Skip to main content

பட்டிமன்றம் சொல்லும் கதை ( அனுபவப்பகிர்வு )


பட்டிமன்றம் சொல்லும் கதை (அனுபவப்பகிர்வு) 


வணக்கம் கள உறவுகளே !!! வாசகர்களே !!!

யாழ் இணையத்தின் பதினைந்தாவது அகவையை ஒட்டி நடைபெற்ற சிறப்புப் பட்டி மன்றம் , அதன் தொடராக இடம்பெற்ற அதில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசளிப்பு விழா அனைத்தும் நிறைவுக்கு வருகின்றது . இந்த வேளையில் இந்தப் பட்டிமன்றத்தை ஒருங்கமைத்தவர்களில் ஒருவன் என்றவகையில் ஒருசில அனுபவ பகிர்வுகளை உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன் . இது எனது சுய விளம்பரம் இல்லை . மாறாக இந்த அனுபவப் பகிர்வானது வருங்காலத்திலே இந்த யாழ் இணையத்திலே இணையப்போகின்ற அல்லது இந்த நிகழ்வைப்போல ஒரு நிழ்வை ஒருங்கிணைக்கப் போகின்ற கள உறவுகளுக்கு ஓர் வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பதே எனது நோக்கம் . அத்துடன் என்னுடன் கடமையாற்றிய சுண்டல் , ஜீவா , சாத்திரி மற்றும் மொசொப்பத்தேமியா சுமேரியர் ஆகியோரும் இதில் தங்கள் அனுபவப்பகிர்வுகளைப் பதிவார்கள் . அத்துடன் இதில் கலந்து கொண்ட கள உறவுகள் நீங்கள் சந்தித்த அனுபவங்களையும் பதிந்தால் இது ஓர் பரிபூரணமான ஆவணமாக ஆவணக்காப்பகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கின்றேன் .

இந்தப்பட்டிமன்றம் உருவானது ஓர் சுவாரசியமான சம்பவத்தினால் . ஒருநாள் கருத்துகளப் பொறுப்பாளர் நிழலி யாழ் இணையத்தின் பதினைந்தாவது அகவையை முன்னிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் , தாங்களாக செய்தால் அது பல சர்ச்சைகளைக் கிளப்பும் என்றும் , கருத்துக்கள உறவுகள் யாராவது முன்வந்து செய்யும்படி தனது உள்ளக்கிடங்கையை திண்ணையிலே விட்டிருந்தார் . அப்பொழுது சுண்டல் பட்டிமன்ற விடையத்தைச் பரிந்துரை செய்தார் . நான் கவியரங்கத்தையே பரிந்துரை செய்தேன் . ஏனெனில் இன்று கருத்துக்களம் உள்ள நிலையில் இது ஒன்றுதான் இலகுவாக முடியும் என நினைத்திருந்தேன் .

அந்த கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது சுண்டலிடம் இருந்து எனக்கு தனிமடல் ஒன்று வந்திருந்தது . அதில் பட்டிமன்றத்தையிட்டுக் குறிப்பிட்டு என்னால் இது முடியும் என்றும் தன்னுடன் கைகோர்க்கும்படி நட்புக்கரம் நீட்டியிருந்தார் . நானும் சுண்டலும் தனிப்பட்ட முறையில் ஸ்கைப்பிலும் முகநூலிலும் நல்ல நண்பர்களானலும் , கருத்துக்களத்தில் எங்களிடையே உள்ள உறவுநிலை நேர்எதிரானது . முதலில் எனக்கு இதை எப்படிக் கையாழுவது என்பதில் பெரியகுழப்பமே இருந்தது . நாங்கள் இருவருமே கருத்துக்கள பிரச்சனைகளை நட்புடன் தொடர்புபடுத்துவதில்லை . நான் சிறிது யோசித்துவிட்டு எனது மறுப்பை நயமாக எழுதினேன் . அவர் அதை ஏற்றுக்கொள்ளாது என்னை சம்மதிக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார் . இறுதியில் நிபந்தனையுடன் கூடிய சம்மதத்தை சுண்டலுக்கு தனிமடல் மூலம் தெரிவித்தேன் . அதாவது எனக்கு எதிராக வரும் கல்லுகளை தடுப்பது சுண்டலின் பொறுப்பென்று . இதற்கே ஏறத்தாள 5 கடிதப்பரிமாற்றத்தை மேற்கொண்டோம் . இதை ஏன் சொல்கின்றேன் என்றால் பல்வேறு சிந்தனைகளை உள்ள , வெறும் கற்பனைவடிவில் உள்ள உருவகங்களை ஒரே நேர்கோட்டில் கொண்டுவருவதில் உள்ள சிக்கல்கள் ,நேரவிரையங்களை சொல்வதற்கே .

எனது இறுதிக்கடிதத்தின்படி சுண்டல் நாற்சந்திப்பகுதியில் பட்டிமன்றம் சம்பந்தமான பூர்வாங்க ஆலோசனைகள் நடவடிக்கைகளுக்கென ஒர் பதிவை ஆரம்பித்தார் . அந்தப்பதிவிலே பட்டிமன்றம் தொடர்பாக பல ஆக்கபூர்வமான கருத்துகளும் , ஒருசில எதிர்கருத்துகளும் கள உறவுகளால் பதியப்பட்டது . நாங்கள் எல்லாவற்றையும் தட்டிக்கழிக்காது உள்வாங்கினோம் . இதேவேளையில் நான் ஒரு பட்டிமன்றம் எப்படி இருக்கவேண்டும் என்று யாழின் முன்னைய களத்தில் 2005ஆம் ஆண்டில் கள உறவு ரசிகையால் உருவாக்கப்பட்ட பட்டிமன்றத்தைப் பார்த்து அதில் உள்ள குறை நிறைகளை மனதில் எடுத்துக்கொண்டேன் .

ஒருநாள் நான் , சுமே , சாத்திரி ஸ்கைப்பில் இது பற்றி கதைக்க ஒன்று கூடினோம் . அதில் சுண்டல் விளம்பரப் பொறுப்பையும் , நான் உள்ளகத் தொடர்பாடலையும் , சுமே பட்டிமன்றம் நடைபெறும் பொழுது என்னுடன் இணைந்து நடுவராக கடமை ஆற்றவும் முடிவு செய்யப்பட்டது . இதில் சாத்திரி அவ்வப்பொழுது ஆலோசனையையும் , தொழில்நுட்பரீதியாக எப்படி பட்டிமன்றத்தை நடத்தலாம் என்ற ஆலோசனையை மட்டும் தந்தார் . அப்போது அவர்கூறிய விடையம் " நீங்கள் நடத்தி இதில் பல அனுபவங்களை எடுக்கவேண்டும் ஏதாவது ஆலோசனை வேண்டுமானால் தான் தருகின்றேன் . இறுதி முடிவு எங்களுடையதே " என்று சொன்னார் .

அதில் எல்லாப் பொறுப்புகளையும் ஒவ்வொருவர் பகிர்ந்து எடுத்து , முக்கியமாக ஒருவரது சுதந்திரத்திலும் அதிகாரத்திலும் மற்றவர் தலையிடக்கூடாது என்று முடிவுக்கு வந்தோம் . நான் எல்லாவற்றையும் சுண்டலுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன் . பின்பு தமிழில் ஆர்வம் உள்ள பல கள உறவுகளுடன் கடிதம் மூலம் தொடர்பு கொண்டேன் . ஒருசிலர் நயமாக தமது மறுப்பை தெரிவித்தார்கள் . பேச்சாளர்கள் தெரிவான நிலையில் அணித்தலைவர் தெரிவுக்கு இசைக்கலஞனிடம் தொடர்பு கொண்டேன் . அவர் மகிழ்சியுடன் சம்மதம் தெரிவித்து , எதிரணிக்கு ஓர் புதிய கள உறவை தெரிவு செய்யும்படி ஆலோசனை வழங்கினார் . அதன்படி பலத்த முயற்சியின் பின்பு யாழ்வாலி தெரிவானார் . 

பட்டிமன்றம் நடைபெறும் பொழுது ஒவ்வொரு முறையும் வாதங்கள் எங்கள் தீர்ப்புக்கு ஏற்ற இறக்கங்களைத் தந்து கொண்டிருந்தன .எங்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை . இதன்பொழுது ஒருநாள் ஜீவா என்னுடன் தொடர்பு கொண்டு தனது பரிசு திட்டத்தை சொல்லி பரிசீலிக்கும்படி சொன்னார் . நான் மற்றயவர்களுடன் கதைத்தேன் . மற்றையவர்கள் வென்றவர்களுக்கு மட்டும் கொடுப்போம் . என்றார்கள் நான் மறுத்து இது நினைவுப்பரிசாகையால் பங்குபற்றிய எல்லோருக்குமே கொடுப்பதுதான் முறை என்று கூறி அவர்கள் சம்மதத்தைப் பெற்றேன் .

ஜீவா சான்றிதழ் வடிவமைப்புக்கு பொறுப்பெடுத்த பொழுது நான் இதுபற்றி நிர்வாகத்திடம் யாழ் இலச்சனை சம்மந்தமாக பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டி இருந்தது . இறுதியில் இந்த இலச்சனைக்கு அவர்கள் சம்மதித்தார்கள் . முதலில் யாழ் இணையத்தின் அலுவலக இலச்சனையுடன் , நிர்வாகத்தின் கையொப்பத்துடன் கூடிய சான்றிதழுக்கே நிர்வாகத்திடம் அனுமதி கோரினோம் . ஆனால் அவர்கள் யாழ் இணையத்தின் பாதுகாப்பைச்சொல்லி நாகரீகமாக மறுத்து , நடுவர்களாகிய எமது கையொப்பத்துடன் போடலாமே என்று ஒரு மாற்று தீர்வை தந்தார்கள் . அதன்படி பரிசு சான்றிதழ் தயாரானது .

இறுதியில் இந்த பட்டிமன்றத்தின் மூலம் சில செய்திகளை சொல்லியுள்ளோம் .

01 கருத்துக்களத்தில் ஏறத்தாள கருத்தாடலில் இருந்து ஒதுங்கிய நிலையில் இருந்த கரும்பு தும்பளையான் ஆகியோரை மீளக்கொண்டு வந்துள்ளோம் .

02 புதிய கள உறவுகளான யாழ்வாணன் , யாழ் வாலி ஆகியோரது எழுத்து திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளோம் .

03 இதைப் பார்த்து சில புதிய கள உறவுகள் வருங்காலத்தில் நிகழ இருக்கும் இப்படியான நிகழ்வுகளில் பங்குகொள்ள தமது விருப்பத்தைத் தனிமடல் மூலம் தெரிவித்துள்ளனர் .

04 எல்லாவற்றிற்கும் மேலாக பலகாலங்களிற்குப் பின்பு எல்லா உறவுகளும் ஒற்றுமையாக செயல்ப்பட்டுள்ளோம் . மிகுதி அனுபவங்களை ஏனைய ஒருங்கிணைப்பாளர்களும் , பங்குபற்றியவர்களும் தெரிவிப்பார்கள் .

வாழிய தமிழ்!!! வாழிய யாழ் இணையம் !!!

நேமுடன் கோமகன் 
2 comments

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்


000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…