Skip to main content

வாடாமல்லிகை - குறுநாவல் பாகம் - 06.தேன் வதையை மொய்த்துக் கொண்டிருக்கும் தேனீக்களைப்போல கோட்டே புகையிரத நிலையம் இருந்தது . மக்கள் புகையிரத நிலையத்தில் உள்ளே போவதும் வருவதுமாக எனக்கு தேன் கூட்டையே நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர். தனது காரை நிறுத்துவதற்கு எனது மனைவியின் தோழி சிரமப்படுவதை பார்த்து புகையிரத நிலயத்தின் முன்பாகவே நாங்கள் இறங்கிக்கொண்டோம் . நாங்கள் சன வெள்ளத்தில் நீந்திக்கொண்டே உள்ளே சென்றோம். உள்ளே காதைப்பிளக்கும் சந்தைக்கடை இரைச்சலாக புகையிரத மேடை இருந்தது நாங்கள் செல்ல வேண்டிய யாழ் தேவி புகையிரத மேடையில் நீண்டு வளைந்து நின்று இருந்தது. புகையிரதத்தில் இடம் பிடிப்பதற்காக பல் முனைதாக்குதல்கள் சனங்களால் தொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஓர் இடத்தைப் பிடிப்பதில் எம்மவர்கள் என்றுமே பல விதமான உத்திகளை பிரயோகிப்பதை கண்டு வியந்திருக்கின்றேன். அதுவே அந்த யாழ் தேவியிலும் நடைபெற்றுக்கொண்டு இருந்தது . மனைவியின் நண்பி எமக்கு முதலாம் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்திருந்தார். நாங்கள் எமது இருக்கையின் இலக்கத்தை தேடி பிடித்து அமர்ந்து கொண்டோம். எமக்கு முன்பாக இருந்த இருக்கைகள் யாருக்குகாகவோ காத்துகொண்டு இருந்தன. வெளியே தேநீர் வடை விற்பவர்களது குரல்கள் பலவேறு அலைவரிசையில் எனது காதுகளை அடைத்துக்கொண்டு இருந்தன. எனக்கு எப்பொழுது யாழ்தேவி புறப்படும் என்று இருந்தது.

இந்த ரெயில் பயணம் என்றாலே அலாதியானதுதான் . அதில் பயணம் செய்யும் பயணிகள் எமக்கு சொந்தமாக இல்லாவிட்டாலும். தேவைகள் கருதி எம்முடன் வைக்கும் உறவுகளும். அது தெரிந்தும் நாமும் அவர்களுடன் ஒன்றிப் போவதும் . பின்பு இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஆளுக்கு ஒருவராகப் பிரிவதும் .அப்பொழுது ஏற்படும் வெறுமை உணர்ச்சியும் அனுபவித்தவர்களுக்கே அது புரியக்கூடியது. ஒரு சில வேளைகளில் இந்தப்பயணங்கள் கூட வருபவர்களால் நரகமாக மாறுவதும் உண்டு . புகையிரதப்பெட்டியின் உள்ளே இருந்த குளிரூட்டியினால் வந்த குளிர்மை அந்த கொடும் வெக்கைக்கு மிகவும் இதமாகவே இருந்தது. எனது கண்களோ சுற்றுச் சூழலை அளவெடுத்தன. அங்கு இருந்த பயணிகளில் தொண்ணூறு வீதமானோரின் கைகளில் கைதொலைபேசி படாத பாடு பட்டுக் கொண்டு இருந்தது. அது அங்கு ஒரு பொழுது போக்கு சாதனமாக மட்டுமே அதிகளவில் பாவிக்கப்பட்டது. இதற்கு அதிக அளவு புலத்துப் பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். மணியடித்து, கொடி காட்டி, வளையம் பரிமாறி, என்று இம்மியளவும் பிசகாமல் யாழ் தேவி தனது சடங்குகளை முடித்துக்கொண்டு வவுனியாவை நோக்கி கோட்டே புகையிரத நிலயத்தில் இருந்து நகரத் தொடங்கியது.

எங்கள் எதிரே இருந்த இருக்கைகளுக்கு ஒரு வயதான தம்பதிகள் இறுதி நேரத்தில் அல்லாடிக்கொண்டு வந்தார்கள். கணவனுக்கு ஒரு எழுபத்தி ஐந்து வயது இருக்கலாம். மனைவிக்கு ஒரு எழுபது வயது இருக்கலாம். அவர்களை ரெயில்வே கார்ட் தான் அழைத்துவந்து அவர்களது இருக்ககை இலக்கத்தைச் சரி பார்த்து எமக்கு முன்னே இருத்தி விட்டார். கறுப்பு கறுப்புக்கண்ணாடி அணிந்திருந்த எனக்கு ரெயில் பெட்டியை முற்றுமுழுவதுமாக சுதந்திரமாகவே நோட்டம் விட முடிந்தது. எனது கண்கள் வெளியிலயே அலைபாய்ந்தன. இப்பொழுது யாழ்தேவி அழகிய சிறிய சிங்களக் கிராமங்களின் ஊடாக வேகம் எடுத்துக்கொண்டிருந்தது. இரு புறமும் அடர்த்தியான தென்னை மரங்களும் கமுக மரங்களும் வரிசை கட்டி எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தன. தென்னை ஓலைகளால் வேயப்படிருந்த ஒலைகுடிசைகளில் ஆண்களும் பெண்களும் வெளியே இருந்து தென்னம் ஓலையினால் கிடுகு பின்னிக் கொண்டு இருந்தார்கள். அங்கு இருந்த சிறுவர்கள் ஓடிய யாழ் தேவிக்கு கை அசைத்தார்கள். அவர்கள் முகத்தில் கள்ளம் கபடம் எதுவும் காணப்படவில்லை. இதே போல் நாங்களும் சிறுவயதில் யாழ் தேவிக்கு வீதி ஓரத்தில் நின்று கைகளைக் காட்டி இருக்கின்றோம். அந்த சிறு வயதிலேயே இரண்டு பக்கமும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எனது மனம் ஏங்கியது.

நகர் புறங்களைக் கடந்து சிறிய கிராமங்கள் ஊடாகவும் பசுமை போர்த்திய வயல் வெளிப் பரப்புகள் ஊடாகவும் யாழ் தேவி வேகமெடுத்தது. நான் இருக்கும் பாதுகாப்பில் எனது மனைவி எனது தோளில் நித்திரையாகி விட்டாள். எனக்கு முன்பு இருந்த வயோதிக தம்பதிகள் இருவரும் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அதில் மூழ்கி இருந்தார்கள். மற்றயவர்கள் போல் " விடுப்பு " அறியும் ஆவல் அவர்களிடம் இல்லாமல் இருந்தது எனக்கு ஆறுதலாக இருந்தது. நான் அடங்கா பசியுடன் உள்ள குழந்தை தன் தாயில் பால் குடிப்பதைப்போல இரண்டு பக்கத்திலும் உள்ள இயற்கை காட்சிகளை அள்ளிப் பருகி கொண்டு வந்தேன். அப்பொழுது வெய்யில் குறைந்து இருள் கவியத் தொடங்கியது. இரண்டு பக்கமும் வெளிச்சப் பொட்டுகள் மின்னின .ஒரு சில இடங்களில் பயிர் செய்கைக்காக எரிக்கப்பட்ட சிறு பற்றைக் காடுகளில் இருந்து விறகு எரிந்த மணம் என் மூக்கைத் துளைத்தது .நீண்டகாலத்துக்குப் பின்பு வந்த மணத்தை ஆசையுடன் நுகர்ந்தேன். இதமான காற்று என் முகத்தில் அடித்தது. இந்த அருமையான பொழுதில் ஒரு தேநீர் குடித்து சிகரட் அடித்தால் எப்படி இருக்கும் என்று எனது மனம் நெட்டுரு போடத்தொடங்கியது. அப்பொழுது யாழ் தேவி அனுராத புரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. இன்னும் ஓரிரு மணித்தியாலத்தில் வவுனியாவை அடைந்து விடுவேன் என்ற நினைப்பே என்மனதை கிளர்ச்சி அடையப்பண்ணியது.

எனது அம்மாவின் இழப்புக்குப் பின்பு அக்காவே எனக்கு எல்லாம். நான் வரும் தகவலை முதலே நான் சொல்லி இருந்தேன். ஒரு இருள் கவிந்த இரவில் நாங்கள் வந்து கொண்டிருந்த யாழ் தேவி வவுனியா புகையிரத நிலையத்தில் கிரீச்சிட்டு நின்றது .

தொடரும்

கோமகன்
25 சித்திரை 2014
4 comments

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…