Thursday, January 23, 2014

மனமே மலர்க 18

துன்பம் நிரந்தரமாய் நீங்க...


துன்பம் வரும்போது அதை அப்படியே அனுபவியுங்கள்.அதைக் கண்டு ஓட வேண்டாம்.அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டுதான் வரும்.அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும்.அது மரண வலியாகத்தான் இருக்கும்.அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம்.தரையில் புரண்டு அழலாம்.அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம்,கவலை என்று ஏற்படும்போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ,அப்படி அதிகப் படுத்தி,அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால்,அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ,அதனுடன் கலந்து விட்டீர்களோ,அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.இப்போது உங்கள் வலி,துயரம்,கவலை,இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.இதை நீங்கள் அனுபவத்தில்தான் உணர முடியும்.

பிறரைக் கவர்வது எப்படி?


ஒருவரை நாம் பார்த்தவுடன் அவர் எப்படிப்பட்டவர் என்று எடை போட ஆரம்பித்து விடுகிறோம். இதேபோல மற்றவர்களும் நம்மை எடை போடுவார்களே! அவர்களது மனதில் இடம் பிடிக்கிற மாதிரி நாம் நடந்து கொள்ள வேண்டாமா?அதற்கு என்ன வழிகள் இருக்கின்றன?

இனிமையான குணத்தை விரும்பாதவர் யாருமில்லை. புதிதாக ஒருவரை சந்திக்கும்போது உங்களிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் வெளிப் படுத்துங்கள். அளவாகப் பேசுங்கள்; அழகாகப் பேசுங்கள்; இயல்பாகப் பேசுங்கள்; இனிமையாகப் பேசுங்கள்; சிரிக்க சிரிக்கப் பேசுங்கள். தேவைப்படும் போது ஆழமாகப் பேசுங்கள். உங்களது பேச்சும் செயலும் அடுத்தவர் மனதில் அட்டை போல ஒட்டிக் கொள்ளும்.

எப்போதும் எந்த சூழ் நிலையிலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். போலித் தனம் வேண்டாம். நீங்கள் செயற்கையாக நடந்து கொள்ள முயற்சிப்பது ஆபத்து. ஏனெனில் உங்கள் செயற்கை சாயம் அடுத்தவர்க்கு அப்பட்டமாகத் தெரியும்.

உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய உறுப்பு கண் தான். மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டோ, தரையைப் பார்த்துக் கொண்டோ அடுத்தவரிடம் பேசுவது உங்கள் தாழ்வு மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். அடுத்தவர் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசினால் உங்கள் தன்னம்பிக்கை பளிச்சிடும்.

பலர் இருக்கும் இடத்தில்,சுற்றியிருப்பவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ.எப்படி எதிர் பார்க்கிறார்களோ அதற்கேற்றபடி உங்கள் கருத்துக்களை சொல்லத் தொடங்கினால் தூண்டில் போல மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் கவ்வி இழுக்கப்படும்.

முக மலர்ச்சியும்,கலகலப்பும் உங்களை உயர்த்திக் காட்டுகிற உன்னதமான குணங்கள். வருத்தத்தோடு உங்களிடம் வருபவர்களின் கவனத்தை திசை திருப்பினால் அவரும் கவலையை மறந்து கலகலப்பாகி விடுவார்.
இந்த உத்திகளைப் பயன்படுத்தினால் பிறரைக் கவர்வதில் சிறந்த மனிதர் நீங்கள்தான்!

கடவுளிடம் ஒரு பேட்டி.

 கடவுளைப் பேட்டி காண்பது போல கனவொன்று கண்டேன்.

''ஓ.என்னைப் பேட்டி காண வேண்டுமா?''என்று புன்னகையுடன் கடவுள் கேட்டார்.

 'உனக்கு நேரம் ஒதுக்க முடியுமானால் ...''என்று இழுத்தேன்.

''காலமே நான் தானே?.சரி,என்ன கேள்விகள் கேட்க விரும்புகிறாய்?''

என்று கடவுள் என்னைத் தட்டிக் கொடுத்துக் கேட்டார். நான் கேட்டேன்,

''மனித குலம் எந்த வகையிலாவது உன்னை ஆச்சரியப் படுத்துகிறதா?

''கடவுள் சொல்ல ஆரம்பித்தார்,''மனிதன் குழந்தையாய் இருக்கும்போது விரைவில் பெரிய மனிதன் ஆக வேண்டும் என்று விரும்புகிறான்.பெரியவன் ஆகிய பின் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா,என்று ஏங்குகிறான்.அடுத்து,உடல் நலம் கெட்டாலும் பரவாயில்லை என்று ஓய்வின்றிப் பணம் சேர்க்கிறான்.பின்னர் நோய் வந்து பணத்தை முழுவதும் உடல் நலத்திற்காக செலவழிக்கிறான்.இதை விட முக்கியமானது ஒன்று உள்ளது.எதிர்காலத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு நிகழ் காலத்தை மறந்து விடுகிறான்.ஆனால் அவன் நிகழ் காலத்திலும் வாழ்வதில்லை.எதிர் காலத்திலும் வாழ்வதில்லை.

தனக்கு மரணமே கிடையாது என்ற எண்ணத்தில் வாழ்கிறான்.ஆனால் எப்போதுமே வாழாமல் இறக்கிறான்.

''பின் சிறிது நேரம் எங்களுக்குள் மௌனம் நிலவியது. மீண்டும் நான் கேட்டேன்,

''குழந்தைகள் வாழ்க்கையில் என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாய்?''கடவுள் திருவாய் மலர்ந்து,

''யாரும் நம்மீது அன்பு செலுத்த மாட்டார்கள். நாம்தான் பிறர் அன்பு செலுத்துமாறு நடந்து கொள்ள வேண்டும். நம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதில்லை. சில நொடிகளில் பிறரைக் காயப் படுத்தி விடலாம். ஆனால் அதை சரி செய்ய பல ஆண்டுகள் ஆகும். இரண்டு மனிதர்கள் ஒரே பொருளை வெவ்வேறு கோணத்தில் பார்க்க முடியும். இவற்றையெல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே மனதில் படும்படி சொல்லி வையுங்கள்.''

''நன்றி கடவுளே,வேறேதேனும் குழந்தைகளுக்கு சொல்ல விரும்புகிறீர்களா?''என்று நான் கேட்க கடவுள் புன்னகையுடன் சொன்னார்,

''நான் எப்போதும் இங்கு இருக்கிறேன்...''

இயல்பை ஏற்றுக்கொள்.

 வாழ்க்கையே ஒரு நதியின் பிரவாகம் போன்றது.மலையில் பிறந்த நதி கடலில் சென்று முடிவது போல கருவறையில் பிறந்த வாழ்வு கல்லறையில் முடிகிறது.இடையிடையே எத்தனையோ மேடு பள்ளங்கள், ஆரவாரங்கள், மோதல்கள்.அத்தனை ரணங்களையும் போராட்டங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்.வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியே ஏற்றுக்கொள். எதையும் திணிக்காதே.எதையும் மறுக்காதே.இயல்பை இயல்பு என உணர்ந்து அந்த இயல்போடு ஏற்றுக் கொள்.

******

குறிப்பிட்ட ஒரு பொருளால் ஒருவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் அந்தப் பொருள் அவனை விட்டு நீங்கி விட்டால் அந்த மகிழ்ச்சியும் அவனை விட்டுப் போய்விடும்.குறிப்பிட்ட செயலால், நோக்கத்தால்,ஒருவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் அந்த செயல் முடிவடைந்த பின்னர் அந்த மகிழ்ச்சி அவனிடம் காணாமல் போய்விடும்.இங்கே மகிழ்ச்சி வெளியிலிருந்து வருவதல்ல.அது உள்ளிருந்து பொங்கிப் பெருகுவது. எப்போதும் பரவச நிலையில் இருப்பது.

******
தனிமையைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன்,
ஏனெனில் தனிமை என்னைக் கண்டு அஞ்சியதில்லை.
தனிமையைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன்.
ஏனெனில் என்னைப்போல் அதுவும் தனியானது.
தனிமையை நான் விரும்புகிறேன்.
ஏனெனில் அது என்னிடம் ஏதோ சொல்ல விரும்புகிறது.

பார்வைகள் ஐந்து.

அர்ஜுனன் மனதை மாற்ற கண்ணன் ஐந்து பார்வைகளை விளக்குகிறார்.

வேதாந்தப்பார்வை :

ஆன்மா ஒன்றுதான் அழிக்க முடியாதது.அழிவது உடல்தான்.

சுயதர்மப் பாதை:
சுய தர்மத்திலிருந்து பின் வாங்கக் கூடாது. குறை யிருப்பினும் கை விடக்கூடாது.நெருப்புக்குப் புகை இருப்பதுபோல எச்செயலிலும் குறை இருக்கத்தான் செய்கிறது.உனக்கென விதிக்கப்பட்ட கடமையை செய்யும் போது அதில் எந்தப் பாவமும் ஏற்படுவதில்லை.

கர்மயோகப் பார்வை:

கடமையைக் கடமைக்காகச் செய்ய வேண்டும்.விருப்பு வெறுப்பு கூடாது.கடமையை செய்.வரப்போகும் பலன் உன்னை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது.பலனை விரும்பியோ,வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை எந்த விதத்திலாவது கட்டுப் படுத்தி விடும்.செயலில் ஆசை ,கோபம்,விரக்தி போன்ற உணர்வுகள் சேரக் கூடாது.உனது செயல்களை இறைவனுக்கு அர்ப்பணித்து விடு.இறைவனை எண்ணி,அகங்காரம் இன்றி ,பலன் கருதாது செயல்படு.

பக்திப்பார்வை:

எல்லாவற்றையும் செயலாக்குவது கடவுள்.அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது.செயலுக்கு நீ ஒரு கருவிதான்.உன் செயல்களை இறைவனுக்காக செய்.எப்போதும் கடவுள் உன்னிடம் இருப்பார்.


தத்துவப்பார்வை:


செயல்படுவது ஒருவனுடைய சுபாவம்தான்.எந்தக் காரியத்தை செய்ய மாட்டேன் என்று பின் வாங்குகிறாயோ ,அதையே செய்யும்படி உன் சுபாவம் கட்டுப் படுத்தும்.

இறுதியாக கண்ணன் சரணாகதி பற்றி சொல்கிறான்:


உன் சுமையை என் மேல் இறக்கி வை.தருமம் அதர்மம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீ அல்ல.என்னையே புகலிடமாகக் கொண்டு உன் கடமையை செய்.

வாழ்க்கை ஒரு பரிசு.
 
வாழ்க்கை ஒரு சிறைச்சாலை அல்ல.அது ஒரு தண்டனை அல்ல.அது பஒரு ரிசு.அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டு உள்ளது.இப்போது அதை ரசித்து மகிழ்வது உங்கள் கடமை.அதை ரசிக்கா விட்டால் அது ஒரு பாவம்.நீங்கள் வாழ்க்கையை அழகு படுத்தவில்லை என்றால்,அது இருந்தபடியே அதை விட்டு வைத்தால்,அது உயிர் வாழ்தலுக்கு எதிரானது.வாழ்வை இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சிகரமானதாக ஆக்குங்கள்.மேலும் சற்றே அழகானதாக, நறுமணம் மிக்கதாக ஆக்குங்கள்.

வாழ்க்கை ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்,ஒரு ஆசையாக அல்ல.ஒரு நாட்டின் அதிபராகவோ,பிரதமராகவோ ஆக வேண்டும் என்பது போன்ற லட்சியம் இல்லாமல்,'நான்யார்?'என்று கண்டறியும் ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்.தான் யார் என்று அறியாத மக்கள் யாராகவோ ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு வினோதம்தான்.அவர்கள் இப்போது யாராக இருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

நீ அக்கறை காட்டத் தேவையில்லாத விசயங்கள்இருக்கின்றன.நீ அவற்றை வெறுமனே கவனித்தால் போதும்.அவை சென்று விடும். கோபம், பொறாமை, பேராசை --இருளின் இந்த பாகங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது.அதாவது அவற்றை நீ கவனித்தால் போதும்,அவை மறையத் தொடங்கிவிடும்.நீ வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.நல்லது கெட்டது என்பதற்கு வேறு எந்த வரைமுறையும் கிடையாது.கவனிப்பதுதான் அதை முடிவு செய்கிறது.

பின்வாங்குவது தவறா?

பல விசயங்களில் நாம் ஆர்வமாக ஈடுபடுகின்றோம். கொஞ்ச தூரம் போனதும்தான்,''ஐயோ! வசமாக மாட்டிக் கொண்டோம் போலிருக்கிறதே!ஜகா வாங்க வேண்டியதுதானா?''என்கிற கலவர நினைப்பு வரும். ஆனால் சுற்றியிருப்பவர்கள் நம்மைக் கேவலமாகப் பேசுவார்களே என்ற நினைப்பும் சேர்ந்தே வரும். இவை நம்மைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக பலப்படுத்தி விட்டுப் போகும். அதாவது,'என்ன ஆனாலும் சரி,ஒரு கை பார்த்து விடுவது,''என்று இறங்கி,முகத்தைப் பெயர்த்துக் கொள்வார்கள். இது புத்திசாலிக்கு அழகல்ல. எவ்வளவோ விசயங்களை ஆர்வக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம், அப்போது பிரச்சினை பூதாகரமாகத் தெரிவதில்லை. இறங்க இறங்கத்தான் ஆழம் மட்டுப் படுகிறது. சுட்டுப் பொசுங்கிய பின்தான் சூடு புலப்படுகிறது. இது பின் வாங்க வேண்டிய தருணம்!அதற்காக எந்த விசயத்தில் தடங்கல் வந்தாலும் உடனே உதறி விட்டு ஓடி விட வேண்டும் என்று பொருள் அல்ல. கடைசி வரை போராட வேண்டியது தான். ஆனால் நம்பிக்கை ஒளி கொஞ்சம் கூடத் தெரியாத பிரச்னை எண்ணும் மலை முகட்டில்,போலியான கௌரவத்திற்காகவும், யார் என்ன நினைப்பார்களோ என்ற அர்த்தமற்ற வாதத்திற்காகவும் நடந்து, நடந்து அதல பாதாளத்தில் விழுந்து விடக் கூடாது. சொல்லியும் கேளாமல் சுயமாயும் புரியாமல்,'எனக்கு நானே குழி தோண்டிக் கொள்கிறேன்,''என்ற வரட்டுத் தனத்திற்கு நாம் ஒரு போதும் விலை போய் விடக் கூடாது. இடையில் பின் வாங்குவது அவமானம் எனத் தயங்குபவர்கள் முழுப் பாதையும் கடந்தபின் வாங்கப் போவது அதை விடப் பெரிய அவமானம் என்பதை உணர வேண்டும். பாதித் தவறை செய்து திருத்திக் கொண்டவனை மன்னிக்க உலகம் தயாராக இருக்கிறது. ஆனால் முழுத் தவறை செய்து விட்டால் சாமான்யமாய் மறக்காது, மன்னிக்கவும் செய்யாது.

நிச்சயமாகத் தவறு என்று தெரிந்து விட்டால் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பின் வாங்குவதில் தவறேயில்லை!

அழகும் கொடூரமும்

ஓவியர் ஒருவர், உலகிலேயே மனிதருள் ஒரு அழகான முகத்தையும் , ஒரு கொடூரமான முகத்தையும் வரையவேண்டும் என்று ஆவல் கொண்டார். முதலில் அழகான முகம் வரைவதற்காக அலைந்து தேட ஆரம்பித்தார். நீண்ட நாட்கள் ஆகியும் அவர் எதிர் பார்த்த மனிதன் அகப்படவே இல்லை. திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அழகான முகம் உடையவர்கள் குழந்தைகள்தானே!எனவே குழந்தைகளுள் அழகிய முகம் தேடினார். கடும் உழைப்பிற்குப் பின் அவர் எதிர் பார்த்தபடி ஒரு அழகான ஐந்து வயது சிறுவனைக் கண்டார். மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற அவர் அக்குழந்தையின் பெற்றோர்களின் அனுமதி பெற்று அக்குழந்தையை தத்ரூபமாக வரைந்து முடித்தார். பின்,கொடூர முகத்தையும் வரைந்து, இரண்டு படங்களையும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கலாம் என்று எண்ணினார். கொடூர முகத்தை எங்கு தேடலாம் என்று யோசித்த அவருக்கு ,சிறைச் சாலைகள் தான் அதற்குத் தகுந்த இடம் என்று தோன்றியது. அங்குதானே கொடுஞ்செயல் புரிந்தவர்கள் இருப்பார்கள்! ஆனால் இந்த வேலையும் நினைத்த அளவுக்கு எளிதானதாக இல்லை. அவர் மனதில் கருக் கொண்டிருந்த பாதகன் அவர் கண்ணில் படவில்லை. ஆண்டுகள் பல ஆகின.அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை. இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஒரு சிறையில் அவர் எதிர் பார்த்த கொடூரமான முகம் தெரிந்தது. அவருடைய களைப்பு மறைந்து உற்சாகம் தொற்றிக் கொண்டது. சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அக்கொடியோனை வரைய ஆரம்பித்தார். வரையும்போது அவனுடைய ஒத்துழைப்புக்கிடைக்க அவனுடன் பேச்சுக் கொடுத்தார். அவன் ஊர்,பேர்,பெற்றோர் பற்றிய விபரங்கள் கேட்டு, அவன் சொன்னபோது, அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். ஏன்? அவன் வேறு யாருமில்லை. அழகான முகம் என்று எச்சிறுவனின் படத்தை வரைந்தாரோ, அதே சிறுவன், இன்று காலத்தின் கோலத்தில் மிகப் பெரிய குற்றவாளியாகக் கொடூரமாகக் காட்சி அளிக்கிறான்!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழகும் கொடூரமும் குடி கொண்டுள்ளன.அவன் சூழ்நிலைகள்தான் அவற்றில் ஒன்றை மிகைப்படுத்தியோ,குறைத்தோ காட்டுகிறது.

நத்தைக்கூடு

இளம் காக்கை ஒன்றிற்கு ஒரு நத்தைக்கூடு கிடைத்தது. ஆனால் அதை உடைத்து சாப்பிடத் தெரியவில்லை. அருகிலிருந்த ஒரு வயதான காக்கையிடம் நத்தைக்கூடை உடைப்பது எப்படி என்று கேட்டது. அக்காக்கையும் சற்று உயரே பறந்து சென்று அங்கிருந்து நத்தைக்கூடை அருகில் இருக்கும் பாறை மீது போட்டால் அது உடைந்து விடும் என்று ஆலோசனை சொன்னது. இளம் காக்கையும் அவ்வாறே செய்தது. ஆனால் கீழே திரும்பி வருமுன்னே முதிய காக்கை உடைந்த கூட்டிலிருந்து வெளி வந்த நத்தையை சாப்பிட்டு விட்டது. இது நியாயமா என்று இளம் காக்கை கேட்க முதிய காக்கை சொன்னது, ''நீ என்னிடம் கூட்டை உடைக்க மட்டும் தானே ஆலோசனை கேட்டாய். அதை சொல்லி விட்டேனே!''என்றது. இக்கட்டான சூழ்நிலையில் போகிற போக்கில் யாரிடமாவது ஆலோசன கேட்கக் கூடாது.
இது பிரச்னையா... வாய்ப்பா?

'பிராப்ளம்' ! தினப்படி வாழ்க்கையில் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் 'நெகடிவ்' சொற்களில் ஒன்று!

'ஆபீஸுக்குப் போனா பிரச்னை..! வீட்டுக்கு வந்தா பிரச்னை...! என்னடா வாழ்க்கை இது?'

இப்படி அலுத்துக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவு.

எதுதான் பிரச்னை?

இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்:

நீண்ட நாட்களாக வேலை தேடித் தேடிச் சோர்ந்துபோன ஓர் இளம் பட்டதாரி அவன் ! பல வருடங்களுக்குப் பிறகு பத்திரிகை ஆபீஸில் அவனுக்கு 'நிருபராய்' வேலை கிடைத்தது! பயபக்தியோடு முதல் நாள் வேலைக்குப் போகிறான்! பத்திரிகை ஆசிரியர் அவனை அழைத்து 'இன்று சுதந்திர தினம். நமது துறைமுகத்தில் கப்பல் படையைச் சேர்ந்த போர்க்கப்பல் ஒன்று வந்திருக்கிறது. அதில் சுதந்திர தினம் கொண்டாடுகிறார்கள். அங்கு போய் செய்தி சேகரித்து வா' என்று இவனை அனுப்பி வைக்கிறார்.

முதல் நாள் - முதல் அஸைன்மெண்ட்!

அதனால், ஆசிரியர் சொன்ன அடுத்த நிமிடமே துறைமுகம் நோக்கி ஓடுகிறான்.

அன்று மாலை சுதந்திரதினச் செய்தி சேகரிக்க கோட்டை, கலெக்டர் ஆபீஸ், கட்சி ஆபீஸ் என்று நாலா திசைகளுக்கும் போன நிருபர்கள் அவரவர்கள் சேகரித்த செய்திகளை வேகவேகமாக எழுதுகிறார்கள். ஆனால், நம்முடைய இளை'ன் மட்டும் செய்தி எதுவும் எழுதாமல் சோகமாக உட்கார்ந்திருக்கிறான்! இதைப் பார்த்த சக நிருபர் ஒருவர் 'நீ ஏன் எதுவும் எழுதவில்லை?' என்று பரிவோடு கேட்கிறார்.

நம்முடைய இளைஞன், என் கெட்ட காலம், நான் மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது! உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது! என் முதல் நாள் அஸைன்மெண்ட்டே பெரிய பிரச்னைக்குள்ளாகிவிட்டது. கப்பல் படையில் நடக்கும் சுதந்திர நிகழ்ச்சிசகளை கவர் செய்யச் சொல்லித்தான் ஆசிரியர் என்னை அனுப்பினார், என் கஷ்ட காலம்... கப்பலில் எந்தக் கொண்டாட்டமும் நடக்கவில்லை! 'செய்தி இல்லை' என்று ஆசிரியரிடம் எப்படி சொல்வது என்று பயமாக இருக்கிறது' என்று புலம்ப ஆரம்பித்தான்.

'அப்படியா! கப்பலில் ஏன் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடக்கவில்லை?' - சக நிருபர் சளைக்காமல் கேட்டார்.

கப்பலில் ஓட்டை இருந்திருக்கிறது, சுதந்திரத்தின ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால், இதை யாரும் கவனிக்கவில்லையாம். திடீரென்று ஓட்டை பெரிதாகி கடல் தண்ணீர் 'குபுகுபு வெனப் புகுந்து கப்பலே ழூழ்கும்படி ஆகிவிட்டது. அதைத் தடுப்பதற்குப் பெரிய படையே பாடுபட்டது. இப்படியிருக்க, சுதந்திர தினக் கொண்டாட்டம் எப்படி நடக்கும்?'

சக நிருபர் ஷாக் அடித்த மாதிரி எழுந்து நின்று விட்டார் !

 'அடப்பாவி! இதுதானே முதல் பக்கச் செய்தியாக வரவேண்டும்!' என்று சொல்லிக் கொண்டே முழு விவரங்களைத் திரட்ட அந்த நிருபர் ஓடினார்.

ஆக... 'பிரச்னை' என்று நினைத்து இளைஞன் சோர்ந்து உட்கார்ந்தானே. அது அவன் தன் திறமையை நிரூபிக்க கிடைத்த தங்கமான வாய்ப்பு. அதைத்தான் கோட்டை விட்டிருக்கிறான்.

வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல்படி பட்டியலிட்ட சம்பவங்களின் ஊர்வலம இல்லை! அது எதிர்பாராமல் வருகிற வாய்ப்புகளின் ஊர்வலம்!

ஒவ்வொரு பிரச்னையும் நமக்குக் கிடைக்கிற ஒரு வாய்ப்புதான்.

யோகி ஒருவர் காட்டின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். தூரத்தில் விறகு வெட்டிக் கொண்டிருந்த சிலர் விறகு வெட்டிக் கொண்டிருந்த சிலர், யோகி காட்டுக்குள் போவதைப் பார்த்து, 'நில்லுங்கள் 'நில்லுங்கள் ! என்று கத்தியபடி தலைதெறிக்கப் பின்னால் ஓடிவந்தனர்!

'அந்தக் காட்டில் ஒரு ராட்சஸி இருக்கிறாள். மனித மாமிசம் சாப்பிடும் பூதகி அவள். எத்தனை மனிதர்களைப் பார்த்தாலும், அவர்களைச் சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்டவர்களின் வலது கை கட்டை விரலை மட்டும் பத்திரமாக எடுத்து வைத்ததுக் கொள்வாள்! இப்படி இதுவரை 999 கட்டை விரல்களை சேகரித்து வைத்திருக்கிறாள் ! ஆயிரமாவது கட்டை விரல் கிடைத்து விட்டால் அத்தனையையும் சேர்த்து கழுத்தில் மாலையாக மாட்டிக் கெர்ளவதுதான் அவள் திட்டம் ! அதனால் காட்டுக்குள் போகாதீர்கள்! போனால் பிரச்னைதான்!' என்று ஊர்மக்கள் எச்சரித்தார்கள்.

உங்களுக்கு நன்மை செய்ய இதைவிட நல்ல வாய்ப்பு எனக்கு எங்கே கிடைக்கும் என்று சொல்லிவிட்டு யோகி காட்டுக்குள் சென்றார்.

எதிர்பார்த்த மாதிரியே ஆங்காரச் கூச்சலுடன் அங்கிருந்த ஆலமரத்தின் ஒரு பெரிய கிளையை உடைத்துக் கொண்டு புழுதி கிளப்பியபடி யோகியின் எதிரில் வந்து நின்றாள் ராட்சஸி. ஆனால் மற்றவர்களைப் போல ராட்சஸியைப் பார்த்து யோகி பயந்து ஓடவில்லை!

'என்னைக் கொல்வதன் மூலம் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும் என்றால் என்னைத் தாராளமாகக் கொல்லலாம். நீ பலசாலி என்பதை ஏற்கிறேன்! ஆனால், ஒரு விஷயம் ஆலமரத்தின் கிளையை உடைக்க உனக்குச் சக்தி இருக்கிறதே தவிர, நீ என்னதான் முயன்றாலும் உன்னால் அந்தக் கிளையை மீண்டும் மரத்தில் ஒட்டவைக்க முடியாது! அழிப்பது சுலபம்! ஆக்குவது சிரமம்! என்று துவங்கி நேருக்கு நேர் பேசத் துவங்கினார் யோகி! அவர் சொன்ன வார்த்தைகளைவிட அவரது குரலில் இருந்த உண்மையும் கரிசனமும் ராட்சஸியைச் சரண் அடையச் செய்தது! அது மட்டுமல்ல பிறகு அந்தயோகியின் சீடராகவே மாறினாள் !

இந்தக் கதை உண்மையில் நடந்ததா! இல்லை கற்பனையா என்ற ஆராய்ச்சி முக்கியம் இல்லை! கிட்டத்தட்ட இதே கதை இந்து மத இலக்கியங்களிலும் இருக்கிறது.

நாம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி மிக எளிமையானது! காட்டுக்குள் நுழைய விரும்பிய அந்த யோகிக்கு, ராட்சஸி ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. ஊர் மக்களைக் காப்பாற்றும் ஒரு வாய்ப்பாக இருந்தது!

ஆனால், சிலருக்கு சின்ன விஷயங்கள் பூதாகரமான பிரச்னையா தெரியும் ! அப்படி ஒரு பெண்மணியை நான் சென்னையில் சந்தித்தேன்..
பத்ருஹரி

ஒரு முனிவருக்கு மாம்பழம் கிடைத்தது.அந்த மாம்பழம் சாப்பிட்டவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வர்.முனிவர் அம்மாம்பழத்தை தான் சாப்பிடுவதை விட மக்களுக்கு நல்லது செய்யும் மன்னன் பத்ருஹரி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி மன்னனிடம் கொடுத்தார்.மன்னனோ,அதைத் தான் சாப்பிடுவதை விட தன் மீது உயிரையே வைத்திருக்கும் மனைவி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி அவளிடம் கொடுத்தான்.அவளோ மாம்பழத்தைத் தான் உண்ணாது தன் ஆசை நாயகனான நொண்டியும் கூனனுமான குதிரைக்காரனிடம் கொடுத்தாள்.அவனோ,அவன் மனைவி நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கருதி அதை மனைவியிடம் கொடுத்தான்.அந்தப் பெண் மிக நல்ல பெண்.அவள், தான் நீண்ட காலம் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம்,இந்த நாட்டை ஆளும் மன்னன் சாப்பிட்டால் மக்கள் அனைவருக்கும் நல்லது என்று கருதி மாம்பழத்தை அதன் சிறப்பை விளக்கி மன்னனிடம் கொடுத்தாள்.மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.பழம் எப்படித் தன் கைக்கே திரும்ப வந்தது என்று விசாரித்தான்.அடுத்த நாள் அவன் கூறாமல் சன்யாசம் பூண்டான்.

காதல் ஒரு சில நியாயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.முறையற்ற உணர்வுகளைக் காதல் என்று நினைத்தால் சீரழிவுதான்.

http://jeyarajanm.bl...-post_2886.html

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் ( பாகம் 02 , 21 - 30 )

21 ஆனை நெருஞ்சி அல்லது பெரு நெருஞ்சி (Pedalium murex) 


இது பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள்:  http://en.wikipedia..../Pedalium_murex

22 இலந்தை (  jujube or Ziziphus jujuba)

 

இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா / தமிழ் நாடு மற்றும் சீனா ஆகும் . வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி

74% மாவுப் பொருள்

17 %, புரதம்

0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

http://ta.wikipedia....org/wiki/இலந்தை

http://en.wikipedia....ziphus_zizyphus

23 இலவு அல்லது இலவம் பஞ்சு மரம் ( The Great Kapok Tree or Ceiba pentandra ) 


இலவு அல்லது இலவம் பஞ்சு மரம் வெப்பவலயத்துக்குரிய ஒரு மரமாகும். இலவமரம் பூக்கும். காய்க்கும். பழுக்காது. காய் நெற்றாகிவிடும் பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும் . இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத் தொடர் உருவாயிற்று.

இலவ மரத்தின் தாயகம் ஆப்பிரிக்கா ஆகும். இது ஆப்பிரிக்காவில் இயற்கையாகவே வளர்கிறது. உலகின் மற்ற பகுதிகளில் இது தோட்டப் பயிராக பயிரிடப்படுகிறது. காயிலிருந்து பஞ்சு எடுக்கப்படுகிறது. இலவம் பஞ்சு உறுதியற்றது. எனவே, இவை நூல்நூற்க பயன்படுவதில்லை. மெத்தை, தலையணை, உயிர்காக்கும் உறைகள் தயாரிக்க மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன. இதனுடைய விதையிலிருந்து எண்ணை எடுக்கப்பட்டு சோப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. பிண்ணாக்கு கால்நடைத் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. காயின் மேலோடு எரிபொருளாக பயன்படுகிறது. இதனுடைய மிருதுவான பகுதியிலிருந்து தீக்குச்சி தயாரிக்கப்படுகிறது.

இலவ மரத்தில் நாட்டு ரகம், சிங்கப்பூர் ரகம் என பல வகைகள் உள்ளன. இம்மரத்தினைச் சாலையின் இருபுறங்களிலும் வளர்ப்பதால் ஒரு கம்பீரமான அழகினைக் கொடுக்கிறது. இம்மரம் எல்லா நிலங்களிலும் குறிப்பாக தரிசு நிலங்கள், சாலை ஓரங்களில் நன்கு வளரும். இது வறட்சியைத் தாங்கவல்லது.

நவம்பர் டிசம்பரில் மரங்களில் பூக்க ஆரம்பிக்கும். அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதன் மலர்கள் காயாகி பழுக்காமல் நார் போன்று மாறி பஞ்சாகி பின் வெடிக்கிறது. 15 வருடத்திற்கு மேற்பட்ட மரங்களிலிருந்து விதைகள் எடுப்பது நல்லது. விதைகளை மேடை பாத்திகளில் நேரடியாகவோ அல்லது பாலித்தின் பைகளிலோ விதைக்கலாம். நாற்றுக்கள் ஆறு முதல் ஒன்பது மாதங்களில் நடவுக்கு தயாராகி விடும். நன்கு வளர்ந்த மரங்கள் 2 முதல் 3 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்து விடும். இருப்பினும் 6 ஆண்டுகள் ஆன பின் தான் மிகுதியாகவும், ஒரே சீராகவும் காய்க்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரை காய்களை அறுவடை செய்யலாம்.
நற்றிணை 105, முடத்திருமாறன் , பாலை திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது

முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி விளிபட
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அருஞ் சுரக் கவலைய என்னாய் நெடுஞ் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டு படு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே.

அகநானூறு 11, ஔவையார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு,
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,
கயந்துகள் ஆகிய பயம்தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென,
வம்புவிரித் தன்ன பொங்குமணற் கானயாற்றுப்,
படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்,
மெய்புகுவு அன்ன கைகவர் முயக்கம்
அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து
அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல வாகிப்
பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே!


24 இண்டு , காட்டுசிகை அல்லது சீயாக்காய் மரம் ( Climbing wattle tree or Acacia concinna ). 

இண்டு , காட்டுசிகை அல்லது சீயாக்காய் மரம் ஏறு/பற்றுக் கொடி வகையைச்சார்ந்ததாகும். இவை புதர் போன்று வளரும் தன்மையது. இதன் இலை இரட்டைச்சிறகிலை யமைப்பையும், பூ மஞ்சள் நிறத்திலும் கோளகவடிவிலும் காணப்படும். காய் பழுப்பு வண்ணத்திலும், காய்ந்த நிலையில் சுருக்கம் மற்றும் துண்டிட்டதுப் போலவும் காட்சியளிக்கும். இதன்காய்களில் 6-10 விதைகள் காணப்படும்.

இத்தாவரத்தின் பழங்களில் கூடுதல் அல்கலாய்டுகள் காணப்படுகின்றன. இத்தாவரத்திலிருந்துப் பெறப்படும் காய்களில் இருந்து உருவாக்கப்படும் தூள் சிகையை அலசவும் கழுவவும் பயன்பட்டுவருகிறது. ஆகையால் இதைச் சிகைக்காய்த் தூள் என விளிக்கிறோம். அதன் சிறப்பாலேயே இது சிகைக்காய்ச் செடி என அழைக்கப்படுகிறது.

இச்செடியின் சிறப்பே இதன் காய்களால் என்றுச் சொன்னால் மிகையல்ல. இதன் காய்களைப் பொடித்து பெறப்படும் தூளைப் பல நூற்றாண்டுகளாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன் படுத்தி வந்துள்ளனர்.

பெரும்பாலான செயற்கை முடிப்பராமரிப்புப் பொருட்களில் இவை கலக்கப்படுகின்றன.

இதற்கு பூஞ்சான் எதிர்ப்பு பண்பு, சரும மற்றும் தோல் நோய்களுக்குச் சிறப்பான மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறது. இது ஒரு மலமிலக்கியாகவும் இருமல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தவல்லது .
இதன் மரப்பட்டைகளில் இருந்து சேப்போனின் என்னும் பொருள் பிரித்து எடுக்கப் படுகிறது. இதன் இலைகளில் டானின், அமினோக் காடிகள் மற்றும் புரதங்கள் நிறைந்துக் காணப்படுகிறது. இதன் இலைகளில் புளிமத்தன்மைக் கூடுதலாகக் காணப்படுவதால் இதை சட்டினி தயாரிக்கவும் பயன் படுத்துகின்றனர்.

இதன் காய்களில் இருந்து உருவாக்கப்படும் பொடியில் உள்ள அமில மற்றும் கார நெறித்தன்மை முடியின் பாதுகாப்பிற்கும் அதனில் உள்ள நுரைக்கும் தன்மை மயிரைச் சுத்தம் செய்யப்பயன்படுகிறது.
http://ta.wikipedia....கைக்காய்ச்_செடி
http://en.wikipedia....Acacia_concinna

25 இலைக்கள்ளி ( EUPHORBIBA )


வளரியல்பு :-

இலைக்கள்ளி கள்ளி வகைகளின் ஒரு வகை. இது எல்லாவித மண் வளங்களிலும் வளரும் தன்மையுடையது. இது வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது. இது நேராக வளரக்கூடியது. சுமார் ஆறு அடி முதல் பன்னிரண்ட டி உயரம் வளரக் கூடியது. இது ஒரு சிறு மர வகை இனம். இதன் தண்டுகள் பச்சையாக இருக்கும். இலைகள் முயல் காது போல் பச்சையாக இருக்கும். எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை தடிப்பாக இருக்கும். பூ சிகப்பாக மலர்ந்து முக்கோண வடிவில் சிறிய காய்கள் விடும். ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். இதை உயிர் வேலிகள் அமைக்கப் பயன் படுத்துவார்கள். இதன் பால் பட்டால் புண்ணாகிவிடும். கால் நடைகள் இதன் இலையைத் தின்னாது. இந்தியாவிலும் மலேசியாவிலும் அதிகமாகக் காணப்படும். தென் இந்தியாவில் அதிகம் பயன் படுத்துகறார்கள். நேபால், சியாம், பர்மா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதை விதை மூலம் இன விருத்தி செய்வதை விட கிளையை வெட்டி நடுவதன் மூலம் விரைவில் வளர்கிறது.

மருத்துவப் பயன்கள் :-

இலைக்கள்ளிக்கு மற்ற கள்ளிக்குள்ள குணங்கள் யாவும் இதற்கும் உண்டு. இலைக்கள்ளி சிறந்த மருத்துவ குணமுடையது. நீர்மலம் போக்குதல், கோழையகற்றுதல், தடிப்புண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது. வேர் நுண்புழுக் கொல்லும்.

இதனால் காது சம்பந்தமான நோய்கள் குணமாகும். பாம்புக் கடிக்குச் சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன் படுகிறது. மற்றும் ஆஸ்த்துமா, இருமல், காதுவலி, பூச்சிக் கொல்லி, மூலம், மூட்டுவலி, காச்சல், இரத்தசோகை, குடல் புண், தோல் நோய், மலச்சிக்கல், மஞ்சக்காமாலை, வாதம், கட்டி, சிறுநீர் தடை போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது.

1. இலைக்கள்ளி வேருடன் வெங்காயம் வைத்து அரைத்து அதை குழந்தைகளின் அடிவயிற்றில் பூசினால் குடல் புழு கழியும்.

2. இலைக்கள்ளி சாற்றுடன் இஞ்சி சார் கலந்து நன்றாகச் சூடு செய்து பதம் வந்த பின் இரக்கி ஆரவைத்து வாதம் உள்ள இடத்தில் பூசினால் குணமடையும்.

3. இலைக்கள்ளிப் பாலுடன் மஞ்சள் பொடி சேர்த்து மூலத்திற்குப் பயன் படுத்துவார்கள்.

4. இலைச் சாற்றை அல்லது பாலைப்பாலுண்ணிகளில் தடவி வர அவை உதிரும்.

5. இலைக்கள்ளி மரச் சக்கையை வதக்கி நகச்சுற்றுக்குக் கட்டிவர குணமாகும்.

6. இலையை வதக்கி அடிவயிற்றில் கட்டதேங்கிய சிறுநீர் வெளிப்படும்

7. இலையை வாட்டிச் சாறு பிழிந்துஇளஞ்சூட்டில் காதில் விட காது வலி தீரும்.

8. இலைச்சாறு அல்லது பாலைவேப்பெண்ணெய் சேர்த்து நன்கு கலந்துமேற்ப்பூச்சாகதேய்த்துவர மூட்டுப் பிடிப்பு,வாதக் குடைச்சல் மேக வாய்வு ஆகியவை தீரும்.

9. இலையை வாட்டிப் பிழிந்து 7,8 துளிச்சாறெடுத்துத் தாய்ப்பாலில் கலந்துகுழந்தைகளுக்குப் புகட்ட மலக்கட்டு நீங்கும்.

10. . வாட்டிப் பிழிந்த சாற்றுடன் சமஅளவுதேன்கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு ஒருதேக்கரண்டியை 30 மி. லி. நீரில் கலந்து மூன்றுவேளையும் கொடுத்துவர ஈளை,இரைப்பிருமல் ஆகியவை தீரும்.

11. இலைச் சாற்றுடன் சிறிது உப்பிட்டுக் காய்ச்சிவைத்துக் கொண்டு 1/2 அல்லது 1 தேக்கரண்டிகாலை மாலை கொடுத்துவரக் கக்குவான்,சோகை, வயிற்றுப் புண், காமாலை, சூலைஆகியவை தீரும்.

12. 10 கிராம் கடுகாய்த் தோலில் 80 கிராம்இலக்கள்ளிப் பாலைச் சேர்த்து நாற்பது நாட்கள்உலர்த்திப் பொடித்துக் கொண்டு 1/4 கிராம்வெந்நீரில் கலந்து உட்கொள்ள பேதியாகும்.இதனால் ஈரல்கள் வீக்கம், பெருவயிறு, ஆறாதபுண்கள், இரைப்பிருமல், கிரந்திப் புண்கள்ஆகியவை தீரும்.
https://www.facebook...122834401198406

 26 இறப்பர் மரம் rubber tree , Pará rubber tree, or sharinga tree ( Hevea brasiliensis ) 


இறப்பர் மரத்தின் இறப்பர் , மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் ஊடுபுகவிடுதிறன் மிகக் குறைந்ததுமாகும். எனவே இது சிறப்பான பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. இறப்பர் மரம் முதன்முதலில் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் தமது குடியேற்ற நாடுகளில் வர்த்தகப் பயிராகப் பயிரிடப்பட்டது. இன்று உலகில் 94%மான இயற்கை இறப்பர் ஆசியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இறப்பரை பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றன.

இயற்கை இறப்பர் ஐசோபிரீனின் பல்பகுதியமாகும்(cis-1,4-polyisoprene). இது மீள்தன்மையானதும் வெப்பமிளக்கியுமாகும். இதனுடன் கந்தகத்தை சேர்த்து வல்கனைசுப் படுத்துவதன் மூலம் பயன்படுத்தக்கூடிய இறப்பர் உருவாக்கப்படுகிறது.

இறப்பர்ப்பால் இறப்பர் மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. தோட்டங்களிலுள்ள இறப்பர் மரங்களின் ஆயுட்காலம் 32 ஆண்டுகளாகும்.

இறப்பரின் சிறப்பான வளர்ச்சிக்கு பின்வரும் காலநிலை நிலைமைகள் காணப்படவேண்டும்.

250செ.மீ. மழைவீழ்ச்சி
வெப்பநிலை வீச்சு 200C-340C
80% வளிமண்டல ஈரப்பதன்
நல்ல சூரியஓளி
கடும் காற்று வீசாத பகுதி
http://ta.wikipedia..../இயற்கை_மீள்மம்
http://en.wikipedia....ea_brasiliensis

27 செந்தாழை அல்லது அன்னாசி மரம் ( pineapple or Ananas comosus )


செந்தாழை என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இதன் மற்றொரு பெயர் அன்னாசி ஆகும். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது.

28 இரம்புட்டான் அல்லது இறம்புட்டான் ( rambutan or Nephelium lappaceum )


இரம்புட்டான் அல்லது இறம்புட்டான் நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழமரத்தாவரம். ரம்புட்டான் என்கின்ற சொல் ரம்புட் என்கின்ற மலாய் மொழியில் இருந்து தோன்றியதாகும். ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும் தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.

ரம்புத்தானை 12–20 மீட்டர் வரை வளரக்கூடிய தாவரம்[2]. இலைகள் மாற்றொழுங்கானவை,10–30 செ.மீ நீளம், 3-11 சிற்றிலைகள் கொண்ட கூட்டிலை. சிற்றிலைகள் 5–15 செ.மீ நீளமும் 3-10 செ.மீ அகலமும் கொண்டது. ரம்புத்தான் ஓர் ஈரில்லத்தாவரமாகும். ரம்புத்தானை விதை மற்றும் ஒட்டுக்கன்று போன்ற முறைகள் வழி வளர்க்கப்படுகின்றன .ரம்புத்தான் விதைகள் என்பது கடிதோல் விதைகள் வகையை சேர்ந்தது .இவ்வகை விதைகளை அதிக காலத்திற்கு சேமித்துவைக்க முடியாது. இவ்வகை விதைகளை சிறிது காலத்திற்கு சேமித்து வைப்பதற்கு வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட ஈரநிலை சேமிப்பு முறை கையாளப்படுகின்றது . கடிதொல் வகை விதைகள் எளிதில் உயிப்பு திறனை இழந்துவிடும் என்பதால் பெரும்பாலான ரம்புத்தான் பழ விதைகள் சேகரிப்பட்டவுடனே போலிபெக் என்கின்ற விதைப்பையில் நடப்படுகின்றன. ரம்புத்தான் நடவாளர்கள் பெரும்பாலோர் ஒட்டுக்கட்டுதல் முறையை இம்மர வளர்ப்பில் பயன்படுத்துகின்றனர். இலைக் கைய்ப்புத் திறன் பெற்று எழுதுக்கோல் (பென்சில்) அளவு வளர்ச்சியடைந்த மரத்திலே ஒட்டுக்கட்டுதல் முறை பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது. ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான கைகளைத் தரும். புதுதாக பறித்தப் பழங்களை கூடைகளில் போட்டு வைப்பது நல்லது. அதே நேரத்தில் அதிகமான பழங்களை ஒரு கூடையில் மிகவும் நெருக்கியப் படி போட்டுவைப்பது நல்லதல்ல. அவ்வாறு செய்வதனால் பழங்கள் விரைவிலே காய்ந்து விடும் .

ரம்புட்டான் அயனமண்டல சூட்டுக் காலநிலைக்குப் பொருத்தமானது. ஆயினும் 22–30° சதம அளவு வெப்பநிலை வீச்சு பொருத்தமானது. கடற்காற்றினால் பாதிக்கப்படும் ஆதலால் கடற்கரைக்கு அண்மையில் செய்கை பண்ண முடியாது. ஆண்டு முழுவதும் பரவலாகப் பெய்கின்ற 1500-2000 மி.மீ மழைவீழ்ச்சி சிறந்தது.சாரீரப்பதன் 75-80 சதவீமாக இருக்க வேண்டும்.

இரம்புட்டான்,பொதியிடப்பட்ட பானம்
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 80 kcal 340 kJ
மாப்பொருள் 20.87
- நார்ப்பொருள் 0.9
கொழுப்பு 0.21
புரதம் 0.65
நீர் 78.04கி
உயிர்ச்சத்து ஏ 0 μg 0%
தயமின் 0.013 mg 1%
ரிபோஃபிளாவின் 0.022 mg 1%
நியாசின் 1.352 mg 9%
பான்டோதெனிக் அமிலம் 0.018 mg 0%
உயிர்ச்சத்து பி6 0.020 mg 2%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9) 8 μg 2%
உயிர்ச்சத்து பி12 0.00 μg 0%
உயிர்ச்சத்து சி 4.9 mg 8%
கால்சியம் 22 mg 2%
இரும்பு 0.35 mg 3%
மக்னீசியம் 7 mg 2%
பாசுபரசு 9 mg 1%
பொட்டாசியம் 42 mg 1%
சோடியம் 11 mg 1%
Nutrient values and weights are for edible portion
Percentages are relative to US
recommendations for adults.
Source: USDA Nutrient database

http://ta.wikipedia....g/wiki/இறம்புட�

%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
http://en.wikipedia....elium_lappaceum

29 ஈர வெங்காயம் அல்லது வெங்காயம் (The onion or Allium cepa)


வெங்காயம் இந்தியா, பாக்கிஸ்த்தான், ஆப்கானித்தான், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெங்காயத் தாளும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

உலகின் முதல் பத்து வெங்காய உற்பத்தியாளர்கள் — 2008 (டன்கள்)
சீன மக்கள் குடியரசு 20,817,295
இந்தியா 8,178,300
ஆஸ்திரேலியா 4,003,491
ஐக்கிய அமெரிக்கா 3,349,170
பாக்கிஸ்த்தான் 2,015,200
துருக்கி 2,007,120
ஈரான் 1,849,275
எகிப்தின் கொடி எகிப்து 1,728,
உருசியா 1,712,500
பிரேசில் 1,299,815

வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் ப்ரோப்பினிசிஸ்டைன் ஸல்பாக்ஸைடு என்ற பொருள் மீது வினை புரிந்து ப்ரோப்பின் ஸல்பினிக் அமிலமாக மாறுகிறது.இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது.அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.
http://ta.wikipedia..../wiki/வெங்காயம்
http://en.wikipedia....iki/Allium_cepa

30 உதிரவேங்கை அல்லது வேங்கை மரம் ( Indian kino or Pterocarpus marsupium ) 


வேங்கை மரமானது நடுத்தர அளவிற் பெரியதான இலையுதிர் தாவரம் ஒன்றாகும். இது 30 மீ உயரம் வரை வளரக் கூடியது. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டதான இம்மரம் இந்தியாவின் கேரள-கருநாடக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது.

வேங்கை மரத்தின் (வைரம், இலைகள், பூக்கள் உட்படப்) பல்வேறு பகுதிகளும் நெடுங்காலமாக ஆயுர்வேத மருத்துவத்திற் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. வேங்கை மரவைரம் காயங்களை மூடவும், எரிவு மற்றும் நீரிழிவு போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வேங்கை இலைகள்:

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சிமிலிப்பால் தேசிய வனப் பகுதியில் வாழும் கொல் இனத்தினர் வேங்கை மரப் பட்டையை மா மரப் பட்டை உட்பட வேறு சில மரங்களின் பட்டைகளுடன் அரைத்து பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர் . கன்னட மக்கள் வேங்கை மரவைரத்தால் ஒரு வகையான கண்ணாடி செய்து அதனை நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். கணையத்திலிருந்து இன்சுலினை மீளச் சுரக்கச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரேயொரு தாவரப் பொருள் வேங்கை மரப் பிசின் ஆகும்.

கட்டிகள் கரைய :

உடம்பில் உண்டாகும் கட்டிகளைக் கரைப்பதில் வேங்கை மரம் முன்னோடியாய்த் திகழ் கிறது. வேங்கை இலையு டன் சமஅளவு ஆளி விதை, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்கு விழுதாய் அரைத்து கட்டிகளின்மீது பூசிவர, கட்டிகள் மறையும்.

கொழுப்புக் கட்டிகள் கரைய :

சிலருக்கு உடம்பு முழுவதும் கொழுப்புக் கட்டிகள் இருப்பதைப் பார்த்திருப்போம். நவீன மருத்துவர்கள் வயதானால் இது கரைந்துவிடும் என பக்குவமாய் பதில் சொல் வார்கள். வேண்டுமா னால் ஆபரேஷன் செய்து அகற்றிவிடலாம் என்பார் கள். ஒன்றா இரண்டா... உடம்பெல்லாம் கட்டிக்கு எங்கெல்லாம் ஆபரேஷன் செய்வது? வேங்கை இலை, வேங்கைப் பூ, மகிழம்பூ, ஆவாரம்பூ, வேப்பம்பூ, மாதுளம்பூ ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாகக் கலந்து நன்கு பொடியாய் அரைத்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கரைத்து உடம்பெல்லாம் பூசி தொடர்ந்து குளித்துவர கொழுப்புக் கட்டிகள் கொஞ்சங் கொஞ்சமாய்க் கரைந்துவிடும்.

ஆறாத புண்களை ஆற்ற :


வேங்கைப்பட்டை 100 கிராம் அளவில் எடுத்து, அத்துடன் 10 கிராம் மஞ்சள் சேர்த்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கச் செய்து பாதியாய் சுண்ட வைக்கவும். இதில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து, புண்களின்மீது ஒற்றித் துடைத்துவர ஆறாத புண்ணும் ஆறும். சர்க்கரை நோயில் உண்டாகும் புண்ணை ஆற்ற இதைவிடச் சிறந்த மருந் தொன்றுமில்லை.

சகல தோல் நோய்களும் தீர :
வேங்கைப்பட்டை, வேப்பம்பட்டை, சந்தனம், மருதம்பட்டை, ஆவாரம்பூ, தாமரைப்பூ, செம்பருத்திப்பூ, மகிழம்பூ, கடுக்காய்பூ, நெல்லிக்காய், தான்றிக்காய், கஸ்தூரி மஞ்சள், பச்சைப்பயறு ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாகக் கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவும். உடலைப் பேணவும் அழகைப் பேணவும் ஒப்பற்ற மருந்து இதுவாகும்.

இதனைப் பூசிக் குளித்துவர, படை, சொறி, படர்தாமரை, தேமல், கருந்தேமல், வெண்புள்ளி நோய், தொடை இடுக்குகளில்- அக்குள் பகுதிகளில் உண் டாகும் படை நோய்கள், கட்டிகள் மற்றும் உலகையே அச்சுறுத்தும் தோல் சார்ந்த நோயான "சோரியாஸிஸ்' போன்ற நோய்களுக்கு இதனை வெளி மருந்தாய்ப் பாவித்து வியத்தகு பலன் பெறலாம்.

சீதபேதி குணமாக :

வேங்கைப் பட்டை யைத் தேவையான அளவு எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, இதனை குடிநீராய்ப் பருகி னால், சீதபேதி, சீதக்கழிச்சல், உஷ்ணபேதி போன்றவை உடனே தீரும்.

உடலை இரும்பைப் போல் உறுதியாக்க :

மரங்களில் வேங்கையும் கருங்காலியும் மிகவும் வலுவான மரங்களாகும். இவற்றில் வைரம் பாய்ந்த மரங்களைக் கீற கோடாரி முனையும் வளைந்துவிடும். அத்தகைய உறுதி வாய்ந்த மரங்களாகும். உறுதித்தன்மை (Strength) உள்ள ஒரு பொருள்தான் நமது உடம்பையும் இரும்பாக்க முடியும்.

சித்தர்களின் மருந்து கண்டறியும் விதமே, ஒரு பொருளின் தன்மையை மனித உடம்பில் ஒப்பிட்டுப் பார்த்து தேர்வு செய்துவதுதான். வேங்கைப்பட்டை, கருங்காலிப் பட்டை, ஆவாரம்பட்டை, மருதம்பட்டை, கடுக்காய், ஏலக்காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துத் தூள் செய்து, தினமும் காலை- மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வர, பல்லியாய்- ஒல்லியாய் உள்ள இளைத்த உடலும் தேறும்; உடல் இரும்பைப் போல் உறுதி பெறும். நமது உடம்பின் எலும்பு மண்டலம் மற்றும் நரம்புமண்டலங்கள் வலுவடையும். உடம்பைப் பீடித்துள்ள எந்த நோயும் கட்டுப்படும்.

சர்க்கரை நோய்க்கு மாமருந்து:


வடஇந்தியாவில் இதன் பட்டையை இரவில் வெந்நீரில் ஊறவைத்து விடுவார்கள். அதிகாலையில் தண்ணீரை வடிகட்டிக் குடித்துவிடுவார்கள். இதனைப் பருகிப் பார்த்தவர்கள் சர்க்கரை நோய் கட்டுப்படுவதை உணர்வார்கள். சர்க்கரை வியாதியில் உண்டாகும் அதிமூத்திரம் உடனே கட்டுப்படும். வேங்கைப்பட்டை, நாவல் கொட்டை, சிறுகுறிஞ்சான், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஆவாரம்பட்டை ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் காலை- மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குணமாகும். சர்க்கரை வியாதிகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளிலிருந்தும் உடனே மீண்டு விடலாம்.

வேங்கை இன்னும் பல்வேறு வகைகளில், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிக் கொண்டு தான் இருக்கிறது. பித்தவாந்தி, செரியாமை, சீதபேதி, வெள்ளைப்படுதல், இருமல், உஷ்ண இருமல் போன்ற நோய்களுக்கும் அதியற்புதப் பலன்களை வேங்கை தன்னகத்தே கொண்டுள்ளது.

வேங்கை மரம் உஷ்ணத்தை ஈர்க்கும் வல்லமை பெற்றது. காற்றிலுள்ள மாசுகளைத் தூய்மை செய்வதற்கான பாங்கு வேங்கையில் அபரிமிதமாய் உள்ளது. வேங்கை மரத்திலிருந்து மிக அதிக அளவில் பிராண வாயு வெளி யேறுகிறது. இதனை வீட்டிற்கு ஒரு மரமாய் வளர்த்தால் காற்று தூய்மையாகும். தூய்மை யான காற்றால் மேகம் திரளும். பருவ மழையும் தவறாது பொழியும். பொழிந்த மழையும் நிலத்தைப் பண்படுத்தி, நீரை வளப்படுத்தும்.
http://ta.wikipedia....i/வேங்கை_(மரம்)
http://en.wikipedia....arpus_marsupium

Sunday, January 5, 2014

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் ( பாகம் 01 , 11 - 20 )

11 நெல்லி மரம் ( star gooseberry or gooseberry tree ) (  Phyllanthus distichus ).


கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது .

நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.

நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்துக், கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய். மலைகளில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும். அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக் காய்களை உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது. இலையடி செதில் மிகச் சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும், பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும், கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும். பூ இதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பலவீனப் பட்டதாக இருக்கும். உருண்டை வடிவமானது. சதைப்பற்று உள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்று கோணங்கள் உடையது. விதையுறை கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 வருடங்கள் கூடச் செல்லலாம். நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

இந்த மரத்தின் இலை, பட்டை, வேர், வேர்ப்பட்டை, காய், பழம், காய்ந்த பழம், பூ, விதை என்று அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணங்களைக் கொண்டன .

இரு வகை நெல்லிக்காயும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த வகையில் அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடியதாகும். எனினும் நம் வீடுகளில் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், வடகம் போன்றவற்றையும் தயாரிப்பது என்பது நடைமுறையாகும். அதுபோன்றே நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தருபவையாகும். கோடை காலங்களில் நமக்குப் பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் சஞ்சீவி போன்றதாகும். எனவே நெல்லிக்காயை எந்தவிதத்திலும் அடிக்கடி உபயோகிப்பது என்பது அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

பழத்தில் உள்ள விதைகள் சத்திற்கு நீரிழிவை நீக்கும் இயல்பு உண்டு.

நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. நெல்லிக்காய் சாற்றில் அதிக அளவு அயர்ன் உள்ளதால் முடிச்சாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் நிறம் கறுப்புக் கலந்த பழுப்பு நிறம்.

புதிய மற்றும் உலர்ந்த பழங்களிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ‘திரிபலா’ என்னும் மும்மருந்து அடங்கிய கூட்டுப் பொருள் தயாரிப்பில் இதன் பங்கு முதன்மையானது. புதிய பழங்கள் குளிர்ச்சியையும், இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.

உயிர்ச்சத்தான வைட்டமின் ‘சி’ சத்து இதில் நிறைந்துள்ளதால் இந்திய மருத்துவத்தில் உபயோகிக்கப்படுகின்றன. இலைகள், பட்டை, வேர், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவப் பயனுள்ள பகுதியாகும்.

இலைகளின் சாறு நாட்பட்ட புண்களுக்குப் பூசப்படுகிறது. வடிசாறு வெங்காயத்துடன் கலந்து வயிற்றுப் போக்கினைத் தீர்க்கும். பட்டையும், வேரும் சதை இறுக்கும் தன்மை கொண்டவை. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. பழங்கள் அதிகமாக மசி தயாரிக்கவும் தலை கழுவி நீர்மம் தயாரிக்கவும், பட்டைகளுடன் சேர்ந்து சாயங்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.

சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

வாழ்நாளை நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும். நடுத்தர ஆரஞ்சுப் பழம் ஒன்றில் இருப்பதைப் போல இருபது மடங்கு வைட்டமின் ‘சி’ சத்து இதில் அடங்கியிருக்கிறது. காய்கள் காய்ந்தாலும், கொதிக்க வைத்தாலும் இச்சத்து அழிவதில்லை. “ஸ்கர்வி” என்ற தோல் நோய் இச்சத்து குறைவினால் தான் ஏற்படுகிறது. இச்சத்துக் குறைவை இக்கனி ஈடு செய்கிறது. இரும்புச் சத்து மிகுந்து காணப்படுவதால், கேசப் பராமரிப்பில் சிறந்த ஊக்குவியாகவும், சாயமேற்றும் பொருளாகவும் பயன்தருகிறது.

வற்றலுக்கு நெல்லி முள்ளி என்று பெயர்.

நெல்லிப் பழங்களை விதை நீக்கி இடித்துச் சாறு பிழிந்து சம அளவு சர்க்கரை சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம். அல்லது நெல்லி வற்றலை இடித்துத் தூளாக்கி சம அளவு சர்க்கரை சேர்த்து காலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்த கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக உளைச்சலினால் ஏற்படும் கை நடுக்கம் குணமாகிறது. மதுமேக நோயாளிகளுக்கு நெல்லிக்காயுடன் கறி மஞ்சளும், நாவல் கொட்டையும் சம அளவு சேர்த்து வைத்து காலை மாலை வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர நோய் விரைவில் கட்டுப்படும்.

நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாதுப்பொருள், இரும்பு, நிக்கோடினிக் அமிலம் முதலியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் கொலஸ்டிரால் படிதலை வைட்டமின் ‘சி’ தடுக்கிறது. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை நெல்லிக்காய் விலக்குகிறது. பொதுவில் வாதமும் சமப்பட்டு விடுகிறது.
கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். இது திரிதோஷ சமணி, வாத, பித்த, சிலேத்துமங்களை சமநிலையில் வைக்கக் கூடியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற மூன்று சுவைகளும் முத்தோஷங்களை சமனப்படுத்தி, உடலைத் தேற்றுகிறது.

நெல்லிக்காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன் குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சமஅளவு சூரணமாகச் செய்து சேர்க்க “திரிபலா” சூரணம் ஆகிறது. நெல்லிப்பழத்தில் முழுமையும் மரம் பயன்பட்டுச் சிறப்படைவது போன்று மனித உடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நெல்லிக்காய் தருகிறது.

நெல்லிக்காய் சாற்றுடன் சுத்தம் செய்து சுடவைத்த கிளிஞ்சல் சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்துச் சூடுகாட்டி களிம்பு போல் செய்து குதிங்கால் வெடிப்பில் தடவ குணமாகும்.

கடல் அமிர்தம் ஒத்த நெல்லிக்காயைப் பகற்பொழுதில் உண்ண பைத்தியம், கபநோய், பீனிசம், உன்மத்தம், மலபந்தம் நீங்கும். காயின் புளிப்புச் சுவையால் வாயுவும், துவர்ப்பால் கபமும், இனிப்பால் அழகும் உண்டாகும்.

நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.

இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.

நெல்லிக்கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவ குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியூறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும்.

உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

உணவு செரிமானமின்மைக்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. நெல்லிக்காயைப் பதப்படுத்தி தலையில் தேய்த்து குளிக்கவும் நெல்லிக்காய் தைலம், மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்தவித தொல்லையுமின்றி, மூளையைக் குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.
  http://en.wikipedia....nthus_distichus

12 ஆமணக்கு ,castor oil plant, Ricinus communis


ஆமணக்கு ,வெப்பவலயப் பகுதிகளில் 10-13 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடிய மரமாகும். எனினும் மித வெப்பப் பகுதிகளில் சுமார் 1-3 மீட்டர் வரையே வளரக்கூடிய ஓராண்டுத் தாவரமாக உள்ளது. இதன் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக் கூடியது. நல்ல பேதி மருந்தாகப் பயன்படுகிறது.

விவசாய விளை நிலங்களின் ஓரங்கள், தோட்டந்துரப்புகள், தரிசு நிலங்கள், மணல் பிரதேசங்கள், வளம் குறைந்த பகுதிகளிலும் நன்றாக வளர்வதால் இன்று மிக அதிகளவில் பிரபலமடைந்து வருகின்றது.

எண்ணெய் வித்துக்கள் பலவகைகளில் காணப்படுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்களும் எண்ணிலடங்காதவை. ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக்கப்படுகின்ற விளக்கு எண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றார்கள்.

 ஆமணக்கு செடியின் விதை கொட்டை முத்து எனவும் அழைக்கப்ப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன.

பொதுவாக ஆமணக்குச் செடிகளைப் இருவகைகளாகப் பிரிக்கலாம்.

சிற்றாமணக்கு


பேராமணக்கு


செல்வாமணக்கு என்ற ஒரு வகையும் காணப்படுகின்றது. இது தவிர, காட்டாமணக்கு, எலியாமணக்கு போன்ற பெயர்களில் குத்துச்செடி ஆமணக்குச் செடிகள் இருக்கின்றன. பேராமணக்குப் பொதுவாக ஆற்றங்கரையோரங்களில் பயிரிடப்படுகின்றது. இதனை படுக்கையாமணக்கு என்றும் கூறுவார்கள்.

ஆமணக்குச் செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும் ஒரு வகையான புதர்ச் செடியாகும். இதனை ஒரு சிறிய மரம் என்றே கூறலாம். பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும். இதன் தண்டுப் பகுதியில் வெள்ளையான வண்ணத்தினைப் போன்ற மாவு படிந்து காணப்படுகின்றன.

 இதன் இலைகள் நீண்ட காம்புகளையுடையதாக இருக்கின்றது. இந்தக் காம்பின் அடியில் சுரப்பியும், கை வடிவத்தில் பிளவுபட்ட மடலும், அதில் பல் விளிம்பு பற்களும் காணப்படுகின்றன. ஆண், பெண் வகைகளில் இரு விதமான மலர்கள் இதில் காணப்படுகின்றன. ஆண் மலரில் மகரந்தத்தூள்கள் பல கற்றைகளாகவும், பெண் மலரில் சூல்பை மூன்று அறைகளையும் கொண்டு இருக்கின்றது. இதன் கனிகள் கோள வடிவத்தில் வெடிகனியாகக் காணப்படும். முட்கள் நிறைந்து இருக்கும். இதன் விதைகள் முட்டை வடிவத்தில் அடர்ந்த சாம்பல் நிறக்கோடுகளையும், புள்ளிகளையும் கொண்டது. இந்தச் செடியில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்து பொருளாதாரப் பலன்களும் உள்ளன. இதில மலர்கள் ஆண்டு முழுவதிலும் பூக்கின்றன.

ஆமணக்குச் செடியிலிருந்து எடுக்கப்படுகின்ற எண்ணெயில் ரிஸினோலிக், ஐஸோரிஸினோலிக், ஸ்டியரிக், டைஹைட்ராக்ஸி ஸிடியரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கி இருக்கின்றன. இதன் விதைகளில் லைபேஸ், ரிசினைன் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இதன் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் ரிசினைன் அல்கலாய்டுகள் இருக்கின்றன.
 


13 சீமையகத்தி அல்லது வண்டுகொல்லி ( Candle Bush Senna alata)


சீமையகத்தி அல்லது வண்டுகொல்லி வெப்ப மண்டலங்களில் வளரும் தாவரம் ஆகும். இத்தாவரத்திற்கு அஞ்சலி, சீமை அகத்தி, பேயகத்தி, அலடா, காலவகத்தி, சீமைஅவுத்தி, சிண்டுகை, சிரிகை, பைரவம், பொன்னகத்தி, புளியச்சிகா செடி, புழுக்கொல்லி, வண்டு கொல்லி போன்ற வேறுபெயர்களும் உண்டு . இத்தாவரம், தான் வாழும் இடத்தின் தாவரங்களை விட வேகமாக வளரும் இயல்பைப் பெற்றிருக்கிறது. எனவே, இவை நாட்டிற்க்கு நாடு உருவத்தால் வேறுபாட்டு, அவ்வேறுபாடு மரபுவழியாகத் தொடர்கிறது. இது 3 முதல் 4 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகள் 50முதல் 80செ.மீ நீளமுடையது. இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும் குணமுடையது. இதன் 'இருபுறவெடிக்கனி' வகையினைச் சாரந்த விதைகள், நீர் அல்லது விலங்குகள் மூலம் பரவும் இயல்புடையதாகும்.

தென் தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படுகிறது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ள ஆற்றுப்படுகைகளில் மிக நன்றாக வளரும் இயல்புடையது. இதனை வெட்டவெட்ட, நன்குத் தழைத்து வளரும் தன்மையுடையதாக இருக்கிறது.

இதன் இலைகள் அதிகமாக, முறைப்படி மருத்துவத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது.

தோல் மற்றும் இரத்த அழுத்த நோய்கள் தீரப் பயன்படுகிறது.

இலைகளில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு, முகப்பூச்சாகவும் பிலிப்பைன்சில் பயன்படுத்துகிறார்கள்.

இதனுடைய தண்டின் பட்டை, இருபாலரின் இனப்பெருக்க மண்டல நோய்களைத் தீர்க்கவும் பயனாகிறது.

மலக் கழிவைக் குணப்படுத்தும் மருந்திலும் பயனாகிறது.

இதன் பூக்களை நீரில் இட்டு, பின்னர் அதனைக் காய்ச்சி உண்டு வர சிறுநீரகத் தொந்தரவுகள் நீங்குமென சித்த மருத்துவம் கூறுகிறது.http://en.wikipedia....iki/Senna_alata


14 பாலை ( Ceylon ironwood, Indian rose chestnut, or Cobra's saffron , Manilkara hexandra)


பாலை என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீற்றர் ஆகும். மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும். இம்மரப்பலகையை Ceylon Iron Wood என்றும் அழைப்பர்.

தமிழர் நிலத்திணைகளில் ஐந்தில் ஒன்றான குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதியை பாலை என்பர். இந்த பாலை நிலத்தில் விளையும் இந்த மரம், பாலைமரம் என்றே பெயர் பெற்றிருப்பதும் ஒரு தனிச் சிறப்பாகும்.

இலங்கையில் பாலை மரங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் வட மத்திய பகுதிகளிலும் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையைத் தவிர இந்தியா, வங்காளதேசம், மியான்மர், கம்போடியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இத்தாவர இனம் காணப்படுகிறது.

இலங்கையில் தொடர்வண்டி சேவை தொடங்கியக் காலங்களில் பாலை மரப்பலகைகளை பயன்படுத்தியே தொடர்வண்டி செல்வதற்கான தண்டவாளங்களுக்கான படுக்கைக் கட்டைகள் இட்டனர். ஆங்கிலேயர் இதனை "இலங்கை இரும்பு" (Ceylon Steel or Ceylon Iron wood) என்றும் அழைத்தனர். இருப்பினும் ஆங்கிலேயர் காலங்களில் போட்ட படுக்கைக் கட்டைகள் இன்றும் உக்கிப்போகாமல் உறுதியுடன் இலங்கையில் பல்வேறு தொடர்வண்டிப் பாதைகளிலும் காணப்படுகின்றன.

இலங்கையின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் கட்டப்பட்டிருக்கும் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் போன்ற கட்டடங்களின் கூரை தேவைக்கு பெரும்பாலும் பாலை மரப்பலகைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை நூற்றாண்டுகளாக உக்கிப்போகாமல் உழைக்கக்கூடியன.

http://ta.wikipedia....iki/பாலை_(மரம்)

http://en.wikipedia....ki/Mesua_ferrea

15 ஆல மரம் அல்லது வீழ் மரம் ( Indian Banyan , Ficus benghalensis)


மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னரக்கு இருக்க நிழல் ஆகும்மே

- வெற்றிவேற்கை

ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி என திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை இன்றும் கூட நம் கிராமங்களில் காணலாம்.

ஆலமரம் விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது. மழை, வறட்சி இவைகளால் அதிகம் பாதிக்கப்படாதது. அதுபோல் குடும்ப உறவை விழுதுகள் போல் அனைவரும் தாங்கி வருவதற்காகவே ஆலமரத்தைச் சொல்கின்றனர்.

நீண்ட நெடிய பல விழுதுகளைக் கொண்டு பரந்து விரிந்து பசுமையாகக் காணப்படும் மரம்தான் ஆலமரம். மரத்தின் கிளைகளைத் தாங்கி நிற்கவே விழுதுகள் தோன்றி அவை மண்ணில் ஊன்றுகின்றன. இன்றும் கிராமங்களில் சாலைகளிலும், குளக்கரைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நிழல் தரும் மரமாகத் திகழ்கிறது. பண்டைய காலத்தில் மன்னர்கள் ஆலமரம், புங்கமரம் இவற்றை நட்டு வளர்த்தனர். அதன் பயனை பலநூறு ஆண்டுகளுக்குப் பின் நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம். ஆலமர நிழல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அரசமர நிழல் எவ்வாறு ஆரோக்கியத்தைத் தருகிறரோ அதேபோல் ஆலமர நிழலும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.

இதனை இயக்கு ரோதம், காமரம், சோளி, தோல்மரம், பாமரம், பூதம், வடம், பானோக்கி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இதன் இலை, பழம், பூ, விழுது, பால் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை.

அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட
வச்சமற மேகமுந்தீ யாகுமே-இச்சகத்தில்
நாதனென மூவருக்கு நற்றுணையா மாக்கைக்கும்
பூத மதிபதியைப் போல்

- தேரையன் வெண்பா

பொருள் - நாள்பட்ட புண்கள், மேகம், வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு இவைகளைப் போக்கி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.

சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்குப்பைக்
கொல்லக்கின்ற நீரிழிவை கொல்லுங்காண்- நல்லாலின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்
- அகத்தியர் குணபாடம்


உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும்.

அதுபோல், ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும்.

ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம்.

வெள்ளை படுதல் குணமாக:

வெள்ளை படுதல் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். மேலும் அவர்கள் மெலிந்து காணப்படுவார்கள். இவர்கள் ஆலமரத்தின் சிறு வேர்ப்பட்டைகளை உரித்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து பிறப்புறுப்பின் மீது கழுவி வந்தால், வெள்ளை படுதல் குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு:

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

எலும்பு முறிவுக்கு:
எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு, போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும். எலும்புகள் பலமாகும்.
வாய்ப்புண் நீங்க:

ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும். இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம்.
பல் பாதுகாப்பு :

ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி

என்பது நம் முன்னோர்களின் பழமொழி. ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும். ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும். பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும்.


16 இலுப்பை மரம் அல்லது இருப்பை அல்லது குலிகம் (Madhuca longfolia or Bassia longifolia)


இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய், இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது.

இலுப்பை மரம் கொத்துக் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்தான வெண்ணிற மலர்களையும் முட்டை வடிவ சதைக்கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய வன்மையான மரம். சாறு, பால் தன்மை கொண்டது. இருப்பை, ஓமை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. விதையிலிருந்து எடுக்கக் கூடிய திருவிளக்கெரிக்கப் பயன்படும் எண்ணெய்க்காக திருக்கோயில் சார்ந்த இடங்களில் தோப்பு தோப்பாக வளர்க்கப்பெற்றது; காடுகளிலும் தானே வளர்கிறது. இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவையாக விளங்குகிறது.

இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும் , பசிமிகுக்கும், நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும். கீல் வாதம், மூல வியாதி, மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

பண்டைத் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன அற்புதமான மரம் இது. பொதுவாக ஆல், அரசு... போன்ற பால் வடியும் மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. அந்த வகையைச் சேர்ந்ததுதான் இலுப்பையும். அதனால்தான் இத்தகைய மரங்களை நம் முன்னோர்கள் அதிகளவில் வளர்த்து வந்தார்கள். மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு இலுப்பை எண்ணெய் மூலம்தான் விளக்கு எரித்தார்கள். உலர வைத்த இலுப்பைப் பூவை சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தினர். ஆனால், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இலுப்பை மரங்கள், தற்போது வழக்கொழிந்து கொண்டு வருவதுதான் வேதனை.
  

17 இஞ்சி (  Ginger   Zingiber officinale )


காலையில் இஞ்சி,
கடும்பகல் சுக்கு,
மாலையில் கடுக்காய்
மண்டலம் சாப்பிட
கோலூன்றி நடந்தவன் கோலைவீசி
நடப்பான் மிடுக்காய்.

உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.

இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.

 இஞ்சி இலைகளிலும், தண்டுகளிலும் மணம் இருக்கும்.
இலைப்பகுதி உலர்ந்ததும் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும்.
கடுமையான கார ருசி உடையது. இது , தீரும் நோய்கள்:பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல் போன்ற வாதைகளைக் குணப்படுத்த வல்லது .

நன்றாகப் பருத்த இஞ்சியின் தோலைச் சீவி அதை மெல்லிய பில்லைகளாக நறுக்கி, அதில் 24 கிராம் எடை அளவு எடுத்து ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு, இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றை அதில் விட்டு 5 கிராம் எடையளவு இந்துப்பைத் தூள் செய்து அதில் போட்டு நன்றாக கலக்கி மூன்றுநாட்கள் மூடி வைத்திருந்து பிறகு தினசரி இஞ்சித் துண்டுகளை மட்டும் வெளியே எடுத்து ஒரு சுத்தமான தட்டில் பரப்பி தூசு எதுவும் விழாதபடி மெல்லிய துணியால் மூடி வெய்யிலில் நன்கு காய வைக்க வேண்டும். மாலையில் காய்ந்த துண்டுகளை மீண்டும் மீதமுள்ள இந்துப்பு கலந்த எலுமிச்சைச் சாற்றில் போட்டு காலை வரை ஊற வைத்து மீண்டும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். இவ்விதமாக இஞ்சி எலுமிச்ச சாற்றை முழுவதுமாக உறிஞ்சிய பின் நன்கு சுக்கு போல காய விட்டு எடுத்து ஒரு கண்ணாடி சீசாவில் போட்டு வைத்து கொள்ளவேண்டும். இதுவே இஞ்சிச் சொரசம் எனப்படும். வாயு தொந்தரவு, அஜீரணம், புளியேப்பம், பித்த கிறுகிறுப்பு ஏற்படும் சமயம் 2½ கிராம் எடை முதல் 5 கிராம் எடை வரை (ஒரு சிறு துண்டு) காலை மாலை சாப்பிட்டு வர மேற்கண்ட கோளாறுகள் பூரணமாக குணமாகும்.

இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.18 ஈரப்பலா மரம் அல்லது ஆசினிப் பலா மரம் (  breadfruit or Artocarpus incisa )


ஈரப்பலா மரம் அல்லது ஆசினிப் பலா மரம் (Artocarpus incisa), பலா இனத்தை சார்த மரம் ஆகும். மலாயத் தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம். ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தாவரவியல் மாதிரியாக எச்எம்எஸ் பவுண்டி என்னும் கடற்படைக் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், மேற்கிந்தியத் தீவு களில் இருந்த பிரித்தானியரின் அடிமைகளுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப் படுத்தப்பட்டது.http://ta.wikipedia....rg/wiki/ஈரப்பலா


19 இரம்பை செடி ( pandan leaves or Pandanus amaryllifolius ) 


மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia...._amaryllifolius

20 கறுவா ,இலவங்கப்பட்டை மரம். ( Cinnamon  or Cinnamomum )


இலவங்கப்பட்டை அல்லது கருவாப்பட்டை / கறுவாப்பட்டை (Cinnamon) என்பது சின்னமாமம் வேரம் அல்லது சி. சேலானிக்கம் (சின்னமாமம் வேரம் என்பதற்கு சி. சேலானிக்கம் என்று பொருள்) என்னும் தாவரவியற் பெயரைக் கொண்டது. இது ஒரு சிறிய பசுமைமாறா மரமாகும். இது லாரசீயே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் ஆரம்ப உற்பத்தி இலங்கையாக இருப்பதுடன், அதிகமாக விளையும் இடமும் இலங்கையாக இருக்கிறது. இந்த கறிமசால் பொருள் (கறியில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்) மரத்தின் அடித் தண்டின் பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இது அடிக்கடி இதற்கு ஒத்த வேறு இனத் தாவரங்களான காசியா மற்றும் சின்னமாமம் பர்மான்னி போன்றவற்றுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது. இந்த கறிமசால் பொருட்களும் இலவங்கப்பட்டை என்றே அழைக்கப்படுகின்றன. இலவங்கப்பட்டை, Yeast இல் உயிரணு சார்ந்த சுவாசத்தின் வீதத்தை குறைக்கிறது.

இலவங்கப்பட்டையானது மரத்தை இரண்டு வருடங்களுக்கு வளரவிட்டு அதன்பிறகு அதை கிளைநறுக்கி பட்டை செழிக்க செய்யப்படுகிறது. அடுத்த வருடம், சுமார் பன்னிரண்டு துளிர்கள் வேர்களிலிருந்து எழும்புகின்றன. இந்த துளிர்களிலிருந்து அவைகளின் பட்டைகள் நீக்கப்பட்டு காயவைக்கப்படுகின்றன. மெல்லிய (0.5 மிமீ) உள்பட்டை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; வெளிப்புற மரப்பகுதி நீக்கப்பட்டு, ஒரு மீட்டர்-நீள இலவங்கப்பட்டை துண்டுகள் காய்ந்து சுருள்களாகின்றன (“குவில்கள்”); ஒவ்வொரு காய்ந்த குவிலும் எண்ணற்ற துளிர்களிலிருந்து உண்டான பல பட்டைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த குவில்கள் விற்பனைக்காக 5-10 செமீ நீளமுள்ளவைகளாக வெட்டப்படுகின்றன.

இலவங்கப்பட்டை பண்டைய காலங்களிலிருந்து இலங்கையில் வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த மரம் வர்த்தகரீதியில் தென்னிந்தியாவின் கேரளா, வங்க தேசம் (பங்க்ளாதேஷ்), ஜாவா, சுமத்ரா, மேற்கிந்திய தீவுகள், பிரேஸில், வியட்னாம், மடகாஸ்கர், சான்ஸிபார் மற்றும் எகிப்திலும் வேளாண்மை செய்யப்படுகிறது. இலங்கையின் இலவங்கப்பட்டை மிகவும் மெல்லிய வழுவழுப்பான பட்டையைக் கொண்டுள்ளது. அதின் நிறம் இளஞ்சிவப்பும் பழுப்பு நிறமும் கலந்ததாகவும் மிகவும் வாசனையான நறுமணமுள்ளதாகவும் காணப்படுகிறது.

2006ன் இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் என்ற இதழின்படி, இலங்கை உலகத்தின் இலவங்கப்பட்டையில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்வதாகவும், இதை தொடர்ந்து சீனா, இந்தியா, வியட்னாம் ஆகியவை உற்பத்தி செய்வதாகவும் அறிவித்தது.  இலவங்கப்பட்டையின் காசியா வகையின் உலக உற்பத்தியில் 40% இந்தொனேஷியாவில் உற்பத்தியாவதாக அறிவிக்கப்பட்டது.

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் :

http://ta.wikipedia.....org/wiki/கறுவா

http://en.wikipedia.org/wiki/Cinnamon