Skip to main content

நானும் என்ரை வாத்திமாரும் - பத்தி .


பிள்ளையள் வணக்கம். எல்லாரும் இண்டைக்கு ஆசிரியர் தினம் எண்டும் , அதுக்கு தங்களை படிப்பிச்ச வாத்திமாரை வாழ்த்த வேணும் எண்டும், இண்டைக்கு ஒரு மார்க்கமாய் கறணமடிச்சு வாழ்த்துறாங்கள். எனக்கு உதுகளிலை சொட்டுக்கும் விருப்பமில்லை கண்டியளோ . ஏனெண்டால் நாங்கள் படிக்கிற காலத்திலை வாத்திமாருக்கு எப்பிடி, எந்த றேஞ்சிலை ஆப்படிக்கலாம் எண்டு யோசிச்சு மண்டை காஞ்சு போவம்; முக்கியமாய் சைக்கிள் சில்லு காத்தை கழட்டி விடுறது, குண்டூசியாலை குத்துறது, சிலநேரம் இருட்டடி குடுக்கிறது, நல்ல வடிவான பட்டங்கள் வைச்சு மல்ரிபறல் அற்ராக் செய்து அவை உரு ஏறி கலைக்க நாங்கள் ஓடிறது, எண்டு செய்யாத அனியாயங்கள் எல்லாம் செய்தம். நெஞ்சிலை கையை வைச்சு சொல்லுங்கோ........ உண்மைதானே?? அனால் அவையளும் லேசுப்பட்ட ஆக்களில்லை. காத்தாலை தோட்டத்துக்கு தண்ணி மாறிப்போட்டு வீட்டிலை மனுசிமாரோடை றாட்டுப்பட்டுப்போட்டு பள்ளிகூடம் வந்து வகுப்பிலை எங்களோடைதான் டிக்கி புளிக்க அடிக்கிறது. பெட்டையளுக்கு முன்னாலை நக்ஸ் நையாண்டி செய்யிறது. மனுசிமாற்றை கோபத்தை மேசைக்கு கீழை குனிய விட்டு துவரங்கம்பாலை விளாசிறது எண்டு அவையளும் கேம் கேக்கேக்கை, நாங்களும் கேம்கேட்ட பரம்பரை கண்டியளோ. அதிலையும் நான் ஐஞ்சாம் வகுப்பு படிகேக்கை தமிழ் பாடப் புத்தகத்திலை சந்திரனும் முயலும் எண்ட பாட்டு வெண்பா வரிசையிலை வரும். எனக்கு அந்த பாட்டு சுட்டு போட்டாலும் வரேலை. என்ரை தமிழ் வாத்தி பெட்டையுளுக்கு முன்னாலை அடிச்ச அடி இண்டைக்கும் நினைச்சால் கண்ணாலை ரத்தம் வரும் கண்டியளோ.

என்னமொண்டையும் சொல்லவேணும் இப்பத்தையான் அமைச்சர் ,அப்பத்தையான் வாத்தியார் ஒருதரிட்டை டியூசனில படிச்சன் .அவர் எப்பவும் "அப்பன் " எண்டுதான் கூப்பிடுவர். அடி எண்டால் சொல்லி வேலையில்லை. மொழியிலயும் உள்ளங்கையிலையும் தான் நடக்கும். வெடிவால் முளைச்சு சிங்கங்கள் சிலுப்பி திரியிற நேரத்திலை பெட்டையளுக்கு முன்னாலை அடிச்சால் எப்பிடி இருக்கும்?? என்னோடை இருந்த ஒரு கூட்டாளி ஒருத்தன் எப்பவும் ஒரு ட்ரிக் வைச்சிருப்பான். அவர் உள்ளங்கையிலை அடிக்க முதலையே ஆஆஆஅ நோகுது சேர் எண்டு டிக்கியிலை கையை தேய்ப்பான். அந்த அமைச்சர் ஆரெண்டு சொல்லுங்கோ ?? 

அப்பத்தையான் வாத்திமார் கிட்ட முட்ட 90 வீதமான ஆக்களின்ரை தேசிய மொழி "வன்முறைதான்". இதுகளாலைதான் நாங்கள் வன்முறையிலை காதல் வைச்சமோ தெரியாது. சோதினை மூட்டதிலை இவங்கடை அடிஅகோரத்திலையே குலைப்பன் காச்சல் அடிச்சு எடுக்க வேண்டிய நல்ல மாக்ஸ்சுகளையும் எடுக்காமல் விட்டம். அன்பாய் ஆதரவாய் சொல்லி குடுக்க வேண்டிய பாடங்களை இந்த வாத்திமார் வன்முறையாலையே சொல்லி சொல்லி எங்களை வறுத்தெடுத்தாங்கள். அதுக்காக எல்லா வாத்திமாரையும் நான் குறை சொல்லேலை கண்டியளோ. அச்சா வாத்திமாரும் இருந்தவைதான்.

சின்ன வகுப்பிலை கூட பொம்பிளை ரீச்சர்மார் நல்லவையாய் இருந்தவை. ஆனால் அவையும் எங்களை டிசிப்பிளினாய் நடத்திறம் எண்டு வறுத்தெடுத்தவைதான். எப்பிடியும் தங்கடை பிள்ளையளை டபுள் புறமோசன் போட்டு எங்களை விட ஒருவகுப்பு கூட விடுவினம். "எங்களுக்கு ஒழுக்கம் நன்று வகுப்பேற்றப்படவில்லை" எண்டு ரிப்போர்ட்டிலை போட்டு வீட்டிலை அப்பரை சன்னதம் ஆட வைப்பினம். வகுப்பேற்றப் படவில்லையாம் பேந்தென்ன ஒழுக்கத்துக்கு நல்ல பேர் குடுக்கிறது?? இவையின்ரை இந்த கம்பசூத்திரம் எனக்கு இண்டைவரைக்கும் விளங்கேலை கண்டியளோ.

இந்த வாத்திமார் கெட்டு நொந்து இருந்த நேரம் நாங்கள் எட்டிகூட பாக்கேலை. இப்ப இருந்தாப்போலை நாங்கள் நல்ல பிள்ளையளுக்கு நடிக்கிறது அவ்வளவு நல்லாய் இல்லை பாருங்கோ. ஆனால் அப்ப அவையிட்டை வாங்கின அடியள்தான் இண்டைக்கும் எங்களை நெம்பிகொண்டு நிக்கச் செய்யுது எண்டதையும் மறக்க ஏலாதுதான். மொத்தத்திலை ரெண்டு பக்கமும் கணக்கு தீத்த பள்ளிக்கூடச் சிவியம் தான் எங்கடை காலத்திலை நடந்திது.


கோமகன்
06 ஆவணி 2014
Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000



உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…