு கொடுத்த தலைப்பையே மறந்து போய் வந்ததுமே நடுவர் சுமேயை பார்த்து  மின்னலிடை என்று ஜொள்ளு விடத் தொடங்கியவரிற்கு எங்கள் அணியை பார்க்கும் போது  ஏதோ சாத்திரம் கிளிஜோசியம் சொல்பவர்களைப் போல இருக்கிறதாம். இவரே ஒவ்வொருநாளும் யாழ் களத்தில் கருத்து எழுத முதல் தனது தினராசி பலனை பார்த்து விட்டுத்தான் வந்து எழுதத் தொடங்குவார் என்பது எத்தனை பேரிற்கு தெரியும். இன்று உங்களிற்கு சுப யோகம் என்றால்தான் அரசியல் எழுதுவார். இன்று உங்களிற்கு கரிநாள்  என்றிருந்தால்  பேசாமல் சினிமாபற்றி எழுதிவிட்டு போய்விடுவார்.இவர் நிலைமை இப்படியிருக்க தேடல் இருந்தால் தான் மனித வாழ்வாம் அதனால் எதையொ தேடித்தானாம் கனடா வந்தாராம்.இவர் தேடி வந்தது கிடைத்து விட்டதா? ஜயா உழுகிற மாடு என்றால் உள்ளுரிலையும் உழும் வெளிநாடு வந்துதான் உழவேண்டும் இல்லை. அடுத்ததாய் சொல்கிறார் ஊரிலை அம்மா ஈரவிறகை ஊதி ஊதி சமைத்ததை இப்ப நினைத்தாலும் கண்கலங்குதாம்..அதைத்தனய்யா நாங்களும் சொல்லுறம் இப்பவும் கண் கலங்குதல்லா அதுதான் பாசம்..அதூன் அன்பு.அந்த தூய்மையான அன்பு ஊரிலைதானய்யா இருக்கு.இங்கை வெளிநாட்டிலை குக்கரிலை மனைவி சமைத்த  உணவை உங்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறதா?? அவர் குழம்பில் மிளாய்தூளை அதிகமா அள்ளிப்போட்டால்தான் உங்கள் கண்ணில் கண்ணீர்வரும். உண்மையான பாசத்தோடை வராது.

அடுத்தாய் வெளிநாட்டிலை இருந்தால்தானாம்  ஜமேக்கா . கியூபா போகலாமாம்.எதுக்கு கஞ்சா அடிக்கவா??எங்களிற்கு காரைநகர் கஜேரனா கடற்கரைதானய்யா  கியூபா. கீரிமலை கடல்தான் ஜமேக்கா இங்கை இல்லாத என்னத்தை அங்கை கண்டிருப்பார்.கூவிலில்  கள்ளடித்து விட்டு கீரிமலையில் குளித்துவிட்டு கடலைவடை வாங்கி கடித்தபடி கடற்கரைமண்ணில் புரண்டு விட்டு கடைசியாய் சேந்தாங்குளம் சந்தியில் வந்து சத்தியெடுத்து விட்டு போகும் சுகம். இவர் சொன்ன கியூபாவில் வருமா??அடுத்ததாய் ஊாரில் பிறேக் இல்லாத சைக்கிளில் திரிந்தவன் இங்கு காரில் போகிறானாம்.உண்மைதான் ஊரில் பிறேக் இல்லாத சைக்கிள் அவனது சொந்தப் பணத்தில் வாங்கியது நிம்மதியாய் ஓடித் திரியலாம் ஆனாய் இங்கு வாங்கிய கார் வெறும் பகட்டிற்காக  கட்டுப்பணத்தில் கடனிற்கு வாங்கியது ஓடும்போது கூட பயந்து பயந்துதான் ஓடவேண்டும் ஒரு மாத காசு ஒழுங்காய் கட்டாவிட்டாலும் காரை பிடுங்கிக் கொண்டு போய்விடுவாங்கள் இது தேவையா??களத்தில் அவ்வப்போது பச்சை பச்சையாக கருத்துக்களை வைக்கும்  அர்ஜுனிற்கு  தமது அணிக்கு கருத்து எழுதுவதற்காக    ஒதுக்கப்பட்ட நிறம் பச்சை என்பதையே கவனிக்காமல் கருத்தை வைத்திருக்கிறார். எனவே இவர்  வேறை என்னத்தைத் தான் ஒழுங்காக கவனித்திருப்பார் என கேட்கிறேன்.

அடுத்ததாக  இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்குள் இடையில் புகுந்து  விசில் அடித்தது மாதிரி பட்டி மன்றத்திலும் இடையில் புகுந்து  புங்கையூரானிற்கு  குதிரையோடி  அணித்தலைவர் இறுதியாகத் தொகுப்புரை வைக்கும் பட்டி மன்ற மரபையே  மாற்றியமைத்திருக்கிறார்  எதிரணித்தலைவர். சரி இருக்கட்டும் நடுவர்களே இவர்  இங்கு பட்டிமன்றத்தில் கருத்து வைத்தாரா அல்லது பரதநாட்டியம் ஆடினாரா என்று  சந்தேகமாக இருக்கின்றது  தயவு செய்து அவரையே கேட்டுச் சொல்லுங்கள். காரணம் அவர் வைத்த கருத்துக்களைவிட அவர் முகக் குறிகள்  போட்டு அபிநயம் பிடித்ததுதான் அதிகமாக இருக்கின்றது. பேசாமல் அடுத்த யாழ்கள ஆண்டு விழாவிற்கு பட்டிமன்றம் நடத்தாமல் இசைக்கலைஞனின் பரதநாட்டியத்தை அரங்கேற்றலாம் சுண்டல் நினைவில் வைத்திருக்கவும். அடுத்ததாக அவர் என்ன சொல்ல வந்தார் என்று பாக்கலாம் அவர் சொல்கிறார்  ""பிடிச்ச பிகர் கிடைக்காவிட்டால்  கிடைச்ச பிகரை ""பிடியாம்..என்னே தத்துவம். ஆகவே இவர்களிற்கு  ஒரு கொள்கைகிடையாது . ஒரு குறிக்கோள் கிடையாது. ஒரு தெளிவான பாதை கிடையாது எங்கேயாவது  எப்படியாவது வாழ்ந்திட்டு போவமய்யா  என்று  விலங்கு  வாழ்க்கை  வாழ்ந்து விட்டு போகலாம் என்பதில் தெளிவாக இருக்கிறார்களாம்.

அடுத்தாய்  அவர் மிகப்பெரிய ஒரு கேள்வியை கேட்டார் ஊரிலை பனியை பார்த்தீர்களா என்று..யார் சொன்னது இல்லையென்று எதிரணித் தலைவரைப்போல நிறைய பனிகளை ஊரில் பார்த்திருக்கிறோம் நடுவர்களே .அதே நேரம் ஊரில் எமது கல்வி முறையை  சப்பித் துப்பும்  மனப்பாடம் என்கிறார். எமது கல்வி முறையில் படித்ததால்தான் இவரே இன்று பொறியியலாளர் ஆகியிருக்கிறார் என்பதை மறந்து விட்டார் போலும் . எமது கல்வி முறை  பல வழிகளையும் காட்டி அனைத்து விடயங்களையும் கற்பித்து விடும்  இறுதியாக  நீ ஒன்றை தெரிவு செய்யலாம் என்று சொல்லி விடும். ஆனால் வெளிநாட்டு இன்றைய கல்வி முறை  குதிரைக்கு மட்டை கட்டி விட்து போன்ற கல்வி முறை  ஒன்றை படித்து விட்டு அதே துறையில் வேலை கிடைக்கா விட்டால் அவனிற்கு இன்னொரு துறையை பற்றிய அனுபவம் இல்லை.அவன் மீண்டும் படிக்க போக வேண்டும். அதற்குள் அவனிற்கு வயதாகிவிடும் உதவிப் பணத்தில் தான் வாழ்க்கையை ஓட்டலாம். ..இரண்டும் இரண்டும் எத்தனை என்று  கல்குலேற்றரில்  கணக்கு பார்த்து  சொல்பவர்களிற்கு   பெருக்கல் .பிரித்தல்.கழித்தல் . வகுத்தல்  என்று மனதிலேயே கணக்கு போட்டு  பட்டென்று பதில் சொல்லும்.எங்கள் கல்வியை தரமில்லாத  கல்வி என்று சொன்ன ஒரேயொருவர் இவர்தான்.

அடுத்தாக சுடிதாரை போட்டு கொண்டு குளிக்கிறாங்களாம்  குளிக்கட்டுமே . இஸ்லாமிய பெண்கள்  கனடாவில்  பர்தா போடுவதில்லையா.ஆண்கள் தாடிவைப்பதில்லையா. ஆபிரிக்கர்கள்.தங்கள் பாரம்பரிய உடை அணிவதில்லையா.யூதர்கள் சிறிய தொப்பி அணிவதில்லையா.சீனர்கள் தங்கள்  பட்டு உடையணிந்து  மேளம் கொட்டி தங்கள் புது வருடத்தையே கொண்டாடுவதில்லையா. அதெல்லாம்   ஒரு  இனத்தின் அடையாளம். நீங்கள் வேண்டுமானால் இரண்டு துண்டு உடையென்ன அது இல்லாமலே  அலையலாம். உண்மையில் உடல் முழுவதையும் மறைத்தபடி நீச்சலடிப்பதற்காக கண்டு பிடிக்கப்பட்டதொரு அற்புதமான கண்டுபிடிப்புத்தான்  சுடிதார் என்பது இவர்களிற்கு புரியவில்லை.இறுதியாக    எதிரணியினரை பார்த்து நான் கூறுவது என்னவெனில்.

விரலிற்கேற்ற வீக்கம் இருக்கவேண்டும் என்று ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் இங்கு வெளிநாட்டில் வசிப்பவர்கள் கைவிரல்கள் எல்லாமே விரலை மிஞ்சி வீங்கிப்போய் இருக்கின்றது.தேவைகளிற்கு அதிகமாகவே தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம் .வெளிநாட்டில் சுதந்திரமாக வாழ்கிறோம் என்பது பொய்  இங்கு நாம் பெரு முதலாளிகளின்  நுகர்வு அடிமைகள். ஊரில் ஒரு சைக்கிள் வாங்குவதென்றாலும்  அவன் தனது உழைப்பை சிறுக சிறுக சேமித்து பணத்தை கொடுத்து அதை வாங்குகிறான் ஆனால் இங்கு அப்படியா?? கார் வேண்டுமா  ஒரு கையெழுத்து வைத்துவிட்டு கரை கொண்டுபோ என்பார்கள். பத்தாயிரம் யூரோ காரை  மாதா மாதம்  வட்டியோடு பணம் கட்டி இருபதாயிரத்திற்கு வாங்கிவருவோம்.பணம் கட்டும் காலம் ஆறு வருசமோ ஏழு வருசமோ  ஆனால் பணம் கட்டி முடியும் போது கார் ஓடமுடியாமல் பழுதாகிப் போயிருக்கும் ஆனாலும் பணத்தை கட்டிமுடித்தேயாக வேண்டும்.அதே போலத்தான் சொந்த வீடு  வாங்க வேண்டும் என்கிற ஆசையில் வீட்டை வாங்கி விடுவார்கள்  . வீட்டின் வங்கிக் கடன் 30 வருடங்களாக இருக்கும் ஆனால் வீட்டை வாங்குபவரிற்கு வயது அப்போ 40 தாக இருக்கும். வீட்டுக் கடனிற்காக  ஓடியோடி உழைத்து  வீடு அவரிற்கு சொந்தமாகும்போது  ஒன்று அவர் உயிரோடு இருக்கமாட்டார் . சொந்த வீடு  செத்த வீடாக  மாறியிருக்கும்.அல்லது வருத்தங்களோடு  வயதாகி மருந்து குளிசைகள் மட்டுமே சாப்பாடாக மறிப்போயிருக்கும்.. இந்த வாழ்வு தேவையா இதே தான் ஊரில் எலிவழையாளாலும் தனிவழை என்பதுபோல  கடனே இல்லாமல் குடிசையோ  இல்லை கோயில் மடத்திலையானாலும் காலை நீட்டி சுகமாக படுத்திருக்கலாம்.அதை விட்டு இங்கு மாத கடைசி வருட கடைசி என்றாலே கடிதப் பெட்டியில் வந்து விழும்  பணம் கட்டவேண்டிய  கடிதங்கள் வரி என்று என்று எமது உழைப்பு இன்னொரு பக்கத்தால் உறுஞ்சப் படுகின்றது. ஊரில்  வருடத்திற்கு ஒருதடைவை வெறும் 15 ருபாய் சோலை வரி கேட்டு வந்த  கிரமசபை ஊழியரையே  இது என்னுடைய காணி. வரி .வட்டி. திறை .யாரிடம் கேட்கிறார் வரி மானங்கெட்டவனே  என்று கட்டபொம்மன் வசனம் பேசியபடி கொடுவா கத்திகொண்டு துரத்தியவர்கள் நாங்கள்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் எம் நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் எம் நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் எம் நாடே  


எனவே எம் நாட்டில் வாழ்ந்திருந்தால் நாம் இன்னும் சிறப்பாக வாழ்ந்திருப்போம் என்றதோடு மட்டுமல்லாது மன நிம்மதியோடு வாழ்ந்திருப்போம் என்று கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.
கோமகன் (நடுவர்) :
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் எம் நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் எம் நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் எம் நாடே !!!!!!!!


எங்கு எதனால் அடித்தால் நடுவரை வீழ்த்தலாம் என்று தெரிந்து அடித்திருக்கின்றார் சாத்திரி  . மனிதவாழ்வை காட்டாற்று வெள்ளத்துடன் ஒப்பிடுவார்கள் . எப்படி ஒரு காட்டாறு பொங்கும் நுரையுடன் சீறிக்கிளம்பி பல நெளிவு சுளிவுகளைக் கடந்து , தெளிந்த ஓடையாக மாறி இறுதியில் கழிமுகவடிவம் கொண்டு கடலுடன் சங்கமிக்கின்றதோ அப்படியே தனிமனிதவாழ்வின் நெளிவுசுளிவுகளை சாத்திரியின் வாதத்தில் கண்டேன் . ஆரம்பத்திலே பல போரியல் பொறிமுறைகளை உருவாக்கி இறுதியில் ,


" வெளிநாட்டில் சுதந்திரமாக வாழ்கிறோம் என்பது பொய்  இங்கு நாம் பெரு முதலாளிகளின்  நுகர்வு அடிமைகள். ஊரில் ஒரு சைக்கிள் வாங்குவதென்றாலும்  அவன் தனது உழைப்பை சிறுக சிறுக சேமித்து பணத்தை கொடுத்து அதை வாங்குகிறான் ஆனால் இங்கு அப்படியா?? கார் வேண்டுமா  ஒரு கையெழுத்து வைத்துவிட்டு கரை கொண்டுபோ என்பார்கள். பத்தாயிரம் யூரோ காரை  மாதா மாதம்  வட்டியோடு பணம் கட்டி இருபதாயிரத்திற்கு வாங்கிவருவோம்.பணம் கட்டும் காலம் ஆறு வருசமோ ஏழு வருசமோ  ஆனால் பணம் கட்டி முடியும் போது கார் ஓடமுடியாமல் பழுதாகிப் போயிருக்கும் ஆனாலும் பணத்தை கட்டிமுடித்தேயாக வேண்டும்.அதே போலத்தான் சொந்த வீடு  வாங்க வேண்டும் என்கிற ஆசையில் வீட்டை வாங்கி விடுவார்கள்  . வீட்டின் வங்கிக் கடன் 30 வருடங்களாக இருக்கும் ஆனால் வீட்டை வாங்குபவரிற்கு வயது அப்போ 40 தாக இருக்கும். வீட்டுக் கடனிற்காக  ஓடியோடி உழைத்து  வீடு அவரிற்கு சொந்தமாகும்போது  ஒன்று அவர் உயிரோடு இருக்கமாட்டார் . சொந்த வீடு  செத்த வீடாக  மாறியிருக்கும்.அல்லது வருத்தங்களோடு  வயதாகி மருந்து குளிசைகள் மட்டுமே சாப்பாடாக மறிப்போயிருக்கும்.. இந்த வாழ்வு தேவையா "

என்று ஒரேயொரு " பொக்ஸ் அடியினால் "  எதிரணியை திணறடித்து விட்டார் . இதைத்தான் " தவளைப்பாச்சல் " என்று  சொல்வதோ ??? யாழ் கருத்துக்களத்தின் இரண்டு மூத்த குடிமக்கள் , பலகளம் கண்டவர்கள் ஓரணியில் நின்று கொடுக்குக் கட்டியிருக்கின்றார்கள் . எனக்கு எதிரணித் தலைவரைப் பார்க்க மனசு சங்கடமாக இருக்கின்றது . இந்த நடுவர் என்ற முள் கிரீடம் எனக்கு வலிக்கின்றது .  ஆனாலும் இசைக்கலைஞனில் வைத்திருக்கும் நம்பிக்கை கலையவில்லை . எங்கே அழையுங்கள் இசைக்கலைஞன் உங்கள் கங்காருதேசத்து குரூஸ் ஏவுகணையை................       
   Post a Comment

   Popular posts from this blog

   "சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

   ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
   கோமகன்


   000000000000000000000000000000000000
   உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
   " மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

   "ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

   ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

   "கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

   அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
   பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…