Thursday, September 24, 2015

சுவைத்தேன் ( பாகம் 07 )

01 ஆண்ட பரம்பரைக்கு 
எமதூதன்
மன்னவரை எங்கேனும் கண்டீரோ?

வான முகட்டில்
வழி தெரியாச் சேனைப் புலத்தில்
காடுகளில்
ஊர்ப் புறத்துத் திண்ணைகளில்
அவருலவும் அந்தப் புரங்களில்.

பாவம்,
ஊர் முழுக்கக் குலுங்கியதில்
ஒப்பாரி  வைத்தழுது
பிறகும், வீசுகிற எலும்புக்காய்
விழுந்தெழுந்து ஓடி அலுப்புற்றும்
சாகாமல் உயிர் வாழ்ந்தார்.

கோடிப் புறமிருக்கும்
குதிரை லாயங்களில்
இரவுகளில் வந்து தங்குவாரோ?
பிடியும்,
சேணம் இட்டுவையும்.

தொலைநீளக் கடற்பரப்பில்
நீந்தித் தொலைத்தாரோ?
மறுகரையில்,
இன்னும் ஒருதடவை
அழுது தொலைத்தாரோ? 

பொழுதின் இருட்டோடு 
இராவணனின் புஷ்பகத்தில் 
போய்ச் சேர்ந்து விட்டாரோ?
சிம்மாசனம் அமர்ந்த
மாபெரிய மன்னவனின் படையெடுப்பை
விழிபதிக்க நாதியற்றுப் போனோரோ?
பாவம்தான்.

அக்கரையின் அரண்மனையில்
வீசும் சாமரையில் உடல் குளிர்ந்து
வேர்வையற்று, 
உண்டு களித்து வாழ்கிறாரோ?
ஓய்வுக்கு,
வில்லெடுத்து வெளிக்கிளம்பிக்
காடுகளைத் திணறடித்து
(அவர் வீரம் தொலையாதா?)
வேகவைத்த பறவைகளை ருசிக்கிறாரோ?

மன்னவன் தேரோடிய 
வீதிகளில் கோடையிலோ
பாளம் வெடிக்கிறது.
வெடிப்புகளில் எங்களது
பச்சை ரத்தம் உறைகிறது.

கடல் குடைந்து மீன்தேடும்
மனிதர்களே!
அக்கரையில் அவருடைய தலைதெரிந்தால்
உரத்துச் சொல்லுங்கள்,
'உங்கள் கிரீடம் எங்களிடம் இருக்கிறது.
தின்று கொழுத்தும், சிந்தித்தும்
உம்முடைய மண்டை பெருத்திருக்கும்
வரவேண்டாம்,
அளவுள்ளவன் சூடிக்கொள்ளட்டும்.'

(1985) 

நன்றி : இளவாலை விஜேந்திரன் 

*********************************************

02 ரயர் தின்ற கொலை நகரம் அம்மாவின் மடிக்குள் பயத்தில்
குழந்தைப் போல் ஒடுங்கிக் கொள்கின்றவனை
வலுகட்டாயமாய் இழுத்து செல்லும் போது
கண்களிலிருந்து வடியும் கண்ணீர்த் துளி அவனது
அனுதாபத்தை மௌனமாய் எழுதி செல்லுகின்றன
அம்மாவினால் செய்ய முடிந்த காரியம்
நீண்ட ஒப்பாரியை விதியெல்லாம் அழுது வைத்தது.

சந்தேக நபராக அழைத்து வரப்பட்டவனின்
உயிர் உடலை ரயர் நெருப்பு மடுவுக்குள்ளே
இறுக உடல் கயிறு கட்டி தள்ளுகின்ற போது
கடைசிக் குரல் அழுத்தமாய் உரத்து எழும் சப்தம்
உயர்ந்து வளரும் தீச்சுவாலையில் அடங்குகின்றன.
எரிந்து பொசுங்கும் ரயர் புகை வாசம் காற்று
வெளியில் எஞ்சிய மூக்கு துவாரம் வழி நுழைகிறது.

துயரின் சொற்களைக் பெருக்கிய வாழ்வு
கரும் புகை வான்மண்டலம் பரப்பில்
ஒரு பெரும் துயரை அச்சம் கொணர்கையிலே
பெரும்பலிபீட தோற்றம் பெற்ற குழிகளுடன்
ஒவ்வொரு உயிராய் மரிப்பில் இறக்குகிறது.
எல்லா சிதையின் வடிவங்களை மாற்றியிருந்த
பிணங்களில் நிறைவேற்றி கொண்டிருக்கின்றது
பிணக்கின் அதியுன்னதாய் முளையிடும் துவேசம்.

அரையும்,குறையுமாக எரிந்து இருக்கின்ற
எச்சங்களின் மிச்சங்களை கடித்து குதறும் நாய்களும் 
சாம்பல் மேட்டிலிருந்து ஒருக்களித்து உறங்குகின்றது.
மிகுதிகளை ஊரின் எங்கும் இழுத்து
சமாதில்லாத சுடுகாடாய் நிலத்தினை புதைக்கின்றன.

நகரத்தின் தெருமுனை விளக்கின் வெளிச்சத்தை
இருள் தின்று அச்சத்தை சாக்குருவியின் அலறலில்
நீள் தெருக்களுாடாக எரிக்கன்,கள்ளி
பூக்களிலிருந்து சிதறும் வாசங்களை பேய்கள்
சாவகாசமாய் காற்றின் வெற்றிடத்தில் அறைகின்றது.

கடவுளும் நிராகரித்த கொலை நகரம் சாவுகளால் 
வழிகின்ற துயரின் பிரகடனத்தினூடாக
குழந்தை தகப்பனையிழந்திருந்தது
மனைவி கணவனையிழந்திருந்தது,
தாய்  மகனையிழந்திருந்தது,
சகோதரி சகோதரனையிழந்திருந்தது..

கோ.நாதன் 

16/12/2013

நன்றி :  http://eathuvarai.net/?p=4235

****************************************
03 மண் மேடு.மணல் மேட்டு நிலத்திலமர்ந்த
நிலவொளி திருநாளொன்றில் எனது
குழந்தைகளும் ஓர் அணிலை போலவே
ஓடித் துள்ளி மணலில் உருண்டு
மணல் வீடு கட்டி மண்ணை
உடம்பெல்லாம் அப்பி விளையாடி
மகிழ்ந்த நிலம் பறிபோயிற்று…..

இரவெல்லாம் நாய்கள் தெருவை
கடித்து கனத்த குரைப்பில் நக்கி துடைத்தது.
புதிதாக வந்திறங்கி குவிந்த படைகள்
கருப்பு பேய்களாய் தான் உலாவுகின்றனர்.
இயற்கை கோபத்துடன்
மழையையும்.மின்னலையும், இடியையும்,
உரத்த குரலில் ஊரை உலுக்கிக் கொண்டிருந்தது.

காலைப் பொழுதினில்
வாகனங்கள் ஓடவில்லை,
மனிதர்கள் நடமாடவில்லை,
சந்தைகளில் கருவாடும் காயவில்லை
பெருந்தெருக்கள் வெறிஞ் சோடி நீள…
பழங்காலத்து சிதைந்த
கல்லொன்று இருநூறடியுயரத்துக்கு
வானெழுந்து சிலையாகி முளைத்தது

அங்கு வாழ்திருந்த காகங்களை
சகாடித்து காகத்தின் இறகினை
கிலி கோதி துரத்தி
அதிவேகத்துடன் மண் மேடு மரத்தோடு
தங்கிய அதீத தங்கப் பறவைகள்
கூடு கட்டி புனித நிலத்தினை ஆக்கிரமித்து….

தெரு முனைச் சந்தியெல்லாம் மின்
விளக்குகள்வெளிச்சத்தில் பிரகாசித்தது.
மீசை மழித்த காவி நிறப் பூனைகளும்
ஒற்றைத்தூணில் தாங்கும் கிழட்டு
துறவியை பாடலாகி உரியானப் படுத்தும். .

மொழியினை விழுங்கி நறுக்கி கிழித்த
கிளி சொண்டிலிருந்த ஆயுதம் கடவுள்.


நன்றி :  http://eathuvarai.net/?p=3453

***********************************************

04 நிலம் மிதித்தவனின் வதைஎன்னதான்  மார்பு பால் சுரந்து
மடியறங்கம் திரண்டிருக்க
மழலை முகம் புதைத்து மகிழ்ந்த
அதர சிறு புன்னகையினை பிடுங்கி
பெரும் நிலத்தினை மிதித்தவன்
தலை வெட்டி திருகித் தூக்கி வீசியிருந்தான்.

என் கால்களையும்,கைகளையும்
பல பூட்ஸ்க் கால்கள்
மண்ணிலழுத்தி மல்லாந்து கிடத்திய போது
எனதான வெள்ளைத் தோலின் மார்புகளை
கடைவாய்களும் கடித்து குதறி உமிழ..
இரத்தமும், காயமும் உடம்பெல்லாம்
வழிந்து உறைந்தது.காமப் பிசாசுகள்
முலையறுத்து  முலைக்
காம்பினை குழந்தையின் குதத்தில் திணித்து.

மொத்த இயக்கங்களுமற்ற
சின்ன யோனித் துவாரங்கள் வழியே
எண்ணிக்கையற்ற பெருத்த ஆண்குறிகள்
வக்கிரம் தீர்த்து கொண்டிருந்தது.
விந்துத்துளிகளின்
மகாவலி கங்கை பெருக்கம்
எனது தொடைகளிடைய வடிந்து ஓழுகும்.

சில தினங்கள் பதுங்கு குழிக்குள்
என் பிணத்தின் துர்நெடி  புணர்ந்த கணம்
சிதைவடைந்திருந்த உடலகத்திலிருந்து
இன்னுமின்னும் பாலியலின் வன்மம்.
புழுக்களின்  படையெடுப்பு…
வீச்சின் வாசம் மோப்பம் ஊர்ந்து பரவுகின்றது.

யசோதரவின்  பரம்பரையிலிருந்து
உதித்தவனின் கரங்களுள் வந்த துவக்கு
யோனியினை குடைந்து கருப்பைக்குள் நீண்டு .
யோனிக்குள்ளே குண்டழுத்தி வெடிக்க வைத்தான்.

போரின் உக்கிர வெற்றியின் அடையாளம்
சிகிரியா உளுத்த நிர்வாண ஓவியத்தின்
நிழலினை மிஞ்சியிருந்தது
தமிழிச்சிகளின் நிஜ நிர்வாணப் படங்களும்,
நிலம் கிழித்த ரத்த ஓவியங்களும்.


நன்றி :  http://eathuvarai.net/?p=3453

************************************************

05 பாலைவன லாந்தர்கண்ணிவெடிகள் புதைந்த நஞ்சை புஞ்சை
நிலங்களில் வாலறுந்தக் காத்தாடியை
தேடிய காலடித் தடங்களின் குருதியை
நக்கிக் குடல் சரிந்தது மலட்டு ஓநாய்

உடல் பாகங்களை பிடுங்கி
விற்பனைச் செய்யும் அரக்கனின்
உயிர் அவனது முன்நெற்றியில் முட்டும்
மகனின் இருதயக் கூட்டுக்குள்

சப்பாத்திக் கள்ளியை விளைவிக்கும்
பூமி எந்தவித பிரதிபலனையும் paal
எதிர்பார்க்கவில்லை

ஓய்வு பெற்ற பிரேதஅறைக் காவலருக்கு
உண்ணவும் பருகவும்
ஒரு பிணத்தின் வாடை
தேவைப்பட்டது

மனித இனம் தோன்றியது
அமீபாவிலிருந்தா
குரங்கிலிருந்தா
ஆதாமின் வாரிசாகவா

கேள்விகள் மட்டும் ஒலிக்கும் அறையில்
சுவர்க்கோழியின் சத்தம்
மனப்பிறழ்ந்து அலைகிறது

அடிமைப்பட்டிருந்த ஒவ்வொரு
கேவலமான பாவத்திற்குப் பின்னும்
இறந்த பின் இருக்கும்
உலகத்திற்கும் நரக நெருப்பிற்கும்
சில நிமிடங்கள் மட்டும்
நடுங்கிக்கொண்ட கைகள் புனித நூலின்
பழுத்த தாள்களைத் தடவியது

புரோட்டோபிளாசத்தை வைத்து
நிர்ணயிக்கப்படும் வாரிசுப் பத்திரங்களில்
கழிவிரக்கமான உணர்வுகள்
பெருத்த மானைத்தின்ற சர்ப்பம் என
செரித்துக்கொள்ளத் துணிகிறது

பஞ்சடைந்தக் கண்களின் வழியே
பாதரசம் போன கண்ணாடியில்
தேடுகிறாள் கடைசியாய் சிரித்த
சுதந்திரப் புன்னகையை

ஓட்கா பருகும் பதின்வயதுச் சிறுமி
உச்சகட்ட நாகரீகமாக
மேலாடையை கழட்டி எறியும் வீதியில்
கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறான்
தகவல் பரிமாற்றும் தேவதூதன்

நன்றி : http://eathuvarai.net/?p=4590

***************************************

06 பிடாரனின் உலகினை நோக்கி …பல்லி இட்ட எச்சத்தின் மீது
நெளிகின்றன புழுக்கள் .
நினைவறுக்கப்பட்ட
காலங்களின்
கடைசி யுகத்தின்
இறுதி இரவாய்
கழிகிறது இந்த நிமிடம் .
வனப்பு மிகுந்த
ஓவியத்தின் வர்ணங்கள்
களவாடப்பட்ட
ஓர் இரவில்
லியனடாவோ டாவின்சியின்
விம்பம் சிரிக்கிறது
சலனங்கள் ஏதுமற்று …………
காலங்கடந்தும்
நினைவுகள் அறுந்தும்
தூசேறிப்போன
சித்திரங்களில்
பல்லி இட்ட எச்சத்தில்
இன்னும்
நெளிகின்றன புழுக்கள் .
கடைசி இரவின் வினாடிகள்
நகர்கின்றன …
ஒரு பிடாரன்
நடமாடும்
உலகினை நோக்கி …

யாத்திரீகன்
நன்றி : http://eathuvarai.net/?p=2388

*********************************************************

07 பாராளுமன்ற பாம்புகள் 


மகுடிக்காரர்கள் 
பாம்பாட்டிகள் போல
மகுடிகளோடு வந்தமர்தார்கள்

பொய்களும் நயவஞ்சகங்களும்
மாறி மாறி மகுடி ஊத ஊத
பாராளுமன்ற பாம்புகள் படமெடுத்தாடின

மகடிக்காரர்களின் அரசியல் மடிக்குள்
மகுடிகள் வைக்கப்பட்டதும்
கொடிய அரவங்கள் ஆவிகளாய்
ஊருக்குள் சீறிப்பாய்ந்தன

கண்கொத்திகள் கண்களை கொத்தின  
நாகங்கள் தவளை பிடிப்பது போல
நாக்குகளை பிடித்துத் தின்றன
புடையன்கள் அடிவயிறுகளை கடித்தன
நல்லபாம்பு காதுபுற்றால் புகுந்து
மூளைக்குள் படுத்துக்கொண்டது
மலைப்பாம்புகள் அச்சமின்றி எழுகின்றவர்களை
வெள்ளை வேன்கள் போல முழுசாய் விழுங்கின

போராயுதங்கள் போன்ற மகுடிகளால்
பாம்புகள் அட்டகாசமாய் ஆட்டம்போட்டன
மக்கள் மரமண்டைகளாய்
மகடிக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்

28/10/2012 மாலை 5.45
ஈழக்கவி
நன்றி : http://eathuvarai.net/?p=2388

Thursday, September 17, 2015

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 11

சுருக்கு சுறுக்கர் ( பத்தி )


01 நாடு ஒரு நபருக்கோ அல்லது ஒரு அணிக்கோ வரையறுக்கப்பட்டதல்ல!– பிரதமர் ரணில்

02 இன்னொரு அரசியல் புரட்சிக்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: சுமந்திரன் அறைகூவல்

03 முற்றுகைகளை உடைத்து வெல்லட்டும் தமிழ்த் தேசியம்!

சுறுக்கரின் அவதானம் :

01 அதுசரி எல்லாம் பங்கு பிரச்சனைதான் கண்டியளோ மிஸ்டர் பிறைம் மினிஸ்டர் .

02 எங்கை எந்த இடம் எண்டு சொன்னியள் எண்டால் வசதியாய் இருக்கும் .அதுசரி நீங்கள் றெடியோ ?

03 கோல் பேசிலையும் வட்டுக்கோட்டையிலையும் எப்பவோ தமிழ் தேசியம் முற்றுகை உடைச்சு விட்டாச்சு இப்ப ஆர் உங்கை முற்றுகை போட்டிருக்கினம், உடைக்கிறதுக்கு ?

****************************************

01 மலேசியாவிலிருந்து விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் நாடு கடத்தப்பட்டார்!

02 ஜனாதிபதியின் கடிதத்திற்கு மஹிந்தவினால் பதில் கடிதம் அனுப்பி வைப்பு .

சுறுக்கரின் அவதானம் :

01 புலி இல்லை எண்டு அரசாங்கம் கற்பூரம் கொழுத்தி சத்தியம் பண்ணுறாங்கள் இங்கை என்னடாவெண்டால் புழுக்கை வாசம் என்னம் எடுபடேலை .

02 லெக்சன் கிட்டுது ......சனம் வெளிநாட்டிலை இருந்தெல்லாம் அல்லோலகல்லோலப் படுகுதுகள். இங்கை என்னடாவெண்டால் ரெண்டு பெரும் லவ் லெட்டெர் போட்டுக்கொண்டு இருக்கினம் .

*********************************

அடிமைகளாக வாழ முடியாது இந்த வாழ்வுக்கான முடிவு காலம் நெருங்குகின்றது: பொன்.காந்தன்.

சுறுக்கரின் பார்வை :

ஏதாவது புதுசாய் மாத்தி யோசி ராசா. நான் சின்னனிலை இருக்கேக்கை அடிமைப் பெண் படத்திலை கேட்ட வசனம் உது .


**********************************************
ஹாய் போய்ஸ் ,

கொஞ்ச மாசத்துக்கு முன்னாலை ஒரு கதை புத்தகம் வந்திது. அது பெரிய எடுப்பிலை வெளியீடு எல்லாம் செய்து பட்டையை கிளப்பீச்சுது. அதுக்கு என்ரை கூட்டாளி ஒருத்தன் விமர்சனம் எழுதினான். அதுவும் பிச்சுக்கொண்டு போச்சுது. என்ன கோதாரியெண்டால் வாக்கணங்கெட்ட கூட்டாளி முதுகு சொறிஞ்சு எழுதாமல் நட்டம் நயத்தை எழுதிப்போட்டான். இது எழுதினவருக்கு சுட்டுப்போட்டுது போலை கிடக்கு. தன்னை பப்பாவிலை ஏத்தி எழுதினவையின்ரையத்தான் போட்டுக்கொண்டிருக்கிறார் எண்டால் பாருங்கோவன். நான் கூட்டாளிக்கு தவறணையிலை வைச்சு சொன்னன், இனிமேல் பட்டாவது பப்பாவிலை ஏத்தி எழுதப் பழகினாய் எண்டால் பிழைச்சு கொள்ளுவாய் எண்டு. பெடி என்னை பேசிப்போட்டு போறான் விசரன் .

*****************************
பரிசு கெட்ட சுறுக்கர்

வணக்கம் போய்ஸ் . 

இண்டைக்கு நாலு நாள் வீட்டிலை குந்தி இருந்துபோட்டு வேலைக்கு போனன். என்ரை கொமாண்டிலை ஏரியா வலுகிளீனாய் போய் கொண்டு இருந்திது .வழக்கமாய் வாற கஸ்டமறோடை ஒரு குரூப்பும் சேர்ந்து காலமை சாப்பாட்டை விசுக்கிக் கொண்டு இருந்தினம். நானும் அவையோடை ரெண்டு ரோக்கை போட்டு அவையளை மனம் கோணாமல் குசிபடுத்தி கொண்டு இருந்தன். 

பத்து மணிக்கு காலமை சாப்பாடு பூட்டிற நேரம் . ஒரு ஒம்பது முக்கால் போலை ஒரு சிங்கிலி நோனா வந்தா. அவா ப்றொம் எத்தா யூனி ( யூ எஸ் ). இங்கிலிஸ் டோக்கிங் மாம் பட் க(று )ப்பி . வந்து எடுத்த உடனை எனக்கு வணக்கமும் சொல்லாமல் "முட்டை அவிக்கிற மெசின் தண்ணி சூடாய் இருக்கோ ?" எண்டா. இங்கை அரிவரி பழக்கம் என்னவெண்டால் காலமை ஆரை கண்டாலும் வணக்கம் சொல்லவேணும். இல்லாடி அது ஒரு பெரிய அவமதிப்பு . நான் ஒண்டும் சொல்லாமல் அவாவை ஒரு செடில் லுக்கு ஒண்டு விட்டன். ஏக்கனவே அதுக்கை ஆரோ கஸ்டமர் போட்ட ஆறு முட்டை அவிஞ்சு கொண்டு இருந்திது. இவா காலிலை சில்லு பூட்டி கொண்டு நிக்கிறா. பேந்து இந்த முட்டையை எடுக்கேலாதோ எண்டு கேட்டா ."வைச்ச ஆளுட்டை கேள் .அவர் ஒமெண்டால் நீ மாத்து" எண்டு ந சொன்னன் . பிள்ளையள் சிவசத்தியமாய் இந்தளவும் தான் சொன்னன். அதுக்கு உடனை கப்பி என்னை பாத்து என்ன சொன்னா தெரியுமோ ? " ஐ பக் யூ ஆஸ் ,( பெஸ்சே ஒன் க்யு ) எண்டா. இது கண்டியளோ பட்டை தூசணம். சனம் எல்லாம் என்னை பாக்குதுகள். எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சு. என்ரை பதினாலு வரிய சேர்விசிலை ஒருத்தரும் என்னோடை இப்பிடி தூசணத்தாலை பேசினது இல்லை கண்டியளோ. 

கப்பி சூதானமாய் வெளியிலை போற வாசலிலை நிண்டு கொண்டு என்னை பாத்து திருப்பவும் சொன்னா "ஷடாப் யூ இடியட்" எண்டாள். எனக்கு விசயம் கிளியறாய் விளங்கீச்சுது." கப்பி ஒரு சீன் கிரியேட் பண்ணி தின்ன வந்த காசிலையும் 3 நாள் நிண்ட காசிலையும் ஆட்டையை போடப்போறா" எண்டு . கொஞ்ச நேரத்தால் என்ரை கூட்டாளி டைரக்டர் வந்தார். வந்து சொன்னார் "கப்பி முறைப்பாடு வைச்சவா .நீ வடிவாய் கவனிக்கேலையாம். இன்டர் நெட்டிலை போடப்போறாவாம் " எண்டார் .அப்ப நான் சொன்னன், "அவா ஆக்களுக்கு முன்னாலை என்னை தூசணத்தாலை பேசினதைப் பத்தி ஏதாவது உனக்கு சொன்னவாவோ" எண்டு கேட்டன். அதுக்கு பங்காளி சொல்லுறார், "அவை எப்பிடி எண்டாலும் சுறுக்கர்தான் தாங்கி தரிச்சு போகவேணுமாம்". 

எனக்கு ஏறீட்டுது பிள்ளையள் .அப்பன் நாட்டு நடப்பும் சட்டமும் தெரிஞ்சும், தெரியாதமாதிரி கதைக்கிறாய். நான் இந்த ஏரியாவுக்கு சிண்டிகேட் டெலிக்கே .உன்ரை கஸ்டமர் வேலை நேரத்திலை உன்னட்டை வேலை செய்யிற ஆளை தூசணத்தாலை பேசினதோடை, திண்டதுக்கும் காசுகுடுக்காமல் அட்டையை போட்டு உனக்கு நாமம் அடிச்சு போட்டாள். நீ என்னடாவெண்டால் என்னோடை வந்து கொழுத்தாடு பிடிக்கிறாய். முறைக்கு அவாவை கொண்டு நீ தான் என்னட்டை மன்னிப்பு கேக்கவேணும். கப்பிக்குத்தன் கொமெண்டரி எழுத தெரியும் எண்டில்லை. சுறுக்கனுக்கும் தெரியும் .வசதி எப்பிடி?" எண்டு கேட்டன் .பங்காளி பம்மி கொண்டு போட்டுது. ஆனால் பிள்ளையள் கப்பி என்னை தூசணத்தாலை பேசிப்போட்டாள் எண்டதை நினைக்க மனம் ஆறுதில்லை.

*******************************************

ஹாய் பெடியள்ஸ்.............

இண்டைக்கு என்ரை கூட்டாளி ஒருத்தன் லோக்கல் மாற்றர் ஒண்டை பத்தி செரியாய் பீல் பண்ணி எழுதி இருந்தான். அதை கொஞ்சம் விளப்பமாய் டிஸ்குத்து ( டிஸ்க்கஸ் ) பண்ணுவம் எண்டு பாக்கிறன். சுறுக்கர் இங்கை வந்த காலத்திலை செரியாய் கஸ்ரப்பட்டுத்தான் இந்த பிரெஞ்சை படிச்சு ஒழுங்கு முறையாய் இருக்கிறார். என்னோடை வந்த கொஞ்ச கூட்டுகளும் படிச்சாங்கள். ஆனால் மிச்சம் எல்லாம் நோகாமல் நொங்கு எடுக்கிற கோஸ்ரியள். அவங்கள் கண்டியளோ தங்கடை முகத்தை அப்பாவி மாதிரி வைச்சே சூக்குமமாய் அலுவலை கொண்டோடுவங்கள் எண்டால் பாருங்கோவன். இப்ப..... பெரிய பெரிய மாற்றருக்கு எல்லாம் அவைக்கு பிரெஞ்ச் ஆக்களோடை கதைக்க ஆக்கள் தேள்வைப்படாது. 

ஒரு எக்சாம்பிளுக்கு பாங் கிறடி ( லோன் ) , வீட்டு கிறடி (லோன் ) எல்லாம் தாங்களே தவண்டு எழும்பி காதும் காதும் வைச்ச மாதிரி முடிப்பங்கள். பேந்து அதை லெப்பலாய் மற்றவைக்கு விலாசம் காட்டுவங்கள் . இந்த . பிஸ்கோத்து சோசல் மெடத்துக்கும் ,அகதி காசுக்கும், அசட்டிக் காசுக்கும்( வேலை இல்லாதவைக்கு குடுக்கிற காசு ), வேலை பதியிற இடத்துக்கும், வேலை எடுத்து குடுக்கிற அலுவலுக்கும் இவைக்கு ஒரு சிண் தேள்வைப்படுது? இதிலை என்ன சூக்குமம் என்னெண்டால் , தங்கடை கஸ்ற்றத்தை எங்கள் தரவளிக்கு காட்டுயினமாம் .இந்த விசயத்திலை பாருங்கோ சுறுக்கர் செரியாய் நொந்து நூலாய் போனார். .பாவம் எங்கடை பெடியள் எண்டு என்ரை நேரத்தை மினக்கெடுத்தி ஒரு உதவிக்காய் போறது. சுறுக்கர் ஐஞ்சு சதம் வாங்கிறேலை . ஆனால் மாற்றருகள் முடிஞ்சால் பிறகு சுறுக்கரை ஏன் நாயே எண்டும் எட்டியும் பாக்கிறேலை. பேந்து ஏதாவது சிமோல் மாற்ரறுக்கு இருந்தாபோலை போன் அடிப்பினம். சுறுக்கற்ரை சீவியத்திலை இவங்கள் தரவளிக்கு உதவி செய்யப்போய் உபத்திரையம் தான் கண்டது மிச்சம் . பெடியள்ஸ் உங்களுக்கும் இப்பிடி ஏதாவது நடந்து இருந்தால் எழுதுங்கோ கேப்பம் .

*******************************************
வணக்கம் மனமதக் குஞ்சனுகள்,

லவுசிலை பிறேக் எண்டால் நீங்கள் எல்லாம் பெட்டையளுக்கு அசிட் அடிக்கிறதுக்கு ராமாயணம் தான் காரணமாம். இதை சும்மா விடப்படாது பெடியள்ஸ் குலத்துக்கே ஒரு பெரிய இன்சல்ட். கமான் போய்ஸ் ஸ்ரார்ட் ம்யூசிக் ..............

**************************

ஹாய் கலாச்சார காவலர்ஸ் அண்ட் பூசாரியள் ,

லாச்சப்பலிலை பிள்ளையார் ஹப்பியாய் தேரிலை வரேக்கை நடந்த கூத்துகளை விடியோவிலை பாத்தன். நல்லாய் தான் யூத்ஸ் எல்லாம் தங்கடை வெள்ளை குப்பின் ( கேர்ள் பிரெண்ட் ) மாரோடை குத்து டான்ஸ் எல்லாம் போட்டு, அவளவையை தூக்கி எல்லாம் டான்ஸ் ஆடினாங்கள். சிவசத்தியமாய் சுறுக்கன் புல்லரிச்சு போனான் கண்டியளோ. இதிலை என்ன பிரச்சனை என்னவெண்டால் , இந்த கோஸ்ரியள் தான் அங்கை யாழ்ப்பாணத்திலை பெடி பெட்டையள் பழுதாய் போச்சுதுகள். யாழ்ப்பாணம் கெட்டு போச்சுது. எங்கடை மானம் மரியாதை எல்லாம் கப்பல் ஏத்துகினம். யாழ்ப்பாணம் முந்தினமாதிரி இல்லை. இயக்கம் இருக்கேக்கை என்ன மாதிரி இருந்திது எண்டு சன்னதம் ஆடுறவையும் இவையள் தான். தாங்கள் எல்லாம் அந்த மாதிரி இருந்து கொண்டு அங்கை இருக்கிற சனத்துக்கு வகுப்பு எடுப்பினம் பாருங்கோ........... சொல்லி வேலை இல்லை .

***********************************

செய்தி : எனது பயணம் மெதுவானது: ஜனாதிபதி.

சுறுக்கரின் பார்வை :

தம்பி மோனை நீங்கள் இருக்கப்போறது கொஞ்ச வரியம் தான் இதுக்குள்ளை மெல்லமாய் போகப்போறன் எண்டு சொன்னால் ஆர் விட்டாலும் சனம் உங்களை விட்டுவைக்குமோ எனக்கெண்டால் பொல்லை குடுத்து அடிவாங்கிறியள் .


***************************************

வணக்கம் போய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் ,

சந்தானம் மெத்தின புலம் பெயர் டமில்ஸ் எல்லாம் நல்லூரிலை ஒண்டாய் நிக்கிறதாய் கேள்வி.. கந்தனும் ஹப்பியாய் தேரிலை வந்ததாய் கூட்டாளி சொன்னாங்கள். .கந்தன் ஒரு கொஞ்ச நேரம் தேரிலை வாறதுக்கு மில்லியன் கணக்கிலை செலவு எண்டு ஒரு புள்ளி விபரம் சொல்லுது. . எங்கடை டமில்சை எப்பிடி உழுது தள்ளி, பரம்பரையை வேரோடை புடுங்கினாலும் சுறணை கெட்ட சனங்கள் கண்டியளோ .ஒவ்வருத்தரும் தங்கடை விலாசம் காட்டுறதிலை அப்பிடி ஒரு குசிஎண்டால் குசி . . கொஞ்சப்பேர் புறுபுறுக்கிறது எனக்கு கேக்குது .சுறுக்கன் வெறிவளத்திலை வாய்க்குள்ளை சனியனை வைக்கிறான் எண்டு. உதுக்கெல்லாம் நசியிறவன் இல்லை சுறுக்கன். தேர் ஓடத்தான் வேணும் இல்லை எண்டு சொல்லேலை .அனால் சந்தனம் மெத்தின விளையாட்டுகள் காட்டப்படாது கண்டியளோ .

என்ரை பாட்டன் முப்பாட்டன் எல்லாம் தேர் ஓடினவங்கள் தான். கட்டுத்தேரிலை சாமி ஊர்வலமாய் வந்திது .இப்பவும் தமிழ்நாட்டிலை பெரிய கோயிலுகளிலை கட்டுதேரிலை தான் சாமி வாறது .உப்பிடித்தான் ஒருக்கால் சுறுக்கன் சுசீந்திரம் தாயுமானவர் கோயிலுக்கு போனான் . அங்கயும் கட்டுத்தேர்தான் நிக்குது. எவ்வளவு இடம் மிச்சம். இந்த ஜப்னீஸ் க்குத்தான் உந்த செடில் குணங்கள். ஒருக்காலும் முருகன் தனக்கு 3 பனை உயரத்திலை தேரும் முட்டியும் தா எண்டு கேக்கேயில. ஒருபக்கத்தாலை சண்டையிலை சொந்தம் பந்தத்தை எல்லாம் குடுத்துப்போட்டு அடுத்த நேர சாப்பாட்டுக்கும் தொழிலுக்கும் வழி இல்லாமல் இதே தமிழ் சனம் றோட்டு றோட்டாய் அலையுதுகள். இங்காலை பக்கம், சந்தானம் மிஞ்சி டிக்கியிலை தடவுறாங்கள். இந்த காசுகள் எவ்வளவு சனத்தின்ரை பசி ஆத்தி இருக்கும்? இந்த டமில்ஸ் எப்ப திருந்த போகினம்? இதுகளை பாக்க சுறுக்கனுக்கு பிறசர் தான் ஏறுது. நீங்கள் என்னதான் சுறுக்கரை பேசினாலும் சுறுக்கர் சொன்னது மனிசனாய் பிறந்தவனுக்கு ஏறும் கண்டியளோ.

***************************************

ஹாய் போய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் ,

வந்த விசயத்தை சுருக்கெண்டு குத்துற மாதிரி சுறுக்காய் சொல்லுறன் . காத்தாலை பேஸ் புக்கை திறந்தன். சுறுக்கருக்கு அண்டம் கிண்டம் எல்லாம் பத்திப்போட்டுது கண்டியளோ . இப்ப இருக்கிற பேமசாய் எழுதுறவையோடை தனகிறது இல்லாட்டில் அவையை பத்தி புசத்தாமல் பெடி பெட்டையளுக்கு இருக்கேலாமல் கிடக்கு .அதாலை தங்களுக்கு ஒரு கெத்து எண்டு நினைக்கினம் போலை கிடக்கு .உதை பாக்க சுறுக்கருக்கு பழைய கதை ஒண்டுதான் மண்டையுக்கை அடிக்குது .

கிட்ட முட்ட ஒரு அறுவது வாரியத்துக்கு முன்னாலை பெரிய கியாதியாய் இருந்த ஜீ ஜீ பொன்னம்பலத்தார் லெச்சன் கேட்டார். அப்ப ரெண்டு மூண்டு சேங்குகள் அவருக்கு லெச்சனிலை எதிராய் நிண்டீச்சினம் . சுறுக்கருக்கும் வாய் சும்மா கிடவாது கண்டியளோ . அவையை பாத்து கேட்டன் " ஏன்ராப்பா பொன்னம்பலத்தாரோடை முண்டிறியள் ? உங்களுக்கென்ன கழண்டு கிழண்டு போச்சுதோ ?"எண்டன். அதுக்கு அந்த சேங்குகள் சொல்லிச்சினம், " எங்களுக்கும் தெரியும் சுறுக்கர். ஆனால் பாருங்கோ பொன்னம்மபலத்தரோடை நிண்டு தோத்தால் அது ஒரு கெத்து கண்டியளோ .உதுகள் உங்களுக்கு விளங்காது ." எண்டாங்கள். நான் ஏங்கி விறைச்சு போனன் .

*************************************

Thursday, September 3, 2015

சுருக்கு சுறுக்கரின் தவறணை புசத்தல்கள் பாகம் 10 ( சுறுக்கரும் சம்பந்தனும் )

சுறுக்கரும் சம்பந்தனும் 


காட்சி :

விடியக்காலமை குளிச்சு முழுகி நெத்தியிலை பெரிய சைசிலை திருநூறும் பூசி வீட்டு முன்விறாந்தையிலை இருந்த ஈசி செயரிலை ரெண்டு காலையும் கிழிச்சு போட்டுக்கொண்டு ஐமிச்சம் ஐயம்பிள்ளை உதயன் பேப்பர் பாத்துக் கொண்டு இருக்கிறார் .பனைக்கருக்காலை செய்த படலை திறந்து கேட்டது ஐயம்பிள்ளை அரைக்கண்ணாலை படலையை பாக்கிறார் சுறுக்கர் லைட்டான தள்ளாட்டத்தோடை என்றியாகிறார் . இனி .....

சுறுக்கர் : 

மச்சான் ஐமிச்சம் என்னடாப்பா.......... எல்லா மாடும் ஒடீச்சுதெண்டு பாத்தால் சுப்பற்றை கொல்லைக்குள்ளை நிண்ட பேத்தை மாடும் ஒடீச்சுதாம் எண்ட கணக்காய் பேப்பர் படிச்சு கொண்டிருக்கிறாய் .

ஐயம்பிள்ளை : 

உங்களுக்கு என்னோடை தனகாட்டில் பத்தியப்படாதே சுறுக்கர் .

சுறுக்கர் :

சரி....... சரி ......... உன்னோடைதானே தனகலாம் எல்லாரோடையும் செய்யேலுமே . என்ன பேப்பரிலை அவதியாய் படிக்கிறாய் ?

ஐயம்பிள்ளை : 

உங்களுக்கு விசயம் தெரியாதே? சம்பந்தர் எல்லோ எதிர்கட்சி தலைவராய் போட்டார் . உங்களுக்கு ஏதாவது எத்துப்படுதே ?

சுறுககர் : 

எனக்கு எத்துப்படுகிறது இருக்கட்டும் உனக்கு என்ன விளங்கினது அதை சொல்லு ?

ஐயம்பிள்ளை : 

என்ன அண்ணை விளையாடுறியள்? நான் ஐமிச்சத்துக்கெண்டே பிறந்தனான். எனக்கு உதெல்லாம் விளங்காது. நான் சும்மா பொழுதுபோக எழுத்து கூட்டி படிச்சு கொண்டிருக்கிறன். 

சுறுக்கர் : 

சரி அடம் பிடிக்கிறாய். எனக்கு உன்னாலைதான் இண்டைக்கு சனியோ தெரியாது. காலமை தவறணையிலை உதைப்பத்தி புசத்தினவங்கள்தான். உதைப்பத்தி எடுத்து விடு மச்சான் எண்டு கூட்டாளியளும் கேட்டவங்கள் தான். 

இப்ப............... 77 க்கு பிறகு ஒரு தமிழ் ஆள் எதிர்கட்சி தலைவராய் வந்திருக்கிறார் எண்டால் இலங்கையின்ரை பரிசுகேட்டை பாரன் . முதலாவது ஆள் அமுதர். அதுக்கு பிறகு சம்பந்தர். இதுக்கு கிட்டமுட்ட 38 வரியம் செண்டிருக்கு .அமுதர் அவற்றை பெஞ்சாதி சனத்துக்கு முன்னாலை தங்கடை நெத்தியிலை ரத்தப் பொட்டு வைச்சு பெடியளை ஜூவால் ஏத்தி நோகாமல் நொங்கு எடுத்தீச்சினம். இப்ப சம்பந்தர் வந்திருக்கிறார். அவற்றை அசுமாத்தத்தை பாத்தால் பழையபடிக்கு கோட்டு சூட்டு போட்ட ஜென்டில்மன் அரசியல் தான் செய்யப்போறார் போலை கிடக்கு. தன்ரை கூட்டிலை இருந்த இயக்கத்திலை இருந்து வந்து சவுண்ட் விட்ட பார்ட்டியள் எல்லாரையும் காய் வெட்டி போட்டார். மிச்சம் இருக்கிறது நம்ம சித்தார்த்தன் தான். ஆனால் ஒண்டு மச்சான்............ தமிழன்ரை பிரச்சனை முதல் அகண்ட தேசமாய் இருந்து, பேந்து வடக்கு வேறை கிழக்கு வேறையா போய் , பேந்து மாகாண சபையாய் போய் , இடையிலை ஒரு நாடு  ரெண்டு தேசம் எண்டு வந்து ,  இப்ப பார்லிமன்றிலை எதிர்கட்சி தலைவராய் கட்டெறும்பாய் போய் நிக்குது.

இருந்து பார் இன்னம் கொஞ்ச காலத்திலை "யாப்ப கடுவா" இல்லையெண்டால் "யாப்பா பட்டுணா" எண்டு பேர் மாத்துவாங்கள். பேந்தென்ன அகண்ட தமிழீழம் "யாப்ப பட்டுணா" வாய் போடும். கேட்டால் சமஸ்ட்டி எண்டுவாங்கள் எங்கடை ஜென்டிமன் பொலிற்றிசியன்ஸ். சரி மச்சான் ஐயம்பிள்ளை நான் வரப்போறன். 

சுருக்கு சுறுக்கர் 

Wednesday, September 2, 2015

சுவைத்(தேன்) பாகம் 06

01 நேற்றைய மாலையும் இன்றைய காலையும்நேற்று மாலை
நாங்கள் இங்கிருந்தோம்.

சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில்
வாகன நெரிசலில்
சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம்.

பூபால சிங்கம் புத்தகநிலைய
முன்றலில் நின்றோம்.
பத்தி¡ரிகைகளைப் புரட்டிப் பார்த்தோம்.

பஸ்நிலையத்தில் மக்கள் நெரிசலைப்
பார்த்தவா றிருந்தோம்.
பலவித முகங்கள்
பலவித நிறங்கள்
வந்தும் சென்றும்
ஏறியும் இறங்கியும்
அகல்வதைக் கண்டோம்.

சந்தைவரையும் நடந்து சென்றோம்.
திருவள்ளுவர் சிலையைக் கடந்து
தபாற்கந்தோர்ச் சந்தியில் ஏறி
பண்ணை வெளியில் காற்று வாங்கினோம்.
'றீகலின்' அருகே
பெட்டிக் கடையில்
தேனீர் அருந்தி - சிகரட் புகைத்தோம்.

ஐ¡க் லண்டனின்
'வனத்தின் அழைப்பு'
திரைப்படம் பார்த்தோம்.

தலைமுடி கலைந்து பறக்கும் காற்றில்
சைக்கிளில் ஏறி
வீடு திரும்பினோம்.

இன்று காலை
இப்படி விடிந்தது.
நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்
காக்கி உடையில் துவக்குகள் தி¡ரிந்தன.
குண்டுகள் பொழிந்தன.
உடலைத் துளைத்து
உயிரைக் குடித்தன.

பஸ்நிலையம் மரணித் திருந்தது.
மனித வாடையை நகரம் இழந்தது.
கடைகள் எரிந்து புகைந்து கிடந்தன.
குண்டு விழுந்த கட்டடம் போல 
பழைய சந்தை இடிந்து கிடந்தது
வீதிகள் தோறும்
டயர்கள் எரிந்து கா¢ந்து கிடந்தன.

இவ்வாறாக
இன்றைய வாழ்வை
நாங்கள் இழந்தோம்.
இன்றை மாலையை
நாங்கள் இழந்தோம்.

(1977 / அலை-10) 

நன்றி : எம்.ஏ.நுஃமான்

***************************************

02 இன்று இல்லெங்கிலும் நாளை


எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக,
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்து  போகட்டும்.

தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்.
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.

(1984 / அலை-24)

நன்றி : சண்முகம் சிவலிங்கம்

***************************************************

03 அவர்களுடைய இரவு


நிழலே இன்றி 
வெயில் தகிக்க
நீளும் பகல் பொழுதில்
தனியாக ஒரு காகம் 
இரங்கி அழும்.

வேலி முருங்கையும்
மெளனமாய் இலையுதிர்க்கும்
அரவமொடுங்கிய 
நள்ளிரவுகள்.
ஆள்காட்டி மட்டும்
ஒற்றையாய்க் கூச்சலிடும்
சேலைக் கொடியில்
அவனது வேட்டி ஆடும்... 
நெஞ்சில் திகில் உறையும்
விழித்தபடி தனித்திருத்தலில்
மனம் வெந்து தவிக்கும். 

அன்றைய முன்னிரவில் 
நெஞ்சில் ஆழப் பதிந்தவை
மீண்டும் கருக் கொள்ளும்;
அச்சம் சுண்டியிழுக்கும். 
அந்த இரவில் 
இருள் வெளியே 
உறைந்து கிடந்தது 
ஐந்து ஜீப்புகள் 
ஒன்றாய்ப் புழுதி கிளப்பின
சோளகம் விசிறி அடித்தது 
என் ஆழ்மனதில்
அச்சம் திரளாய் 
எழுந்து புரள
அவனை இழுத்துச் சென்றனர்.

பல்லிகள் மட்டும்
என்னவோ சொல்லின
கூரைத்தகரமும் அஞ்சி, அஞ்சி
மெதுவாய்ச் சடசடத்தது.
காலைச் சுற்றிய குழந்தை
வீ¡ரிட்டழுதது.
விடுப்புப் பார்க்க 
அயலவர் கூடினர்.

நீட்டிய துவக்குகள்
முதுகில் உறுத்த அவன் 
நடந்தான் அவர்களுடன்
அந்த இரவில்
ஐம்பது துவக்குகள்
ஏந்திய கரங்கள்
என்னுள் பதித்த சுவடுகள்
மிகவும் கனத்தவை.

அந்த இரவு
அவர்களுடையது.

(1982 / புதுசு-6) 

நன்றி : ஊர்வசி 

**************************

04 சொல்லாமற் போகும் புதல்வர்கள்


மார்கழி மாதத்தின் முன் இரவில் ஓர்நாள் -
அவன்
நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
வழமையாக கோயில் மணி ஒன்பதடிக்க
வாசலில் அவன் வருவது தெரியும்.
எழுந்து சென்று
கதவைத் திறந்து
அவனை அழைத்து
உணவு போடவும் அப்போதும்
அவன் மெளனம்தான்.
எப்பொழுதும் அவன் அப்படித்தான்
சாப்பிடும்போது எதுவும் பேசான்.
என்மகன் -
நள்ளிரவாகியும் வரவேயில்லை
எங்கே போனான்?

அன்று
தங்கை அயர்ந்து தூங்கியிருந்தாள்
நானும் அவனைத் தேடி இருந்தேன்
அதன் பின் வரவேயில்லை. 
நீ எங்கு போனாய் என்பதை அறியேன்.

ஆனால், இன்று
அறிந்தேன் வேறொரு கதை
உனது நண்பன் சொன்னான்
மீசை அரும்பும் இந்த வயதில்
நாட்டுப்பற்று வந்ததா உனக்கு!
அப்படியானால் 
கடமைகள் இருக்கும்
வீரனாய் இருந்து வீடு திரும்பு.

(1984 / புதுசு-9) 

நன்றி : ஒளவை

********************************************

05 மரணம்


எங்கே இருக்கின்றாய்?
எம் உண்மைத் தோழ!

முகம் தெரியாத கரிய இருளில்
திசை தெரியாத சம வெளிகளில்
உன் முகத்தை எங்கே என்று
கால்களை இழந்த நாம் தேடுவது?

நசுக்கப்பட்டவைதான் எம் குரல்கள்
பால்நிலவு தெறிக்க
குமுறி எழுந்துவரும் கடல் அலையாய்
சடசடத்து இலை உதிர்க்கும்
பசுமரங்களை அதிரவைத்து
அசைந்து செல்லும் காற்றாய்
எங்கள் குரல்வளைகள் அறுக்கப்படும்வரை
உண்மைக்காக
குரல் கொடுப்போம்!

தோழ!
மரணத்தின் நாட்களை 
நாங்கள் எண்ணுகிறோம்
இப்போதெல்லாம்
உணர்கிறோம்
மரணம் -
கடினமானதல்ல.

மரணத்தைக் கண்டு
நாம் அஞ்சவில்லை
ஒரு அனாதைப் பிணமாய்
ஒரு அடிமையாய்
புதிய எஜமானர்களுக்காக
தெருக்களில் மரணிப்பதை
நாம் வெறுக்கிறோம்!

மகிழ்ச்சிக்காய்ப் போராடி
மக்களுக்காக மரணிப்பதற்கு
நாம் அஞ்சவில்லை.

தோழ!
நம்பிக்கையோடு 
நாங்கள் இருக்கிறோம்.
துளிர் விட்டு வளரும்
பூச்செடியில் புதிதாய் அரும்பும்
பூக்களுக்காக.

சிறகு முளைத்த இளம் பறவைகள்
சிறகடித்துப் பறக்கும்
ஒலிகளுக்காக.

எங்களை நெருங்கி வருகின்ற
மரணத்துக்காக
நம்பிக்கையோடு
நாங்கள் காத்திருக்கிறோம்!

(1985)

நன்றி : செழியன்