Skip to main content

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு - பத்தி.




நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? "கோமகா... அவதானமாய் நடந்துக்கோ ராசா" எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் "அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்" எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன்.

நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி புஸ்பமாய் குளிச்சு பல்கணியிலை நிண்டு ரீயும் சிகரட்டும் அடிச்சு, நாலே முக்கால் போலை ரெயில்வே ஸ்டேசனுக்கு போனன். அங்கை கொஞ்சப்பேர் நிண்டினம். நேரம் செல்லுது கோச்சி வாற அறியும் இல்லை குறியும் இல்லை. ஐஞ்சு மணிக்கு வாற கோச்சி ஐஞ்ச முக்காலுக்கு ஆடிப்பாடி வந்துது. சனங்கள் கோச்சிக்குள்ளை ஏறுறதில்லை அடிபாடு. எனக்கெண்டால் விடியக்காத்தாலை இதுகள் இப்பிடி அடிபடுகுதுகளே எண்டு வாழக்கை வேறுத்துப்போச்சுது. ஆறுமணிக்கு வேலைக்கு ஏழுமணிக்கு வேலையிடத்துக்கு போய் சேர்ந்தன். நான் வேலை செய்யிற நேரமமும், எனக்கு இவர் அறிமுகப்படுத்திற ஆள் ஆராய் இருக்கும்? எண்டு எனக்கு ஒரே மண்டை குடைச்சல். இண்டைக்கு எண்டு பாத்து எல்லாரும் காலமை சாப்பிடவேணும் எண்டு லைன் கட்டி நிக்கிறாங்கள். வேலை பிராக்கிலை சோபாசக்தி சொன்ன விசயம் எனக்கு மறந்து போச்சுது.வேலை முடிஞ்சு வெளியிலை வந்து ரெலிபோனை பாத்தால் நாலைஞ்சு ரெக்ஸ்ரோ கிடக்கு இண்டையான் சந்திப்பை பற்றி. ஆனால் ஆர் ஆள் எண்டு சொல்லேலை.

நான் யோசனையோடை லாச்சப்பலுக்கு மெட்றோ எடுத்து போனன் .நாங்கள் வழக்கமாய் சந்திக்கிற பாண்டிச்சேரி ரெஸ்டோரன்ட்க்கு போனால், அங்கை ஆக்காட்டி பிரபாவும் இன்னுமொரு கூட்டாளியும் நிண்டாங்கள். அவங்கள் என்னை சந்திக்கிறதுக்கு நிக்கிறதாய் சொன்னாங்கள்.என்ன விசயம் எண்டு கேட்டன் .வாங்கோவன் ஒருக்கால் வாசுதேவனையும் சந்திசுப்போட்டு வருவம் எண்டாங்கள் .எனக்குப் பசிக்களை ஒருபக்கம் அவங்கடை முகத்தையும் முறிக்கேலாமல் இருந்திச்சுது. சரி போவம் எண்டு வாசுதேவவன்ரை ஒபிசுக்குப் போனம். அங்கை வெள்ளை தாடி சனமில்லாமல் இருந்திச்சுது. எனக்கும் வாசுதேவனை சந்திக்க வேணும் போலைதான் இருந்தது. ஏனெண்டால் போனகிழமை நடந்தை திறனாய்வு விழாவுக்கு வந்தவருக்கு என்னாலை ஒரு நன்றி சொல்லவேணும் போலை கிடந்திது. எங்களை கண்டது ஆளுக்கு பெரிய புழுகமாய் இருந்திது. நான் அவர் வந்ததுக்கு நன்றி சொல்லி அவரோடை கொஞ்ச நேரம் தத்துவ விசாரம் செஞ்சம். தாடிக்கு தத்துவம் எண்டால் சீனி திண்ட மாதிரி. பிரபா நாங்கள் பாண்டிச்சேரி ரெஸ்டொரண்ட் க்குப் போறதை நினைவு படுத்தினான். நாங்கள் அவரிட்டை விடைபெற்றுக்கொண்டு பாண்டிச்சேரி ரெஸ்டொரண்ட் க்குப் போய் உள்ளுக்கை உள்ளட்டம். பிரபாவும் கூட்டாளியும் பசிக்குது எண்டு கொத்து றொட்டி எடுத்தாங்கள். நான் றோல்சும் ரீயும் எடுத்தன். நாங்கள் ஆக்காட்டியிலை என்னென்ன செய்யவேணும் எண்டு கதைச்சு கொண்டு இருந்தம். நாங்கள் சாப்பிட்டு முடிய நான் வெளியிலை வந்து ஒரு சிகரட்டை எடுத்து பத்த வைச்சன். பேந்தும் நான் உள்ளுக்கை போய் ஆக்காட்டியை பத்தி கதைச்சு கொண்டிருந்தன்.

நாங்கள் கதைச்ச நேரத்திலை சோபா சக்தி ஒரு பொம்பிளையோடை ரெஸ்டோரன்ட்க்குள்ளை என்ரர் ஆனார். எல்லாரையும் சுகம் கேட்டார் நான் ஒரு தந்திரோபாய பின்வாங்கலிலை ஒண்டும் பேசாமல் இருந்தன். உடனை என்ரை பக்கம் திரும்பி அந்நியன் ஸ்ரைலில தலையை மேசைப்பக்கம் கவிட்டுக்கொண்டு, "கோமகன் நான் சொன்ன ஆள் இவாதான். இவான்ரை பேர் "ராஜாத்தி சல்மா". தமிழகத்திலை இருந்து வந்திருக்கிற பிரபல பெண்கவிஞர்" எண்டு என்னையும் அவாக்கு அறிமுகம் செய்து வைச்சார் .எவ்வளவு பெரிய கவிஞர் என்னை பாக்க வந்திருக்கிறாவே எண்டு எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சுது. அவாவும் பெரிய கெப்பர் இல்லாமல் எங்களோடை சாதாரணாமாய் கதைச்சா. நாங்கள் எங்களுக்கு நடைமுறை இலக்கியதிலை இருக்கிற ஐமிச்சம் எல்லாம் கேட்டு தெரிஞ்சு கொண்டம். அவாவும் எங்கடை கேள்வியளுக்கு மறுமொழி சொன்னா. நாங்கள் பம்பலாய் கதைச்சதிலை நேரம் போனதே தெரியேலை. ஐஞ்சு மணிபோலை நான் ராஜாத்தி சல்மாவிடமும் சோபாசக்தியிடமும் விடை பெற்றேன். மொத்தத்திலை இண்டையான் நாள் நொந்து நூடில்ஸ் ஆன பரபரப்பான நாள் எண்டாலும், ராஜாத்தி சல்மாவை இலக்கியசம்பந்தமாக சந்தித்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.


கோமகன் 
23 புரட்டாசி 2014
2 comments

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்














000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…