Skip to main content

புலம்பெயர் நாடுகளில் குடும்ப வன்மூறை - பத்தி.



இந்த பெண்கள் எப்பொழுதும் சொல்கின்ற ஓர் சுலபமான சொல்லாடல் ஆணாதிக்கம். ஆனால் இவர்கள் பெண்ணாதிக்கங்களை இருட்டடிப்பு செய்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். ஆம்பிளையானவன் என்ன காரணத்துக்காக 2-3 வேலைகள் செய்கின்றான் ?? அவனுக்கென்ன வயித்து வலியா ?? இத்தினை பவுணிலை தாலிக்கொடியும்( கலியாணத்திலை கட்டினதை திருப்பி செய்ய ), பவியோன் வீடும் (தனி வீடு வளவுடன் கூடியது ) , பீ எம் டபிள்யூ காரும் , அவனா கேக்கிறான்?? இந்தப் பெண்மணிகள் தங்கள் இனிஷல் பிரச்சனைக்காக இங்கிருந்து கொண்டு தாயகத்தில் இருந்து மாப்பிள்ளை எடுத்து கலியாணம் கட்டுகின்றார்கள். அவனுக்குரிய மரியாதையை அவர்கள் கொடுக்கிறார்களா என்றால் அதன் விடை துயரமானது அவனை செல்லப்பிராணி போலத்தான் அவர்கள் பார்கின்றார்கள் . இதன் மூலம் இந்தப் பெண்மணிகள் மறைமுகமாக உணர்த்தும் செய்தி என்னவென்றால், புலத்தில் உனக்கு நான்தான் வாழ்வு கொடுத்தேன் என்பதே. ( இதுவும் ஒருவகையான உளவியல் வன்முறையே) இதற்கு பல உதாரணங்களை என்னால் தரமுடியும் அனால் சம்பந்தப்பட்டவர்களின் கௌரவப் பிரச்னை என்ற ஒன்று உள்ளது. பிரச்சனைகள் என்று வரும் பொழுது இந்தப் பெண்மணிகள் நடுநிலைமையுடன் சொல்வதில்லை . வட்டம், சதுரங்களுக்கு நடுவில் நின்று கொண்டே செய்திகளை சொல்லி ஒருவித அனுதாப அலைகளை எடுப்பதற்கு முயற்சிப்பார்கள். குடும்பத்தில் வன்முறையென்பது, அது ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். "நான் " என்ற மனோபாவம் எந்தப்பக்கத்தில் அதிகரிக்கின்றதோ, அந்தப்பக்கதால் வன்முறை துளிர்விடும் .இந்த வன்முறையானது அருவருக்கத்தக்கதொன்றாகும். எல்லா பெண்மணிகளும் இவ்வாறு நடப்பதாக எண்ண வேண்டாம் தங்கள் விரலுக்கு ஏற்ற வீக்கத்துடன் குடும்பத்தை பிக்கல் பிடுங்கல் இன்றி நடத்தும் பெண்மணிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள் ஆனால் அவர்களது விகிதாசாரம் புலத்தில் குறைவாகவே உள்ளது.

குடும்பம் என்பதே இருவர் கூட்டணியுடன் நடைபெறும் ஓர் நிறுவனம். அதில் கருத்து முரண்கள் வரத்தான் செய்யும். கணவன் நிதி நிர்வாகம் என்றால், மனைவி அவனது இணை இயக்குனர். அதில் "நான் " என்ற மனோபாவம் எங்கு தூக்கலாக இருக்கின்றதோ, அதன்வழியாக பிரச்னை வெளியே கசியும். அதை ஊதிப் பெரிதாக்க பலர் " நட்பு " என்ற போர்வையில் இருப்பார்கள். அமைதியாக இருந்த குடும்பம் சந்தைக் கடையாக மாறும். வெளிநாடு என்ற மாயையும், அரை அவியல் கலாச்சாரமும் ,மற்றவர்களுடன் ஒப்பு நோக்கிப் பார்கின்ற மனோபாவமும் எப்பொழுது மாறுகின்றதோ , அப்பொழுது இந்த குடும்ப வன்முறைகள் மறையலாம் . பிரச்சனைகள் என்றுமே நிறம் பார்ப்பதில்லை. இந்தப் பெண்மணிகள் தங்கள் வாதங்களுக்கு என்றுமே வெள்ளை இனத்தவர்களை முன் உதாரணம் காட்டுவதுண்டு . தோல் வெள்ளை என்பதால் அங்கு பிரச்னை இல்லை என்பதல்ல அர்த்தம். இதைவிட கொடுமையான சம்பவங்கள் வெள்ளையின மக்களிடமும் உண்டு. அவை செய்திகளில் வந்த படிதான் உள்ளன. பிரான்சில் உள்ள குடும்ப வன்முறை பற்றிய சமீபத்திய அறிக்கைகள் இவ்வாறு குறிப்பிடுகின்றன ...........

" One woman dies every three days of domestic violence in France

47,573 events were recorded by the gendarmerie and the police, which is an increase of over 30% compared to 2004 (36,231), but not an increase in the number of cases: there are more reports before (encouraged by the police and justice), and there is a new definition of domestic violence that now includes violence by a former spouse.

Domestic violence represents more than a quarter of all acts of violence.

In 2006, 137 women died of beatings by their partners (a woman every three days) and more than 3,000 acts of violence led to an inability to work more than eight days (down slightly from 3 360-3 103).

Statistically, this corresponds to 18.7 acts of domestic violence for 10,000 women, but with spikes in certain departments beyond 30 per 10,000 women.

This number is compared to a victimization survey conducted in 2007 for acts of 2005 and 2006: 410,000 women reported having experienced violence from their spouse or ex-spouse, or 2.3% of all women aged 18 to 60. Less than a quarter have therefore resulted in a complaint (21%).

One man dies every ten days of domestic violence in France

But the victimization survey also reveals that 127,000 men are victims of violence by their partner, or 0.7% of all 18 to 60 for the same period men. However, only 2,317 complaints were recorded for such deeds, men giving more than women to complain.

This means that just under a quarter of the facts of domestic violence are exercised over men.

In 2006, 37 men died, killed by their wives, but in three quarters of cases, the men beat their partners.

Origins of violence causing death

The circumstances of the deaths by domestic violence are relatively conventional and predictable: argument, alcohol, separation and jealousy."


எதோ எங்கள் சமூகத்தில் மட்டும்தான் இந்த குடும்ப வன்மூறை (violence conjugales) இருப்பது போன்ற தோற்றத்தை இந்த பெண்மணிகள் உருவாக்குகின்றார்கள் . இது எல்லா இன குழுமங்களிலும் உள்ளது. அதற்கான தீர்வு மேலே நான் கூறிய " வெளிநாடு என்ற மாயையும், அரை அவியல் கலாச்சாரமும் , மற்றவர்களுடன் ஒப்பு நோக்கிப் பார்கின்ற மனோபாவமும் எப்பொழுது மாறுகின்றதோ , அப்பொழுது இந்த குடும்ப வன்முறை என்ற பிரச்சனைகளும் மாறும். "

கோமகன்
25 புரட்டாசி 2014
2 comments

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்














000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…