Skip to main content

தமிழ் வளர்த்த நாட்டில் தமிழுக்குச் சோதனை


தமிழ் வளர்த்த நாட்டில் தமிழுக்குச் சோதனை


 தமிழ் மொழியை தெரிந்து கொள்வது முக்கியமல்ல அதனை எழுத்துப் பிழைகளின்றியும் பேசும்பொழுது அதற்கான ஒலிக்குறிப்புகளை அட்சரசுத்தமாக பேசுகின்ற தமிழர் எத்தனைபேர்?? இவைகளை ஆய்வு செய்வதே இந்தப்பதிவின் நோக்கம் .

 சங்கம் வளர்த்து தமிழைக்கட்டிக் காத்த தமிழகம் இன்று தமிழ் மொழிப்பாவனையில் தலைகீழாக நிற்கின்றது . இதற்கு மூலகாரணமாக கடந்த 20 வருடங்களுக்குப் பின்பு முன்னணியில் இருக்கின்ற இரண்டு திராவிடக்கட்சிகளின் ஊடகங்கள் , தொலைகாட்சிகள் தமிழக இளைய சமூகத்திடம் ஏற்படுத்திய தமிழ்கொலை என்பன முன்னணியில் நிற்கின்றன . அதையே பின்பற்றி இலங்கையிலும் , புலத்திலும் தமிழ்கொலைகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன . முன்பு தமிழ் உச்சரிப்பை மக்களிடம் கொண்டு சென்றதில் இலங்கை வானொலி முன்னணியில் நின்றது . ஆனால் இன்று நிலமை தலைகீழாகவே இருக்கின்றது . தமிழர் , அவர்தம் தேசியப்போராட்டம் என்பவற்றை பேசுவதற்கு முதல் எமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் ஆயுட்காலம் , அதன் பாவனை முறைகள் என்பன காய்த்தல் உவத்தலின்றி விவாதத்திற்கு உட்படுத்தப்படவேண்டும் . இந்தப் பதிவை நான் ஆரம்பிப்பதற்கு மூலகாரணியாக இருந்தது இன்றைய பத்திரிகைக் குறிப்பு ஒன்றே . கள உறவுகளாகிய உங்கள் கருத்துகளையும் எதிர்பார்க்கின்றேன் .


******************************
 கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் குறில், நெடில் சார்ந்த தெளிவின்மையின் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழை அதிகமாக உள்ளது என்று ஆய்வுப்பணியில் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும், ஆரம்பப்பள்ளிகளில், காலை வழிபாடு, செயல் வழி கற்றல் வகுப்பு, தனித்தன்மை வெளிப்பாடு, நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளதா என்று உதவி தொடக்ககல்வி அலுவலர், வட்டார வள மைய அலுவலர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். ஆய்வின் ஒரு பகுதியாக, மாணவர்களின் வாசிப்பு திறன், புரிந்து கொள்ளும் தன்மை சோதிக்கப்பட்டன.கோவை செல்வபுரம் ஆரம்பப்பள்ளி (மையம்) மாணவர்களின் வாசிப்பு திறன் ஆய்வு செய்யப்பட்டதில், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் சரியாக உச்சரிக்கும் மாணவர்கள், எழுத்துக்களை தனியாக உச்சரிக்கும் போது, பெரும்பாலான மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த தெளிவு இல்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழைகள் அதிகரிப்பதாகவும், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த குறைபாடு இருப்பதாகவும் வட்டார வள மைய அலுவலர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, "க' என்பதை க்+ அ என்று உச்சரிப்பதற்கு பதிலாக க்+ஆ என்றே 95 சதவீத மாணவர்கள் பயில்கின்றனர். வார்த்தைகளாக எழுதும்போதும், இந்த குறில், நெடில் பற்றிய தெளிவு இல்லாததால், எழுத்துப் பிழையுடனே எழுதுவதையும் அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர். ஆரம்பப்பள்ளியில் தவறான முறையில் கற்கும் மாணவர்கள், பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் இந்த குறில், நெடில் வித்தியாசங்களை உணராமலே மேல்நிலைக் கல்வி கற்கச்செல்கின்றனர். அங்கு தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாததால், வாழ்க்கை முழுவதும் இந்த எழுத்துப் பிழையும் அவர்களுடன் பயணிக்கிறது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் வசந்தி கூறுகையில்,""ஆரம்பப்பள்ளிகளில் நாம் கற்றுக்கொடுப்பதே மாணவர்களின் மனதில் நன்கு பதியும். கற்பித்தலில், தவறுகள் ஏற்பட்டால் சரி செய்வது கடினம். மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த மாதிரி வகுப்புகள் எடுக்கப்பட்டது. தமிழ் மொழியின் அழகே சரியான உச்சரிப்பு, அதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். குறில் தெரியாமல் வாசிப்பது எளிது; ஆனால், எழுதுவது கடினம். சராசரி மாணவர்களுக்கும், சராசரிக்குக் குறைவான மாணவர்களுக்கும் எழுத்துப்பிழைகள் அதிகரிக்க இதுவே காரணம்,'' என்றார்.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,"கோவை மாவட்டத்தில் பொதுவாக குறில், நெடில் கற்பிக்கும் முறை சரியாக இல்லை. "எனக்கு' என்ற சாதாரண வார்த்தையை மாணவர்கள் எழுத்துக்களாக படிக்க சொல்லும் போது "ஏ,னா,க் கூ' (எனக்கு) என்று உச்சரிக்கின்றனர். இது முற்றிலும் தவறு, பெரும்பாலான ஆசிரியர்களுக்கே குறிலுக்கான வித்தியாசம் புரியவில்லை என்பதே உண்மை. முதலில் இந்த வித்தியாசத்தை ஆசிரியர்கள் மத்தியில் தெளிவு படுத்துவது அவசியம்' என்றனர்.
 
தாய்மொழியும் முக்கியம்:

ஆங்கில வழிக்கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு, தாய் மொழியான தமிழை தவறின்றிப் படிப்பதற்கு பள்ளி மாணவர்களைத் தயார் படுத்த வேண்டுமென்பதே கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கான முதல் முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழைத் தெளிவாக எழுதவும், படிக்கவும், உச்சரிக்கவும் கற்றுத்தருவது அவசியம்.


http://www.dinamalar...l.asp?id=747158
Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்


000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…