Skip to main content

Posts

Showing posts from May, 2014

வாடாமல்லிகை - குறுநாவல் பாகம் 09.

பொட்டலங்களாக பிரிந்து இருந்த பயணிகள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினார்கள். எனது பார்வையில் இருந்து பரந்தன் மெதுவாக மறைய தொடங்கியது. தூரத்தே ஆனையிறவு வருவதற்கு சாட்சியாக உப்புக்கலந்த காற்று என் முகத்தில் அடித்தது. எமது வாழ்விலும் ஆனையிறவு பல திருப்பங்களை தந்த இடமாகும் . மாற்றங்கள் என்பதனை மாறும் களங்களே தீர்மானிக்கின்றன என்பது போல நாங்கள் எடுத்த வியூகங்களும் பல மாறும் களங்களை எடுத்து தந்தன. அதுவே பலர் எம்மீது உறக்கத்தை தொலைத்த ஒரு காலமும் இருந்தது .உறக்கத்தை தொலைத்தவர்கள் நிதானமாக உறக்கத்தில் இருந்து மீள , நாங்களோ வெற்றி தந்த மிதப்பில் மீள முடியாத உறக்கத்துக்கு சென்ற காலப் பிறழ்வும் இங்கேயே ஆரம்பித்தது. இரு பக்கமும் ஆழம் குறைந்த கடல் ஆணை கட்ட. அதன் நடுவே இருந்த ஏ 9 பாதையால் பஸ் விரைந்து சென்றது . கடலில் அங்காங்கே திட்டு திட்டுகளாக வெள்ளையாக உப்பு படர்ந்து கொண்டு இருந்தது. இடையில் இருந்த குட்டைகளில் ஒரு மீனாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் பல கொக்குகள் ஒற்றைக்காலில் கால் கடுக்க நின்று கொண்டு இருந்தன. அந்த வெளியில் இருந்த ஒரே ஒரு படை முகாமையும் தாண்டி அந்த பஸ் இயக்கச்சியை ஊடறுத்து கண்டி …

தங்க ஓலை விருதிற்கான 67 வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா- கட்டுரை.

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் 15.05.2014 அன்று ஆரம்பமாகியுள்ளது. உலகில் மிக முக்கியமான திரைப்படங்களை அரங்கில் திரையிட்டு, அதில் சினிமா ஆர்வலர்கள் ஒன்று கூடி விவாதிப்பதும், சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து பெருமைப்படுத்துவதும் இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும் மேலும் குறும்படங்களிற்கான விருதுகள் மட்டுமல்லாது போர்ணோ கிராபி நடிகர்களையும் அழைத்து அவர்களிற்கான ஒரு அங்கீகாரத்தினை கொடுத்து கெளரவிக்கின்ற நிகழ்வும் பல வருடங்களாக நடந்தது ஆனால் கடந்த மூன்று வருடங்களாக அதனை நிறுத்தியுள்ளார்கள்..அண்ணளவாக ஒர் ஆண்டில் உலகம் முழுவதும் 3000 திரைப்பட திருவிழாக்கள் நடக்கின்றன. உலக சினிமா வரலாற்றில் முதன்முதலாக வெனிஸ் நகரத்தில் 1932 ஆம் ஆண்டில் சர்வதேச திரைப்படத் திருவிழா நடத்தப்பட்டது.
இன்றைய உலகில் மிக முக்கியமான திரைப்பட விழாக்களாக கேன்ஸ் திரைப்பட விழா,பெர்லின் திரைப்பட விழா,வெனிஸ் திரைப்பட விழா,டொரன்டோ திரைப்பட விழா,சான்பிரான்சிஸ்கோ திரைப்பட விழா,மெல்போர்ன் திரைப்பட விழா ,மொன்றியல் திரைப்பட விழா ,எடின்பர்க் திரைப்பட விழா ,இந்திய சர்வதேச திரைப்பட விழா என்பன இடம் பெறுகின்றன . இன்றைய உலகில் ஒஸ்கார் சர்வத…

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் அறிவியல் - இறுதி பாகம்.

01 மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?
தொல்காப்பியம்.
02 சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார் ?
விஷ்ணுகோபன்.
03 முறையான எழுத்து முறை எதில் உருவானது?
சுமேரிய நாகரீகம்.
04 சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?
கௌதமபுத்தர். 
05 கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?
15 பகுதிகள். 
00000000000000000000000
01 நந்திக்கலம்பகதின் பாட்டுடைத் தலைவன் யார் ?
3ஆம் நந்திவர்மன். 
02 தமிழின் மறுமலர்ச்சிக்காலம் எது ?
19 ஆம் நூற்றாண்டு. 
03 நூலகத்தின் மறு பெயர்கள் எவை ?
ஏடகம், சுவடியகம் ,பண்டாரம் .
04 தீக்கோழி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் வேகத்தில் ஒடக்கூடியது? 
74 கி .மீ. 
05 எறும்புகளில் எத்தனை வகைகள் உள்ளன ?
14000 வகைகள். 
0000000000000000000000000000
01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ?
பூரிக்கோ.
02 இலக்கியத்தில் "கவரி வீசியகாவலன் " எனப் போற்றப்படும் மன்னன் யார்?
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
03 ஒருவருக்கு "பிரச்னை " என்கின்றோம் .பிரச்சனை என்றால் என்ன வரைவிலக்கணம் ?
ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அ…

வாடாமல்லிகை - குறுநாவல் -பாகம் 08.

அதிகாலை வேளை ஆகையால் அந்த பஸ்ஸில் குறைந்த அளவு பயணிகளே இருந்தனர். வவுனியா நகரில் மெதுவாக சென்ற பஸ் ஏ 9 பாதையில் நிலை எடுத்து வேகமாக வழுக்கத் தொடங்கியது. இதே பாதையால் மூன்று வருடங்களுக்கு முன்பு நான் பயணித்த பொழுது இந்தப் பாதை எனக்கு கற்காலத்தையே நினைவு படுத்தியது. இதற்காகவே நான் பல விசேடமான பயிற்சிகளையும் அப்பொழுது எடுக்க வேண்டி இருந்தது. அனால் இன்றோ இந்தப் பாதை யாரோ இட்ட பிச்சையில் "கார்ப்பெட்" என்ற புதுவித நகை அணிந்து தன்னை முத்தமிடும் வாகனச் சில்லுகளுக்கு சேதாரத்தை கொடுக்காது இலகுவாகவே அவைகளை உருளப்பண்ணியது. எனது கண்களில் இருந்து வவுனியா மெதுமெதுவாக மறையத் தொடங்கியது. கிராமங்களின் ஊடாகவும் பரந்த பசுமை போர்த்திய வயல் வெளிகளின் ஊடாகவும் இப்பொழுது பஸ் சீறிப்பாய்ந்தது. நான் முன்பு பார்த்த பொழுது யுத்தத்தின் கோரமான வடுக்களை சுமந்த எமது விளைநிலங்கள் எல்லாம் இன்று வெட்ட வெட்ட தழைக்கும் எமது ஒர்ம குணத்தினால் பச்சைப்பசேலென என் கண்முன்னே விரிந்து மறைந்து கொண்டிருந்தன. இடையிடையே சின்னஞ் சிறு பற்றை வயல்களை எரித்து விட்டதனால் வந்த வாசம் மூக்கைத் துளைத்தது. உழைப்பினால் வந்த அந்த …

மனமே மலர்க - மெய்யியல் -பாகம் 19 .

ஆசை
ஆசை என்ற ஒன்று இருக்கிறது.அது மனிதர்களை ஆட்டிப் படை க்கிறது. ஆணோ,பெண்ணோ ஒருவரையும் அது விட்டு வைப்பதில்லை. ஒரு பொருளின் மீது ஆசை உண்டாகிறது.அது உடனே கிடைத்து விட்டால் பிரச்சினை இல்லை. ஆசைப்பட்டது கிடைக்காது என்றால் பிரச்சினை இல்லை. கிடைக்கும்,ஆனால் கிடைக்க மாட்டேன் என்கிறது என்ற நிலை வரும்போதுதான்.பிரச்சினை.அப்போதுதான் ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகம் தோன்றுகிறது. முடிவு ஏற்படாமல் இப்படி ஒரு இழுபறி நிலை உண்டாகும்போது ஆசைக்குத் தீவிரம் உண்டாகும்.பின் வெறியாக ஆவேசமடைந்துவிடும்.பயம் ஒரு பக்கம், வெறி ஒரு பக்கம் ஆக இரண்டு பக்கமும் பிசையப் பிசையக் குழப்பம் உண்டாகும். தைரியம் எவ்வளவு இருந்தாலும் புத்தி தடுமாறிவிடும்.
ஆசை நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற சந்தேகத்தில் ஜோதிடம் பார்ப்பார்கள்.ரேகை சாஸ்திரம் பார்ப்பார்கள்.தங்களுக்குள்ளே ஒரு ஆரூடத்தை உண்டாக்கி அதை வைத்துப் பலனைக் கணிப்பார்கள். புத்தகத்தைப் பிரித்துப் பார்ப்பார்கள்.பிரித்த பக்கத்தில் விஷயம் நன்றாக இருந்தால் காரியம் கைகூடும் என்று திருப்திப் படுவார்கள்.விஷயம் ஒரு மாதிரியாக இருந்தால் காரியம் கைகூடாதோ என்று பதறுவார்கள். காரியம் கைகூடும் வரை…