Skip to main content

Posts

Showing posts from November, 2013

போரும் உடன் படிக்கையும் - கட்டுரை .

கடந்த நூற்ராண்டு எமக்கு இரண்டு பெரிய கறுப்புப் பக்கங்களை விட்டுச் சென்றது . அமைதியாகச் சுழன்று கொண்டிருந்த பூமிப் பந்து முதலாம் உலகப்போர் என்ற புயலால் , 28 ஜூலை 1914 இல் இருந்து 11 நவம்பர் 1918 வரை தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்ததது . பல உயிர் இழப்புகளையும் , பொருள் இழப்புகளையும் சந்தித்த இந்த முதலாவது உலகப் போரானது , இறுதியில் கொம்பியேன் காடு என்ற இடத்தில் தொடரூந்துப் பெட்டி ஒன்றில் நேச நாடு அணிகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் 11 நவம்பர் 1918 காலை 11 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது . அன்றில் இருந்து இந்த நாளை பிரான்ஸ் , பெல்ஜியம் , செர்பியா , நீயூசிலாந்து போன்ற நாடுகள் இந்தப் போரிலே உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் , அரச பொது விடுமுறையாக அறிவித்து இந்த நாளை மனதில் இருத்துகின்றன .

இன்று காலை 11 மணியளவில் நான் வேலை செய்யும் சார்ல்ஸ் து கோல் எத்துவால் இல் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபியான ஆர்க் து திறியோம்ப் இல் , நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து முதலாம் உலகப்…