Skip to main content

Posts

Showing posts from 2014

அம்மா குஞ்சியும் சொலவடையும் - பத்தி.

எமது வாழ்கையில் தொடர்பாடலில் எமது பெரிசுகள் தாங்கள் சொல்லவந்த செய்தியை நேரடியாகச் சொல்லாது மறைமுகமுகமாக உறைக்கத்தக்க விதத்திலும் , புத்திமதி சொல்வது போலவும் உரையாடுவார்கள் . இதைச் சொல்லடை அல்லது சொலவடை என்று சொல்லுவோம் . ஆனால் , துர்ரதிஸ்டவசமாக இந்த சொல்லடைகள் எம்மிடமிருந்து நாகரீகம் என்ற போர்வையில் மறைந்து கொண்டு போகின்றன . இவை மீண்டும் புதியவேகம் பெற்று எம்மைப் போன்ற இளயவர்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்திலேயே இந்தப் பதிவைத் தொடங்குகின்றேன் . 
கோமகன் 
000000000000000000000000000000
கூத்தாடி கிழக்கே பார்த்தானாம், கூலிக்காரன் மேற்கே பார்த்தானாம். 

விளக்கம் :

மேடையில் இரவு இரவாக நடிப்பவனுக்கு விடியக்காலையில் தான் ( சூரிய உதயத்தில் ) சம்பளம் கொடுப்பார்கள் . அதேபோல் கூலி வேலை செய்பவர்களுக்கு மாலை வேளையிலேயே ( சூரியன் மறையும் பொழுது ) சம்பளம் கொடுப்பார்கள் . பாம்பாடிக்குப் பாம்பிலே சாவாம் , கள்ளனுக்கு களவிலே சாவாம்.

விளக்கம் :

ஒருவர் ஒரு வேலையை எடுத்துச் செய்யும்பொழுது அவரால் அதிலிருந்து மீளமுடியாது . அந்த வேலையில் அவருக்குள்ள பலவீனங்களே , அவரின் வேலைக்கான முடிவுகளையும் தீர்மானிக்கின்…