Skip to main content

மழைக்காலப் பொழுதில் எனக்கு வந்த மயக்கிய சந்திப்பு - பத்தி.இன்று பின்னேரம் அலுத்துக்களைத்து வீடு திரும்புகின்றேன் . சாப்பிட்டு விட்டு கணனியின் முன்னால் நித்திரை தியக்கத்துடன் இருக்கின்றேன் . எனது கைத்தொலைப்பேசி ஒலிக்கின்றது.அடிப்பவரின் பெயர் இல்லை. யாராய் இருக்கும் என்று ஒருவித எரிச்சலுடன் கைத்தொலைபேசியை எடுக்கின்றேன் . மறுமுனையில் கொழுவன் குரல் கேட்டது . "அண்ணை உங்களோடை ஒருத்தர் பேசப்போகின்றாராம் " என்று தொலைபேசி மாற்றப்பட்டது. மீண்டும் மறுமுனையில் , " வணக்கம் கோ !! நான் சயந்தன் பேசிறன் . நான் இப்ப லாச்சப்பலில் நிக்கிறன் . உங்களை நான் ஒருக்கால் கட்டாயம் சந்திக்க வேணும் ". என்ற கோரிக்கையுடன் சயந்தன் நின்றார் . எனக்கு களைப்பாக இருந்தாலும் சயந்தனை முகம் முறிக்க மனம் வரவில்லை . நான் இன்னும் அரை மணியில் அங்கு இருப்பதாக சொல்லி விட்டு புகையிரத நிலையம் நோக்கி சென்றேன் .

பாரிஸ் செல்ல வேண்டிய புகையிரதம் பாரிசை நோக்கி விரைந்து கொண்டிருந்தது . இடையில் எனது கைத்தொலைபேசி திரையில் சோபாசக்தியின் பெயர் தெரிந்தது. திரையை தொட்டு விட்டு " சொல்லுங்கோ " என்றேன் . " அண்ணை நான் சாயந்தன்ரை செக்குத்தடி பேசிறன் (கிழிஞ்சுது போ ) . சயந்தன்ரை பாதுகாப்பு பிரச்னைக்காக இப்ப நாங்கள் லாச்சப்பலிலை இருந்து மார்க்கடே பொசினியர் க்கு இடத்தை மாத்திறம் . நீங்கள் அங்கை வாங்கோ " என்று சொல்லி கைத்தொலைபேசி தொடர்பை துண்டித்தது . அஹா இவர் வேறயா ?? " கோமகா கவனமா இருந்துக்கோ " என்று உள் மனம் மின்னி மின்னி பேசியது . நான் கார் டு நோர்ட் புகையிரத நிலையத்தில் இறங்கி மார்க்கடே பொசினியருக்கு மெட்றோ எடுத்தேன் . நான்கு நிமிடத்தில் மார்க்கடே பொசினியர் மெட்றோவில் இறங்கி வெளியே வந்தேன் . ஒரு காலத்தில் தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இந்த இடம் , ஆட்சி மாறி கறுப்பர்களின் கைக்கு போய்விட்டிருந்தது . மெட்றோ வாசலில் ஹாண்ட் பாக்குகளுடன் அம்மணிகள் " சவா செரி " என்றார்கள் . அஹா முழுவியளமே திறமாய் இருக்கே என்று நினைத்தவாறே சோ அன்னா பா வன்னா சொன்ன கபே பாரை நோக்கி நடந்தேன். அங்கு ஒரு சிறிய பட்டாளமே இருந்தது. சயந்தன் , சோபா சக்தி , ஸ்டெல்லா சகுந்தலா ( மானிடவியலாளர் பேராசிரியர் அமெரிக்கா ) , கொழுவன் , மைக்கல் என்ற சதாபிரவணன் , ஆக்காட்டி பிரபா என்று நான் எதிர்பாராத கோஸ்டிகள் எல்லோரும் இருந்தார்கள் . என்னை கண்டதில் சயந்தனுக்கு பெரிய புழுகம் . மைக்கேலையும் பிரபாவையும் கொழுவனின் கவிதைவெளியீட்டு விழாவில் சந்தித்தாலும் இப்பொழுதே அதிகம் பேச முடிந்ததது. நான் போகும் பொழுது 2 சிங்க லாகர்கள் சயந்தன் சோபாவுக்கு முன்னால் வீற்றிருந்தன. எனக்கும் லாகர்களுக்கும் எட்டிலை வியாழன் . நான் இதை கண்டதும் உள்ளுக்குள் கலவரப்பட்டு போனேன் . எனக்கு ஒரு பிளேன் டீ சீனி இல்லாமல் எடுத்தேன் . பலதரப்பட்ட கதைகள் பம்பலாக போய்க்கொண்டிருந்த பொழுது , இந்தப்பக்கம் லாகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருந்ததது . இப்பொழுது சிங்கத்தின் துணையால் சிங்கம் சிலிர்க்கத் தொடக்கி விட்டது . சூடான விவாதங்கள் சுழன்றடித்தன . அதில் எனது தலையும் உருண்டது . அதிக சத்தம் எனக்கு தலையிடியை கொண்டுவந்ததது . மெதுவாக வெளியில் இறங்கி சிகரட்டை பற்றவைத்தேன் . நான் மீண்டும் திரும்பிய பொழுது " தென்கிழக்கு சீமையிலே " வடக்கு தெற்காக கிழிந்து கொண்டிருந்ததது . முதலில் குற்றவாளி கூண்டில் இருந்த எனது இடம் இப்பொழுது சயந்தனுக்கு மாறியிருந்தது . நேரம் பம்பலாகப் போய் இரவு 9 மணியாகி விட்டிருந்தது. புதிதாக நான்கு ஐந்து பேர்கள் ஜோதியில் ஐக்கியமாக வந்திருந்தார்கள். இடையில் கணவாய் பொரியல் டேஸ்டுக்கு வந்தது . நானும் இவர்களை கிளப்பி ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்தேன். நன்றாக இருட்டி விட்டது. இந்த இடம் வில்லங்கமான இடம். இரவு பத்தரையாகி விட்டிருந்தது. லாகர்களின் எண்ணிக்கை கூடியதே இவர்கள் கிளம்புவதாக இல்லை . நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக எல்லோரிடமும் விடை பெற்றேன். வீட்டிற்கு வர மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்ததது. பறப்பின் மத்தியிலும் இப்படியான சந்திப்புகளே எங்களை உயிர்ப்பிக்கின்றன .

கோமகன் 
10 ஆனி 2014

2 comments

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…