Friday, April 25, 2014

வாடாமல்லிகை பாகம் 06

வாடாமல்லிகை பாகம் 06


தேன் வதையை மொய்த்துக் கொண்டிருக்கும் தேனீக்களைப்போல கோட்டே புகையிரத நிலையம் இருந்தது . மக்கள் புகையிரத நிலையத்தில் உள்ளே போவதும் வருவதுமாக எனக்கு தேன் கூட்டையே நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர். தனது காரை நிறுத்துவதற்கு எனது மனைவியின் தோழி சிரமப்படுவதை பார்த்து புகையிரத நிலயத்தின் முன்பாகவே நாங்கள் இறங்கிக்கொண்டோம் . நாங்கள் சன வெள்ளத்தில் நீந்திக்கொண்டே உள்ளே சென்றோம். உள்ளே காதைப்பிளக்கும் சந்தைக்கடை இரைச்சலாக புகையிரத மேடை இருந்தது நாங்கள் செல்ல வேண்டிய யாழ் தேவி புகையிரத மேடையில் நீண்டு வளைந்து நின்று இருந்தது. புகையிரதத்தில் இடம் பிடிப்பதற்காக பல் முனைதாக்குதல்கள் சனங்களால் தொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஓர் இடத்தைப் பிடிப்பதில் எம்மவர்கள் என்றுமே பல விதமான உத்திகளை பிரயோகிப்பதை கண்டு வியந்திருக்கின்றேன். அதுவே அந்த யாழ் தேவியிலும் நடைபெற்றுக்கொண்டு இருந்தது . மனைவியின் நண்பி எமக்கு முதலாம் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்திருந்தார். நாங்கள் எமது இருக்கையின் இலக்கத்தை தேடி பிடித்து அமர்ந்து கொண்டோம். எமக்கு முன்பாக இருந்த இருக்கைகள் யாருக்குகாகவோ காத்துகொண்டு இருந்தன. வெளியே தேநீர் வடை விற்பவர்களது குரல்கள் பலவேறு அலைவரிசையில் எனது காதுகளை அடைத்துக்கொண்டு இருந்தன. எனக்கு எப்பொழுது யாழ்தேவி புறப்படும் என்று இருந்தது.

இந்த ரெயில் பயணம் என்றாலே அலாதியானதுதான் . அதில் பயணம் செய்யும் பயணிகள் எமக்கு சொந்தமாக இல்லாவிட்டாலும். தேவைகள் கருதி எம்முடன் வைக்கும் உறவுகளும். அது தெரிந்தும் நாமும் அவர்களுடன் ஒன்றிப் போவதும் . பின்பு இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஆளுக்கு ஒருவராகப் பிரிவதும் .அப்பொழுது ஏற்படும் வெறுமை உணர்ச்சியும் அனுபவித்தவர்களுக்கே அது புரியக்கூடியது. ஒரு சில வேளைகளில் இந்தப்பயணங்கள் கூட வருபவர்களால் நரகமாக மாறுவதும் உண்டு . புகையிரதப்பெட்டியின் உள்ளே இருந்த குளிரூட்டியினால் வந்த குளிர்மை அந்த கொடும் வெக்கைக்கு மிகவும் இதமாகவே இருந்தது. எனது கண்களோ சுற்றுச் சூழலை அளவெடுத்தன. அங்கு இருந்த பயணிகளில் தொண்ணூறு வீதமானோரின் கைகளில் கைதொலைபேசி படாத பாடு பட்டுக் கொண்டு இருந்தது. அது அங்கு ஒரு பொழுது போக்கு சாதனமாக மட்டுமே அதிகளவில் பாவிக்கப்பட்டது. இதற்கு அதிக அளவு புலத்துப் பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். மணியடித்து, கொடி காட்டி, வளையம் பரிமாறி, என்று இம்மியளவும் பிசகாமல் யாழ் தேவி தனது சடங்குகளை முடித்துக்கொண்டு வவுனியாவை நோக்கி கோட்டே புகையிரத நிலயத்தில் இருந்து நகரத் தொடங்கியது.

எங்கள் எதிரே இருந்த இருக்கைகளுக்கு ஒரு வயதான தம்பதிகள் இறுதி நேரத்தில் அல்லாடிக்கொண்டு வந்தார்கள். கணவனுக்கு ஒரு எழுபத்தி ஐந்து வயது இருக்கலாம். மனைவிக்கு ஒரு எழுபது வயது இருக்கலாம். அவர்களை ரெயில்வே கார்ட் தான் அழைத்துவந்து அவர்களது இருக்ககை இலக்கத்தைச் சரி பார்த்து எமக்கு முன்னே இருத்தி விட்டார். கறுப்பு கறுப்புக்கண்ணாடி அணிந்திருந்த எனக்கு ரெயில் பெட்டியை முற்றுமுழுவதுமாக சுதந்திரமாகவே நோட்டம் விட முடிந்தது. எனது கண்கள் வெளியிலயே அலைபாய்ந்தன. இப்பொழுது யாழ்தேவி அழகிய சிறிய சிங்களக் கிராமங்களின் ஊடாக வேகம் எடுத்துக்கொண்டிருந்தது. இரு புறமும் அடர்த்தியான தென்னை மரங்களும் கமுக மரங்களும் வரிசை கட்டி எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தன. தென்னை ஓலைகளால் வேயப்படிருந்த ஒலைகுடிசைகளில் ஆண்களும் பெண்களும் வெளியே இருந்து தென்னம் ஓலையினால் கிடுகு பின்னிக் கொண்டு இருந்தார்கள். அங்கு இருந்த சிறுவர்கள் ஓடிய யாழ் தேவிக்கு கை அசைத்தார்கள். அவர்கள் முகத்தில் கள்ளம் கபடம் எதுவும் காணப்படவில்லை. இதே போல் நாங்களும் சிறுவயதில் யாழ் தேவிக்கு வீதி ஓரத்தில் நின்று கைகளைக் காட்டி இருக்கின்றோம். அந்த சிறு வயதிலேயே இரண்டு பக்கமும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எனது மனம் ஏங்கியது.

நகர் புறங்களைக் கடந்து சிறிய கிராமங்கள் ஊடாகவும் பசுமை போர்த்திய வயல் வெளிப் பரப்புகள் ஊடாகவும் யாழ் தேவி வேகமெடுத்தது. நான் இருக்கும் பாதுகாப்பில் எனது மனைவி எனது தோளில் நித்திரையாகி விட்டாள். எனக்கு முன்பு இருந்த வயோதிக தம்பதிகள் இருவரும் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அதில் மூழ்கி இருந்தார்கள். மற்றயவர்கள் போல் " விடுப்பு " அறியும் ஆவல் அவர்களிடம் இல்லாமல் இருந்தது எனக்கு ஆறுதலாக இருந்தது. நான் அடங்கா பசியுடன் உள்ள குழந்தை தன் தாயில் பால் குடிப்பதைப்போல இரண்டு பக்கத்திலும் உள்ள இயற்கை காட்சிகளை அள்ளிப் பருகி கொண்டு வந்தேன். அப்பொழுது வெய்யில் குறைந்து இருள் கவியத் தொடங்கியது. இரண்டு பக்கமும் வெளிச்சப் பொட்டுகள் மின்னின .ஒரு சில இடங்களில் பயிர் செய்கைக்காக எரிக்கப்பட்ட சிறு பற்றைக் காடுகளில் இருந்து விறகு எரிந்த மணம் என் மூக்கைத் துளைத்தது .நீண்டகாலத்துக்குப் பின்பு வந்த மணத்தை ஆசையுடன் நுகர்ந்தேன். இதமான காற்று என் முகத்தில் அடித்தது. இந்த அருமையான பொழுதில் ஒரு தேநீர் குடித்து சிகரட் அடித்தால் எப்படி இருக்கும் என்று எனது மனம் நெட்டுரு போடத்தொடங்கியது. அப்பொழுது யாழ் தேவி அனுராத புரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. இன்னும் ஓரிரு மணித்தியாலத்தில் வவுனியாவை அடைந்து விடுவேன் என்ற நினைப்பே என்மனதை கிளர்ச்சி அடையப்பண்ணியது.

எனது அம்மாவின் இழப்புக்குப் பின்பு அக்காவே எனக்கு எல்லாம். நான் வரும் தகவலை முதலே நான் சொல்லி இருந்தேன். ஒரு இருள் கவிந்த இரவில் நாங்கள் வந்து கொண்டிருந்த யாழ் தேவி வவுனியா புகையிரத நிலையத்தில் கிரீச்சிட்டு நின்றது .

தொடரும்

கோமகன்
25 சித்திரை 2014

Thursday, April 24, 2014

வாடாமல்லிகை பாகம் 05

வாடாமல்லிகை பாகம் 05

நாங்கள் பதிவு செய்திருந்த ரக்சி எங்கள் அருகில் வந்து நின்றது . வண்டி சாரதி பவ்வியமாக இறங்கி வந்து எமது பயணப் பொதிகளை வாங்கி கார் டிக்கிக்குள் வைத்தான் .அவன் சிங்களவனாக இருக்க வேண்டும் என்று அனுமானித்துக்கொண்டென் .ரக்சியில் குறைந்த கட்டணம் ஐம்பது ரூபாவில் இருந்து தொடங்கியது . ரக்சி எங்களை ஏற்றிக்கொண்டு பம்பலப்பிட்டி பிளட்ஸ் நோக்கி வழுக்கியது . ரக்சி ஓடத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே வழக்கமான பாதையில் செல்லாது அதிவிரைவு பாதையில் செல்லத் தொடங்கியது . அந்த பாதை மகிந்த சிந்தனையில் உதித்து சீனத்தின் உதவியுடன் சமீபத்தில் திறக்கப்பட்ட அதி வேகப்பாதை என்று ரக்சி சாரதியுடன் கதைத்த பொழுது அறியக்கூடியதாக இருந்தது. ஏறத்தாழ இருபது நிமிடங்களை விழுங்கி விட்டு எமது ரக்சி கொழும்பு நகரினுள் நுழைந்தது .அந்த அதிகாலையில் கொழும்பு அரை அவியல் முட்டை நிலையில் இருந்தது ஆங்காங்கே மக்கள் தங்கள் நாளை தொடங்குவதற்கு ஆயத்தமாக பஸ் நிலையங்களில் காத்திருந்தனர். வீதிகளில் சோதனை சாவடிகளோ வீதி தடைகளோ காணப்படவில்லை . எந்த இடத்திலும் விளம்பரதட்டிகளில் நாட்டைக் காத்த மகிந்த ஒரு மந்தகாசப் புன்னைகையுடன் காணப்பட்டார் . இதுவும் ஒரு மலிவான விளம்பர உத்தி தான் என்றே நினைத்தேன் . ஏனெனில் மக்களால் மறக்கப்படுகின்ற இராஜ்சியங்களின் அரசர்கள் பலர் மக்கள் எப்பொழுதும் தங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று இப்படியான மலிந்த வேலைகளில் இறங்குவதுண்டு .

எங்களை சுமந்த ரக்சி ஒருவழியாக காலை நாலு மணியளவில் பம்பலப்பிட்டி பிளட்ஸ் க்கு வந்து சேர்ந்தது. ரக்சி சாரதி நாங்கள் இறங்க முன்பே காரை விட்டிறங்கி எமது கதவை திறந்து விட்டிருந்தார் . வருகின்ற வழியில் எம்மிடம் ஒரு வார்த்தையேனும் அளவுக்கு அதிகமாக அவர் கதைக்கவில்லை. அவரே எமது பயணப்பொதிகளை காரில் இருந்து இறக்கி வைத்தார் .நான் ஆரம்பம் முதலே அவரை கவனித்து வந்ததில் வேற்று இனத்தவராக இருந்தாலும் " வாடிக்கையாளர் சேவை " என்ற விடயத்தில் ஒரு பண்பட்ட அணுகுமுறையை அவரிடம் காண முடிந்தது. எம்மவர்களிடம் குறைந்த அளவிலேயே இந்த அணுகு முறையினை அவதானித்து இருக்கின்றேன் . நான் மனைவியிடம் வாய் திறக்க முதலே அவா மீற்றரில் இருந்த தொகையை விட இரண்டு சைபருகளை அதிகமாக கொடுத்திருந்தா. அந்த சாரதி மிகுந்த மகிழ்ச்சியுடன் அன்றைய நாளுக்கும் எமக்கும் வாழ்த்துச் சொல்லி எம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார் . நாங்கள் வழமையாக கொழும்பில் நிற்கும் இடத்திற்கே வந்திருந்தோம். மனைவியின் தோழி முதலாவது மாடி பல்கணியில் நின்று கொண்டிருந்தா. அந்த வீட்டில் ஒரு சோகசம்பவம் போன வருடம் நிகழ்ந்ததால் அந்த தோழியின் முகத்தில் ஒரு வாட்டம் காணப்பட்டது . தனது தோழியை கண்டவுடன் அந்த சோகம் கண்ணீராக வெளிப்பட்டது . எனக்கு தர்மசங்கடமான நிலையாகப் பொய் விட்டது .

ஒரு நாள் தொடர் பயணத்தால் அழுக்கும் தலை இடியும் உடலில் சேர்ந்து கொண்டன . எனது உடல் குளிப்பதற்கு ஏங்கியது .மனத்தில் எழுந்த திட்டத்தை செயல்படுத்த தயாரானேன் . அந்தக்காலை வேளையில் தண்ணீர் ஹீட்டர் இல்லாமலே கத கதப்பாக இருந்தது . தண்ணீர் உடலெங்கும் பாய மனதும் உடலும் புதிய நாளை வரவேற்பதற்காக தயாராகின . குளித்து முடித்து விட்டு வெளியே வர சூடான கோப்பி தயாராக இருந்ததது. நான் கோப்பியை எடுத்துக்கொண்டு பல்கணிக்கு வந்தேன் .வெளியே நிலம் வெளிக்கத் தொடங்கியிருந்தது . கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடல் பரந்து விரிந்து இருந்ததது .அதன் அலைகள் ,காமம் தலைகேறிய காதலன் தன் காதலியின் உதட்டை மூர்க்கமாக கவ்வுவதைப்போல கரையை முத்தம் இட்டுக்கொண்டிருந்தன. தூரத்தே சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. உள்ளே தோழிகள் குடும்ப கதைகள் கதைத்துகொண்டிருந்தர்கள். எனது கோப்பி சீனி இல்லாவிட்டாலும் இனிமையாக இருந்தது ஏனெனில் அதில் அன்பு கலந்து இருந்திருந்தது .கீழே நாகரீக மக்கள் நாகரீகத்தால் வந்த கலோரியை குறைக்க ஓடியும் நடந்தும் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சில, நைட்டிகள் ட்றெசிங் கவுன்கள் என்றும், காலுக்கு மட்டும் சப்பாத்து என்றும் விநோதமான நாகரீக மக்களும் இருந்தார்கள். அந்தக்காலை வேளையில் சூடான கொப்பியும் சிகரட்டும் மனதுக்கு இதமாக இருந்தன .அன்றைய நாளின் சூடு மெது மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது .

இந்த மூன்று வருட இடைவெளியில் கொழும்பில் என்னால் பாரிய மாற்றங்களை அவதானிக்க முடியவில்லை. விலை வாசிகள் ஏறத்தாழ ஐரோப்பிய நிலையிலேயே இருந்தன. ஆனால் மக்களது வருமானமோ ரூபாய்களில் இருந்தன. எனது மனைவியின் நண்பி நாங்கள் வவுனியா செல்வதற்கு அன்று மாலை யாழ்தேவியில் பதிவு செய்திருந்தா. நானும் மனைவியும் காலை ஒன்பது மணியளவில் ஒரு சில சாமான்கள் வாங்குவதற்காக வெளியில் சென்றோம். நாங்கள் வெளியே வந்த பொழுது பிளட்சின் முன் உள்ள தேமா மரங்கள் பூக்களை சொரிந்திருந்தன. பாடசாலைக்கு பிள்ளைகள் சென்று கொண்டிருந்தார்கள். பரபரப்பு என்ற வட்டத்தினுள் கொழும்பு நகரம் தன்னை முற்று முழுதாகவே அமிழ்த்திக் கொண்டிருந்தது. நாங்கள் அதனுள் நீந்த வேண்டி இருந்தது. நாங்கள் கொண்டுவந்த யூரோக்கள் சிலவற்றை மாத்தி வாங்கவேண்டிய சாமான்களை வாங்கினோம். எல்லா நாணயங்களிலும் புத்த மத சின்னங்களே வியாபித்திருந்தன .ஒரே இராஜ்ஜியம், குடியானவர்கள் எல்லோரும் சமமானவர்கள் என்ற அரசர்களின் சிந்தனைகளில் வேற்று மத சின்னங்களை மருந்துக்கும் காணமுடியவில்லை. நேரம் பன்னிரண்டு மணியை நெருங்கிகொண்டிருந்தது. வெய்யில் அனலாக கொதித்தது . நான் அந்த வெய்யிலில் பொரி விளாங்காயாக போனேன். உடலெங்கும் வெப்பம் கூடி வியர்வை ஆறாக பெருக்கெடுத்து. ஓடியது காலை சாப்பிட்ட உணவு கரைந்து இப்பொழுது வயிறு அடுத்த கட்ட காட்சிக்காக தயாராகி கொண்டிருந்தது. எனது மனமோ குளிர்மைக்கு ஏங்கியது. நாங்கள் வெள்ளவத்தையில் பிரபல்யமான " ரேஸ்ற் ஒப் ஏசியா " க்குள் நுழைந்தோம் .எமது முகத்தில் அறைந்த குளிரூட்டி பொரிவிளாங்காய் ஆன எமக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது .

" ரேஸ்ற் ஒப் ஏசியா " உணவகம், அதன் சுவையினாலும் வாடிக்கையாளர் சேவையினாலும் தமிழர் மத்தியில் பிரபல்யமானஒரு உணவகமாகும். அந்த உணவகம் அதி நவீன வசதிகளுடன் நாங்களாகவே சுயமாக பரிமாறும் வசதிகளுடன் இருந்தது. நாங்கள் எங்களுக்குத் தேவையான உணவுவகைகளை எடுத்துக்கொண்டு ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டோம். அந்த இடத்தில் இருந்து காலி வீதியை எம்மால் வடிவாக பார்க்க கூடியதாக இருந்தது .மக்களும் வாகனங்களும் விட்டதை தேடும் ஆவலில் பறந்து கொண்டிருந்தார்கள். நேற்றில் இருந்து சரியான உணவுகள் இல்லாததால் எனக்கு அந்த உணவுவகைகள் அமிர்தமாக இருந்தது. வயிறு காய்ந்து பசித்தால் தான் உணவையும் ரசித்துப் புசிக்கலாம் என்ற உண்மை அப்பொழுது தான் எனக்கு விளங்கியது. நாங்கள் ஆறுதலாக எமது மதிய உணவை முடித்து விட்டு வெளியே வந்தோம். மீண்டும் அனல் வெக்கை முகத்தில் அடித்து முகம் எரியத் தொடங்கியது. ஒருநாள் கால மாற்றம் என்னை உடனடியாக இயல்பாக்கம் பெறுவதற்கு முரண்டு பிடித்துக்கொண்டது. அதனால் நான் மிகவும் அவதிப்பட வேண்டி வந்ததது. நாங்கள் மீண்டும் கையில் தூக்க முடியாத சுமைகளுடன் வீட்டை வந்து சேர்ந்தோம் .நான் காற்று வேண்டி வீட்டின் பல்கணிக்கு கையில் சிகரட்டுடன் வந்து நின்றேன். கடல் காற்று குளுமையுடன் முகத்தில் தாக்கியது அந்த வேலைக்கு இதமாக இருந்தது. வாயில் இருந்த சிகரட்டை லைட்டர் சிவப்பாகியது . நேரம் இரண்டு மணியை நெருங்கிகொண்டிருந்தது .நாங்கள் வவுனியா செல்ல வேண்டிய நேரம் நெருங்கியதால் மனைவியின் நண்பியே தனது காரில் எங்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்திற்கு சென்றா .

தொடரும்

கோமகன்
17 சித்திரை 2014

Wednesday, April 23, 2014

வாடாமல்லிகை பாகம் 04

வாடாமல்லிகை பாகம் 04


தரையை விட்டு சாய்வு கோணத்தில் மேலே எழும்பிய அந்த இயந்திரப்பறவை சிறிது நிமிடங்களை விழுங்கி விட்டு நேர்கோட்டில் தன்னை நிலை நிறுத்தி விரைவு படுத்தியது . வெளியே எங்கும் அந்தகாரக் கரும் இருள் அப்பியிருந்தது . அங்காங்கே நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன . அவைகளை விட வேறு எதையும் வெளியில் என்னால் பார்க்க முடியவில்லை.இப்பொழுது அந்த விமானத்தில் முக்கால் வாசிபேர் இலங்கையரே நிரம்பியிருந்தனர்.அவர்கள் எல்லோருமே சவுதி அரேபியாவை வளப்படுத்த வந்த கடைநிலை ஊழியர்கள்.அரேபிய ஷேக்குளின் ஷோக்குகளுக்காக வீடுகளையும் தொழில் நிலையங்களையும் பராமரிக்கவென்று குறைந்த தினார்களில் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் . அவர்களை நான் அவதானித்த அளவில் அவர்களுக்கு எழுத வாசிக்க தெரிந்திருக்கவில்லை.விமானத்தில் வழங்கப்பட்ட குடிவரவு விண்ணப்பங்களை நிரப்புவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.ஒரு சிலர் எல்லோருக்கும் விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சந்தைக்கடை போல இருந்த அந்த விமானத்தை, அமைதி தன் பிடியினுள் படிப்படியாகத் தன்வசம் கொண்டு வந்தது . மரங்கள் கூதல் காலத்தில் தங்கள் இலைகளை உதிர்த்து தங்களை உறைநிலைக்கு கொண்டு செல்வது போல அந்த விமானமும் தன் வெளிச்சங்களை உறைநிலைக்கு கொண்டு வந்தது. மெல்லிய இருள் அந்த விமானம் எங்கும் பரவி இருந்தது .சயனசுகம் எல்லோரையும் மெதுமெதுவாக அணைத்துக் கொண்டிருந்தது . எனது மனைவி நான் இருக்கும் தைரியத்தில் என் தோள் மீது உறங்கிப் போனாள் . குளத்தில் கல்லினால் எறிந்த பொழுது வந்த தொடர் அலைகள் போல் , என்மனமோ சிந்தனை அலைகளால் நிரம்பி வழிந்தது .

எல்லாமே நேற்றுப் போல இருக்கின்றது எனது முதல் பயணமும் அது தந்த அனுபவங்கழும். காலம் என்ற ஓட்டத்தில் சிறிது தூசி படிந்து இருந்தாலும் , அது தந்த வலி என்னவோ கணனியின் வன்தகட்டில் அழியாது இருக்கும் கோப்புகள் போல பசுமையாகவே என் மனதில் இருக்கின்றன . அவைகள் இப்பொழுது படம் எடுத்தாடியபடியே தம் நாக்குகளை வெளியே விரித்தன . என்மனதில் இனம் புரியாத வலி ஒன்று பாத்திக்கு வாய்க்கால் கட்டி ஓடியது . அது என் நித்திரையை குலைக்கும் அளவுக்கு வீறுகொண்டு எழுந்தது . என்னுடன் கூடப் பிறந்தவர்கள் எப்படி என்னை அரவணைக்கப் போகின்றார்கள் ? என்னதான் இரத்த உறவாக இருந்தாலும் இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் சொந்தங்களையும் , ஓடித் திரிந்த மண்ணையும் தொலைத்த எனக்கு என்ன பெரிய வரவேற்பு அவர்களிடம் இருக்கப் போகின்றது ?? நான் அந்நியன் அந்நியன் தானே ?? யார் யாரை நோவது?எல்லோருமே கால ஓட்டத்தில் அள்ளுப்பட்ட குப்பைகள் தானே? கால ஓட்டத்தில் அள்ளுப்படாது எதிர்த்து நிற்கும் ஆலமரங்களை நோக்கி வலசை போகும் பறவைகள் போல நான் செல்வது எனக்கே என்மீது அருவருப்பாக இருந்தது.என்னை அறியாது என் கண்கள் கண்ணீர் திரையினால் பார்வையை மட்டுப்படுத்தியது. மீண்டும் ஓர் வலியதும் சிறியதுமான பாம்பு ஒன்று என் நெஞ்சில் ஓங்கி கொத்தியது . எனது கண்ணீர் எனது மனவியை எழுப்பியிருக்க வேண்டும் போல தன் முகத்தை திருப்பி என்ன என்று பார்வையால் கேட்டா.ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்பது போல என் கைவிரல்களை இறுக்கப் பற்றிக்கொண்டா. அந்த இறுக்கம் தந்த அரவணைப்பில் நான் கரையலானேன்.

நேரம் அதிகாலை இரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது . அந்த இயந்திரப்பறவை தனது உயரத்தை மெது மெதுவாக கீழே இறக்கியது ஜீ பி எஸ் இல் தெரிந்து கொண்டிருந்தது . தூரத்தே கொழும்பின் ஒளிப்பொட்டுகள் தெரிய ஆரம்பித்தன.இப்பொழுதே எல்லோரும் தங்களை ஆயத்தப்படுத்த தொடங்கி விட்டார்கள் . எனது கண்களோ நித்திரையைத் தொலைத்து வைன் நிறத்துக்கு மாறி இருந்தது . எனது முகம் எண்ணைப் பிசுக்கினால் அப்பி இருந்தது . ஜெட்டாவிலும் , விமானத்திலும் ஒழுங்கான சாப்பாடு இல்லாததால் மனமும் உடலும் ஒரே சேரக் களைத்திருந்தன . நரம்புகளை முறுக்கும் ஓரு சூடான கபே க்கும் சிகரட் வளையத்திற்கும் மனது ஏங்கியது . நமநமத்த நாக்கை என் மனது "சும்மாய் இரு" என்று அதட்டியது . அதுவோ மனதிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியது . அந்த அதிகாலை வேளையில் அந்த விமானம் தரையுடன் நளினமாக மோதி சிறிது தூரம் ஓடி , கட்டுநாயக்கா விமான நிலையத்தின் நீண்ட இறங்கு குழாயுடன் தன்னை அணைத்து தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது . எல்லோருமே வெளியில் செல்வதற்கு முன்னணியில் நின்றார்கள் . ஆனால் போவதற்கு ஒரு பாதை மட்டுமே உள்ளது என்பதை தெரிந்தும் தெரியாமலும் இருந்தார்கள் .

பட்டியில் அடைபட்டிருந்த மாடுகள் முட்டி மோதி எட்டிப் பாய்வது போல பயணிகள் விமான வாயிலை நோக்கி முன்னேறி கொண்டிருந்தார்கள் . நாங்கள் எமது கடவு சீட்டுகளை சரிபார்த்துக் கொண்டே இறுதியாக வெளியேறினோம் . கட்டுநாயக்கா விமான நிலையம் முன்னைவிட பளபளப்பு கூடி இருந்தது . அந்தப் பளபளப்பின் பின்னால் தெரிந்தும் தெரியாத பாசிகள் படர்ந்திருந்தது . நான் எச்சரிக்கையாகவே கால்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன் . என் வயிற்றில் அமிலம் சுரந்து கொண்டிருந்தது.

குடிவரவு குடியகல்வு ஐரோப்பியர்களுக்கு ஒரு புறமாகவும் , ஏனையோருக்கு ஒரு புறமாகவும் இருந்தது . நாங்கள் ஐரோப்பியர்களுகான வரிசையில் நின்று கொண்டிருந்தோம். குடிவரவு மேசையில் ஒரு சிங்கள நங்கை கப்பாயம் அணிந்து இருந்தாள். எமக்கு முன்னால் ஓர் பிரெஞ் தம்பதிகள் நின்றிருந்தனர் . அவர்களிடம் தேவைக்கு அதிகமாக தனது பல்லுகளைக் காட்டியவள் , எமது முறை வந்ததும் அந்த முகம் தானாகவே கருமை கொண்டது . நாங்கள் ஐரோப்பியர்களாக இருந்தும் ஐயத்துடனேயே எமது கடவு சீட்டுகளை நோண்டினாள் . இறுதியில் என்னை நோக்கி " நீங்கள் விசா எடுத்தீர்களா " ? என்ற கேள்வியை வீசினாள் . நான் , நாங்கள் ஏற்கனவே ஒன்லைனில் விசா எடுத்த விடயத்தை சொன்னேன் . அவள் மீண்டும் ,உங்கள் கடவுசீட்டு இலக்கம் பிழையாக இருக்கின்றது போய் காசை கட்டி மீண்டும் எடுத்து வாருங்கள் என்று எனது கடவுசீட்டை தந்தாள் . நான் அவளுடன் தர்க்கம் செய்ய வாய் உன்னுவதை கண்ட எனது மனைவி எனது கையை பிடித்து அழுத்தினாள் .


நாங்கள் மீண்டும் எனது கடவுசீட்டை ஆராய்ந்ததில் எனது கடவுசீட்டு இலக்கத்தில் உள்ள "ஐ " ( I ) என்ற ஆங்கில எழுத்து ஒன்றாக ( 1 ) என்னால் மாறி எழுதப்பட்டிருந்தது . நீ என்னதான் ஒழுங்காக செய்திருக்கின்றாய் ? என்பது போல என் மனைவி பார்வையால் என்னை எரித்தாள் . நாங்கள் மீண்டும் முப்பது டொலர்கள் தண்டமாக செலுத்திவிட்டு விசாவை எடுத்து கொண்டு குடிவரவை விட்டு வெளியேறினோம் . ஆனால் எனக்கு அவர்கள் செய்த மொள்ள மாரி வேலை கொதியை கிளப்பியது . ஒன்லைனில் விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் பொழுது கடவு சீட்டு பற்றிய சரியான தகவல்கள் இருந்தாலே அந்த மென் பொருள் எமது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் . இல்லாது விட்டால் எமது விண்ணப்பத்தை நிராகரித்து விடும் . அனால் நான் விண்ணப்பித்த பொழுது வெறும் பதினைந்து நிமிடத்திலேயே எனது கடவுசீட்டு ஆராயப்பட்டு ஒன்லைனால் விசா வழங்கியிருந்தார்கள் .காசை வறுகுவதற்காக இவர்கள் என்னவும் செய்வார்கள் என்பதை புரிந்து கொண்டேன் . நாங்கள் எல்லாவற்றையும் முடித்து வெளியே வர அதிகாலை மூன்றரை ஆகி விட்டிருந்தது . எனது கையில் சூடான கபேயும் கையில் சிகரட்டும் எனது மனவெக்கையை ஆற்றிகொண்டிருந்தது . நாங்கள் பம்பலபிட்டி செல்வதற்கு ரக்சிக்காக காத்திருந்தோம் .

தொடரும் 

கோமகன் 
10 சித்திரை 2014

Monday, April 21, 2014

வாடாமல்லிகை பாகம் 03

வாடாமல்லிகை பாகம் 03

தரை தட்டிய விமானத்தில் உள்ள அரேபியர்களில் முக்கால் வாசியினர் ஐரோப்பிய நவநாகரீக உடைகளில் இருந்து விடுதலை அடைந்து, ஓர் வெள்ளை நிற நாலுமுழ வேட்டி போன்று உயர்த்திகட்டியும் , வெறும் உடலின் மேல் வெள்ளை நிறத்திலான ஓர் போர்வையுடனும் வெறும் கால்களுடனும் நின்றிருந்தார்கள் . இந்தக் காட்சியானது பட்டிக்கு வழிமாறி வந்த ஆட்டுக்குட்டியின் நிலையையே எனக்கு ஏற்படுத்தியது. மேற்கு நாடுகளுக்கு உல்லாசம் அனுபவிக்க வரும் இவர்கள் தங்கள் மண்ணை மிதிக்கும் பொழுது மட்டும் சட்டங்களினால் கட்டாயப்படுதப்பட்ட வாழ்வுநிலையை ஏற்றது எனது மனதை நெருடவே செய்தது . எல்லோரும் இறங்குவதற்கு முண்டியடித்தனர் .ஆனாலும் அத்தனை சுலபமாக அவர்களால் இறங்க முடியவில்லை .அதற்கான காரணத்தை நாங்கள் வெளியே போகும் பொழுது தான் அறிந்து கொண்டோம் . விமானம் , விமானநிலயத்துடன் இணைக்காது தொலை தூரத்தில் நின்றது .அதில் படிக்கட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன .அதன் வழியே உடல் பெருத்த அரேபியர்கள் இறங்குவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். விமான நிலையத்துக்கு குளிரூட்டிய பேரூந்துகள் பயணிகளை கொண்டு சென்று கொண்டிருந்தன. எல்லோருமே குழந்தயை கிணத்துக்கட்டில் விட்டு விட்டு வந்த மன நிலையிலேயே இருந்தார்கள். நாங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக விடுப்பு பார்த்துக்கொண்டு இறங்கினோம். நான் ஜெட்டா எப்படி இருக்கப் போகின்றது என்ற மிதப்பில் விமான நிலையத்தில் நுழைந்தேன்.

நாங்கள் பாதுகாப்பு கெடுபிடிகளை முடித்துக்கொண்டு பயணிகள் மாறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தோம் . கண்ணுக்கெட்டிய தூரதிலேயே அந்த மண்டபம் சுங்கத் தீர்வைகள் அற்ற ஒரேயொரு கடையுடன் காணப்பட்டது . அங்கேதான் எனக்குப் பல அதிர்சிகள் காத்திருந்தன . எங்களுக்கு உடனடி தேவையாக கழிப்பிடம் செல்ல வேண்டி இருந்தது . அங்கே இரண்டு கழிப்பிடங்களே இருந்தன . ஒன்று பாதுகாப்பு சோதனைகள் முடிவடையும் இடத்திலும் , இரண்டாவது பயணிகள் தங்கும் இடத்திலும் காணப்பட்டன . நான் மனைவியை முதல் விட்டு விட்டு காத்திருக்கத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் வந்த மனைவியின் முகத்தில் ஈ ஆடவில்லை .எனக்கு கேள்விகள் கேட்க நேரம் இல்லாததால் உடனடியாகவே ஆண்கள் " பிஸ் " அடிக்கும் இடத்திற்கு சென்றேன் . அங்கே " பிஸ் " அடிக்கும் இடம் மக்களால் நிரம்பி வழிந்தது . கீழே தண்ணிக்காடாக இருந்தது . பலர் தங்கள் கால்களை ஒன்றுமாறி ஒன்றாக முகம் கழுவும் தொட்டியினுள் வைத்து கழுவி அதனுள்ளேயே முகமும் கழுவிக்கொண்டனர் . ஒரு சிலர் வாயுக்குள் தண்ணியை விட்டு விரல்களினால் கிடாவி பெரும் சத்தத்துடன் ஓங்காளித்து துப்பினார்கள் . குடலைப் புரட்டும் நாற்றம் அங்கே பரவி இருந்தது . தரையில் கீழே இருந்த தண்ணி வெள்ளத்தை நீக்க ஒரு இந்தியர் தண்ணி வாரும் துடைப்பக்கட்டையுடன் நின்று கொண்டார். எனக்கு வந்த மூத்திரம் எதிர் திசையில் ஒடியது .அனாலும் எனக்கு முட்டிய மூத்திரத்தால் விதைப்பை வலி எடுத்தது .நான் எனது விதியை எண்ணியவாறு மூச்சை அடக்கியவாறு எதிரே ஓடிய மூத்திரத்தை நேரே எடுக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினேன் . இறுதியில் வெற்றிக்கனி என்பக்கம் விழுந்தது . வெற்றியை எனதாக்கி கழிப்பிடம் தந்த மன உளைச்சலில் கடுப்புடன் வெளியே வந்த என்னை எனது மனைவி ஒருவிதமான நமுட்டுச் சிரிப்புடன் எதிர் கொண்டா. அவாவின் சிரிப்பு என்னைக் மேலும் கடுகடுக்க வைத்தது.

எங்களை சுங்கதீர்வையற்ற கடைகள் பெரிதாக கவரவில்லை ஆனால் விதம் விதமான பேரீந்துகளை அடுக்கி இருந்தார்கள் அத்துடன் இருக்கும் ஆறு மணி நேரத்தை போக்காட்டுவதற்கு அவைகளை விடுப்பு பார்தோம் . ஜெட்டா விமான நிலையம் எனக்கு தின்னவேலி சந்தையையே நினைவுக்கு கொண்டடு வந்தது .அருகிலே இருக்கும் மெக்கா புனித ஸ்தலத்துக்கு இந்த விமான நிலையத்திலே தான் விமானம் மாறவேண்டும் .உலகின் பல பாகங்களிலும் இருந்து யாத்திரீகர்கள் குவிந்து கொண்டு இருந்தார்கள் .அதற்கேற்ப போதிய இடவசதிகளோ அடிப்படை சுகாதார வசதிகளோ அங்கு இல்லாதது எனக்கு பெரும் வியப்பையே தந்தது .நேரம் தனது கடமையை செய்துகொண்டிருந்தது. பல யாத்திரீர்கள் இடம் இல்லாததால் நிலத்திலேயே சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தார்கள் . தாங்கள் உணவுப் பொட்டலங்களை அங்கேயே பிரித்து உண்டார்கள் . இந்த நிகழ்வானது கழிப்பிடத்திற்கு முன்பாகவும் நடந்தது . அதில் அவர்கள் அருவருப்பு நிலையை அடைந்ததாக தெரியவில்லை . வெளிநாட்டுப் பயணிகள் புகைப்பதற்கு புகைக்கும் அறை அங்கு இருக்கவில்லை. இது எனக்கு மேலும் சிக்கலை உருவாக்கியது .அத்துடன் இரண்டே இரண்டு உணவுசாலைகள் தான் இருந்தன . அதில் இருந்த உணவுகள் சாப்பிடும் படியாக இருக்கவில்லை. எமக்கு பசி வயிற்ரை புடுங்கியது. இருவரும் தேநீரை குடித்தபடியே எமது விதியை நொந்து கொண்டோம் . வாழ்க்கையில் அனுபவங்கள் எப்பொழுதுமே அலாதியானதும் இனிமையான பல படிப்பினைகளை தந்திருக்கின்றன . இந்த ஜெட்டா விமான நிலையமும் எனக்கு பலவித புதுமையான மக்களையும் அவர்களது பழக்கவழக்கங்களையும் தந்தது . நான் கஸ்ரமான நிலமையையும் இனிமையாக்க முயன்றுகொண்டிருந்தேன். ஒருவழியாக நேரம் ஒன்பது மணியை நெருங்கி கொண்டிருந்தது . எமது விமானம் புறப்படுவற்கான அழைப்பு வந்து கொண்டிருந்தது . எங்களை ஏற்றிக்கொண்டு அந்த இயந்திரப்பறவை மீண்டும் தனது கால்களை இலங்கை நோக்கி எக்கியது.

தொடரும்

கோமகன் 
07 சித்திரை 2014

Saturday, April 19, 2014

வாடாமல்லிகை பாகம் 02

வாடாமல்லிகை பாகம் 02 நாங்கள் பயண வேலைகளை செய்துகொண்டிருந்த பொழுது ஒருநாள் மாலை கனடாவில் இருந்து மனைவியின் அண்ணை எங்களுடன் தொடர்பு கொண்டார். அவர் எங்களை சந்தோசப்படுத்துகின்றேன் பேர்வழி என்று கனேடிய தபால் சேவை மூலம் ஒரு ஐ பாட் தங்கைக்கு அனுப்பிருந்தார் .தான் அனுப்பி ஒருமாதத்துக்கு மேல் என்றும் அவர் எம்மை எடுக்கசொன்ன செய்தியானது எமது பயணம் நெருங்கிய வேளையில் எனது வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருந்தது .ஏனெனில் அது கனடாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் தொங்குபறி நிலையில் நின்று கொண்டிருந்தது .இதனால் எனக்குப் பதட்டம் கூடியதே ஒழிய குறையவில்லை. ஆனாலும் எனது​ பதட்டங்களை வெளிக்காட்டாது எனது வேளைகளில் மூழ்கினேன். நான் வேலை செய்கின்ற உல்லாசவிடுதி மீள்கட்டுமானப்பணி முடிவடைந்த நிலையில் அண்மையிலேயே மீண்டும் வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்பட்டது . நான் வகிக்கின்ற பதவி காரணமாக விடுமுறையில் செல்வதற்கு முன்பே நான் பல ஆயுத்தங்களை எனது உதவியாளர்களுக்கு செய்யவேண்டியிருந்தது. அது தந்த உடல் களைப்பு எனக்கு மேலும் எப்பொழுது எனது பயண நாள் வரும் என்ற மன ஓட்டத்தினை அதிகரித்தவண்ணமே .இருந்தது . ஒருவழியாக மாசி மாத இறுதிப்பகுதி எம்மை நெருங்கியது .

மாசி மாதத்துபிற்பகுதியின் அந்த அதிகாலைப் பொழுது எனக்கும் மனைவிக்கும் இடையே கயிறு இழுத்தல் போட்டியாகவே விடிந்தது. வெளியே , காதலன் காதலியை முதல் முத்தம் கொடுப்பது போல வானம் பொத்துக்கொண்டு மழை நிலத்தை அடங்கா தாகத்துடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தது. விமான நிலையத்துக்கு ரக்சியில் செல்வது என்று எனது பக்கமும், இல்லையில்லை காசை சேமித்து பத்துநிமிட நடைதூரத்தில் இருக்கும் ரெயில் நிலையத்துக்குச் சென்று ரெயில் மூலம் விமான நிலையம் செல்வது என்று மனைவியும் கயிறு இழுத்துக்கொண்டிருந்தோம். இறுதியில் தொடர் மழை எனது பக்கம் அவளை இழுத்துவந்தது . நான் விரைவாக தொலைபேசி மூலம் ரக்சி வரவேண்டிய இடத்தைச் சொன்னேன். நாங்கள் எடுக்கவேண்டிய விமானம் பதினோரு மணிக்கு என்பதால் எங்களுக்கு அதிகமாகவே நேரம் இருந்தது. காலை எட்டுமணியளவில் எம்மைச் சுமந்து கொண்டு எமது ரக்சி கொட்டும் மழையின் ஊடாக விமான நிலையத்தை நோக்கி வழுக்கிச் சென்றது.

"சார்ல்ஸ் து கோல்" சர்வதேச விமான நிலையம் தினம் தினம் பலதரப்பட்ட மனிதர்களையும் பல விநோதக் காட்சிகளை அரங்கேற்ரம் செய்கின்ற இடம் . நாங்களும் அதில் ஐக்கியமாகிவிட்டோம் . நாங்கள் மனிதர்களுடன் மனிதர்களாக நீந்தினோம். நாங்கள் செல்கின்ற வழி இருபுறமும் கண்ணாடி இழைகளால் வேயப்பட்டு வெளிப்புறக் காட்சிகளையும் காணக்கூடியவாறு அமைக்கப்பட்டு இருந்தது . வெளியே பலவகையான இயந்திரப் பறவைகள் இயங்கியும் இயங்காமலும் வரிசை கட்டி நின்றிருந்தன . அந்தக்காலை வேளையில் அவைகளின் அணிவகுப்பு என் மனதில் உற்சாகத்தை கிளப்பி இருந்தது . நாங்கள் ஒருவாறு எயார் சவுதியா வரவேற்பு கூடத்தில் வந்து எமது பயணப்பொதிகளை அனுப்பி விட்டு அங்கே இருந்த இருக்கைகளில் எம்மை நுளைத்துக் கொண்டோம் . எனது மனைவியோ தனது தொலை பேசியில் கிடைத்த இணைய இணைப்பை இனிமையாக அனுபவிக்க , எனக்கோ இறுதி நேர எக்ஸ்பிறாசோ வை நுகர எனது நாக்குகள் நமநமத்தன . எனது முடிவை செயல் படுத்த அருகில் இருந்த கபே பாரை நோக்கி எனது கால்கள் நகர்ந்தன . அங்கே இருந்த குறசோன்ஸ் உம் "தன்னையும் எடு" என்று அதன் வாசத்தால் எனது நாசித்துவாரத்தை உசுப்பேற்றியது . அதனையும் கபேயையும் வங்கியவாறு வெளியே வந்தேன் . வெளியே மழை விட்டிருந்ததனால் நல்ல ஈரலிப்பாக இருந்தது . கபேயும் குறசோன்ஸ் உம் உள்ளே இறங்கியது மனதிற்கு உயிர்ப்பாக இருந்தது . "இதனுடன் ஒரு சிகரட் அடித்தால் இன்னும் நன்றாக இருக்குமே" என்று மனம் கட்டளை இட்டது . உடனே தன்னிச்சையாகவே உதட்டுடன் சிகரட் பொருந்தி லிட்டர் அதன் முனையை சிவப்பாக்கியது . நான் புகையை ஆழ உள்ளே இழுத்து வெளியே விட்டேன் . இந்த மனம் தான் எவ்வளவு விந்தையானது? எனது சொல் கேட்டு நடக்க வேண்டிய மனதிடம் அது சொல் கேட்டு நான் நடக்க வேண்டிய நிலயை  என்வென்று சொல்ல? இதைதான் மனதை குரங்குடன் ஒப்பிட்டார்களோ ?

ஒருவழியாக எமது குடிவரவு குடியகல்வை முடிக்கும்படி அறிவிப்பு வந்துகொண்டிருந்தது . அங்கு எமக்கு பெரிய அளவில் பிரச்னை இருக்கவில்லை . நாங்கள் பொழுது போக்கிற்காக சுங்கத் தீர்வையற்ற கடைகளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தோம் . ஏதாவது வாங்குவதானால் ஜெட்டா விமான நிலையத்தில் வாங்குவதாக முடிவு செய்திருந்தோம். காலம் தனது கடைமையை செய்து நேரம் பத்து மணியை தான் நெருங்கி விட்டதாகக் காட்டிக்கொண்டிருந்தது . எங்களை விமானத்தின் உள்ளே அனுமதிக்க ஆரம்பித்து விட்டார்கள் .எயார் சவுதியாவின் பணிப்பெண்கள் ஏறத்தாழ அரேபியக் குதிரைகளைப் போலவே இருந்தார்கள். அவர்களின் இனிமையான வரவேற்பில் நான் கிறுங்கித்தான் போனேன். நாங்கள் எமது இருக்கைகளை தேடி போய் அதனுள் எம்மைத் திணித்தோம் . அந்த விமானம் விசாலமாகவும் இருக்கைகளுக்கு இடையே கால்களை வைப்பதற்கு போதிய இடைவெளியும் இருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அரேபியர்கள் எல்லோருமே போந்தை பொலிந்தவர்களாக இருந்தார்கள் .விமானம் புறப்படுவதற்கு தயாராக தனது கதவுகளை இறுக்க மூடிக் கொண்டது .அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது .விமானி அராபி மொழியில் தனது வந்ததனத்தை தெரிவித்து விட்டு , மௌலவி ஒருவரின் அல்லாவின் வாழ்த்து ஓதலை தவழ விட்டார் . அல்லாவின் ஓதல் முடிவடைந்ததும் அந்த இயந்திரப் பறவை மெதுவாக ஓடு தளத்தில் ஓடி தன்னை நிலை நிறுத்தி அதிவேகத்தில் ஓடி தனது கால்களை நிலத்தில் உதைத்து எக்கியவாறே மேலே எழுந்தது .

விமானத்தின் ஜன்னல்களின் ஊடாக வெளியே வயல்கள் பச்சை போர்த்தி இருந்தன. வாகனங்கள் தூரத்தே சிறு பொட்டுகளாகத் தெரிந்தன .காலை வெய்யில் கண்களைக் கூசியது. இப்பொழுது அந்த இயந்திரப் பறவை தன்னை நிலைநிறுத்தி ஜெட்டாவை நோக்கி விரைந்தது. பூமிக்கும் எமக்குமான தொப்புள் கொடி உறவு ,பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை மூலமே இருந்தது .அந்தப் பறவை ஏறத்தாழ பதினோரு கிலோமீற்ரர் உயரத்தில் மணிக்கு தொளாயிரம் கிலோ மீற்ரர் வேகத்தில் மிதந்து கொண்டிருந்தது .அதில் பூட்டியிருந்த ஜீ பி எஸ் மூலமே அதன் வேகத்தை உணரக்கூடியதாக இருந்தது. நான் சவுதி அரேபியா எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்கின்றேன். நான் படித்த பாடங்கள் என் கண் முன்னே விரிந்தன. அடிக்கடி மாறும் மண் மலைகளையும், பாலைவனத்தில் சோலைகளாக வளர்ந்த பேரீந்துகளையும் ,அந்த சுடுமணலில் பயணிக்கும் ஒட்டகங்களையும்,ஆங்காங்கே துள்ளித்திரியும்  குதிரைகளையும் ,அரேபிய கன்னிகைகளையுமே சொல்லித்தந்தன. இப்பொழுதுதான் நான் நேரடியாக சவுதி அரேபியாவை பார்க்கப் போகின்றேன் .அதுவே எனக்குப் பல கற்பனை சிறகுகளைத் தந்திருந்தது .எமது விமானம் ஏறத்தாழ ஆறு மணித்தியாலங்களை விழுங்கி மாலை ஏழு மணியளவில் ஜெட்டா சர்வதேச விமான நிலையத்தில் தரை தட்டியது. அங்கே எனது கற்பனைகளுக்கு மாறாக பலத்த அதிர்சிகள் காத்திருந்தன.

தொடரும்

கோமகன்
03 சித்திரை 2014


Friday, April 18, 2014

வாடாமல்லிகை பாகம் 01

வாடாமல்லிகை பாகம் 01


கார்த்திகை திங்கள் 2013 ஒரு நாள் மதிய வேளையில் அலுத்துக் களைத்து வீடு திரும்பும் பொழுது எனது மனம் வழமைக்கு மாறாக ஊரைச் சுற்றியே ஊசலாடிக் கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை .கடந்த மூன்று வருடங்களாக அரிதார முகங்களையும் , அவற்றால் வரும் ஓட்டில்லாத சிரிப்புகளையும் பார்த்துச் சலித்த எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்ற ஓர் எண்ணம் சடுதியாக என் மனதில் சடுகுடு விளையாடியதில் வியப்பு ஏதும் இல்லை . மனதில் எழுந்த எண்ணத்தை செயலாக்கும் முடிவில் வீடு வந்த நான் ,என் எண்ணத்தை பள்ளியறையில் மஞ்சத்தில் ஆற அமர இருக்கும்பொழுது எனது மனைவியிடம் பகிர்ந்தேன் . அவளும் எனது மன ஓட்டத்தில் இருந்தாளோ என்னவோ எனது எண்ணத்துக்கு பச்சைக்கொடி காட்டினாள் . இருவரும் ஒன்றிணைந்து வருடாந்த விடுமுறையை நாம் வேலைசெய்யும் இடத்தில் கொடுக்கும் முடிவிற்கு வந்த பொழுது உடல் அலுப்பினால் தூக்கம் தானாகவே எம்மை அரவணைத்துக்கொண்டது .

நான் எமக்கான விடுமுறையை கொடுத்து விட்டு விமானப்பயணத்துக்கு வேண்டிய பதிவுகளை செய்ய கணணியை நோண்ட ஆரம்பித்தேன் .எனது வீக்கத்துக்கு எயார் சவுதியா என்முன்னே என்னை எடு என்று பிடித்தது .நான் அதிக நேரம் சவுதிஅரேபியாவில் அடுத்த விமானத்துக்காக காத்திருக்க வேண்டும் என்ற ஒரு விடயத்தை சவுதி அரேபிய விமான நிறுவனம் நாசுக்காக சொன்னது .இந்த விலையில் யாருமே எனக்கு தொலை தூர விமானசீட்டை தர மாட்டார்கள் என்றபடியால் அவர்களிடமே விமானப் பயணத்தை பதிவு செய்துகொண்டேன் . நாங்கள் இருவரும் எமக்கான பயண நாளை எண்ணிக்கொண்டே எமது வேலை நாட்களை கடத்திக் கொண்டிருந்தோம். வழமை போலவே 2013 ஆம் ஆண்டும் மேடு பள்ளங்களை தாண்டி எம்மைத் தாண்டிச் சென்றது.

தாயகப் பயணம் என்றாலே எல்லாவகையிலும் கனதியானது. ஆனாலும் அதில் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கின்றது .அது எப்படி என்றால் நாங்கள் செய்கின்ற ஓவ்வரு சிறிய செயல்களினாலும் மற்றவர்கள் முகத்தில் ஏற்படுகின்ற பூரிப்பினால் நாங்கள் பட்ட கஸ்ரங்களும் துயரங்களும் பஞ்சாகின்ற பொழுது அதுகூட ஒருவகையில் எமக்கு கிடைக்கின்ற ஆத்ம திருப்தியே . இதில் உறவுகள் எதிர்பார்க்கின்றார்களா இல்லையா என்பதல்ல பிரச்னை .நாம் அவர்களை எமது உறவாக அங்கீகரிக்கின்றோமா என்பதே முக்கியமானது. எமது பயணம் மாசிமாதம் இறுதிப்பகுதியில் முடிவான நிலையில், நாங்கள் இருவரும் பயணத்துக்கு தேவையான பொருட்களை சிறிது சிறிதாக வாங்கத் தொடங்கினோம் . இதே வேளையில் எனது மனைவியின் அண்ணை வடிவில் ஓர் சிறு புயல் கனடாவில் இருந்து எம்மை நோக்கி மையம் கொள்ள தொடங்கியது .

தொடரும் 

கோமகன்
31 பங்குனி 2014

Thursday, April 17, 2014

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் ( இறுதிப்பாகம் , பாகம் 04 , 40 - 50 )

41 எட்டி மரம் அல்லது காஞ்சிரை மரம் ( The strychnine tree , nux vomica, poison nut, semen strychnos and quaker buttons or Strychnos nux-vomica )எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.


எட்டி மரத்தின் பட்டை, காய், இலை முதலான அனைத்தும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. 'எட்டிக் கசப்பு' என்னும் வழக்கு இதன் சுவையை விளக்கப் போதுமானதாகும். எட்டிக்காயைக் 'காஞ்சிரங்காய்' என்று ஔவையார் குறிப்பிடுகிறார். வேண்டியனவற்றையெல்லாம் தரும் கற்பக மரம் உண்டாரைச் சாகச்செய்யும் காஞ்சிரங்காயை (எட்டுக்காயை)த் தந்தால் என்செய்வோம் எனக் குறிப்பிடுகிறார். வெள்ளாடு இந்தத் தழையை ஓரிரு வாய் கடிக்கும். அன்று அதன் பால் சற்றே கசக்கும். என்றாலும் அந்தப் பாலில் நச்சுத்தன்மை இல்லை. எட்டி மரத்தின் பாகங்களை நாட்டு மருந்துகளில் சேர்த்துகொள்வர்.

http://ta.wikipedia....wiki/எட்டி_மரம்

எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தரமரம். எல்லா நிலங்களிலும் வளரக் கூடியது. இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இது சுமார் 18 அடி உயரம் வரை வளர்கூடியது. இதன் இலை பச்சையாக 2 அங்குல அகலத்தில் 5 - 9 செ.மீ. நீளம் வரை இருக்கும். அதன் தாயகம் தென் கிழக்கு ஆசியா. தென் அமரிக்கா, மற்றும் பர்மா, சைனா, கிழக்கிந்தியா, தாய்லாண்டு, வட ஆஸ்திரேலியா, இலங்கை, கம்போடியா, வியட்னாம், மலெசியா(மலேயா) இந்தியா போன்ற நடுகளில் பரவலாக உள்ளது. இலை வேர் காம்பு,பட்டை விடத் தன்மை உடையது. உயிரையும் கொல்லும். அதனால் இதை கவனத்துடன் கையாள வேண்டும். இது விதைமூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் : 

இதன் பொதுவான குணம். வெப்பத்தை உண்டாக்கும். வாய்வை அகற்றும், மலத்தை உண்டாக்கும், நிறு நீரைப் பெருக்கும், நரம்பு மண்டலத்தை இயக்கும், வயிற்றுவலி, வாந்தி, அடிவயிற்றுவலி, குடல் எரிச்சல், இருதயவயாதி, இரத்த ஓட்டம், கண்வியாதி, மன அழுத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணரல் போன்றவற்றைக்
குணப் படுத்தும்.

எட்டிமரத்தின் வடபாகம் செல்லும் வேரை உரித்த பட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்யவும். தும்பை இலை+சிவனார் வேம்பு சம அளவு கசாயத்தில் 2 கிராம் இந்தச் சூரணத்தைப் போட்டு உள்ளே கொடுக்க பாம்பு முதலான விடம் தீரும். மேலும் 2-3 நாள் கொடுக்க வேண்டும். கடி விட வலி, வீக்கம் குணமாகும்.

இநன் பொடி இரு கிராம் அளவு உப்படனோ, வெற்றிலையுடனோ தின்ன தேள்கடி விடம் தீரும்.

வேர்ப்பட்டை 20 கிராம் 200 கிராம் மி.லி.நீரில் போட்டுக் காயச்சி குடி நீராக மூன்று வேளை கொடுக்க காலரா,வாந்தி, பேதி குணமாகும்

இதன் சூரணத்தை வெந்நீரில் 1-2 கிராம் கொடுக்க வாத வலி, இசிவு தீரும்.

மரப்பட்டை 10 கிராம் 100 மி.லி.எள் நெய்யில் போட்டுக் காயச்சி மேலே தடவ சொறி, சிரங்கு ஆராத புண் குணமாகும்.

இதன் இலையை வெந்நீரில் போட்டு அந்த நீரில் குளிக்க நரம்பு வலி தீரும்.

இளந்துளிரை அரைத்து வெண்ணெயில் மத்தித்துப் பூச கட்டிகள் கரையும். வெப்பக்கொப்புளம் குணமாகும்.

எட்டிப் பழத்தைப் பிழிந்து சிவனார் வேம்பு குழிது தைலம் இறக்கி கந்தகப் பற்பத்துடன் கொடுத்து வர குட்ட நோய் குணமாகும். நோய்உடலில் எவ்வளவு நாள் இருந்ததோ அவ்வளவு நாள் கொடுக்கவும்.

எட்டிமரத்தின் வடக்குப் பக்கம் சென்ற வேர் மாந்திரீகம் செய்யப் பயன்படும்.

எட்டி இலையை தவறுதலாக உண்டவர்களுக்கு முறிப்பு மருந்தும் அறிதல் நன்றாம். கடுக்காய் கசாயம், வெற்றில்ச் சாறு, மிளகு+ வெந்தயக் கசாயம் ஆகியன எட்டிக்கு விட மிறிப்பாகும். எட்டி பிற மருந்துகளை முறிக்கும் குணத்தைப் பெற்றதாகும். எல்லாவிடங்களையும் முறிக்க எட்டியின் ‘நக்ஸ்வாமிகா’ கொடுக்கப்படுகிறது.

எட்டிக் கொட்டை -:

‘கைக்கறுப்பு சந்நி கடிவிஷங்குஷ் டூதைவலி
யெப்க்கவரு தாதுநஷ்டமெபவைபோ-மைக்கண்ணாய்
கட்டி கரப்பான் கனமயக்குப் பித்தமுமி
லெட்டிமரக் கொட்டையினால்’


எட்டிக் கொட்டையால் கருமேகம், சந்நி, குஷ்டம், வதவலி, வீரிநஷ்டம், பிடகம், கரப்பான், மூர்ச்சை, பயித்தியம் இவை போம்.

சுத்தம் செய்த எட்டி விதையைச் சந்தனக் கல்லின் மீது சலம் விட்டு உரைத்து வழித்துச் சிறுது வெதுப்பித்தலைவலிக்குத் தடவிச் சிறுது அனல் காட்டக் குணமாகும்.இன்னும் இதைக் கோழி மலத்துடன் சேர்த்தரைத்து வெறிநாயக் கடிக்கு மேற்றடவக் குணமாகும்.

எட்டி வித்து விராகனெடை 1, மிளகு விராகனெடை2, சுக்கு விராகனெடை 2.5, மான் கொம்பு விராகனெடை 1.5 இவற்றையெல்லாம் சூரணித்து அம்மியில் வைத்துச் சிறிது சலம் விட்டரைத்து வழித்து ஒரு கரண்டியில் விட்டு நெருப்பனலில் வைத்துச் சிறிது வெதும்பி களிபோல் செய்து அடிவயிறு வீக்கம், கீல்களில் காணும் வீக்கம் இவை மேல் பூசக் குணமாகும்.

எட்டிப் பழம் -:


ஒரு சுத்தமான மண்தரையில் 1 வீசைப் புளியம் புறணியைப் போட்டுக் கொழுத்திச் சாம்பலான சமயம் அச்சாம்பலை நீக்கி விட்டு அந்த சூடேரிய தரையில் 30-40 எட்டிப் பழத்தைச் சிதைத்துப் போட்டு அதன் பேரில் பாதத்தை அழுத்த வைத்து எடுக்கவும். இப்படி இரு பாதங்களையும் மாற்றி மாற்றிச் சூடு தாளும் வரையில் வைத்தெடுக்க குதிங்கால் வாதம் குணமாகும். இது விசேசமாக பெண்களுக்கு பிரசவித்த பின் அழுக்குத் தங்கி இரு பாதங்களில் உணைடாகும் எரிச்சல், திமிர், வலி முதலியவற்றிக்கு சிறந்த சிகிச்சையாகும்.

இதைப் பற்றி சித்தர்களான அகத்தியர், தேரையர் மற்றும் புலிப்பாணி ஆகியோர் பல நூல்களில் எழுதியுள்ளனர்.

http://news.amanushy...-post_4502.html

http://en.wikipedia....hnos_nux-vomica


42 ஒலிவ் மரம் ( The olive tree or Olea europaea )ஆலிவ் எண்ணெய்ப் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 

ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது கெட்டக் கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது. இஃது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது.

ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்குக் குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும் கட்டுப்பத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமையலில் ஆலிவ் எண்ணெய்ப் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் மருத்துவக் குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனாப் பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. டாக்டர் ஜோசப் ட்ருயிட்டா தலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 

எலும்புப் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக் குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்த ஆய்விற்காக 55 முதல் 80 வயதுவரை உடைய 127 பேர்ப் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது எலும்பு தொடர்பான பாதிப்புகளில் உள்ளவர்களின் எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து எலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் ஆயிலுக்கு இருப்பதை டாக்டர்கள் உறுதி ச்செய்துள்ளனர். ஆலிவ் எண்ணெய்ப் பயன்படுத்தினால் மார்பகப் புற்று நோயைத் தடுக்கும்.

கட்டித் தங்கத்தின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவு உயரத்தில் இருக்கிறது. இப்பொழுதுத் தங்கம் என்று கூற வாய்த் திறந்து மூடும் நேரத்தில் எவ்வளவு ஆயிரம் விலை ஏறும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில் என்ன விபரீத விளையாட்டு, திரவத்தங்கம் இருக்கிறதா என்று ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று கொலைவெறியுடன் பார்ப்பது தெரிகிறது. கூல் கூல். அந்தத் தங்கத்தை விடுங்க. நாம் வேறு தங்கத்தைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம்.

ஆலிவ் எண்ணெய்க்கும் தங்கம் என்று மற்றொரு பெயர் உண்டுங்கோ. ஆமாங்கோ. இது திரவ நிலையில் இருப்பதால் இதற்குத் திரவத் தங்கம் என்று பெயர். ஆலிவ் எண்ணெய்க் கண்களுக்குக் குளிர்ச்சியும், சருமத்திற்கு வெண்மையும், தலைமுடிக்குப் போஷாக்கும் அளிக்கிறது என்பது பல நாட்களாக நாம் அறிந்தச் செய்தி… ஆனால் மார்பகப் புற்று நோய்க்கு மாமருந்து என்பது தற்போதைய ஆய்வு முடிவு.

ஆலிவ் ஆயில் விஹிதிகி (Mono Unsaturated Farty Acid) தேவையற்றக் கொழுப்புகளையும், டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides) ஆகிய வகைகளையும் குறைக்கவல்லது.

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதனைக் குணப்ப டுத்துவதற்கும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய்ச் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்றும் கண் டறியப்பட்டுள்ளது. இதனை ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடாப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுத் தெரிவித்துள்ளது.

பாலிஃபீனால் என்னும் திரவப்பொருள் ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டி எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அது திடப் பொருளாக்கப்பட்டது. அத் திடப்பொருளான பாலிஃபீனால் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் அதில் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே, மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம் என்று அறிவி த்துள்ளது.

இதயத்துக்கு ஏற்றச் சமையல் எண்ணெய் என்று இதனைச் சொல்கின்றனர். இதன் விலை என்ன அந்த அளவிலா உள்ளது என்னும் வினாவும் பலரிடம் உள்ளது. அது குறித்துச் சிந்திக்கும் முன்னர்ப் புற்று நோய் வந்து சிகிச்சை எடுக்கும் செலவைக் குறித்துச் சிந்திக்க வேண்டி உள்ளது. முக்கியமாகப் புற்றுநோய் அறிகுறி உள்ளவர்கள், ஆரம்ப நிலைப் புற்று நோயாளிகள் ஆகியோர் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

ஏனெனில், இது கண்டிப்பாக மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் என்றும் கூறுகின்றனர். பெண்கள் நாள்தோறும் உணவில் 10 மேஜைக்கரண்டி வரை ஆலிவ் எண்ணெய்ச்சேர்த்துக் கொண்டால், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களைத் தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றிப் பார்சிலோனாவின் ஆடனோமாப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத் தினர். முதலில் மனித உடலுக்குப் பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. தினசரி ஆலிவ் எண்ணெய்ச் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர். கொடுத்து வைத்த எலிகள். ஆலிவ் உணவு அவற்றிற்கு.. அதில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித் தொழிப்பது தெரிய வந்தது. மேலும் மரபணுவைச் சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் பாலிஃபீனால் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், மரபணுப் பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்றப் புற்றுநோய்களையும் ஆலிவ் எண்ணெய்த் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜ §ர்ட் எஸ்ரிச் கூறுகையில், ‘‘பெண்கள் தினசரி உணவில் 10 மிலி முதல் 50 மிலி ஆலிவ் எண்ணெய்ப் பயன்படுத்தினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம்’’ என்றார். உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய், அதைக் கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார்.

ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய்ப் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்தத் தமனிப் பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார். இதயத்துக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெயைத்தான் (ளிறீவீஸ்மீ ளிவீறீ) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்றச் சிறந்த சமையல் எண்ணெயாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக் குறைவாக இருப்பதாகப் பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதிச் செய்துள்ளன.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகத் தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்புப் படியாமல் தடுக்கலாம் என்கிறது மற்றொரு ஆய்வு.

ஆலிவ் மரத்தின் பழத்தின் நடுவில் கடினமான விதையும் சுற்றித் திடமான சதைப் பகுதியும் இருக்கும். பழங்கள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும், அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். காய்ப் பச்சை நிறத்திலும், கனிந்தப் பின் பழுப்பு, சிவப்பு அல்லது க ருப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிரத் தாது பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’ முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இவ்விதையில் இருந்து எடுக்கப்படும். எண்ணெய் ‘திரவத்தங்கம்’ என்று மருத்துவ உலகினரால் அழைக்கப்படுகிறது.

இவ்விதையில் இருந்து முதல் முறை வடிகட்டி எடுக்கும் கன்னி எண்ணெய் எக்ஸ்ட்ரா விர்ஜின் (EXTRA VIRGIN) எனப்படும். இந்த எண்ணெய்க் கலப்படமில் லாதது. இது நல்ல மணத்துடன் இருக்கும். (ஆனால் அந்த மணம் நமக்குப் பிடிக்குமா என்பதுதான் இங்கே கேள்வி) சுத்திகரிப்புச் செய்து, இரண்டாம் முறை வடிகட்டும் எண்ணெய்ச் சற்று மணம் குறைந்ததாக இருக்கும். ஏனெனில், இது சுத்திகரிப்புக்கு உட்பட்டுக் கிடைப்பதால்.

மூன்றாம் முறை வடிகட்டப்படும் எண்ணெய்தான் இந்தியச் சந்தையில் கிடைப்பதாகக் கூறுகின்றனர். இதில் குறைந்த அளவே மணம் இருப்பதால் இதனையே மக்கள் பயன்படுத்துவதாகவும் கன்னி எண்ணெயான முதல் முறை வடிகட்டும் எண்ணெயை, அதன் மணம் காரணமாகவும் அந்த எண்ணெயில் சமையல் செய்து சாப்பிட்டப் பின்புச் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது என்பதாலும் இங்கே அதன் பயன்பாடுக் குறைவாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தும் போது அதன் சத்துக் குறையாமல் பயன்படுத்த நினைத்தால் அதனை அதிகமாகச் சூடாக்கக் கூடாது. கண்டிப்பாகப் பொரிப்பதற்கு (Deep Fry) ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்த இயலாது. இந்தக் காரணத்தினாலும் அதனைச் சமையலுக்குப் பயன்படுத்த முடிவதில்லை என்கின்றனர் பலர். நம்மவர்கள்தான் பஜ்ஜி, போண்டா, வடை என்று எண்ணெயில் குளிக்கும் உணவுகளைப் பொரித்துக் (Deep Fry) கொறிக்கும் வழக்கம் உள்ளவர்கள் ஆயிற்றே. அதனாலும் ஆலிவ் எண்ணெயின் பயன்பாடு அயல்நாடுகளை நோக்க இங்கே மிகக் குறைவே. நம்மவர்கள் பெரும்பாலும் சமையல் முடித்த பிறகு அதன் மீது ஆலிவ் எண்ணெயை டிரஸ்ஸிங் போலச் சிறிதளவுச் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.

அதிக வெளிச்சமும் அதிகச் சூடும் ஆலிவ் எண்ணெயின் ஆயுளைக் குறைத்து விடும். (கெட்டுப் போவதற்கு வாய்ப்புண்டு) அதனால் ஆலிவ் எண்ணெயை மிதமான சூடும் மிதமான வெளிச்சமும் உள்ள இடத்தில் வைத்துப் பாதுகாப்பது நல்லது.

ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடு: 10 ஆயிரம் டன்னாக உயரும.

புதுடில்லி:மருத்துவக் குணம் நிறைந்த, ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடு, இந்தியாவில் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, நடப்பாண்டில், உள்நாட்டில் இதன் பயன்பாடு, 10 ஆயிரம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடு, படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டில், இந்தியாவில் ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடு, 4,000 டன்னாக இருந்தது.

இது, சென்ற 2011ம் ஆண்டில், 6,000 டன்னாக உயர்ந்துள்ளது என, இந்திய ஆலிவ் எண்ணெய்ச் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.முன்பு, ஆலிவ் எண்ணெய் மசாஜ் உள்ளிட்ட வெளிப்புறப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, இந்த எண்ணெய்ச் சமையலறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆலிவ் எண்ணெய், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில்இருந்துதான், இறக்குமதிச் செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில், ஆலிவ் எண்ணெய் உற்பத்தி, 32 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இதில், மேற்கண்ட இரு நாடுகளின் பங்களிப்பு மட்டும், 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2003ம் ஆண்டில், இந்தியாவில், ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடு மிகவும் குறைந்து காணப்பட்டது. அதேசமயம், சீனாவில், இதன் பயன்பாடு, 30 ஆயிரம் டன் என்ற அளவில் உள்ளது. சர்வதேச அளவில், மற்றச் சமையல் எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது, இதன் பயன்பாடுக் குறைவாக உள்ளது. என்றாலும், தற்போது, மக்களின் செலவிடும் வருவாய் உயர்ந்து வருவதால், ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

ஆலிவ் எண்ணெயில் ஏராளமான சத்துகள் அடங்கி இருப்பதை இன்றைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன 1400 வருடங்களுக்கு முன்பே அவைகளில் அதிகச் சத்துகள் இருப்பதாகவும் அவைகளை உங்களுக்காகவே (மனிதர்களின் நலன் கருதியே உருவாக்கியதாகவும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். இனிவரும் காலங்களில் இதன் ஆராய்ச்சியில் இன்னும் பல நன்மைகள் அடங்கி இருப்பதைக் கண்டு பிடித்து அறிவிக்கலாம்.

http://www.adirai.in...யன்பாடுகள்.html
http://en.wikipedia....wiki/Olive_tree


43 கஞ்சா செடி ( Cannabis )

 
கஞ்சா செடி பூக்கும் தாவரவர்க்கத்தை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது மூன்று பிரதான இனங்களை உள்ளடக்கும் அவை, கனாபிசு சற்றைவா (Cannabis sativa),[கனாபிசு இன்டிகா(Cannabis indica),மற்றும் கனாபிசு ருடேராலிசு(Cannabis ruderalis). இந்த மூன்று வர்க்கங்களும் மத்திய ஆசியாவிலிருந்து தெற்காசியா வரையான நாடுகளை சுதேச பிரதேசங்களாகக் கொண்டவை.

கஞ்சா நீண்ட காலமாக நார்ப் பொருள் உற்பத்தி, எண்ணெய் வித்து, மற்றும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைத்தொழில் ரீதியில் நார் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் சில வர்க்கங்கள் போதையூட்டும் பொருட்களாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் காணப்படும் வேதிப்பொருளான THC (Δ9- tetrahydrocannabinol), இவ்வியல்புக்குக் காரணமாகும். சிவகை என அழைக்கப்படும் கஞ்சா பக்தி கலந்த போதையை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது

கஞ்சா ஈரிலில்லமுள்ள, ஓராண்டுக்குரிய பூக்கும் தாவரமாகும். இது ரம்பப்பல் வடிவுடனான கைவடிவக் கூட்டிலைகள் கொண்டது. முதலாவது இலைச்சோடி தனிச் சிற்றிலைகளைக் கொண்டமைய சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து பதிமூன்று சிற்றிலைவரை அதிகரித்துச் செல்லும். பொதுவாக 7-9 இலைகள் காணப்படும். இனங்களையும் வாழும் சூழலையும் பொறுத்து இவ்வெண்ணிக்கை மாறுபடும். பூக்கும் நிலையிலுள்ள தாவரமொன்றில் மீண்டும் சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து மீண்டும் தனிச்சிற்றிலையில் முடியும்.

இவற்றின் இலைகள் கொண்டுள்ள தனித்துவமான வலையுரு நரம்பமைப்பு கஞ்சாத் தாவரத்தை புதியவர்களும் இலகுவாக இனங்காண உதவுகின்றது. இதன் ஒவ்வொரு பிளவுபட்ட இலையும் பொதுனாக இருப்பது போல அதன் ஒவ்வொருபிளவின் எல்லைவரைச் செல்லும் தனித்தனி நடுநரம்பைக் கொண்டிருக்கும்.
http://ta.wikipedia.....org/wiki/கஞ்சா

http://en.wikipedia.org/wiki/Cannabis

44 கம்பு ( pearl millet or Pennisetum glaucum )
கம்பு ஒரு தானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப்பயிர். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.
அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது. பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கொள்ளப்படுகின்றது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளைந்து உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.

தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.

100 கிராம் கம்பில்,
42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.

நன்கு உலர வைத்த கம்பு தானியம் சுமார் 3 முதல் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். பின்னர் மீண்டும் ஒருமுறை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்தால் மேலும் 6 மாதங்கள் கெடாமல் இருக்கும். நொச்சி இலையை கம்புடன் கலந்து சேமித்தால், பூச்சி தாக்குதல் கட்டுப்படும்

பாரம்பரிய முறையில் கம்பு சமையல்: முதலில் கம்பை எடுத்துத் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து விட்டுப் பின்னர் அந்தக் கம்பைத் தூய்மையான துணியில் பரப்பி வைத்து விடவும்.
மேற்பரப்பிலுள்ள ஈரம் போனபின் கம்பை எடுத்து உரலில் இட்டு இலேசாகக் குத்தவும்.அதில் உமி நீங்கியதும் அதை முறத்தில் இட்டுப் புடைக்கவும்.
பின்னர் மீண்டும் உரலிலிட்டு நன்கு குத்தவும்.
அதிலிருந்து பெரிய குருணை, சிறிய குருணை, மாவு ஆகியவற்றைத் தனித்தனியே பிரிக்கவும். பின்னர் அடுப்பில் உலை வைத்து முதலில் பெரிய குருணையை இட்டு வேக வைக்கவும். அது வேகக் கொஞ்சம் நேரம் அதிகமாகும். அது வெந்தபின் சிறிய குருணையை அதனுடன் சேர்த்துக் கலக்கி வேக வைக்கவும். அதுவும் வெந்தபின்னர் மாவினைப் போட்டுக் கலக்கவும். குறிப்பிட்ட பதத்திற்கு வெந்தபின்னர் அடுப்பை அணைத்துவிட்டுப் பாத்திரத்தை அப்படியே சிறிது நேரம் மூடிவைக்கவும்.
பின்பு கெட்டியாக ஆகிவிட்ட கம்பஞ்சோற்றினைக் கரண்டியில் எடுத்து உருண்டைகளாகத் தட்டில் இட்டு அதனுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து உண்ணலாம். மீதமாகி விட்டால் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாத்திரத்திலிட்டு நல்ல நீரை ஊற்றி வைத்துவிட்டால் இரண்டு நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

தொன்று தொட்டுக் கம்பில் செய்யப்பட்டு வருவது கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு ஆகும். கம்பங்கூழ், கம்பு ஊறவைத்த நீர் ஆகியவையும் கம்பின் பழைய உணவு வகைகள்.

தற்காலத்தில் கம்பு உணவு அதிகம் சமைக்கப் படாததற்குக் காரணம், கம்பை உணவாக்குவதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருப்பதும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதும்தான். இக்குறைகளைப் போக்கி, எளிதாகக் கம்பு உணவினைத் தயாரிக்க, கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உடனடி கம்புசாதக் கலவை ஒன்றை உருவாக்கி அதற்குக் காப்புரிமை பெற்றுள்ளது.

http://ta.wikipedia.....org/wiki/கம்பு

http://en.wikipedia....nisetum_glaucum


45 கமுகு , பாக்கு, கந்தி சுடைக்காய்( areca palm or areca nut palm betel palm or Areca catechu )

  

பாக்கின்றி தாம்பூலமில்லை. காதல் உணர்வை தூண்டுவதாக கருதப்படும் கமுகு (பாக்கு), நீரிழிவு நோய்க்கும் மருந்தாகும் என்பது உடுப்பி ஆயுர்வேத மருத்துவமனை மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

கமுகு எனப்படும் பாக்கு மரம் இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடுகளில் பயிராகும் மரம். இந்த மரத்தின் பழங்களில் உள்ள விதை பாக்கு எனப்படும். பாக்கு மரப்பழம் 3 செ.மீ. நீளமாக, உள்ளே ஒரே ஒரு விதையை கொண்டிருக்கும். பழங்கள் பழுக்கும் முன்பே மரத்திலிருந்து எடுத்து நார் பாகத்தை பிரித்தெடுத்து, கொட்டைகள் சுடுநீரில் வேக வைத்து, வெய்யிலில் உலர்த்தப்படும். இம்முறையில் எடுக்கப்பட்ட பாக்கு 'டேனின்' (annin) குறைவாக இருக்கும். தவிர அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். சுவையும் கூடியிருக்கும்.

பாக்கு மரத்தின் தாவர பெயர் - Areca Catechu ஆங்கிலத்தில் Betel Nut palm (Ü) Areca - nut palm சமஸ்கிருதம் - பூகா, ஹிந்தி - சுபாரி, தமிழில் - கமுகு, பாக்கு, கந்தி சுடைக்காய், பல பயன்களை தரும் பாக்கு, பொதுவாக தாம்பூலத்தில் வெற்றிலையுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. வெற்றிலை தின்பவர்களுக்கு இன்றியமையாதது.

பாக்கை முக்கிய உட்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட "பூங்காட்ரிம்" (பாக்கு தவிர வேறு சில பொருட்கள் சேர்ந்தது) மருந்து உடுப்பி ஆயுர்வேத மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவுகள் - பூங்காட்ரிம் மிதமான மற்றும் நடுத்தர தீவிரமான நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தும் (அதுவும் பக்க விளைவுகள் இல்லாமல்) என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


http://www.xn--wkc4d...-post_8116.html

http://en.wikipedia....i/Areca_catechu


46 கத்தரிச் செடி  அல்லது வழுதுணங்காய் செடி ( brinjal Eggplant aubergine melongene garden egg, or guinea squash ) .கத்தரி சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். இதனைப் பழந்தமிழில் வழுதுணங்காய் என்றனர் (சங்கக் காலத்து ஔவையார் வரகசிரிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்).

கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகை. சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிறவும் அடங்கும். தென்னிந்தியாவும் இலங்கையுமே இதன் தாயக விளைநிலங்களாகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17 ஆவது நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள். கத்த்ரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, இடைக்காலத்தில் அராபியர்களால் நடுநிலக்கடற் பகுதியில் அறிமுகமானது. இக்காயைத் தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ உண்பார்கள்.

தமிழ்நாட்டில் விளையும் கத்தரிக்காயின் இனங்களில் பன்மியம் (diversity) உள்ளது. இவை தமிழ்நாட்டில் பயிரிடப்படும் இடங்களிலும், பயிரிடும் முறைகளிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய் நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய் எனப் பல வகைகள் உண்டு.

http://ta.wikipedia....org/wiki/கத்தரி

கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது.

இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையான வேதிப்பொருட்கள் அர்ஜினைன், லுஸைன், நிகோடின் அமிலம், சொலசோடைன், டையோஸ்ஜெனினி, டிரான்ஸ், கெபெய்க் அமிலம், டேடுரடியோல். ஆஸ்துமா நோயை குறைக்கும்கத்தரியின் இலைகள் ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய்; சிறுநீர்க் கழிப்பின் போது ஏற்படும் வலி ஆகியவற்றினை குணப்படுத்தும்; வாயில் எச்சில் சுரக்க உதவும். வேர் ஆஸ்துமா மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது. வேரின் சாறு காதுவலி போக்க பயன்படுத்தப்படுகிறது. கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும். அதனால் தான் பத்திய வைத்தியத்தில் இந்தக் காய் முக்கிய இடம் வகிக்கிறது. அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். காலின் வீக்கத்தை குறைப்பதற்கு அப்பகுதியில் பூசிக்கொள்வார்கள். இதை பிழிந்து சாறு எடுத்து உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் பூசுவதன் மூலம் வியர்வையை தடைசெய்யலாம்.கொழுப்புக்கு எதிரானது மேலும் கொழுப்பு சேர்வதற்கு எதிரானது. கல்லீரல் நோய்களுக்கு நல்ல மருந்தாகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவினைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தினை சரிப்படுத்த சிறந்த உணவாகும். உடலில் கூடுதலாக உள்ள கொழுப்புச்சத்தின் அளவை கட்டுப்படுத்த கத்தரிக்காய் உதவுகிறது. அத்துடன் இது ஒரு போஷாக்கு நிறைந்த உணவாகையால் ஏழைகளின் இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது,ஜெர்மனி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கத்தரியின் மருத்துவப் பயன்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளன. சுத்த ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவத்தை தடுக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூலநோய்க்கு மேல் பூச்சாக பயன்படுகிறது. நசுக்கப்பட்ட கனியானது வெங்குரு மற்றும் வெயில் காரணமாக முகம் சிவந்திருத்தலை போக்க வல்லது.

http://tamil.boldsky...al-aid0091.html

47 கருங்காலி (  Ebony or  Diospyros ebenum )
கருங்காலி (Diospyros ebenum - இலங்கைக் கருங்காலி) என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் பெறப்படுகின்றன.

இந்த கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலி பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டாலும், கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றையப் பலகைகள் பெறுவதில்லை.


 http://ta.wikipedia..../wiki/கருங்காலி https://en.wikipedia...iospyros_ebenum

 48 நாகலிங்க மரம் cannonball tree or Couroupita guianensis )படமெடுத்தாடும் நாகப் பாம்பின் தலை சிவலிங்கம் மேல் இருப்பது போன்ற பூக்களை உடைய மரமாகும். நாகலிங்கம் பெரிய வீடுகளின் முகப்பிலும், கட்டிட வளாகங்களிலும் வளர்ந்து நிழல் தருவதுடன், தூசியை வடிகட்டும், சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும் மரமாகும். நாகலிங்கத்தின் தாயகமான கயனாவில் வழங்கப்படும் பெயரிலிருந்து கவுரவ்பீட்டா என்ற முதற்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இணைப்புப் பெயரான கயானெசிஸ் இதன் தாயகத்தைக் குறிக்கும் பெயராகும்.

நாகலிங்கம் மரம் 11-12 மீட்டம் உயரம் வளரும். 6 மீட்டர் அளவிற்கு விரிந்த தழையமைப்பு, அடர்த்தியாகவும் இருக்கும். அடிமரத்திலேயே நீண்ட குச்சிகள், மரத்தை ஒட்டினாற்போல் பூக்களைத் தாங்கிக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் காவிரி நதிக்கரையில் அதிகமாகக் காணப்பட்ட நாகலிங்க மரம், குடிபெயர்ந்து நகரங்களில் குடியேறிவிட்டது.

நடுமரம் மற்றும் தடித்த பெரிய கிளைகளில் பூக்கள் உருவாகும். ஒரு மீட்டர் நீளப் பூக்களைகளில் சிமிழ் போன்ற வடிவில் பூ மொட்டுக்கள் உருவாகும். விரிந்த நிலையில் மகரந்த தண்டுகள் இணைந்த பகுதி, நாகப் பாம்பின் படமெடுத்த தலையைப் போன்றிருக்கும். விரிந்த பகுதியின் கீழ், பூவின் அண்டம், சிவலிங்கத்தைப் போன்று தோற்றமளிக்கும். இதன் காரணமாகவே இம்மரத்திற்கு நாகலிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூக்கள் உதிர்ந்து காய்கள் உருவாகும்.

துரிதமாகத் துளிர்க்கும் இலையைக் கொண்டிருப்பதால் தழையை அரக்கி, தழையெருவாகப் பயன்படுத்தலாம். வெட்ட வெட்ட தழைக்கக் கூடியது.

இனி தீவுகளில் கனியைக் கால்நடை தீவனமாக உபயோகிக்கின்றனர்.

நீக்ரோ இனத்தவர் கனியை உண்பதாகவும், மேலும் கனியிலிருந்து ஒருவகை பானம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

மரத்தை வேளாண்மைக் கருவிகள் செய்திட உபயோகிக்கலாம்.

இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

http://ta.wikipedia....கலிங்கம்_(மரம்)

http://www.tamilvu.o.../nakalinkam.htm

https://en.wikipedia...pita_guianensis

49 கறிவேப்பிலை மரம் ( curry tree or Murraya koenigii )உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படி செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.


கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது.

இவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசையரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண் ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார்.

இது புற்றுநோய். இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபகசக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர். கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பர நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட, ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியவந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது.

பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்.

சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

https://www.facebook.com/puduvaifriends/posts/391255770978055


http://en.wikipedia.org/wiki/Curry_leaves


50 கொய்யா மரம்  (  guava or common guava (Psidium guajava )
கொய்யா அல்லது சிடியம் (Psidium) என இலத்தீன் மொழியில் அழைக்கப்படுவது ஒரு நிலைத்திணைக் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் அண்ணளவாக 100 இனங்கள் உள்ளன. மெக்சிக்கோவையும் நடு அமெரிக்காவையும் தென் அமெரிக்காவின் வடபகுதியையும் பிறப்பிடமாகக் கொண்ட இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் கடல் ஓட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளன. கொய்யா இன்று வெப்பவலய நாடுகளில் காணப்படுகிறது.

கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள். கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி சந்தையில் உலா வருகின்றன.

கொய்யாப்பழத்தைப் பதப்படுத்தி ஐஸ்கிரீம், வேஃபர்ஸ், புட்டிங்ஸ், மில்க்ஷேக் இவற்றோடு கலந்தும் விற்கப்படுகிறது. சில இடங்களில் கொய்யா ஜுஸ் பாட்டில்களில் அடைத்தும் விற்கிறார்கள் உலர வைக்கப்பட்ட கொய்யாவை பவுடராக்கி, கேக், புட்டிங்ஸ், ஐஸ்கிரீம், ஜாம், சட்னி போன்ற உணவுப் பொருட்களில் கலந்து விற்கிறார்கள்.

கொய்யாப் பட்டை தோலைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.

http://en.wikipedia.org/wiki/Psidium_guajava


Wednesday, April 9, 2014

ரகசியத்தின் நாக்குகள் சொல்லும் கதை ( விமர்சனம் )

ரகசியத்தின் நாக்குகள் சொல்லும் கதை  (விமர்சனம் )


நெற்கொழு தாசனின் " ரகசியத்தின் நாக்குகள் " கவிதைத்தொகுதி வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன் . என்னுடன் கூடப் பயணித்த கொழுவனை பற்றி மற்றையவர்கள் அக்குவேறு ஆணிவேறாக ஆக்கபூர்வமாக விமர்சித்த பொழுது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. மற்றயவர்கள் நெற்கொழு தாசன் என்று அழைத்தாலும் நான் அவரை "கொழுவன்" என்றே அழைப்பது வழக்கம். அதற்கு காரணமும் இல்லாமலும் இல்லை. அவர் கவிதைகளுக்கான சொற்களை கொழுவுவதில் வல்லவர் .

நெற்கொழுதாசனின் கவிதை தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் காத்திரமான கவிதைகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை. அனால் அவரின் பல கவிதைகள் " ஒப்பாரி கவிதைகள் " என்ற வகையிலேயே எனக்குத் தெரிகின்றது. சோகம் அல்லது பிரிவாற்றாமை என்பது வாசகர்களை கவரும் உத்திதான். ஆனால் ஒருவர் ஒப்பாரி வகையான கவிதைகளை தொடர்ந்தும் தந்து கொண்டிருப்பாரானால் அது வாசகர்களிடையே ஆரம்பத்தில் கவர்ந்தாலும், அது காலப்போக்கில் வாசகர்களிடையே ஒரு வித சலிப்பை ஏற்படுத்தி விடும் .உதாரணமாக

"இவர்களுக்கிடையில் நானும்.... " 
"வன்மங்களையும், வக்கிரங்களையும் தோல்களாக்கி, 

அகதிப் போர்வைகளால் மூடிக்கொண்டவர்களின் ஊர்க் கதைகளாலும் 
ஏக்க விளிப்புக்களாலும் 
அரைகுறைத் தூக்கங்களாலும் 
நீண்ட தொடரூந்துகளும் 
நிலக்கீழ் வழித்தடங்களும் நிறைந்து கிடக்கின்றன.... 
என்னையும் சுமந்துகொண்டு... " 

என்ற கவிதையில் ,புலம் பெயர் நாட்டில் உள்ள ஒருவனது இருப்பு பற்றிய ஆவேசம் வலிகளாக வெளிவருகின்றது . ஆனால் அந்த வலியை சொன்னால் மட்டும் போதுமா ?? அந்த வலியை வெற்றியாக்க வேண்டிய நம்பிக்கை தரும் கவி வரிகளை தவற விடுகின்றார் .

மேலும்,

நாளை நானும்... , 


"பரவுகின்ற வெறுமை 
தின்னத்தொடங்குகிறது 
ஒவ்வொன்றாக.... 
நான், 
இழந்து கொண்டிருக்கிறேன் 
கொஞ்சம் கொஞ்சமாக அந்த 
கூடுதிரும்பாத பறவையின் நினைவுகளை. நாளை, 
நானும் கூடு திரும்பாவிட்டால் ..." 

என்ற கவிதையில் தனது இருப்பு பற்றிய உறைநிலையையே காட்ட விழைகின்றார் . இந்த இரண்டு கவி வரிகளிலும்  , தான் இனி வருங்காலத்தில் எப்படி இருப்பேன் என்ற நம்பிக்கை தரும் ஒர்ம வரிகளை என்னால் அடயாளப்படுத்த முடியவில்லை. இதற்கு ஒரு உதாரணம் காட்டுகின்றேன் . எனது மதிப்புக்கு உரிய வ ஐ செ ஜெயபாலன் ஒரு கவிதையில் தனது இருத்தல் பற்றி இப்படி குறிப்பிடுவார்,

"இயற்கை மரணம்
எம்மை அழைக்கும் வரை
மூக்கும் முழியுமாக
வாழவே பிறந்தோம் !!


என்று. இது தான் இருத்தலுக்கான நம்பிக்கையான எதிர்வுகூறல் .

என்னைப் பொறுத்த வரையில் , நெற்கொழுதாசன் ஒரு குறிப்பிட்ட வகையான பாடுபொருளுக்குள் தன்னை அமிழ்தாது பல்முனை பாடுபொருள்களை கொண்டு கவி புனைய வேண்டும் . அதே வேளையில் எழுத்துச் சமசரங்களுக்கு இடம் கொடுக்காது மனதில் பட்டதை வெளியே கொண்டு வருகின்ற மனத்துணிவு இருக்க வேண்டும் . ஏனெனில் கூனிக் குறுகி , குழைந்து வளைந்து எழுதுபவர்கள் எல்லாம் காத்திரமான படைப்பாளியாக முடியாது .

இறுதியாக, இந்த நிகழ்வு யாரால் ஒழுங்கமைக்கப்பட்டது ?? என்பதனை விட அந்த நிகழ்வில் என்ன பேசப்பட்டது என்பதே முக்கியமாகின்றது . நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இருக்க பிரான்சின் மூத்த எழுத்தாளர்கள் " ரகசியத்தின் நாக்குகளை " காய்த்தல் உவத்தல் இன்றி விமர்சித்து இருக்கின்றார்கள் இதே போன்று யாழ்ப்பாணத்தில்  திருமலை கலாமன்றத்திலும் பல மூத்த படைப்பாளிகள் காய்த்தல் உவத்தல் இன்றி இவருக்கான விமர்சனங்களை தந்துள்ளார்கள். நெற்கொழுதாசனுக்கு ஓர் இலக்கிய அங்கீகரிப்பு இடம் பெற்று இருக்கின்றது . இந்த நிகழ்வானது மூத்த எழுத்தாளர்களுக்கும் வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கும் இடையில் ஓர்  இணைப்பு பாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும் . மேலும் நெற்கொழு தாசனின் ஏற்புரையில் 

" தன்னை போல பல குண்டுமணிகள் பிரசுர வசதிகள் இன்றி இருக்கின்றார்கள் . அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது இங்கு உள்ள மூத்த படைப்பளிகளுடைய கடமை " என்ற வேண்டுகோளுடன் விழா நிறைவுக்கு வந்தது .

மேலதிக படங்கள்: