Skip to main content

யாழ் இணையத்தின் பதினைந்தாம் அகவையை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் ( நடுவர் உரை )
" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ????

நடுவர்கள் கோமகன் , மொசப்பத்தேமியா சுமேரியர்

பங்குபற்றுவோர்:
"புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ???  என்ற  அணியில் வாதாட,

இசைக்கலைஞன் ( அணித்தலைவர் )

தமிழச்சி

ஜீவா

புங்கையூரான்

சுபேஸ்

அர்ஜுன்

யாழ்வாணன் " நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ????  என்ற அணியில் வாதாட  ,

யாழ்வாலி ( அணித்தலைவர் )

வாத்தியார்

பகலவன்

சாத்திரி

தும்பளையான்

கரும்பு

குமாரசாமி

********************************************************************

நடுவர்கள் உரை:

இந்த அரங்கத்தினுள்ளும் வெளியேயும் கூடியிருக்கும் யாழ் இணையத்தின் ரசிகப்பெருமக்களே, உலகின் மூலை முடுக்கெல்லாம் கணணித்திரை முன் எமது பட்டிமன்றத்தை பார்த்துக்கொண்டிருக்கும் கோடானுகோடி தமிழ்மக்களே , பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் யாழ் இணையத்தின் பிதாமகனாகிய திருதிருமதி மோகன் அவர்களே மற்றும் யாழ் களத்தினை செவ்வனே வழிநடாத்த மோகனிற்கு உதவியாக இருக்கும் அவரது தளபதிகள் இணையவன். நிழலி. நியானி  நுணாவிலான் ஆகிய மட்டிறுத்தினர்களே , எல்லோருக்கும் எனது தலை சாய்ந்து வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திரைகடலோடித் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கு இணங்க தமிழன் கடல்கடந்து தனது தேவைகளை முன்னொருகாலத்தில் பூர்த்தி செய்தான். தமிழன் ஒருகட்டத்தில் தனக்கென கடல் வாணிகப் பாதையை கடாரம் வரை மேற்கொண்டான். அப்பொழுது மூவுடை வேந்தர்களுக்கென்று ஒரு பெரும் நிலப்பரப்பும் நிர்வாகப் பரப்பும் இருந்தன . அன்றையகாலத்தில் தமிழனுடைய புலப்பெயர்வு கௌரவமானதாக இருந்தது . காலம் தனது வில்லங்கமான கடமைகளைச் செய்த பொழுது . வெற்றிக் கொடிகட்டிய தமிழன் தனது பாரம்பரிய நிலப்பரப்பில் இருந்து பிய்த்து எறியப்பட்டு , சொந்த நாட்டிலும் உலகெங்கிலும் அழையா விருந்தாளியாக “ எதிலிகள் “ என்ற சிறப்பு அடைமொழியுடன் புலம் பெயர்ந்தான்.அப்பொழுது அவன் ஆற்றொணாத் துயருடன் உறவுகள் குடும்பங்களை விட்டு பிய்த்து எறியப்பட்டான் . 
யாழ் இணையம் தனது பதினைந்தாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் வேளையிலே கள உறவுகளாகிய நீங்கள் ஓர் அட்டகாசமான பட்டிமன்றத் தலைப்பைத் தந்துள்ளீர்கள் . ஆம்…….

" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ????

இந்த தலைப்பு ஏறத்தாள சகல அம்சங்களையும் அடக்கிய ஒரு சாம்சுங்கலக்ஸ்சி போல. ஒரு ஜ போனைப்போல அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி வாதப் பிரதிவாதங்களாக கிளம்ப தயாராக இருக்கின்றன .

இந்தப் பக்கம் புலம் பெயர்ந்த “ தமிழனின் ஊர் பற்றிய கவலையென்பது வெறும் பிரிவுகளால் வந்த கவலையே “ என்ற அணிக்கு வாதாடவும் அணித்தலைவராகவும் கனடாவின் நகைச்சுவை செம்மல் இசைக்கலைஞன்அமர்ந்திருக்கின்றார் . அவரைத் தொடர்ந்து கனடாவில் இருந்தாலும் பெயரிலேயே தான் தமிழச்சிதான் என்று முழக்கமிடும் தமிழச்சி அமர்ந்திருக்கின்றார் . அவருக்கு அருகே ஜேர்மனியில் இருந்தாலும் அமைதியானவர் வாதத்தில் புயல் ஜீவா அமர்ந்திருக்கின்றார் . அவர் அருகே கங்காரு தேசத்து பல்கலைவித்தகன் புங்கையூரான் அமர்ந்திருக்கின்றார் . அவரைத் தொடர்ந்து கனடாவில் இருந்து யாழின் புதிய வரவும் சிறந்த பேச்சாளருமான யாழ்வாணன் அமர்ந்திருக்கின்றார் . அவரைத் தொடர்ந்து கனடாவில் இருந்து எமது வணங்கமுடி, அஞ்சாநெஞ்சன் , முற்போக்குச்சிந்தனையாளர் அர்ஜுன் அமர்ந்திருக்கின்றார் . இறுதியாக புரட்சிக்கு முன்னோடியான பிரான்சில் இருந்து முற்போக்கு சிந்தனையாளர் சுபேஸ் அமர்ந்திருக்கின்றார் .


மறுபக்கமோ ,"  நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்கிற கவலையே எமக்கு " என்கிற அணிக்கு வாதாடவும் அணித்தலைவராகவும் யாழ்வாலி அமர்ந்திருக்கின்றார் . அவரைத் தொடர்ந்து ஜேர்மனியில் இருந்து கையில் பிரம்புடன் வாத்தியார் அமர்ந்திருக்கின்றார் . அவரைத்தொடர்ந்து நோர்வேயில் இருந்து யாழின் சிறந்த படைப்பாளி பகலவன் அமர்ந்திருக்கின்றார் .  அவரைத்தொடர்ந்து கங்காரு தேசத்தின் கட்டிளம் காளை தும்பளையான் அமர்ந்துள்ளார் . அவரைத் தொடர்ந்து கனடாவில் இருந்து கனடாவில் வாழும் பல்முக ஆழுமை கொண்ட சிறந் சிந்தனையாளர் கரும்பு அமர்ந்திருக்கின்றார் . அவரைத் தொடர்ந்து ஜேர்மனியில் இருந்து நகைச்சுவை சிங்கம் குமாரசாமி ஐயா அமர்ந்திருக்கிறார் . அவரைத் தொடர்ந்து பிரான்சின் தென்கிழக்கு கோடியில் இருந்து யாழின் பல பட்டிமன்றங்களில் வெற்றிக்கொடிகட்டிய ஊடகவியலளாரான சாத்திரி அமர்ந்திருக்கின்றார். .

( நடுவர் செம்பால் தண்ணீர் குடிக்கின்றார் ) .

ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை வைத்தவுடன் மற்றைய அணியை சேர்ந்தவர் தனது கருத்தினை வைப்பதற்கான கால எல்லையானது அதிகப்பட்டசம் ஒருகிழமையே . விவாதிப்பவர்கள் தினமும் வாதப்பிரதிவாதங்களை வைப்பதே பொருத்தமானது. இந்தப்பட்டிமன்றத்தின் போக்கினை திசை திரும்பி சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்கத்துடன் எமது தேசியப்போராட்டம் மற்றும் தற்கால அரசியில் சம்பந்தமான விவாதங்களை தவிர்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் . இதோ........ பட்டி மன்றம் ஆரம்பமாகின்றது ......... "புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே??? என்ற அணியின் அணித்தலைவரை தனது குழுவில் உள்ளவரை வாதாட அழைப்பு விடுக்குமாறு வேண்டுகின்றேன் .

நேசமுடன் கோமகன்
நடுவர்

வாழிய தமிழ்!!!!! வாழிய யாழ் இணையம் !!!!!!!!!
***************************************************************************** 
மெசொபொத்தேமியா சுமேரியர் ( நடுவர் ).

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்!

தமிழ் உறவுகளின் பாலமாகி எமது திறமைகள் வெளிப்படக் களம் அமைத்துத் தந்ததோடு மட்டுமல்லாது, தன் பதினைந்தாவது நிறைவை ஒட்டி எமக்கு பட்டிமன்றம் நடாத்த  ஊக்கமளித்த  யாழ் இணையத்துக்கும், அதன் நடுவர்களில் ஒருவராக என்னை முன்மொழிந்த சாத்திரி, கோமகன் ஆகியோருக்கும், விரும்பியோ விரும்பாமலோ என்னை  ஏற்றுக்கொண்ட உங்கள்அனைவருக்கும் நன்றி கூறிக் கொண்டு உங்களுடன் இணைகிறேன் .

போர் மற்றும் வேறு காரணிகளால் தமிழர்கள் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழ்கின்றார்கள். புலம்பெயர்ந்த  நாடுகளில் வாழ்வைச் செம்மையாக்கிக் கொண்டு வாழ்வோரும், இன்னும் சீரழிந்து போனோருமாக தமிழ் சமூகம் மூன்றாவது  தலைமுறையுடன் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.

அப்படி வாழ்வோரில் பலர், தாம் புலம் பெயர்ந்த காரண காரியங்களை மறந்து மகிழ்வாக வாழ்ந்துகொண்டிருப்பினும் உறவுகளை விட்டுப் பிரிந்த வேதனையை இன்னும் தேக்கியபடி வாழ்கின்றனர். இன்னுமொரு பிரிவினர், எம் தேசத்தில் நாம் வாழ்ந்திருந்தால் இன்னும் சீரும் சிறப்புமாக வாழ்ந்திருப்போம்.  புலப்பெயர்வால் எல்லாம் இழந்து வாழ்கின்றோம் என்று புலம்பியபடியே வாழ்வைக் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.

இனி, இப்பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளும் இருஅணியினரும் தத்தமது அணியினைப் பலப்படுத்த எக்கருத்தை முன்வைக்கின்றனர் என்பதைப்  பார்ப்போமா???


கருத்துகளைப் பார்வையிட இங்கே அழுத்துங்கள்: 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118693

Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்


000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…