Friday, August 30, 2013

மனமே மலர்க 16

மனிதன் எத்தனை வகை!


மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 

1.Introverts: 

மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது.

2.Extroverts: 
எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள்.ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள்.வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.

3.ambiverts: 

மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.

மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

தைல புத்தி: 
ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும்.அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.

கிரத புத்தி: 

நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும்.பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர்.பிறர் கேட்டால் சொல்லத் தெரியாது.

கம்பள புத்தி: 

விழாவில் கம்பளம் விரித்து,விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பதுபோல வரும்போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும்போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.

களி மண் புத்தி: 


எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது.

நிலவின் ஒளியை மறைத்த மெழுகுவத்தி
அவன் ஒரு அரசன். தான் என்ற அகங்காரம் நிரம்பியவன். வேட்டைக்குச் சென்றபோது, காட்டிலே ஒரு துறவியைச் சந்தித்தான். கண்களை மூடித் தியானம் செய்து கொண்டிருந்தார் துறவி.

"நான் பல நாடுகளை வென்று, என் நாட்டோடு இணைத்திருக்கிறேன். நான் வென்று வந்த செல்வத்தால், என் கஜானா நிரம்பி வழிகிறது. அந்தப்புரம் எங்கும் நான் கவர்ந்து வந்த மாற்று தேசத்து அழகிகள் இருக்கிறார்கள். ஆனால், நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும்?" அரசன் கேட்டான்.

தியானம் கலைந்ததால் கண்விழித்த துறவி சற்றே கோபமாக 'நான் செத்தால் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும்...' என்று சொல்லிவிட்டு கண்களை மூடி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.

நான் எத்தனை பெரிய அரசன்.. . என்னையே அவமானப்படுத்துகிறாயா? என்றபடி கொஞ்சமும் சிந்திக்காமல், துறவியைக் கொல்வதற்காக இடுப்பிலே இருந்த கத்தியை உருவினான்.

"அட மூடனே! நான் என்றால் என்னைச் சொல்லிக் கொள்ளவில்லை.... நான் என்ற இறுமாப்பு செத்தால்தான் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும்..." என்று துறவி விளக்கினார்.

நம்மைவிடப் படிப்பிலோ, பதவியிலோ, செல்வத்திலோ குறைவானவன் என்று நாம் மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒருவர் ஒரு விவாதத்தின் போது நாம் சொல்லும் கருத்துக்கு ஆமாம்.. . சாமி போடாமல் மாற்றுக் கருத்தைச் சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்ள நம் ஈகோ இடம் கொடுப்பதில்லை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். இது போன்ற ஈகோஉடையவர்கள், நாம் சொல்லும் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்... நமக்கு எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும்... என்றுதான் நினைக்கிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? மற்றவர்கள் இவர்களுக்கு மரியாதை கொடுத்தால்தான் இவர்கள் சந்தோஷப்படுவார்கள். இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால், இவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் தலையாட்டலை எதிர்பார்த்திருப்பார்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால், எனக்கு மரியாதை கொடு... என்று மற்றவர்களிடம் மறைமுகமாகப் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள். மரியாதை என்ற பிச்சையை மற்றவர்கள் இவர்களுக்குக் கொடுக்க மறுக்கும்போது இவர்களின் அமைதி பறி போய் விடுகிறது. சந்தோஷம் தொலைந்து விடுகிறது.

நமது வேதங்கள் ஆண்டவனை ஆனந்தம் என்று குறிப்பிடும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் 'Ediging God Out' என்பதன் சுருக்கம்தான் Ego.. அதாவது, நம்மைவிட்டு ஆண்டவன்... அதாவது ஆனந்தம் வெளியேறும் நிலைதான் ஈகோ!

கடவுளே, நான் என்ற அகங்காரத்தை இதோ உனக்கு எதிரே உடைத்து விடுகிறேன்.. என்று நமக்கு நாமே உணர்த்தத்தான் தேங்காயை ஒரு அடையாளப் பொருளாகக் கோயிலிலே உடைக்கிறோம்.

தேங்காயின் கடுமையான ஓடு உடையும் போது எப்படிச் சுவையான இளநீர் வெளிப்படுகிறதோ. அதே மாதிரி நமது அகங்காரம் என்ற ஈகோ உடையும்போது சந்தோஷம் வெளிப்படும்.

அலுவலகத்திலோ அல்லது நண்பர்கள் மத்தியிலோ உங்களின் கருத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதை அழுத்தமாகவும் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் சொன்ன கருத்து எடுபடவில்லை. நீங்கள் ஈகோ இல்லாதவராக இருந்தால். இதுபற்றிக் கவலைப்பட மாட்டீர்கள்... உங்களின் கருத்தை மற்றவர்கள் பாராட்டினாலும் சரி, கிண்டல் செய்தாலும் சரி, ஏற்றுக் கொண்டாலும் சரி, கண்டு கொள்ளாவிட்டாலும் சரி இதனால் பாதிக்கப் படாமல் இருப்பீர்கள்.

கவிர் தாகூரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது.

ஒரு முறை படகில் ஏறி, யமுனை நதியைக் கடந்து கொண்டிருந்தார் தாகூர். அது இரவு நேரம். படகிலே இருந்த சின்ன அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தாகூர் கவிதை எழுத முற்பட்டார்.

ஆனால், அன்று ஏனோ தெரியவில்லை... பிடிபடாமல் தாகூரிடமே கவிதை கண்ணாமூச்சி விளையாடியது. கடைசியில் சோர்ந்துபோன தாகூர், மெழுகுவர்த்தியை அணைத்து விட்டார். மெழுவத்தியை அணைத்தது தான் தாமதம்.. . நதியும் படகும் நிலாவின் வெளிச்சத்தில் அழகாக ஒளிர்வது தெரிந்தது.

இதைப் பார்த்ததும் தாகூருக்கு கவிதை பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது.

இந்தச் சம்பவத்துக்கும் ஈகோவுக்கும் என்ன சம்பந்தம்...?

ஒரு சின்ன மெழுகுவத்தி எப்படி நிலாவின் ஒளியையே தாகூரின் கண்ணிலிருந்து மறைத்து விட்டதோ, அதே மாதிரிதான் ஈகோ என்ற நிலா சந்தோஷத்தை அது மறைத்து விடும்.

தோல்வி மனப்பாங்கு
பார்க்கின்ற பொழுதில் நடக்கின்ற நிகழ்ச்சிகளில் நமக்கு சாதகமானதை மட்டும் நம்புகின்ற ஒரு மன நிலையையே மனப்பாங்கு அல்லது கண்ணோட்டம் என்கின்றோம்.தோல்வி பற்றி பொதுவாக நமது மனப்பாங்கு எப்படி இருக்கிறது?

நாம் ஒரு முயற்சியில் ஈடுபடும்போது தோல்வியைத் தழுவி விடுவோமோ எனப் பயந்து விடுகிறோம்.வாழ்வில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தோல்வியைத் தழுவி விடக் கூடாது என்று நினைக்கிறோம்.முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைக்கின்றோம். .ஆனால் அவை நடை முறை சாத்தியமாக இருப்பதில்லை.எடுத்துக் கொண்ட செயலில் போதிய அறிவு அல்லது அனுபவம் இல்லாவிட்டாலும், உடனடியாக சரியாக செய்து விட வேண்டும் என்ற பதட்டமும், கால இடைவேளை தேவைப்படுகின்ற வேலைகளை அவசரமாக செய்வதாலும், அகலக்கால் வைத்து விடுவதாலும், பழக்க வழக்கங்கள் சரியில்லாமல் அமைந்து விடுவதாலும், தொடங்கும் போது உள்ள ஆர்வம் தொடர்ந்து இல்லாமல் போய்விடுவதாலும் நாம் பல முறை தோல்வியை தழுவி விடுகிறோம்.

தோல்வி என்பது வலிக்கும்.ஆனால் அது புதிதாக உடல் பயிற்சி செய்பவருக்கு உண்டாகும் வலியைப் போன்றதுதான் என்பதனை உணர வேண்டும்.தோல்வி உடனடியாக துன்பத்தைத் தந்தாலும் நீண்ட காலத்தில் நன்மை பயப்பதாக இருக்கும்.தோல்வி என்பது கசக்கும்.இது வியாதியை குணமாக்கும் மருந்தின்கசப்பைப் போன்றதுதான் என்பதனை அறிய வேண்டும்.தவிர்க்க முடியாததும் அவசியமானது என்றும் அது நமக்கு உமர்த்துகிறது.

தோல்வியினால் நாம் நகைப்புக்கு உள்ளாகிறோம்.இது நமக்கு உண்மையான நண்பர்களை அடையாளம் காண உதவுகிறது.இதனால் தீயவர் நட்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடிகிறது.தோல்விகள், நமக்கு சிந்திக்க, திட்டமிட, புதுப்பித்துக் கொள்ள அவகாசம் அளிக்கிறது.

தோல்வியும் இயற்கையானதே என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.தோல்வி அளிக்கும் அனுபவத்தினால் நாம் நம் வழிகளையும் முறைகளையும் சீர்படுத்திக் கொள்ள முடிகிறது.மாற்றத்தை நம்மிடம் கொண்டு வர வேண்டிய அவசியம் நமக்குப் புரிகிறது.தோல்வி என்பது தற்காலிகமானது.அதைப் புரிந்து கொண்டு அதில் வெற்றிக்கான விதைகளைத் தேடுங்கள்.நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

கைகளைக் குவித்து... கண்களை மூடி...

குறைவாகப் பேச வேண்டும், அதிகமாகக் கேட்க வேண்டும், என்பதற்காகத்தான் ஆண்டவன் நமக்கு ஒரு வாயையும் இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறான். ஆனால், நம்மில் பலருக்கு உலகிலேயே இனிமையான ஓசை நம் சொந்தக் குரல்தான். அதனால்தான் பலர், தாங்கள் பேசும் வார்த்தையில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ... ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
மேலைநாட்டுச் சித்தாந்தத்திலும் சரி, நமது முன்னோர்கள் சொன்ன முக்கிய தத்துவத்துவங்களிலும் சரி... கேட்பது என்பதற்காக நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மற்றவர் பேசுவதை நாம் கேட்க வேண்டும் என்றால், முதலில் நாம் பேசுவதை நிறுத்த வேண்டும். ஆனால், நமக்குத்தான் அது பிடிக்காதே.

பெண்மணி ஒருத்தி கைகளைக் குவித்து கண்களை மூடி மேரி மாதாவை நோக்கிப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். அதைப் பிரார்த்தனை என்று கூடச் சொல்ல முடியாது, எனக்கு அது வேண்டும்... எனக்கு இது வேண்டும்... கடவுளிடம் விண்ணப்பப் பட்டியல் படிப்பது மாதிரி இருந்தது அவளின் நீண்ட பிரார்த்தனை.

புகழ் பெற்ற ஓவியர் மைக்கேல் ஏஞ்செலோ, அவளைக் கேலி செய்வதற்காக மறைவிலே நின்று கொண்டு, பிதா குமாரனான யேசு பேசுகிறேன்... பக்தையே, உனது பக்தியை மெச்சினோம் உனக்கு என்ன வேண்டும்...? என்று கேட்க - அந்தப் பெண்மணி., சும்மா இருங்கள் ஜீசஸ் நான் உங்கள் தாயிடம் பேசிக் கொண்டிருக்கிறேன், தொந்தரவு செய்யாதீர்கள் என்றாளாம்.

அதாவது, பேசுவதில் ஒருவருக்கு ஆர்வம் வந்துவிட்டால் எதற்குப் பேசுகிறோம் என்ற நோக்கம் கூடப் பின்னால் தள்ளப் பட்டுவிடுகிறது, பேசுவதால் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சிக்காகவே பலர் முடிவில்லாமல் பேசுகிறார்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டு, அடுத்தவர் பேசும் பேச்சைக் கேட்டாலும், அதைச் சரியான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அதைவிட முக்கியமானதாக இருக்கிறது.

புத்தர் ஒரு சமயம் தன் சீடர் ஒருவருக்கு, தினமும் தூங்குவதற்கு முன் உன் கடமையைச் செய்ய மறக்காதே... என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். பக்கத்திலே புதரிலே மறைந்திருந்த ஒரு திருடனும் இதைக் கேட்கிறான்.அவன் பரம்பரைத் திருடன். புத்தர் சொன்னதைக் கேட்டுவிட்டு, "என் கடமை திருடுவது. தினமும் திருடிவிட்டுத்தான் தூங்க வேண்டும்" என்று அந்தத் திருடன் அர்த்தம் எடுத்துக் கொண்டானாம்.

பைபிளில் Silly Christ என்று ஒரு சொற்றொடர் உண்டு, 'Silly' என்பதற்கு இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தம் வேறு.

ஆனால் பைபிள் காலத்தில் 'Silly' என்றால், சூதுவாது தரியாத Innocent என்று அர்த்தம். அந்தக் காலத்து அர்த்தத்தில் புனையப்பட்ட இந்தச் சொற்றொடரை இந்தக் காலத்து அர்த்தத்தில் புரிந்து கொண்டால் எந்த அளவுக்கு மனவருத்தம் உண்டாகும் பாருங்கள்.

அர்த்தம் புரியாமல் தப்பாக எடுத்துக் கொள்வது ஒருவகை என்றால், பல சமயம் நாம் திறந்த மனதுடன் பிறர் சொல்லும் கருத்துக்களை கவனிப்பதில்லை பேசுகிறவர் யார்...? அவர் இப்படிப் பேசுவதன் உள் நோக்கம் என்ன...? இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் அவர் இந்தக் கருத்துக்களைச் சொல்ல வேண்டும்...? என்பதைத் தீர யோசித்து, அது நமது நன்மைக்காகத்தான் சொல்லப்படுகிறது என்று புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கூடப் பலருக்கு இருப்பதில்லை.

காது கொடுத்துக் கேட்பதன் முக்கியத்துவம் பற்றி மேலைநாட்டு அறிஞர்கள் சமீப காலமாகத்தான் அதிகம் வலியுறுத்தத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால், இந்த விஷயம் இந்து மதத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.

விநாயகக் கடவுளின் காதுகளை அகலமாகக் காட்டியிருப்பதற்கான காரணம், மற்றவர் பேசுகிற வார்த்தைகளை உன்னிப்பாக கவனமாகக் கேட்க வேண்டும் என்பதுதான்.

சரி இதற்கு என்ன அத்தாட்சி என்று கேட்கலாம். மனிதன் எப்படி இருக்க வேண்டும்...? என்ன குணநலன்களோடு இருக்க வேண்டும்...? என்பதை விநாயகரின் ஒவ்வொரு அங்கமும் சொல்லுவதை வைத்துப் புரிந்து கொள்ளலாம்...

விநாயகரின் பெரிய வயிற்றுக்கும் அர்த்தம் உண்டு. உலகில் எத்தனையோ கஷ்ட நஷ்டங்களை மனிதன் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் அவன் ஏற்று ஜீரணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் விநாயகரின் பெரிய வயிறு ஒரு குறியீடு.

மனிதன் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான குறியீடுதான் விநாயகரின் துதிக்கை. பிரம்மாண்டமான பருத்த துதிக்கையால், தரையில் இருக்கிற சின்னஞ்சிறு ஊசியையும் எடுத்து விட முடியும் அதே சமயம், ஒரு பெரிய மரத்தையும் வேரோடு பிடுங்கி விட முடியும்.

மனிதன் தன் விருப்பு வெறுப்புகளை உடைத்தெறிந்தால்தான், அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதைச் சொல்வதுதான் விநாயகரின் உடைந்த தந்தம். ஆசைகளை வெட்டியெறியச் சொல்வதற்குத்தான் விநாயகரின் கையில் சின்னக் கோடாரி.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் ஒரு காதில் வாங்கி, இன்னொரு காது வழியாக விடாமல் மூளைக்கு அனுப்பி வையுங்கள். எது சரியான கருத்து? எது தவறான கருத்து? என்பதை உங்கள் அறிவே முடிவு செய்யட்டும்.

நான், விநாயகரிலிருந்து மைக்கேல் ஏஞ்செலோ, புத்தா என்று எல்லோரையும் துணைக்கு அழைத்துக் கூறிய கருத்துக்களை, வள்ளுவன் ஒன்றே முக்கால் வரிகளில் சொல்லிவிட்டார்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

விமரிசனத்தை எதிர்கொள்ள...

நமக்கு முன்னும் பின்னும் மற்றவர்கள் செய்யும் விமரிசனத்திலிருந்து யாரும் தப்ப முடியாது.நம் வாழ்வில் மகிழ்ச்சியோ துயரமோ,இந்த விமரிசனத்தை எதிர் கொள்வதைப் பொறுத்துத்தான் அமைகின்றன.மற்றவர்கள் செய்யும் விமரிசனத்தை மூன்று வழிகளில் எதிர் கொள்ளலாம்.

உணர்ச்சி வழி:

உணர்ச்சி வயப்பட்டு மனம் கொந்தளிப்பது,அதுவும் மற்றவர்கள் விமரிசனம் செய்வதைக் கேட்டு மனம் பதறுவது இயற்கை.அதனால் சினத்துடன் நமது மறுதலிப்பைப் புலப்படுத்துவது மிக எளிது.ஆனால் உணர்ச்சி வசப்படுவது நமக்கு நாமே நஞ்சு ஊட்டிக் கொள்வது போலாகும்.முதலில் உணர்ச்சி வசப்படாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது.விமரிசனங்களை முன்னரே எதிர் பார்த்தால் வரும் துன்பம் இலேசாக இருக்கும்.நம் மனதை அடிக்கடல் போல அமைதியாக வைத்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.நம்மை விமரிசிப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்பப் பழகிக் கொள்ள வேண்டும்.

பகுத்தறிவு வழி:

உண்மையான விமரிசகர்கள் நம்மை சிந்திக்கவைக்கிறார்கள்.அது நல்லதுதானே.விமரிசனத்தின் உண்மையைக் காண வேண்டுமே தவிர நம்மை விமரிசித்தாரே என்று ஆத்திரம் கொள்ளக் கூடாது.அப்படி அறியும்போது விமரிசனத்தில் உண்மை இருந்தால் ஒப்புக் கொண்டு விடுவது நல்லது.அது விமரிசகர்களின் வாயையும் அடைத்துவிடும்.விமரிசிப்பவர்கள் நல்லவர் அல்லாதவராய் இருந்தால் அந்த விமரிசனத்தை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் கூறி நம் பொன்னான நேரத்தை வீணாக்கக் கூடாது.விமரிசகரை ஆய்வதோடு மட்டுமல்லாது ஒருவரின் விமரிசனத்தை நம் காதுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறவர் அதற்குக் காது மூக்கு வைத்து நீட்டியிருக்கிறாரா என்பதையும் ஆராய வேண்டும்.அவர்களின் தூண்டுதலுக்கு நாம் ஆளாகி விடக்கூடாது.

செய்முறை வழி:


கருணை,பழிவாங்கும் உணர்வைவிட ஆற்றல் மிக்கது.பழிவாங்கும் செயலுக்குப் பணியாதவன் அன்பிற்குப் பணிந்து விடுவான்.கடுமையான விமரிசகர்களைக் கூட கனிவுடன் அனைத்தும்,இணைத்தும் சென்று வெற்றி காண வேண்டும்.

பகைமை - எடுத்தாரை சுடும் நெருப்பு

 உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் எந்த விதமான பகைமை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள். வெளிப்படையாக கோபத்தை காட்டுவதை விட இது மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை வளர்க்காதீர்கள். மறவுங்கள். மன்னியுங்கள். இது ஏதோ ஒரு வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியை பாதுகாக்க ஒரே வழி இது தான். உள்ளே பகைமை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதியைச் செய்யும். உங்களுக்கு தூக்கம் போய் விடும். உங்கள் இரத்தத்தை நீங்கள் நஞ்சாக்குகின்றீர்கள். இரத்தக் கொதிப்பும், படபடப்பும் உங்களிடம் அதிகரிக்கும். பழிச் சொல்லோ, அவதூறோ உங்களுக்கு கடந்த காலத்தில் எப்பொழுதோ செய்யப்பட்டது. அது முடிந்த போன விசயம். சிந்திய பால் அது. அதையே மீண்டும் மீண்டும் நினைத்து அந்த அவதூறு அல்லது பழி சொல்லின் துன்பத்தை ஏன் நீங்கள் நீட்டிக்கிறீர்கள்? பகைமை மற்றும் வெறுப்பு எனும் ஆறுகின்ற காயத்தை நீங்கள் குத்தி குத்தி மீண்டும் ஏன் புண்ணாக்குகிறீர்கள்? இது மிகவும் முட்டாள்தனம் இல்லையா?. இந்தச் சிறிய விசயங்களில் நேரத்தையும். வாழ்க்கையையும் வீணடிப்பது என்பது தகாத ஒன்று. ஏனேனில் மனிதனின் வாழ்வு மிகவும் சுருங்கியது. இன்றிருப்போர் நாளை இல்லை. இந்த தீய வழக்கத்தை விடுங்கள். உங்களுக்கு விருப்பமான வேலை ஒன்றில் பூரணமாக மனத்தை லயிக்கச் செய்வதே நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியமாகும்.

உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும். அப்பொழுது ஒன்றைப் பெற்றொம் ஒன்றைச் செய்தோம் என்ற மனதிருப்தி உங்களுக்கு கிட்டும். மனிதன் வெறும் உணவால் மட்டுமே வாழ முடியாது. பணத்தைக் காட்டிலும் மன அமைதியே பெரிது என நீங்கள் எண்ணினால் அதிக வருமானத்துடன் கூடிய, ஆனால் நீங்கள் விரும்பாத ஒரு வேலையை விட, குறைவான வருமானத்துடன் கூடிய மன அமைதி தரும் ஒரு வேலையை நீங்கள் மனமுவந்து ஏற்பீர்கள். புகழ் மனிதனுக்கு தேவையா?

உலகப் புகழ்ப் பெருமையை விரும்பாதீர்கள். மானசீக மற்றும் பௌதீக அமைதியின்மைக்கு இது தான் முக்கிய காரணமாகும். பிறர் உங்களை கமதிக்க வேண்டும் என ஏன் நீங்கள் விரும்புகிறீர்கள்? அந்த ம்ற்றவர் பெர்ம்பாலும் முட்டால் ஜனங்களே. இந்த உலகில் பெரும் வெற்றி அடைந்த மஹா புருஷர்கள் பிறரின் அங்கீகரிப்பை, சமூக மரியாதையை எதிர்பார்த்தவர்களல்ல என்பதை நினைவில் வையுங்கள்.

மற்றவர்களது மதிப்பிற்காக நாம் ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள் வேண்டும்? அதற்குப் பதிலாக கடவுளது ஆசீர்வாதத்திற்காக, ஞானம் மிக்க மகாங்களது ஆசிகளுக்காக நாட்டம் கொள்ளுங்கள். இதுவே செய்யத் தகுந்த்து. முயல வேண்டியது

அவர்களுக்கு அது ஹாரர்ஸ்கோப்


 நமது வாழ்க்கை பல நேரம் பயத்தில்தான் கரைகிறது. வீட்டிலிருக்கும் இருட்டை விரட்டுவதற்காக ஒருவன், வாளி வாளியாக இருட்டை மொண்டு கொண்டுவந்து வீதியில் கொட்டிக் கொண்டிருந்தானாம். எத்தனை ஆண்டுகள் இப்படிச் செய்தாலும் இருட்டைச் சுற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் இருட்டை வெளியேற்ற முடியாது. ஒளி இல்லாமை என்பதுதான் இருட்டு. அதனால் ஒரு சின்ன விளக்கை ஏற்றி வைத்தால், இருட்டு ஓடிவிடும். பயமும் இருட்டு மாதிரிதான். அன்பு இல்லாமைதான் பயம். அன்பு என்ற விளக்கை ஏற்றி வைத்தால், பயம் மறைந்துவிடும்.

புரியவில்லை என்றால், அன்பின் ஒருவகையான, காதலை எடுத்துக் கொள்ளுங்கள் காதல் எப்படி மலர்கிறது...? ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர்மீது இன்னொருவர் கொள்ளும் நம்பிக்கையில்தானே காதல் பிறக்கிறது ?

ஒரு பெண்ணின்மீது ஆணுக்கோ அல்லது ஆணின் மீது பெண்ணுக்கு நம்பிக்கை வராவிட்டால், அங்கே காதல் என்ற அன்பு கிடையாது . சுஃபி இலக்கியத்தில் வரும் முல்லா நஸ்ருமீனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னால், இந்த தத்துவம் உங்களுக்குச் சுலபமாக விளங்கக்கூடும்.

முல்லா நஸ்ருதீனுக்கு அன்று காலையில்தான் திருமணம் நடந்தது. அன்றிரவு நதியைக் கடந்து, மறுகரைக்கு முல்லா நஸ்ருதீனும் அவரது இளம்மனைவியும், உறவினர்களோடு படகில் போய்க் கொண்டிருந்தார்கள்.

அப்போது திடீரென்று புயல் அடித்தது. நதியிலே வெள்ளம் கரை புரண்டது. இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த படகு பேயாட்டம் ஆடியது. மணப்பெண் உட்பட படகில் இருந்த அத்தனை பேரையும் மரண பயம் தொற்றிக்கொண்டது.

ஆனால், முல்லா மட்டும் பயமேதும் இல்லாமல் இருந்தார். இதைப் பார்த்த புது மணப்பெண், "உங்களுக்கு பயமாகஇல்லையா?" என்று கணவரை ஆச்சரியத்தோடு கேட்டாள். அதற்கு முல்லா நஸ்ருதீன் பதில் சொல்லாமல் தன் இடுப்பிலே சொருகியிருந்த கத்தியை எடுத்து மனைவியின் குரல்வளையைக் குத்துவது போல் ஓங்கினார்.

மனைவியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை அப்போது முல்லா நஸ்ருதீன் தன் மனைவியைப் பார்த்து, கத்தி என்றால் உனக்குப் பயமாக இல்லையா ? என்று கேட்டார்.

அதற்கு அவரது மனைவி, "கத்தி வேண்டுமானால் அபாயகரமானதாக இருக்கலாம். ஆனால், அதைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், என் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் என்
கணவர். அதனால் நான் பயப்படவில்லை..." என்றாள்.

"அதேபோலத்தான் எனக்கும். இந்த அலைகள் வேண்டுமானால் ஆபத்தானதாக இருக்கலாம். ஆனால், இதை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ் அன்புமயமானவர். அதனால் எனக்குப் பயம் இல்லை" என்றாராம் முல்லா நஸ்ருதீன்.

முல்லா நஸ்ருதீனுக்கு அல்லாஹ் மீது நம்பிக்கை இருந்தது. அதனால் அன்பு இருந்தது. அல்லாஹ் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையென்றால் அன்பும் இருந்திருக்காது. அன்பு இல்லையென்றால், படகில் பயணித்த மற்றவர்களைப்போல முல்லா நஸ்ருதீனும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பார். இதே உண்மையை நம் வாழ்க்கையிலும் பொருத்திப் பார்க்கலாம். நமக்குப் பயம் ஏற்படுகிறது என்றால், நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருள்.

நான் கடவுளுக்குப் பயந்தவன்.. என்று பலர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இது அபத்தமானது. கடவுளிடம் நாம் செலுத்த வேண்டியது அன்புதானே தவிர, பயம் இல்லை.

நமது உபநிஷத்துக்கள் சொல்லும் மிகப்பெரிய விஷயமே, பயம் இல்லாமல் இருங்கள் என்பதுதான்... என்று சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.

சிலர் தங்களின் ஜாதகத்தைத் தூக்கி கொண்டு, எனக்கு மரணம் எப்போது வரும் ..? என்று தெரிந்துகொள்ள ஜோசியர் மாற்றி ஜோசியராகப் போய்க் கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் ஹாரர்ஸ்கோப் (ஜாதகம்) என்பது ஹாரர்ஸ்கோப்.

இம்மாதிரி நபர்கள், வாழும்போது என்ன செய்யலாம் என்பதைவிட, எந்த நேரம் இறந்துவிடுவோமோ என்ற பீதியிலேயே உருகி உருக்குவலைந்து கொண்டிருப்பார்கள்.

மரண பயம் பற்றி தாகூர் சொல்லும்போது

"நீ இந்தப் பூமியிலே வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காக, உன் தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன்.. . நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையேகூட அவன் படைத்து வைத்திருக்கக்கூடும் அதனால் நம்பிக்கையோடு இரு..."
என்கிறார்.

பயப்படுபவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல முடியும்.
எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிடுங்கள்... தவறில்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற கற்பனைகளில் பயப்படுவதால் உங்கள் மகிழ்ச்சி தான் பாழாகும். பணம் திருடுபோகாமல் இருக்க, அதை எங்கே, எப்படி வைப்பது... மீறி திருட்டுப் போனால் இன்ஷூரன்ஸ் மூலம் எப்படி பாதுகாப்புப் பெறுவது என்று திட்டமிடுங்கள். இதில் எதையும் செய்யாமல் சும்மா நின்று பயப்படுவதில் அர்த்தமில்லை.

பரீட்சையில் ஃபெயிலானால்.. என்று விபரீதமாகக் கற்பனை செய்யாதீர்கள். உங்களை நீங்களே பலவீனமாக்கிக்கொள்கிற அந்த நேரத்தைப் பரீட்சையில் எப்படி பாஸாவது என்பது பற்றிச் சிந்திப்பதில் செலவிடுங்கள்.

நன்றி  : http://jeyarajanm.blogspot.fr/2014/02/blog-post.html


 

Friday, August 23, 2013

ஊடறுப்பு

ஊடறுப்பு (ஒருபேப்பருக்காக கோமகன் )


அதிகாலை நேரம் ஐந்து மணியை நேரக் கம்பிகள் அடித்துப் பிடித்துத் தொடமுயன்ற வேளையில் , இரவுக்கும் வானத்துக்கும் நடந்த கட்டிபிடி விளையாட்டில் மேகங்கள் வெட்கத்தால் சிலிர்த்து சிவப்படையத் தொடங்கிக் கொண்டு இருந்தன . இந்த ஆல்லோல கல்லோலதால் வெறி கொண்ட கூழைக் கடாக்கள் வானத்தில் சித்திரம் வரைந்து சீறிக்கொண்டு பறந்தன . தூரத்தே ஒலித்த பிள்ளையார் கோயில் மணி ஐயரின் வருகையை அந்த ஊர் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தது .

புல்லுப் பாயில் படுத்திருந்த தம்பையா தனது உள்ளங்கைகளைத் தனது முகத்துக்கு நேராகப் பிடித்து அவை இரண்டையும் சரசரவென்று தேய்த்தவாறே அவற்றில் கண்களைத் திறந்தார் .இததற்கு அவரிடம் ஒரு காரணமும் ஒன்று உண்டு யாரோ ஒரு புண்ணியவான் விடியக்காலையில் உள்ளங்கையில் கண்முளித்தால் காசுபணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று தம்பையாவிற்கு பினாட்டு அடைந்திருந்தான் . அன்றில் இருந்து தம்பையா இப்படியே நித்திரையால் எழும்புவார் . அனால் செல்வலட்சுமி அக்காவோ ஒரளவுக்குதான் தம்பையாவுடன் கூட்டு வைத்திருந்தாள் . ஆனாலும் தம்பையா தனது பழக்கத்தை விடவில்லை .

தம்பையா நித்திரையால் எழும்பி நேராகக் கிணத்தடிக்குப் போய் இளஞ்சூட்டில் இருந்த கிணத்துத் தண்ணியில் குளித்து விட்டு வந்து சாமியறையில் இருந்த திருநூத்துக் குடுவையில் கையை விட்டு திருநீற்றை அள்ளி நெற்றியிலும் , கை , நெஞ்சு எங்கிலும் மூன்று குறிகளாக இழுத்துப் பூசி , நல்லூர் கந்தனே , சந்தியானே என்று யாழ்ப்பாணத்தில் உள்ள அத்தனை முருகனையும் கூபிட்டுத் தன்னையும் மனைவி பறுவதத்தையும் அருமைப் பெடிச்சி செவந்தியையும் காப்பாற்றச் சொல்லி மன்றாடிக் கொண்டே அன்று வந்திருந்த உதயன் பேப்பரை எடுத்துக்கொண்டு முன் வாசலுக்கு வந்து சாய்மனைக் கதிரையில் கால்களை அகட்டிபோட்டவாறே பேப்பரை படிக்கத் தொடங்கினார் .

தம்பையாவின் அசுமாத்தங்களைக் குறிப்பால் அறிந்து கொண்ட பறுவதம் , தான் காலையில் ஊர் மாட்டில் கறந்த பசும்பாலைக் கற்கண்டு போட்டு சுண்டக் காச்சி பழப் புளி போட்டு நன்றாகத் தேய்த்து மினுக்கிய மூக்குப் பேணியில் கொண்டு வந்து தம்பையாவிற்கு குடுத்தாள் . தம்பையாவும் வலு பக்குவமாக வாங்கி சொண்டு படாமல் அண்ணாந்து மெது மெதுவாக குடித்தார் அவ்வளவுக்கு தம்பையா ஆசாரசீலமானவர் . இந்தப் பால் விடையத்தில் கூட யாரோ ஒருவர் , கேப்பை மாட்டுப் பாலை விட ஊர் பசுப் பால் அதுவும் அறுகம் புல்லு சாப்பிட்ட ஊர் மாட்டுப் பால் தான் மூளையை மந்தம் பிடிக்காமல் வளரப் பண்ணும் எண்டு சொல்ல , தம்பையா வீட்டிலை நிண்ட கேப்பை மாடு போய் பத்தாயிரம் ரூபாய்க்கு ஊர் மாடு ஒன்று தம்பையா வீட்டிற்கு வந்தது . அன்றில் இருந்து தம்பையா அறுகம் புல்லுச் சாபிட்ட ஊர் மாட்டுப் பாலைத் தான் தொடர்ந்து குடித்துக் கொண்டு வருகின்றார்  .

கண்ணாடியை பாத்து தனது தலைமயிரை செற் பண்ணிக்கொண்டு , பியூட்டிக்குறா பவுடரை நளினமாக முகத்தில் பட்டும் படாமல் தடவியவாறே கையில் ரெண்டு கொப்பியுடன் தனது அறையை விட்டு செவ்வந்தி வெளியே வர தம்பையாவின் குரல் எங்கை பிள்ளை போறாய் என்று தடுத்து நிறுத்தியது . தான் பக்கத்தி வீட்டு மாலதியுடன் சேர்ந்து படிக்கப் போறதாக செவ்வந்தி சொன்னாலும் தம்பையாவின் அறுகம்புல்லு பால் மூளை அலேட்டாகி , பாத்துப் பிள்ளை கவனமாக போ காலம் கெட்டுக்கிடக்கு என்று சொன்னது . செவ்வந்தியோ அவர் சொன்னதைக் காதில் விழுத்தாமல் தன் பாட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள் . தம்பையாவின் மனமோ அவளின் கலியாண விடையத்தை எண்ணியே வட்டமிட்டது . இன்று தம்பையாவிடம் புறோக்கர் சவரிமுத்து வருவதாகச் சொல்லியிருந்தான் .

சவரிமுத்து , அந்தச் சுத்துப்பட்டி ஏரியாவுக்கு எல்லாமே அவன்தான் புறோக்கர் . சவரிமுத்துவாலை கரையேறின குமருகள் எக்கச்சக்கம் . கலியாணப்பேச்சில சவரிமுத்து ஒரு விச்சுளியன் . சிலவேளைகளில் முரண்டுபிடிக்கின்ற பகுதிகளைத் தனது பேச்சாலேயே வெட்டியாடிக் கலியாணங்களை ஒப்பேற்றுவதில் சவரிமுத்துவை அடிக்க அந்த இடத்தில் யாரும் இல்லை . எக்காரணம் கொண்டும் பொய்பேசாது சாமர்த்தியமாகத் தனது கொமிசனையும் எடுத்து கலியாணங்களை ஒப்பேற்றுக்கின்ற விண்ணாதி விண்ணனான சவரமுத்துவையே தம்பையா தனது மகள் செவ்வந்தி விடையத்திலும் தெரிவு செய்திருந்தார் .

செவ்வந்தி வளர்ந்து பெரியவள் ஆனதும் தம்பையா தனது வீட்டுக் கிடுகு வேலிகளையெல்லாம் அச்சறுக்கையாக உயர்த்திக்கட்டியிருந்தார் . பறுவதமும் குறிபறிந்து அவரை ஏன் ஏது என்று கேட்கவில்லை . அவளைப் பொறுத்தவரையில் தம்பையா காரணகாரியம் ஏதுமின்றி எதுவும் செய்ய மாட்டார் என்ற எண்ணப்பாடு அவளின் மனதிலே ஆளமாகவே வேரோடி இருந்தது . இது அவளது பரம்பரையில் வாழையடி வாழையாகவே ஊட்டப்பட்டு வந்திருந்தது . ஆனாலும் தம்பையாவுக்கு தனது பேரைச்சொல்ல ஒரு ஆண் வாரிசு இல்லையே என்ற கவலையும் இல்லாமல் இல்லை . எல்லாவற்றையுமே வெண்ட தம்பையாவுக்கு இதில் மட்டும் ஒரு சறுக்கல் வந்தது . தம்பையா கடவுள் அருளால் தனக்குக் கிடைத்த மரிக்கொழுந்தை கண்ணுக்குள் எண்ணை ஊற்றியே வளர்த்தார் . அறுகம்புல்லுப் பாலைக் குடித்து முடித்த தம்பையா பறுவதத்திடம் மூக்குப்பேணியைக் கொடுத்வாறே , புறோக்கர் சவரிமுத்து இன்றைக்கு வரும் விடயத்தை அவிட்டு விட்டார் . பறுவதமும் செவ்வந்தியின் கலியாணமே முடிந்த மாதிரி சந்தோசப்ட்டு மகளின் சாதக்கட்டைக் கைகாவலாக எடுத்து வைத்தாள் .

வீட்டு முன்வாசலில் இருந்த தம்பையாவின் கண்களில் ஒழுங்கை மூட்டில் புறோக்கர் சவரிமுத்து சைக்கிளை வலித்துக்கொண்டு வருவது தெரிந்தது . தம்பையா மீண்டும் மனதிற்குள் யாழ்ப்பாணத்து முருகன்களையெல்லாம் உச்சாடனம் செய்யத் தொடங்கி விட்டார் .  சவரிமுத்து வீட்டு வாசலில் தனது சைக்கிளை நிப்பாட்டி விட்டு தலையால் வடியும் வியர்வையைத் தனது சால்வாயால் துடைத்தவாறே தம்பையாவின் முன்பு பௌவியமாக உட்கார்ந்தார் . பறுவதமோ சவரிமுத்துவுக்கு எலுமிச்சம்பழச் சாறு கொண்டுவந்து கொடுத்தாள் . சவரிமுத்துவோ வாயெல்லாம் பல்லாகி பறுவதம் கொடுத்த எலுமிச்சம்பழச் சாறை வாங்கிக் கொண்டு தனது தொண்டையைக் கனைத்தவாறே தம்பையாவைப் பாத்து சொல்லத் தொடங்கினார் ,

ஐயா ஒரு திறமான  இடம் வந்திருக்கு . பெடி பிறான்ஸ்சிலை சொந்தமாய் கடை போட்டு வைச்சிருக்கிறான் . தாய்தேப்பனுக்கு ஒரேயொரு பெடி .அதோடை ஃபிறென்ஜ் நாஷனாலிற்றி காறன் . சீதனமும் ஒண்டும் வேண்டாம் நல்ல குடும்ப பிள்ளையாய் இருந்தால் சரி எண்டு தாய்தேப்பன் சொல்லீச்சினம் . சாதிசனத்திலை அவை உங்கடைபகுதிதான் . யாழ்ப்பாண ரவுணுக்கை இருக்கினம் . பெடி நல்ல சங்கையானபெடி . பேசிமுடிப்பமோ ??என்றவாறு தம்பையாவிடம் மாப்பிள்ளையின் படத்தைக் குடுத்தான் சவரிமுத்து . தம்பையா படத்தை வாங்கிக்கொண்டே , எல்லாஞ்சரி பகுதி வெளிநாடெல்லோ ?? யோசனையாக்கிடக்கடாப்பா , பிள்ள்ளையை வெளிநாட்டிலை விட்டுப்போட்டு நாங்கள் என்ன செய்யிறது ?? என்று தம்பையா சொல்லி முடிப்பதற்குள் சவரிமுத்து தம்பையாவை இடைவெட்டினான் . ஐயா உங்களுக்கு இப்பத்தையான் நாட்டு நடப்புகள் தெரியாமல் இல்லை . பெண்பிரசுகளுக்கு எப்ப என்ன நடக்கும் எண்டு தெரியாது .பேந்து ஒருகாலத்தில நீங்களும் மகளோடை பிரான்சிலை போய் இருக்கலாம்தானே என்று தம்பையாவை உருவேத்தினான் . சவரிமுத்துவுக்கு தனது புறோக்கர் கொமிசன் போய் விடுமே என்று பதகளிப்பு வேறு தொற்றிக்கொண்டது . தம்பையா ஒரு முடிவுக்கு வந்தவராக சரியடாப்பா இதை பேசிமுடிப்பம் என்றார் .

தம்பையாவின் வீட்டுக்கு முன்வீட்டில் பறுவதத்தின் அண்ணை வினாசிதம்பியரின் வீடு இருந்தது . இரண்டு குடும்பமுமே மாத்துச்சம்பதத்தால் இணைந்தது . இதனால் தம்பையாவுக்கு வினாசித்தம்பியில் நல்ல பட்சம் . வினாசித்தம்பிக்கும் செவ்வந்தியின் வயது ஒத்த மாதங்கி என்ற மகள் இருந்தாள் . வினாசித்தம்பியர் தனது வீட்டு வேலியை அடைக்கின்றேன் பேர்வளி என்று தம்பையாவீட்டின் குசுகுசுப்புகளை அறியத் தனது காதுகளை எறிந்து விட்டு தான் வேலி அடைப்பதாக பாவனை செய்து கொண்டிருந்தார் . வினாசித்தம்பியரின் மனதிலோ ஒரு சிறியபொறி சன்னதம் ஆடத் தொடங்கிக் கொண்டிருந்தது . பேச்சுக்கால்களை முடித்துக்கொண்டு வெற்றிக்களிப்புடன் சைக்களை வலித்துக்கொண்டிருந்த சவரிமுத்துவை சரியாகத் தவறணையடியில் வினாசித்தம்பியின் சைக்கிள் குறுக்கி வெட்டியது .ஒரு போத்தில் கள்ளுடனேயே சவரிமுத்து எல்லாக் கதைகளையும் வினாசித்தம்பியரிடம் துப்பி விட்டான் .

அன்று மாலை வினாசி தம்பியர் ஒரு அரைப்போத்தல் கள்ளை உள்ளே இறக்கிவிட்டு ஓய்... தம்பையா!!!!!! ஓய் ........தம்பையா!!!!!!!! உமக்கு வினாசிதம்பியன் எண்ட மச்சான் இருக்கிறான் இருக்கிறதை மறந்து போனீரோ ?? உமக்கு எங்டை சாதி எங்கடை சாதிசனம் ஒண்டும்  வேண்டாமோ ?? என்று தம்பையாவீட்டு வாசலில் சன்னதம் ஆடத்தொடங்கினார் . பறுவதமோ என்னவோ ஏதோ என்று பதறியவளாய் , உள்ளுக்கை வா அண்ணை ஏன் வாசலுக்கை நிண்டு சத்தம்போடுறாய் ?? என்று பதமாகச் சொன்னாள் . தம்பையாவும் தனது பங்கிற்குச் சேர்ந்து கொண்டார் . நான் இங்கை ஒண்டும் உங்களோடை கொஞ்சுப்பட வரேலை .  என்ரை மருமோளுக்கு கலியாணம் பேசுறியள் எண்டு அறிஞ்சன் . நான் ஒரு தாய்மாமன் இருக்குறதை தம்பையா நீர் எனக்கு கூட சொல்லேலை . பேந்தென்ன மசிருக்கு நான் இங்க இருப்பான் ?? என்று வினாசித்தம்பி எகிற , தம்பையா இடைவெட்டி , சீச்சீ.....  நான் அப்படியெல்லாம் செய்வனே ?? எல்லாம் முடிய சொல்ல இருந்தனான் என்று சொல்லி வினாசித்தம்பியை சமாதானப்படுத்த முயன்றாலும் , வினாசித்தம்பிக்கு உள்ளே போன கள்ளு அதனது குணத்தைக் காட்டத்தொடங்கியிருந்தது .

சரி அதெல்லாம் கிடக்கட்டும் தம்பையா உமக்கு எங்கடை சாதிசனம் வேணுமோ வேண்டாமோ ?? தெரியாமல்தான் கேக்கிறன் . மாப்பிளைபகுதி ஆர் எவர் எண்டு விசாரிச்சியளோ ?? என்ற வினாசித்தம்பியை இடைவெட்டிய தம்பையா , நான் நல்லாய்த்தான் விசாரிச்சனான் . என்று சொல்ல , நீ கிளிச்சாய்............. அவங்கள் ஐஞ்சு குடியார் . எங்கடை சாதிசனம் அவங்களிட்டை கையே நனைக்கிறேலை . நான் எல்லம் தறோவாய் விசாரிச்சுப் போட்டுத்தான் ஐசே உம்மோடை கதைக்கிறன் . உமக்கு மண்டை கிண்டை களண்டு போச்சுதோ ??? என்று வானத்துக்கும் பூமிக்கும் எகிறிப்பாய , தம்பையாவுக்கு அப்பொழுதுதான் சவரிமுத்து தனக்குப் பினாட்டு அடைய வெளிக்கிட்டது நினைவில் வந்தது . பொறுத்த நேரத்தில் மச்சான் வினாசித்தம்பி வந்து தடுக்காதிருந்தால் தான் பரிசுகெட்டிருப்பேன் என்று தனக்குள் மருகினார் .

வினாசித்தம்பியரின் மனதில் தனது தங்கைச்சி பறுவதமும் மச்சான் தம்பையாவும் மெதுமெதுவாக மறையத் தொடங்கினார்கள் . இப்பொழுது வினாசித்தம்பியரின் பொழுதுகள் அதிகமாக சவரிமுத்துவுடனேயே தவறணையிலேயே கழிந்தன . யாழ்பாணத்தின் இயற்கையான தெனங்கள்ளு இருவரையுமே நல்ல கூட்டாளியாக்கி இருந்தது . வினாசித்தம்பியரோ எப்படிப்பட்டாவது மாதங்கிக்கு அந்த பிரான்ஸ் சம்பந்தத்தை முடித்துவிடவேண்டும் என்று ஆறாத் தாகத்துடன் இருந்தார் . இதற்காக அவர் இழக்க வேண்டியதெல்லாம் இழக்கவே தயாராக இருந்தார் . வினாசித்தம்பியரின் தொடர்சியான தென்னங்கள்ளு உபயத்தால் சவரிமுத்து மூலம் மாப்பிள்ளை பகுதி முதலில் சீதனமே வேண்டாம் என்றவர்கள் , எண்பதுலட்சம் சீதனமும் பத்துப்பரப்பு ,  செம்பாட்டுத் தோட்டக்காணியும் சீதனமாய் பேசப்பட்டு கலியாணம் ஒப்பேறியது . சவரிமுத்துவுக்கு கொழுத்த ஆடு அடித்து விருந்துவைத்தார் வினாசித்தம்பியர் . இது நடந்து மூன்று மாதங்களின் பின்பு வினாசித்தம்பியர் மகள் மாதங்கியுடன் தனது பிரான்ஸ் மருமகனை வரவேற்க கொம்படிப் பாதையூடாக ஊடறத்துக் கொழும்புக்குப் பயணமானது அறுகம் புல்லு சாப்பிட்ட ஊர்மாட்டுப் பாலைக் குடித்த தம்பையாவுக்குத் தெரிய நியாயமில்லைத்தான்............
கோமகன்
10 ஆவணி 2013

Monday, August 19, 2013

படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் !!!!!!!


வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே !

யாழ் இணையம் தனது பதினைந்தாவது அகவையில் கால் அடி எடுத்து வைக்கும் இந்த வேளையிலே அதற்கு எனது மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு , ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஏற்கனவே ஆரம்பித்த பூக்கள் , பறவைகள் , மீன்கள் , விலங்குகள் வரிசையில் நகரும் வகையைச் சேர்ந்த பாம்பு இனங்களை உறவுகளுக்கு அறிமுகம் செய்கின்றேன் . நான் ஒரு பாம்பின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த பாம்பிற்கான தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலங்களின் பின்பு நான் போட்ட பாம்பு படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே படம் எடுத்த பாம்பு என்கையில்............. பயப்பிடாது கிட்ட வந்து மகுடியை ஊதுங்கள் கள உறவுகளே ..............

இதுவரை பார்க்காத உறவுகளுக்காக:

01 பூவுக்கும் பெயருண்டு 


http://www.yarl.com/forum3/index.php?showtopic=97649

02 மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103231

03 வில்லண்டம் பிடிச்ச விலங்கும் லவட்டின பச்சையும்!!!!! 


http://www.yarl.com/forum3/index.php?showtopic=114079

நேசமுடன் கோமகன்

******************************************************


01 கருநாகம் ( King cobra )படம் ஒன்றிற்கான தாயதமிழ் கருநாகம் ஆகும் . இதுபற்றிய மேலதிக தகவலைத் தமிழில் பார்வையிட இங்கே அழுத்துங்கள் :http://ta.wikipedia....g/wiki/கருநாகம்
 
இதுபற்றிய மேலதிக தகவலைத் ஆங்கிலத்தில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்:http://en.wikipedia....wiki/King_cobra

02 மலை வீரியன் பாம்பு ( adder, mountain )படத்தில் உள்ள பாம்பின் சரியான பெயர் மலை வீரியன் பாம்பு ஆகும் . வீரியன் குடும்பத்தில் ஒன்றான இந்தப் பாம்பு கொடிய விசம் உடையதும் , மலைப்பரதேசங்களிலேயே அதிகமாகக் காணப்படும் . பதிலை நவீனன் குளக்காட்டான் ஓரளவு தொட்டாலும் , அவர்கள் சரியான பதிலைத் தரவில்லை . எனவே யாருக்குமே என்னால் பச்சைப்புள்ளி கொடுக்க முடியவில்லை   .
03 கருஞ்சாரைப் பாம்பு ( black rat snakeP.obsoletus )படத்தில் உள்ள பாம்பிற்கான சரியான பெயர் கருஞ் சாரைப் பாம்பு ஆகும் . இதுபற்றிய தகவல்களை அறிய இங்கே அழுத்துங்கள் :

http://en.wikipedia....Black_rat_snake .

04 தொப்பை வீரியன் பாம்பு Bitis arietans or adder, puff )


இந்தப் படத்தில் உள்ள பாம்பின் பெயர் தொப்பை வீரியன் பாம்பு ஆகும் . வீரியன் இனங்களில் அதிக விசத்தை உடையது தொப்பை வீரியனாகும் . இதன் கடியில் யாருமே உயிர் தப்ப முடியாது .இதுபற்றிய ஆங்கில விளக்கத்திற்கு இங்கே அழுத்துங்கள் :http://en.wikipedia.org/wiki/Bitis_arietans

05 வெங்கிணாந்தி பாம்பு அல்லது இரைநெரி வெங்கிணாந்தி பாம்பு ( Boa or Boa constrictor )படத்தில் உள்ள பாம்பின் பெயர் வெங்கிணாந்தி பாம்பு அல்லது இரைநெரி வெங்கிணாந்தி பாம்பு ஆகும் . இவை பிடிக்கின்ற இரைகளை முதலில் தனது பாரிய உடலால் இரையின் எலும்புகளை உடைத்து விட்டு இரையை லாவகமாக விழுங்கும் குணம் கொண்டவை . இவ்வகையான பாம்புகள் மெக்சிக்கோ , மத்திய மற்றும் தென் அமெரிக்கா , மடகஸ்கார் , ரெனியோன் தீவுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன இவை பற்றிய தகவல்களை ஆங்கிலத்தில் அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Boa_(genus)

06 பொன்வரைப் பூனைப் பாம்பு ( gold-ringed cat snake or mangrove snake (Boiga dendrophila)


 
படத்தில் உள்ள பாம்பின் பெயர் பொன்வரை பூனைப் பாம்பு ஆகும் இது ஏறத்தாள 1 மீற்றரில் இருந்து 2.5 மீற்றர் வரை வளரக்கூடியது இது தென்கிழக்காசிய நாடுகளிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது மேலும் இதுபற்றிய தகவல்களை அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia....inged_Cat_Snake

07 பற்றை வீரியன் ( bushmaster )
மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....hmaster_(snake)

08 பூனைப்பாம்பு ( boiga or mangrove snake ) படம் எட்டில் உள்ள பாம்பின் பெயர் பூனைப் பாம்பாகும் . இதில் , நாய்ப்பல் பூனைப் பாம்பு , பொன்வரைப் பூனைப் பாம்பு , நரைப்பூனைப் பாம்பு , புள்ளிப்பூனைப் பாம்பு , பழுப்பு மஞ்சள் பூனைப் பாம்பு என்று பல வகைகள் உள்ளன . இதுபற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia.org/wiki/Cat_snake
 
09 கருநாகம் ( King cobra )படம் ஒன்பதிற்கான தூயதமிழ் கருநாகம் ஆகும் . இதுபற்றிய மேலதிக தகவலைத் தமிழில் பார்வையிட இங்கே அழுத்துங்கள் :

http://ta.wikipedia....g/wiki/கருநாகம்

இதுபற்றிய மேலதிக தகவலைத் ஆங்கிலத்தில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்:

http://en.wikipedia....wiki/King_cobra

10 கண்ணாடி விரியன் (Russel's Viper, Daboia russelii)கண்ணாடி விரியன் (Russel's Viper, Daboia russelii) என்பது நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும், தென்கிழக்காசியா, சீனாவின் தெற்குப் பகுதி, தாய்வான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இது பெரும் நான்கு எனப்படும் நான்கு பாம்புகளில் ஒன்று. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய இவை நான்கே காரணம்.

உடல் தோற்றம் :

தடித்த உடல்; கழுத்தைவிடப் பெரிய முக்கோண-வடிவ தலை.
 
தலையின் மேற்பகுதியிலுள்ள செதில்கள் சிறியனவாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.
 
பெரிய மூக்குத்துளை உடையதாகவும், கண்மணி செங்குத்தாகவும் உள்ளன.

நிறம் மற்றும் குறிகள்:

பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலுடையது.
 
உடலின் நீளவாக்கில் மூன்று வரிசைகளில் தெளிவாகத் தெரியும் பெரிய பழுப்பு (அல்லது கருப்பு) வட்ட (அல்லது நீள்வட்ட) குறிகள் காணப்படுகின்றன. இந்தக்குறிகள் ஒன்றுடன் மற்றொன்று சங்கிலி போல் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படுகின்றன.
 
உச்சந்தலைப்பகுதியில் முக்கோண வடிவ வெள்ளை நிறக்குறி உள்ளது.
 
கண்ணுக்கு கீழேயும் பக்கவாட்டிலும் முக்கோண வடிவ கருங்குறிகள் உள்ளன.
 
உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாகவும் பிறை-வடிவக் குறிகளுடனும் காணப்படுகிறது.

நச்சு:
விரியன் பாம்பின் நச்சு குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர்.

தமிழில் : http://ta.wikipedia....கண்ணாடி_விரியன்

ஆங்கிலத்தில்: http://simple.wikipe...org/wiki/Daboia

Saturday, August 10, 2013

மனமே மலர்க 15


பேசத்தெரிந்து கொள்ளுங்கள்.உரையாடல் ஒரு கலை. இனிமையாகவும் சுவையாகவும் பிறரைக் கவரும் வண்ணம் உரையாடுவது ஒரு வித்தை. அந்தக் கலை கைவரச்சிலவழிகள் :

*உரையாடலின்போது உங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் உடல்நிலை, உங்கள் பிரச்சினைகள் , தொந்தரவுகள் இவை பற்றிப் பேசாதீர்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. கேட்பவர்க்கும் போர்.

*நீங்களே பேச்சைக் குத்தகை எடுக்காதீர்கள். நீங்கள் நகைச் சுவையாகப் பேசுபவராக இருக்கலாம். ஆனால் உங்கள் பேச்சைக் கெட்டு முதலில் விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் கூட கொஞ்ச நேரத்தில் சலிப்படைவார்கள். நாம் பேசக் கொஞ்சம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறாரே என்று எரிச்சல் படுவார்கள். எனவே மற்றவர்களும் பேசுவதற்கு வசதியாக இடைவெளி கொடுங்கள்.

*குறுக்கே விழுந்து மறுக்காதீர்கள். 'நீங்கள் சொல்வது தப்பு,'என்று சொல்லும் போதே உரையாடல் செத்து விடுகிறது. அதைக் காட்டிலும் பேசுபவரின் பேச்சில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் அதை உறுதிப் படுத்துங்கள்.

*திடீரென்று ஒரு விசயத்திலிருந்து இன்னொரு விசயத்திற்குத் தாவாதீர்கள். அடுத்தவர் பேசும்போது அரை வினாடி நிறுத்தினால் உடனே நுழைந்து வேறு விசயத்தைப் பேச ஆரம்பிக்கக் கூடாது.

*எதிராளியின் பேச்சில் உண்மையான அக்கறை காட்டுங்கள். அவர் உள்ளம் திறந்து பேச அது வழி வகுக்கும். அவர் பேசும் விஷயத்தை விரிவு படுத்துங்கள். உரையாடல் இனிமையாய் அமையும்.

*ஒரு விசயத்தைப் பற்றி ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேச்சு வேறெங்கோ சென்று விட்டால் நீங்கள் அதை மறவாது விட்டுப் போன விஷயத்தை ஞாபகப் படுத்துங்கள். இது பண்பாடு மட்டும் அல்ல, அவருடைய பேச்சில் உண்மையான அக்கறை காட்டுவதாக அமையும்.

*எதையும் அடித்துப் பேசி முத்தாய்ப்பு வைக்காதீர்கள். எதிராளிக்கு வேறு கருத்தும் இருக்கக் கூடும் என்பதற்கு இடம் கொடுத்துப் பேசுங்கள்.

*தாக்காதீர்கள். கெட்ட விசயத்தைக் குறை சொல்லும்போது கூட குத்தலாகவோ அவதூறாகவோ பேசாதீர்கள். கிண்டலாகப் பேசுவது உங்கள் மூளைக் கூர்மையைக் காட்டக் கூடும். ஆனால் எதிராளிக்கு இருப்புக் கொள்ளாமல் போகும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

குறையை நம்மிடம் வைத்துக்கொண்டு....

ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார்.விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார். ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார். அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.
அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார். அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார்.

ச்சே, பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம்
கூட வெட்கம்,மானம் இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது. இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர்.சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார். அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார். விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே. இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார். அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது. அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா… நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார்.

இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,

”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம்,மோசமானவராகவும் இருக்கலாம். ஏன் அவர் நம்மைக் காட்டிலும், எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும், உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம். அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்.

என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்! நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது! எனவே, 
அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு கனம் நினைக்க வேண்டும்.

அசரீரி.. . அதிசயம் !

பிரச்னைகள் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். வெளியிலிருந்து வரும் பிரச்னைகள் ஒருபுறம் என்றால், நாமே வலியப் போய் இழுத்துப்போட்டுக்கொள்ளும் பிரச்னைகளும் உண்டு ! இந்த வகை பிரச்னைகளுக்குப் பெரும்பாலும் மூலகாரணம் - பேராசை !

ஜென் மதத்தில் இது சம்பந்தமாக ஒரு கதை உண்டு.

அது ஒரு கிராமம். ஒரு நாள் கிராமத்துக்கு ஜென் துறவி ஒருவர் வந்தார். ஊர் மக்களில் பலர், என் பிரச்னைகள் எல்லாம் ஒழிய வேண்டும் ! நான் விரும்புவது எல்லாம் நடக்க வேண்டும் ! இது மட்டும் நிறைவேறினால் என் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். என்றெல்லாம் துறவியிடம் சொன்னார்கள். எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்ட துறவி, அடுத்த நாள் அந்தக் கிராமத்தில் ஓர் அசரீரியை ஒலிக்கச் செய்தார்.

நாளை பகல் பன்னிரண்டு மணிக்கு இந்தக் கிராமத்தில் ஓர் அதிசயம் நடக்க இருக்கிறது. ஆம், உங்களின் எல்லாப் பிரச்னைகளையும் ஒரு கற்பனையான கோணிப்பையில் போட்டுக் கட்டி எடுத்துக் கொண்டு போய் ஆற்றின் அடுத்த கரையில் போட்டுவிடுங்கள். பிறகு, அதே கற்பனைக் கோணிப் பையில் வீடு, நகை, உணவு என்று எதை ஆசைப்பட்டாலும் அதில் போட்டு வீட்டுக்குக் கொண்டுவருவதற்காக கற்பனை செய்யுங்கள் ! உங்கள் கற்பனை பலிக்கும் !

இந்த அசரீரி உண்மையா ? இல்லையா ? என்பதைப் பற்றி ஊர் மக்களுக்கு ஒரே குழப்பம். என்றாலும், அசரீரியான குரல் அவர்களுக்குப் பிரமிப்பை உண்டாக்கியது. அது சொன்னபடி செய்து, எல்லாம் தொலைந்து, நாம் ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்தால் நன்மைதானே. அசரீரி வாக்குப் பொய்த்துப் போனாலும் நஷ்டம் ஏதும் இல்லையே ! அதனால் அசரீரி சொன்னபடியே செய்துதான் பார்ப்போம் ! என்று அடுத்த நாள் நண்பகல், ஊர்மக்கள் தங்களின் பிரச்னைகளை மூட்டைக்கட்டிக் கொண்டுபோய் ஆற்றின் அடுத்த கரையில் போட்டுவிட்டு பங்களா, வைர நெக்லக்ஸ், கார் என்று தாங்கள் சந்தோஷம் என்று கருதிய அனைத்துப் பொருட்களையும் கற்பனை மூட்டையில் கட்டியெடுத்துக் கொண்டு ஊர் திரும்பினார்கள் !

திரும்பியவர்கள் அச்சரியத்தில் மூழ்கித் திக்குமுக்காடிப் போனார்கள். ஆம், அசரீரி சொன்னது அப்படியே பலித்துவிட்டது ! கார் வேண்டும் என்று நினைத்தவரின் வீட்டு முன் நிஜமாகவே கார் நின்றிருந்தது. மாடிவீடு வேண்டும் என்று கேட்டவரின் வீடு, மாடிவீடாக மாறியிருந்தது. எல்லோருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை ! ஆனால், அந்தச் சந்தோஷம் கொஞ்சம் நேரம்தான் !

தங்களைவிட அடுத்த வீட்டுக்காரன் அதிக சந்தோஷமாக இருப்பது போல் ஒவ்வொருவருக்குமே தோன்றியது. ஏன் என்று விசாரிக்கத் தொடங்கினார்கள். அடுத்த கணம் கவலை மீண்டும் அவர்களின் காலை வந்து கட்டிக்கொண்டுவிட்டது.

ஐயையோ, நாம் ஒற்றை வடம் தங்க செயின் கேட்டோம். அதுதான் கிடைத்தது. ஆனால், அடுத்த வீட்டுப் பெண் ரெட்டை வடம் செயின் கேட்டு வாங்கிவிட்டாளே ! நாம் வீடுதான் கேட்டோம். ஆனால், எதிர் வீட்டுக்காரன் சலவைக்கல் பதித்த பங்களா வேண்டும் என்று கேட்டு வாங்கிவிட்டானே.. . நாமும் அதுபோலக் கேட்டிருக்கலாமே ! நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததும் நழுவவிட்டுவிட்டோமே ! என்று சந்தர்ப்பம் கிடைத்தும் நழுவவிட்டுவிட்டோமே ! என்று கவலைப்பட்டவாறே மீண்டும் அந்தத் துறவியைச் சந்தித்துப் புலம்பத் தொடங்கிவிட்டார்கள். மறுபடி அந்த ஊரை விரக்தி ஆக்கிரமித்தது.

பிரச்னைகள் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இவர்களுக்கு நான் சொல்வது எல்லாம் இதுதான்.

பிரச்னைகளை சந்தோஷத்தோடு முடிச்சுப்போட்டு பார்க்காதீர்கள் ! பிரச்னைகள் எல்லோர் வாழ்விலும் இருக்கும்.. . பிரச்னைகள் ஒருபுறம் இருந்துவிட்டுப் போகட்டும். நான் சந்தோஷமாக இருப்பேன் ! என்று ஒவ்வொருவரும் உற்சாகமாக இருக்க வேண்டும். இப்படிச் சொல்வதால், பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன என்றே சிந்திக்காதீர்கள் என்று நான் சொல்வதாக அர்த்தமில்லை.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை விடவா ஒருவருக்குப் பிரச்னை இருந்துவிட முடியும் ! கர்ப்பத்தில் உருவானதில் இருந்தே கிருஷ்ணரைக் கொல்வதற்காக அவர் மாமா கம்சன் காத்திருக்கவில்லையா ? யுத்தகளத்தில் எந்த அர்ஜுனனுக்காக அவர் தேரோட்டிக்கொண்டு போனாரோ அவனே, ஐயையோ.. . நான் சண்டை போட மாட்டேன் என்று வில்லையும் அம்பையும் தூக்கியெறிந்து கடைசி நேரத்தில் தலைவலி கொடுக்க வில்லையா ? குருஷேத்திரப் போர்க்களத்தில் தினம் ஒரு பிரச்னை ! அதையெல்லாம் சமாளிக்கும் போதும் கிருஷ்ணரின் முகத்தை விட்டுச் சந்தோஷப் புன்னகை ஒரு கணம் கூட விலகவில்லையே !

கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்லியிருப்பதும் இதையேதான் ! சுகம், துக்கம் இரண்டையும் ஒரே மாதிரி பாவிக்கக் கற்றுக்கொள் ! இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து சரியான பாடம் கற்றுக்கொண்டால் தெளிவு பிறக்கும். அந்த தெளிவு ஆனந்தத்தைக் கொடுக்கும் !

சுதந்திர மலர் 

எப்போது மனிதன் பிறரிடமிருந்து அன்பை எதிர்பாராது, தான் பிறரிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறானோ, அப்போதுதான் அவன் முதிர்ச்சியடைந்தவன் ஆகிறான். அவனிடம் ஏற்படும் அன்பு நிறைந்து வழிகிறது. ஆகவே அதைப் பிறருக்கு பங்கிட்டு வழங்கி மகிழ முற்படுகிறான். அவன் பிறரைச் சார்ந்து இல்லை. அடுத்தவர் அன்பு செலுத்தினாலும்,செலுத்தாவிட்டாலும், அவன் அன்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

ஒரு அடர்ந்த காட்டில் யாருமே புகழ்வதற்கு இல்லாத நிலையில், யாருமே அதன் நறுமணத்தை அறியாத தன்மையில், அது எவ்வளவு அழகானது என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில் , அதன் அழகைக் கண்டு ஆனந்தமடைய, பங்கிட்டுக் கொள்ள யாரும் இல்லாத வெறுமை நிலையில் , ஒரு அழகிய மணமுள்ள மலர்ந்த மலருக்கு என்ன நேரிடும்?அவை மலர்ந்து கொண்டேதான் இருக்கும். அதைத்தவிர அதற்கு வேறொன்றும் தெரியாது. அது எப்போதும் தனது மகிழ்ச்சியைக் கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டேதான் இருக்கும்.

 நீங்கள் அன்புக்கு பிறரை சார்ந்து இருந்தால் அது எப்போதும் துன்பத்தையே கொடுக்கும். ஏனெனில் சார்ந்து இருப்பது ஒரு வகை அடிமைத்தனம் தான். பிறகு , நீங்கள் உங்கள் ஆழ்மனதில் அவரை வஞ்சம் தீர்க்க முயல்கிறீர்கள். வழி தேடுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் சார்ந்திருந்த அவர், உங்களை ஆதிக்கம் செலுத்த அதிகாரம் உடையவராகிறார். பிறர் தன்னை அதிகாரம் செய்வதை யாருமே விரும்ப மாட்டார்கள். அந்த நிலையில் அன்பு பரிமாற்றம் எப்படி ஏற்படும்? அன்பு என்பது ஒரு சுதந்திரமான மலர். இந்த அதிகார சண்டைதான் கணவன் மனைவிக்கிடையே எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
கணவன், மனைவியிடமும் மனைவி, கணவனிடமும் தோற்றுப் போகத் தயாராக இருந்தால் அங்கே குடும்பம் ஜெயிக்கிறது . ஞாபக மறதி நடந்த நல்ல விஷயகளில் மிதந்து கொண்டிருப்பதற்காக "ஞாபக"த்தையும், நடந்த கெட்ட விஷயங்களில் மூழ்கி விடாமல் இருப்பதற்காக "மறதி"யையும் ஆண்டவன் நமக்குத் தந்திருக்கின்றான்.

பல நேரங்களில் பேச்சு சாதிப்பதை விட மௌனம் அதிகம் சாதிக்கும் . சில நேரங்களில்

பேச்சு காயப்படுத்திவிடவும் கூடும் ... முடிந்தவரை பிறர் மீதான கோபங்களில் மௌனம் காத்து மகிழ்ச்சி சேர்க்க முயலலாமே.

கைசன் கொள்கை' தெரியுமா?
செல்வச் செழிப்பு அடைந்திருக்கும் நாடுகளின் மக்கள், தங்கள் நாடுகளை உயர்த்த எந்த விதமான கொள்கைகளைக் கையாண்டார்கள் என்பது பற்றி சொல்லட்டுமா?

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாட்டினரிடம் ஒரு அணுகுமுறை இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டாயிரம் ஆப்பிள் விளைய வேண்டும் என்று அவர்கள் நிர்ணயித்ததால். அந்த இலக்கை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று அவர்கள் விடாப்பிடியாக பாடுபடுவார்கள். அந்த ஒரு ஏக்கர் நிலம் செழிப்பானதோ இல்லையோ, அது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. ரசாயன உரத்தைப் பயன்படுத்தியாவது ஏக்கருக்கு இரண்டாயிரம் ஆப்பிளை அவர்கள் விளைவித்துவிடுவர்கள். அவர்களின் இந்த Result Oriented Management என்று பெயர்.

செல்வச் செழிப்பு அடைந்திருக்கும் ஜப்பானியர்களின் அணுகுமுறை வேறுவிதமானது. இவர்கள் அமெரிக்கர்களைப் போல் ஏக்கருக்கு இரண்டாயிரம் ஆப்பிள் விளைய வேண்டும் என்பதில் குறிப்பாக இருக்க மாட்டார்கள். 'ஆப்பிளை என்ன மாதிரியான நிலத்தில் பயிரிட வேண்டும் எத்தனை நாளைக்கு ஒரு முறை நீர் ஊற்ற வேண்டும் ' என்ற எண்ணிக்கையில் குறியாக இல்லாமல், அதை அடையும் வழி முறையில் முழுக்கவனத்தையும் செலுத்துவர்கள். இந்த அணுகுமுறைக்கு Process Oriented Management என்று பெயர்.

ஒரு ஏக்கரில் அமெரிக்கர்களைவிட ஜப்பானியர்கள் விளைவித்த ஆப்பிளின் எண்ணிக்கை சில சமயம் குறைவாகக் கூட இருந்தது. ஆனால், ஜப்பானியர்கள் விளைவித்த ஆப்பிளில்தான் சுவை கூடுதல் இருக்கும். ஜப்பானியர்கள் இந்த அணுகுமுறை 'பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்' என்ற நமது கீதையின் சாரம்தானே.

ஜப்பானியர்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கும் இன்னொரு கொள்கை - 'கைசன்'. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?.

மேலும் மேலும் சிறப்பு. அதாவது, 'ஒரு வேலையை எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் அடுத்த முறை இந்த வேலையை இதைவிடச் சிறப்பாக செய்ய வேண்டும்' என்பதுதான் அந்தக் கொள்கை.

நாம் ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும்போது 'வணக்கம் சொல்லிக் கொள்வதுபோல் ஜப்பானியர்கள் ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும்போது 'வாழ்க்கை எனும் நதிக்கு வெற்றி' என்று கூறிக் கொள்வார்கள். ஜப்பானியர்களுக்கு வெற்றி என்பது இலக்கு அல்ல. ஒவ்வொரு கணத்தையும் பொழுதுபோக்காக நினைக்காமல் வெற்றி என்ற நோக்கிலேயே பார்க்கிறரர்கள். ஜப்பானியர்களுக்கு வாழ்க்கை என்பதே வெற்றிதான்.

வெற்றியைப் பற்றி பேசும்போது இதையும் நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டு பேர் சண்டைபோட்டால் ஒரு வெற்றி பெறுவார்... இன்னொருவர் தோல்வி அடையத்தான் செய்வார். இருவருமே வெற்றியடைய முடியுமா?

முடியும் அதற்கு Win Win Method என்று பெயர்.

கம்பெனியில் ஒரு பிரச்னை... இரண்டு நிர்வாகிகள் இது பற்றி விவாதிக்கிறார்கள். ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். அடுத்தவர் இவரின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை வைத்திருக்கிறரர். இருவரும் விவாதம் செய்கிறார்கள். இந்த விவாதத்தில் ஒருவர் ஜெயித்தால் இன்னொருவர் தோற்க வேண்டும்.

ஆனால், இந்த இருவருமே, 'உன்னுடைய கருத்து சரியா?' என்று பார்க்காமல், இந்த நேரத்துக்கு எந்தக் கருத்து சரி என்று கருத்தின் தன்மையை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வரும்போது, பிரச்னைக்குச் சரியான தீர்வைக்கண்டறிந்த மகிழ்ச்சியில் இருவருமே வெற்றி அடைந்ததைப் போல சந்தோஷப்படுவார்கள். இதுதான் Win Win Method.

மேலை நாட்டினரின் இந்த யுக்தியை இப்போது நம் நாட்டிலிலுள்ள நிர்வாகிகள் கூடத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தும்போது பயன்படுத்துகிறரர்கள்.

இதையெல்லாம் படித்து விட்டு 'வெற்றி மீது எனக்கு ஆசை இருக்கிறது. எனக்குத் திறமையும் இருக்கிறது. ஆனால் உடன் வேலை செய்பவர்கள்தான் என்னை அமுக்கி வைக்கிறரர்கள், முன்னேற விடாமல் தடுக்கிறார்கள்' என்று யார் சொன்னாலும் அதை நம்புவது சிரமமாக இருக்கும். ஏனென்றால், வெற்றிப்படிகளில் ஏற விரும்புவது யாராக இருந்தாலும் அவர்களைக் குப்புறத் தள்ளிக் குழி தோண்டி மண்ணுக்கு அடியில் புதைத்தாலும் அவர்கள் மரமாக மீண்டும் முளைத்துக் கொண்டு மேலே வருவது நிச்சயம்.

தீப்பந்தத்தைப் பூமியை நோக்கிக் கவிழ்த்தாலும், தீயின் ஜுவாலை வானத்தை நோக்கித்தான் இருக்கும்.

ஒரு மரம், சிறந்த மரமா, இல்லையா என்பதை யாரும் மரத்தைக் கேட்டு தீர்மானிப்பதில்லை. அந்த மரம் கொடுக்கும் பழங்களை வைத்துதான் மரம் சிறந்ததா இல்லையா? என்று ஊரார் தீர்மானிப்பார்கள்.

அதேபோல்தான், நீங்கள் சாதிக்கப் பிறந்தவரா இல்லையா என்பதை உங்களைக் கேட்டு இந்த உலகம் தெரிந்து கொள்ளாது. உங்களின் சாதனையை வைத்துதான் உலகம் உங்களை எடை போடும்.

மகிழ்ச்சி

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதே நமக்குத் தெரியாததால் தான் நாம் மகிழ்ச்சி இன்றி இருக்கிறோம்.ஆனால் ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறது.பிறக்கும்போது ஒரு குழந்தை எந்தவித மனப் பதிவும் இன்றியே பிறக்கிறது.மகிழ்ச்சிக்கான ஆவல் மட்டுமே இருக்கிறது.ஆனால் அதைச் சாதிப்பது எவ்வாறு என்பது தெரியாது.வாழ்நாள் முழுவதும் அதற்காகவே போராடுவான்.ஆனால் மகிழ்ச்சியாயிருப்பது எப்படி என்று குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கும் விதம் நமக்குத் தெரிவதில்லை. கோபம் இயற்கையானது.கோபப்படாதே என்று கூறுவதன் மூலம் அவனால் கோபத்தை ஒழித்து விட முடியாது.மாறாக அதை அடக்கி வைப்பதற்குத்தான் நாம் கற்றுக் கொடுக்கிறோம்.அடக்கி வைப்பது எதுவும் அவலத்திற்கே இட்டுச் செல்லும்.கோபப்படாமல் இருப்பது எப்படி என்று நாம் கற்றுக் கொடுப்பதில்லை.அவன் நம்மைப் பின்பற்றியே ஆக வேண்டியுள்ளது.

கோபப்படாதே என்று சொன்னால் அவன் புன்னகை புரிவான்.அந்த புன்னகையோ போலியானது.உள்ளுக்குள் அவன் குமுறிக் கொண்டிருப்பான். ஒரு குழந்தையை,வேசக்காரனாக,பாசாங்குக் காரனாக நாம் ஆக்கிக் கொண்டிருக்கிறோம் வாழ்க்கை முழுவதும் அவன் பல முகமூடிகளை அணிய வேண்டியுள்ளது.பொய்மை ஒருநாளும் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது.உங்களை நீங்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள சமுதாயம் ஒருபோதும் சொல்லித் தருவதில்லை.பற்றுக் கொள்வதே துன்பம். ஆரம்பத்திலிருந்தே அம்மாவை நேசி,அப்பாவை நேசி,என்று பற்றுக் கொள்ளுமாறு உபதேசிக்கப் படுகிறது.தாய் அன்பானவளாக இருந்தால் குழந்தை அவளிடம் பற்று வைக்காமல் அன்புடன் இருக்கும்.உறவு முறைகள் நிர்ப்பந்தமாகத் திணிக்கப் படுகின்றன.பற்று என்பது உறவுமுறை.அன்பு என்பதோ ஒரு மனநிலை.
வலி தரும் நினைவுகளை நீக்குவது எப்படி?கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் நரம்பியல் ஆராய்ச்சியாளர் நவோமி எய்சென்பெர்கர் அவர்கள் அவமானம், நிராகரிப்பு போன்ற உணர்வுகள் மூளையில் வலி ஏற்படுத்தக் கூடியவை என்று கண்டறிந்துள்ளார்.

ஒரு உரையாடலின் போதோ, குழுவினராக இருக்கும் போதோ, பணிபுரியும் இடத்திலோ நிராகரிக்கப்படுதல் அல்லது ஒதுக்கப்படுதல் மிகுந்த வேதனை தரக்கூடியது. உண்மையாக சொல்வதென்றால் முகத்தில் அடித்தாற்போன்ற உணர்வினைப் பெறுவீர்கள். என்ன உண்மைதானே?

உங்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்த வேதனை தரும் நினைவிலிருந்து மீள்வது சிறிது கடினம்தான். இன்னமும் தெளிவாகச் சொல்வதென்றால், கத்தி அல்லது வாள் கொண்டு உங்கள் உடலில் செலுத்துவதற்கு நிகரான வேதனையை உணர்வீர்கள். இது போன்ற உணர்வுகளே வேதனை தரும் நினைவுகளிலிருந்து மீள்வதற்கு தடைகளாக அமைகின்றன. வலியின் வேகம் அதிகரிக்கும் போது தடைகளும் வலிமை பெறுகின்றன. இதை சரி செய்ய உங்களுடைய உடல், மனது மற்றும் உணர்வுகளை ஒருமுகப்படுத்தி ஒரு நிலைக்குக் கொணர்தல் வேண்டும்.

உடலுக்கு ஏற்படக் கூடிய வலி மற்றும் வேதனைகளை மருத்துவரின் உதவியுடன் குணப்படுத்தலாம். ஆனால் மருத்துவரா உங்களைக் குணப்படுத்துகிறார்? உண்மை என்னவென்றால் உங்களுடைய உடல் குணமடைவதற்காக மருத்துவர்கள் உதவுகிறார்கள். அவர்கள் அளிக்கும் உதவிகளைக் கொண்டு குணமடைகிறது உங்களுடைய உடல்.

அதே போல் மனதின் வேதனைகளும் உதவிகளைக் கொண்டு குணமடைந்திட வேண்டும். அது போன்ற உதவிகள் சிலவற்றைக் காண்போம்.

அவைகளில் ஒன்று காலம். காலம் ஒரு நல்ல மருந்தாக உதவும். ஆனால் அதற்காக பல வருடங்கள் வேதனையில் வாழ்ந்திட எவராலும் முடியாது. இதற்கென தனித்திறமை வாய்ந்த வல்லுனரின் உதவியை நாடுவது மற்றொரு வகை உதவி.

வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் பல வகையான சிகிச்சைகள் பலன் தருபவையே.

சிகிச்சைகள் எதுவும் பெறாமல் இருப்பதும் ஒரு விதமான சிகிச்சையே.

உங்கள் வேதனைகளிலிருந்து மள்வதற்காக பல ஆயிரங்களை செலவிடுமுன், ஓரு எளிய பயிற்சியை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம்.

இப்பயிற்சி உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை மாற்றாது. மாற்றவும் முடியாது. ஆனால் பயிற்சி உங்கள் உணர்வில் மாற்றம் ஏற்படுத்தும். உங்களுடைய உணர்வுகளை பிரித்துப் பார்க்க உதவும். நிகழ்வுகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும்.

பயிற்சியை ஆரம்பிப்போமா?

உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல நிகழ்வையோ அல்லது விருப்பமான ஒரு கற்பனை நிகழ்வையோ எண்ணிக் கொள்ளுங்கள். அதை ஒரு காட்சியாக பார்க்க முயலுங்கள். காட்சியைப் பெரிதாக்கிப் பார்க்க முயலுங்கள். மேற்கூறிய வாக்கியங்களை வேகமாக படித்திருந்தால் நிதானமாக பயிற்சியை செய்து பாருங்கள். அற்புதமான உணர்வினைப் பெறுவீர்கள்.

இப்போது எதிர்மறையாக செய்து பாருங்கள். அந்தக் காட்சியை சிறிது சிறிதாக உங்களுக்கு தெளிவற்ற தூரத்தில் கொண்டு செல்லுங்கள். இப்போது உங்களுள் ஏற்படக்கூடிய மாற்றத்தையும் உணருங்கள்.

காட்சி பெரிதாகவும், தெளிவாகவும் தெரியும்போது எவ்வாறு உணர்கிறீர்கள்? காட்சி சிறிதாக தெளிவற்று தெரியும்போது உங்களுள் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா? காட்சி தெளிவாகவும், பெரிதாகவும் தெரியும்போது மகிழ்ச்சியடைகிறீர்கள். அதேநேரம் சிறிதாகவும், தெளிவற்றும் காணும்போது உணர்வுகளற்று இருக்கிறீர்கள்.

இப்பயிற்சி உங்களுக்கு வேதனையளிக்கூடிய நிகழ்வுகளிலிருந்து மீள்வதற்கு எவ்வாறு உதவுகிறதென்று பார்ப்போமா? உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு நினைவை காட்சியாக எண்ணிக் கொள்ளுங்கள். அதை பெரிதாக்கி அருகில் தெளிவாக காணும்போது நீங்கள் அனுபவிக்கக்கூடிய வேதனை அளவற்றது. அதே காட்சியை சிறிதாக தொலைவில் தெளிவற்று காணும் போது வேதனை குறைவதை உணர்வீர்கள்.

தன்னிரக்கம், மோசமான நிலை மற்றும் வாழ்வில் யாதொரு பிடிப்புமற்ற நிலை போன்ற எண்ணங்கள் உள்ளவர்கள் தெளிவான, பெரிதாக்கப்பட்ட, விருப்பமற்ற காட்சிகளை மிக அருகில் காண்பர். அவர்களால் மகிழ்ச்சியளிக்கக் கூடிய எண்ணங்களை நினைத்துப் பார்க்க முடியாது. அவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் சிறந்த மாற்றத்தைப் பெறுவார்கள்.

நினைவுகளும் உணர்வுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. அதனாலேயே பிறந்த நாள், திருமண நாள், சண்டையிட்ட நாள், அவமானமடைந்த நாட்கள் போன்றவைகளை நாம் எளிதாக நினைவில் கொள்கிறோம். அது போன்ற நினைவுகள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆதலால் இப்பயிற்சியைப் பின்பற்றுவது நன்கு பலனளிக்கும்.

வேதனை தரும் நினைவுகளை சிறிதாக்கி உங்களிடமிருந்து விலகுவதாக எண்ணிக் கொள்ளுங்கள். நினைவுகள் விலகி மறைவது போல அவை ஏற்படுத்தும் வேதனைகளும் விலகி மறையும்.

நன்றி  : http://jeyarajanm.blogspot.fr/2014/02/blog-post.html

 

Saturday, August 3, 2013

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 15

ஈழத்தமிழர்களின் தேசிய உணவு, ( ஓடியல் (பனங்கிழங்கு) கூழ் .
உலகில் பல நாடுகள் தமது நாட்டுக்கேயுரித்தான அல்லது அந்த நாட்டு மக்களின் வரலாற்றுடன் தொடர்புள்ள உணவு வகையினை தேசிய உணவாகக் கொள்வது வழக்கம். பல நாடுகளில் அதே வகையான உணவுகள் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டாலும், உள்நாட்டில் கிடைக்கப்பெறும் உணவுப் பொருட்களை பாவித்து , பாரம்பரியமாக அந்த நாட்டு மக்களால் தயாரிக்கப்படும் உணவு வகையை அந்த நாட்டின் தேசிய உணவாகக் கொள்ளலாம்.

இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாகிய ஈழத்தமிழர்களின் தேசிய உணவு எது என்ற கேள்விக்கு ஓடியல் (((((பனங்கிழங்கு) கூழ் என்பது சரியான பதிலாக இருக்க முடியும். சிங்களவர்கள் பனங்கிழங்கில் கூழ் தயாரிப்பதில்லை. இன்று யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் சிங்களவர்கள் விரும்பியுண்ணும் உணவாகவும் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் ஒடியல் கூழ் தான் என பல சிங்களவர்களே கூறுகின்றனர். அவ்வாறே, ஈழத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் சிறப்பாக நண்பர்கள் உறவினர்கள் ஒன்று கூடும் போது கூழ் தயாரித்து, கூடியிருந்து கூழை அருந்தி கலந்துரையாடுவது வழக்கம்.

தமிழீழம் முழுவதும் வடக்கிலிருந்து கிழக்கு வரை பரவி வளர்ந்து காணப்படும் பனைமரத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உணர்வு பூர்வமான தொடர்புண்டு. போரில் கூட ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல அவர்களுடன் சேர்ந்து அவர்களின் பனைமரமும் அழிந்தது. போரில் எமது மக்களுக்கு தமிழர்களின் எதிரிகளுடன் போராட மட்டுமல்ல, தமிழர்களுக்கு பதுங்கு குழிகளை அமைத்து அவர்களைப் பாதுகாக்கவும் உதவியது ஈழத்தமிழர்களின் பனைமரம் தான். அதனால் தான் சிங்களவர்களின் அகராதியில் பனங்கொட்டைகள் என்றால் அது யாழ்ப்பாணத்தமிழர்களைக் குறிக்கும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியிலும் பலவகையான கூழ் தயாரிப்பு முறைகள் உண்டு. ஆனால் பனங்கிழங்கிலிருந்து பெறப்படும் ஒடியல் மாவில், கடலுணவையும் சேர்த்து கூழ் தயாரிக்கப்படுகிறதா என்று எனக்குத் தெரியாது. ஒரு சிங்களவர் யாழ்ப்பாணத்தில் ஒடியல் கூழை தயாரிப்பதை இந்தக் காணொளியில் காணலாம்


ஓடியல் (பனங்கிழங்கு) கூழ்

தேவையானவை: 

ஒடியல் மா (பனங்கிழங்கு) 100g

தண்ணீர் 200 ml

சம்பா அரிசி ¼ cup

இளம் பலாக்காய் 1 , பலாக்கொட்டை 15 / 20 

யாழ்ப்பாண நீல நண்டு 2

புலி (Tiger) இறால் 10

சதையுள்ள மீன் 6

கணவாய் 3

பயற்றங்காய் 1/4 பிடி

மட்டி 300 g (விரும்பினால்)

முருங்கையிலை 1/4 கப்

உப்பு 1 தேக்கரண்டி

மிளகு 1 தேக்கரண்டி


அரைத்த மிளகாய் கூட்டு :

காய்ந்த மிளகாய் 6

தேசிக்காய் 1

உப்பு 1/2 தேக்கரண்டி

மிளகு  1 தேக்கரண்டி

கரைத்த புளி :

1 சிறிய (தேசிக்காயளவு) உருண்டை

தண்ணீர் 1/2 கப்

பக்குவம்:


அளவான பாத்திரத்தில் ஒடியல் மாவையும் நீரையும் கலந்து ஊறவிடவும். ஒடியல் மா கிடைக்காது விட்டால் அரைத்த மரவள்ளிகிழங்கையும் பயன்படுத்தலாம். (சுவை வேறுபடலாம்) குறைந்தது இரண்டு மணிநேரங்களாவது ஒடியல் மா நீரில் ஊற வேண்டும். செத்தல் மிளகாயை தேசிக்காய்ப்புளி, உப்பு மிளகுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு, சிறியளவு நீர் விட்டு கட்டியாக கரைத்துக் கொள்ளவும். இன்னொரு பெரிய பாத்திரத்தில் இருமடங்கு தண்ணீரிட்டு கொதிக்க வைக்கவும். அதற்குள் முதலில் அரிசி, பலாக்கொட்டை என்பவற்றையும், அவை அவிந்ததும் கடலுணவுகளை இட்டுக் அவிய விடவும்.

படிமானம் :

ஒடியல் மாவில் மேலேயுள்ள நீரை வடித்து விட்டு கரைசலாம் ஒடியல் மாவையும் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைக் கலந்து, சுவைக்கேற்ப உப்பைச் சேர்த்து கூழ் அவிந்ததும் சூடாக பரிமாறவும்.

முக்கிய குறிப்பு :

இது எனது சொந்த தயாரிப்பு இல்லை . அத்துடன் இதில் வந்த சில கருத்துக்களில் எனக்கு நூறுவீத உடன்பாடு இல்லை .http://viyaasan.blog...log-post_3.html