Skip to main content

Posts

Showing posts from June, 2014

வாடாமல்லிகை - குறுநாவல் - பாகம் 11.

என் மனதைப் போலவே ஒழுங்கை முழுவதும் இருள் மண்டி இருந்ததது. நட்சத்திர ஒளியில் தடம் பிடித்து நடக்கத் தொடங்கினேன். முழு நிலவு வானத்தில் அப்பளமாக விரிந்து இருந்தது .எனது நடை வேகத்தில் மீண்டும் உடம்பு வியர்வையில் குளிக்கத் தொடங்கியது .நட்சத்திர ஒளியிலும் நிலவு வெளிச்சத்திலும் நடப்பதும் என்மனதில் ஒருவகையான புத்துணர்ச்சியை உருவாக்கின. வீட்டு வாசலில் மனைவி நின்றிருந்தா. மாலை வெக்கையை அடக்குவதற்கு மீண்டும் மனைவி வீட்டு முற்றதிற்கு தண்ணீர் தெளிதிருந்தா. தெளித்த தண்ணியின் குளிர்மை வியர்த்த உடலுக்கு இதமாகவே இருந்ததது .என்னைக் கண்ட புழுகத்தின் வெளிப்பாடாக எங்கள் வீட்டு நாய் என் மீது ஏறிப்பாய்ந்தது .என் மனம் என்னிடம் , "இப்பொழுது குளித்தால் நன்றாக இருக்குமே ?" என்று கேட்டது . "ஓ ........ குளிக்கலாமே " என்று அதை தட்டிக் கொடுத்தேன் . பொதுவாகவே நின்று இருந்து படுத்து என்று எல்லோருமே பல விதமாக குளிக்கின்றார்கள். அதுவும் புலத்தில் எனக்கு பெரும்பாலும் காகக் குளிப்பே அமைந்திருந்தது. மேலிருந்து ஷவரால் கீழே விழும் ஒவ்வரு தண்ணீர் துளியும் யூறோவாய் விழுவதால் அங்கு ஆனந்த குளிப்புக்கு இடமில்…

மனமே மலர்க - மெய்யியல் -பாகம் 20.

சம்பிரதாயம் மத போதகர் ஒருவர் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அவர் கடவுளை வணங்கும் முறை மற்றும் மத சம்பந்தமான சாஸ்திர சம்பிரதாயங்களில் கரை கண்டவர்.திடீரென கடலின் சீற்றம் காரணமாக கப்பல் சேதமடைந்து தெய்வாதீனமாக அவர் தப்பி ஒரு தீவினை அடைந்தார்.இவர் ஒரு மதபோதகர் என்பதனை அறிந்த அவ்வூர் மக்கள் மிகுந்த நட்பு பாராட்டினர்.அவரும் அங்கு மத போதகர் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.மக்களும் அங்கு அவ்வாறு யாரும் இல்லைஎன்றும் அவ்வூரில் மூன்று சகோதரர்கள் இருப்பதாகவும் அவர்கள் இறை பக்தி மிக்கவர்கள் என்றும் மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்றும் அவர்கள் சொல்வது படிதான் அங்கு வழிபாடுகள் நடக்கும் என்று கூறினார்.போதகரும் உடனே அவர்களைப் பார்க்க விரும்பியதால் அவர்களிடம் அவர் அழைத்து செல்லப்பட்டார்.மூன்று சகோதரர்களும் அவரை அன்புடன் வரவேற்றனர்.பொதுவான விசயங்கள் பேசி முடித்ததும் போதகர் அங்கு இறைவழிபாடு என்ன முறையில் நடக்கிறது என்று கேட்டார்.அந்த சகோதரர்கள் ,''நாங்கள் எங்கள் தொழிலில் முழு கவனமுடன் இருப்போம்.எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை நாங்கள் ஆண்டவனுக்கு தினமும் சிறிது நேரம் சாதாரணம…

வாடாமல்லிகை - குறுநாவல் பாகம் - 10.

தாரே இல்லாத ஒழுங்கையில் புழுதி தோய நடப்பது புதுவிதமான அனுபவமாகவே இருந்தது . இருளும் வெளிச்சமும் கலவையில் மாறுபட்டு மொக்கவிழ்க்கும் வேளையில், ஒழுங்கையின் இருபுறமும் இருந்த வீடுகளின் மதில்களால் எட்டிப்பார்த்த செம்பரத்தை , அலரி , மயிற் கொன்றை பூக்கழும் வெளிச்சம் என்ற சூடு பட்டு நெட்டி முறித்துக்கொன்டிருந்தன . அதனால் வந்த பூ வாசம் என் மூக்கை துளைத்தது . ஒரு சில பூக்களில் வண்டுகள் மொய்க்கத் தொடங்கின . இவையாவுமே என்மனதில் ஒருவகை கிளுகிளுப்பை ஏற்படுத்தின. எனது கால்கள் ஒருவித தாள கதியில் புழுதி தோயத் தோய நடந்து கொண்டிருந்தன . இந்த காலை வேளையிலேயே பாடசாலை மாணவர்களது லுமாலாக்கள் டியூசன் சென்டர்களை நோக்கி படை எடுத்துக்கொண்டு இருந்தன. எனது இளமைக்கால நினைவுகளும் அப்பொழுது முட்டி மோதி நின்றன. வாழ்க்கையில் எல்லோருமே இளமைக்காலத்தில் அதை வகைவகையாக அனுபவிப்போம். ஆனால் நாங்கள் பக்குவப்படும் பொழுது எங்கள் முன் இளையவர்கள் அதே குசும்புகளை செய்யும்பொழுது எங்கள் மனம் ஏனோ ஏற்க மறுக்கின்றது. நான் இப்பொழுது முதலாம் கட்டை சந்தியை அண்மித்துக் கொண்டிருந்தேன் .
எனது உடல் வியர்வையில் தொப்பலாக நனைந்து இருந்ததது. அந்த…

மழைக்காலப் பொழுதில் எனக்கு வந்த மயக்கிய சந்திப்பு - பத்தி.

இன்று பின்னேரம் அலுத்துக்களைத்து வீடு திரும்புகின்றேன் . சாப்பிட்டு விட்டு கணனியின் முன்னால் நித்திரை தியக்கத்துடன் இருக்கின்றேன் . எனது கைத்தொலைப்பேசி ஒலிக்கின்றது.அடிப்பவரின் பெயர் இல்லை. யாராய் இருக்கும் என்று ஒருவித எரிச்சலுடன் கைத்தொலைபேசியை எடுக்கின்றேன் . மறுமுனையில் கொழுவன் குரல் கேட்டது . "அண்ணை உங்களோடை ஒருத்தர் பேசப்போகின்றாராம் " என்று தொலைபேசி மாற்றப்பட்டது. மீண்டும் மறுமுனையில் , " வணக்கம் கோ !! நான் சயந்தன் பேசிறன் . நான் இப்ப லாச்சப்பலில் நிக்கிறன் . உங்களை நான் ஒருக்கால் கட்டாயம் சந்திக்க வேணும் ". என்ற கோரிக்கையுடன் சயந்தன் நின்றார் . எனக்கு களைப்பாக இருந்தாலும் சயந்தனை முகம் முறிக்க மனம் வரவில்லை . நான் இன்னும் அரை மணியில் அங்கு இருப்பதாக சொல்லி விட்டு புகையிரத நிலையம் நோக்கி சென்றேன் .
பாரிஸ் செல்ல வேண்டிய புகையிரதம் பாரிசை நோக்கி விரைந்து கொண்டிருந்தது . இடையில் எனது கைத்தொலைபேசி திரையில் சோபாசக்தியின் பெயர் தெரிந்தது. திரையை தொட்டு விட்டு " சொல்லுங்கோ " என்றேன் . " அண்ணை நான் சாயந்தன்ரை செக்குத்தடி பேசிறன் (கிழிஞ்சுது போ ) . சய…

பகிரங்கமாகவே விலகுகின்றேன் - யாழ் இணையத்தால் - தடை செய்யப்பட்டதற்கு எதிர்வினை.

இன்று மாலை எனக்கு யாழ் இணைய நிர்வாக மட்டத்தில் இருந்து ஓர் கடிதம் வந்து இருந்தது அது சொல்லிய செய்தி என்னவென்றால்,
0000000000000000000000000
வணக்கம் கோமகன்,
சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் யாழையும் யாழ் கள உறுப்பினர்களையும் தரம் தாழ்த்தி எழுதுவது நாம் அறிந்தது தான். அதன் வழியில் சுயமதிப்பீடு பற்றி யாழில் கேள்வி கேட்டவர்களை கொசுக்கள் என்று மிகவும் தரம் தாழ்த்தி சமூக வலைத்தளங்களில் நீங்கள் எழுதியதையும் நாம் அறிவோம்.
யாழ் இணையம் மீது உங்களுக்கு விமர்சனம் இருப்பின் எம்மிடமோ அல்லது அதனை சகல உறுப்பினர்களும் அறியும் வண்ணம் நாற்சந்தியிலோ கேட்டு இருக்கலாம். ஆனால் அப்படிக் கேட்காமல் இப்படி யாழ் உறுப்பினர்களையும், நிர்வாகத்தினையும், யாழ் இணையத்தினையும் தரம் தாழ்த்தி யாழுக்கு வெளியே சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
இப்படியான விடயங்களை நீங்கள் செய்வது இது முதல் தடவையும் அல்ல என்பதை நாம் அறிவோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
உங்களுக்கு மூன்று தெரிவுகளைத் தர விரும்புகின்றோம்.
ஒன்று:
யாழ் கள உறவுகளிடம் மன்னிப்புக் கேட்பது.
இரண்டு: