Skip to main content

Posts

Showing posts from May, 2013

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 04

சுருக்கு சுறுக்கர் பாகம் 04வணக்கம் பிள்ளையள் . கனகாலத்துக்குப் பிறகு உங்களை சந்திக்கிறன் . நீங்கள் எல்லாம் சுகமாய் இருப்பியள் எண்டு நினைக்கிறன் . மெய்யாலும் அடிக்கடி உங்களை பாக்கவேணும் எண்டு யோசிக்கிறதுதான் பிள்ளையள். சம்மர் தொடங்கினதாலை எனக்கும் ஆயிரம் அறுவத்தெட்டு சோலியள் கண்டியளோ . சரி நான் புசத்தாமல் நேரை விசையத்துக்கு வாறன் . இந்த சம்மரின்ரை கொட் ரொப்பிக் " முரசு அறைவாம் " எண்டு ஒரு நியூஸ் பாத்தன் . என்ன பூராயம் எண்டு பாத்தால் , புலத்திலை சுதந்திர தமிழ் ஈழ சாசனத்தை உருவாக்கி முரசு அறையினமாம் . எனக்கு புண்ணிலை புளிப்பத்தின மாதிரி கிடந்திது . ஏனெண்டால் 1977 ஆண்டிலை வட்டுக்கோட்டை தீர்மானத்திலை , எங்கடை சனம் தங்களுக்கு என்ன வேணும் எண்டு கட் அண்ட் றைற்ராய் சொல்லிப் போட்டுது . பேந்து ஒரு சம்மறுக்கு இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரிக்கிறியளோ எண்டு எங்கடை சனத்தை கேட்டு வாக்கெடுப்பு நடத்தீச்சினம் . அதாலை சனம் திருப்பவும் ஓம் எண்டு சொல்லி ஒரு அமைப்பை உருவாக்கி விட்டுதுகள் . இப்ப என்னடாவெண்டால் திரும்பவும் ஒருக்கால் சாசனத்தை முரசு கொட்டினமாம் . நான் எங்கை போய் முட்ட ?????????

சண்…

றொனியன் - சிறுகதை- கோமகன்.

எனக்கு றொனியனின் ஞாபகம் இப்பொழுது தான் வந்தது . நான் வந்து இவ்வளவு நேரமாகியும் அதைக் காணவில்லை . அம்மாவின் அரவணைப்பில் , மரக்கறி உணவையே உண்டு வளர்ந்த சுத்த வீரன் றொனியன் . ஒழுங்கையில் யாரும் அவனுடைய அனுமதியில்லாமல் போகமுடியாது . மீறினால் வயிற்ருப்பிடி தான் ஆள் அரக்காது . தங்கைச்சி பகலில் பள்ளிக்கூடம் போனால் றொனியன் தான் அம்மாக்கு காவல் வீரன் . அம்மா என்னுடன் கதைக்கும்பொழுது , றொனியனப்பற்றி கதைக்காவிட்டால் அவாக்குப் பத்தியப்படாது . ஒருநாள் தங்கைச்சியைக் கொண்டு றொனியனைப் படம் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தா . அப்பொழுது தான் எனக்கு றொனியனின் ஆழுமை தெரிந்தது . அவன் மண்ணிற நிறத்தில் , நெடிய உருவத்தில் , அம்மாவின் ஊட்டத்தால் நல்ல செளிப்பாக இருந்தான் . நான் தங்கைச்சியைக் கூப்பிட்டேன் . வந்தவளிடம் எடுத்த எடுப்பிலேயே ," றொனியன் எங்கை "?
" உனக்குத் தெரியாதே ? அம்மா போனகையோட வடிவாய் சாப்பிடுறேல . அங்கை கக்கூசுக்குப் பக்கத்திலை ஆள் படுத்திருக்கும் , நீ பாக்கேலையே ? சும்மா நேரம் எண்டால் இப்ப நீ இங்கை உள்ளடேலாது" .
நான் அண்ணையின் மகனுடன் றொனியனைப் பார்க்கப் போனேன் . அங்கே எலும்பு…

ரைகட்டி வாழ்வாரே வாழ்வார்....- கட்டுரை .

எங்கள் ஆண்களில் ஒரு சிலருக்கு கழுத்துப்பட்டி கட்டுவதென்றால் கொலைக்களத்திற்கு கொண்டு செல்வது போல இருக்கும் .அதுவும் திருமண நிகழ்வுகளில் ஒரு சிலர் அசட்டுத்தனமான சிரிப்புடன் மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பதையும் பார்த்துள்ளேன் . கொஞ்சம் பொறுமையும் , முயற்சியும் இருந்தால் கழுத்துப்பட்டியால் அவதிப்படத்தேவையில்லை . இன்று உள்ள புதிய நாகரீக அலையில் இந்தக் கழுத்துப் பட்டிகளின்ஆதிக்கம் படிப்படியாக இளையவர்களிடம் விடைபெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது . ஒரு ஜீன்ஸ் உம் ஒரு பிளேசர் உடன் காட்சி தருவதையே இளையவர்கள் விரும்புகின்றார்கள் . அலுவலகத்தில் அதி உயர் கூட்டங்களிலேயே தவிர்க்க முடியாமல் இளயவர்கள் கோர்ட் சூட் ரை அணிகின்றார்கள் . ஆனால் ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் கழுத்துப்பட்டி " கனவான் உடைகளில் " முக்கிய இடத்தை வகிக்கின்றது . எனக்குத் தெரிந்த சில கழுத்துப்பட்டி அணியும் முறைகளை இணையத்தின் உதவியுடன் விளக்குகின்றேன் . உங்களுக்கு இந்தக் கழுத்துப் பட்டி அணிவதில் ஏதாவது ருசிகரமான சம்பவங்கள் நடந்திருந்தால் இந்தப்பதிவில் பதியுங்கள் . விளக்கங்கள் ஆங்கிலத்தில் இருப்பதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள…

வில்லண்டம் பிடிச்ச விலங்கும் லவட்டின பச்சையும்!!!!! 02

21 முள்ளம்பன்றி ( Porcupines or Hystricidae )

படத்தில் உள்ள மிருகத்தின் பெயர் முள்ளம்பன்றி ஆகும் . இந்த முள்ளம்பன்றிகள் எதிரிகள் தாக்கவரும்பொழுது உடலைச் சிலிர்த்து அதிலுள்ள முட்களாலேயே தாக்கவல்லன . இவைபற்றி தமிழல் அறிய இங்கே அழுத்துங்கள் : http://ta.wikipedia....ki/முள்ளம்பன்றி
 இவைபற்றி ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்துங்கள்: http://en.wikipedia.org/wiki/Porcupine
உங்களுக்குத்தான் இந்தமுறை பச்சை சிறியர்  . அப்ப அடுத்தவரைப் பாப்பமோ  ???

22 பெரியகரடிப்பூனை ( Panda or Ailuropoda melanoleuca )

படத்தில் உள்ள விலங்குக்கான சரியான பதில் பெரியகரடிப்பூனை அல்லது கருவெண்கரடி ஆகும் . இதுபற்றிய தகவலை தமிழில் அறிய இங்கே அழுத்துங்கள் :http://ta.wikipedia....org/wiki/பாண்டா
 இதுபற்றிய தகவலை ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்துங்கள்:http://en.wikipedia.org/wiki/Panda
சனம் எல்லாம் கருவெண்கரடி எண்டும் பண்டா கரடி எண்டும் சொல்ல , நானும் ஏதோ மல்லையர் குளப்பங்காசி வேலையள் பாக்கிறார் எண்டுதான் நினைச்சன்  . ஆனால் நான் புத்தகங்களை பிரட்டிப் பாத்ததிலை அண்ணாச்சி சொன்னதுதான் சரியாக் கிடக்கு . எங்களுக்கு தெரியாத பெயரை அவர் தந்த…