Skip to main content

Posts

Showing posts from January, 2015

"எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை". - நேர்காணல்- யோ கர்ணன்.

இணையத்தின் மூலம் எனக்கு அறிமுகமான யோ கர்ணனை  இந்த வருடத்தின் ஆரம்பகாலப் பகுதியில் நான் தாயகம் சென்ற பொழுது நேரிடையாகவே சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையான இவர், நேரடி சந்திப்பின் பின்பு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவராகிவிட்டார். இங்கிருந்து வெளியாகும் ஆக்காட்டி சஞ்சிகைக்கு ஓர் நேர்காணல் ஒன்று தரமுடியுமா ??என்று நான் கேட்ட பொழுது ,உங்களுக்கு இல்லாத நேர்காணலா என்று மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். மின்னஞ்சல் மூலம்,  நான் அவரிடம் நடத்திய நேர்காணல்.
கோமகன்
0000000000000000000000000

யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்பேச்சு மொழியில் எழுதும் நவீனகதை சொல்லி. இவரின் கதைகளில் ஈழமக்களின் இரட்டை மனநிலையை பகிடிசெய்யும் அல்லது கேள்விக்குட்படுத்தும் கதைகளே அதிகமானவை. தன் கதைகளினூடே சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகளை தோலுரித்து அதன் அபத்தங்களை சொல்ல ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. அலங்காரங்கள், வர்ணனைகள் இன்றி பேச்சு மொழியில் சரளமாக எழுதுவது இவரின் பலம். இண்டு சிறுகதைத்தொகுதிகளும்(தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு) ஒரு நாவலும் (கொலம்பசின் வரைபடங்கள்) இத…

சுவைத்(தேன்) -கவிதைகள் பாகம் 02.

 01 ஒரு புது ஆயிரமாண்டு

மூன்றாவது ஆயிரமாண்டு
அது அநேகமாக எங்களுடையது
எங்களுடைய ஆட்டுத்தொழுவத்தில்
அது பிறந்து வளர்ந்தது
ஒரு யுகமுடிவின் எல்லா வேதனைகளிலிருந்தும்
அது மீண்டெழுகிறது
மீட்பின் ரகசியமென. இனி அறிவேயெல்லாம்
அறிவே சக்தி
அறிவே பலம்
அறிவே ஆயுதம்
புத்திமான் பலவான்
வருகிறார் மீட்பர் பரசேயரும் சதுசேயரும் பரபரக்கிறார்கள்
அவர்கள் பழைய யுகத்தவர்கள்
நாங்கள் அகதிகளாயிருந்தபோது
அந்தரித்துத் திரிந்தபோது
யாருக்கும் தெரியாமலே
மூன்றாவது ஆயிரமாண்டு
கர்ப்பத்திலுதித்தது
பரசேயருக்கும் சதுசேயருக்கும்
இது தெரியாது
அவர்கள் மீட்பருக்காக
அந்தப்புரங்களில் காத்திருக்கிறார்கள்
ஆட்டுத்தொழுவத்தில்
அற்புதங்கள் நிகழுமென்று
அவர்களுடைய வேதப்புத்தகங்களில்
சொல்லப்படவில்லைப் போலும்
சிலுவையும் சவுக்குமன்றி
முள்முடியும் வெறுப்புமன்றி
வேறெதுவும் அவர்களுக்குத் தெரியாது
அறிவு கனிந்தெழும் போது
அதனொளியில்
எரிந்து சாம்பலாகப் போகும்
அற்பப் பூச்சிகளாயிருக்கிறார்கள்
அறிவு சக்தியாகத் திரண்டு
யுகங்களையும் உலகங்களையும்
ஜெயிக்க வரும் வேளை
அவர்கள் குருடராயும் செவிடராயுமிருப்பார்கள்
குழந்தை நூற்றாண்டின் நற்செய்தி
அவர்களைச் சென்றடையாது
அதோ
இப்பாழுதுமவர்கள்
கள்ளத்தீர்க்கதரி…