Skip to main content

அரசியலும் எழுத்தும்
எழுத்தை அரசியலினூடாக அணுகுவது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகின்றமை அருவருப்பை தருகின்றது .அத்துடன் நில்லாது எழுதுபவரின் மேலேயே இலவச பட்டங்களும் தங்கள் தங்கள் கற்பனைகளுக்கு ஏற்றால் போல் போடப்படுவது கண்டனத்துக்குரியது .எனக்கு எழுத்து வசப்பபட்டது பாரபட்சமில்லாத வாசிப்பினாலேயே ஒழிய தெரிந்தெடுத்த எழுத்தாளர்களால் இல்லை .ஈழத்து இலக்கியப் பரப்பில் உள்ள சமகால எழுத்துக்களில் அரசியல் வெடில்கள் இல்லாத புனைவுகளே இல்லை. அதற்காக, "எழுதியவர் இன்ன தளத்தில் இருப்பதால் நான் அவருடைய எழுத்தை படிப்பதில்லை" என்ற பொது வெளி வாதம் சிறுபிள்ளைத்தனமானது .கண்டனத்துக்குரியது சாத்திரியின் ஆயுத எழுத்தும் சரி, குணாகவியழகனின் விடமேறிய கனவும் சரி, அவரின் அப்பால் நிலமும் சரி ,சயந்தனின் ஆதிரையும் சரி, ஆறாவடுவும் சரி ,ஷோபாசக்தியின் பெட்டியும் சரி பல இன்னோரன்ன ஷோபாசக்தியின் கதைகளும் சரி, அரசியலை கேள்விக்குட்படுத்துகின்றன. எல்லோரது படைப்புகளையும் நான் வாசிக்கின்றேன். .தற்பொழுது ஆதிரை வாசிப்பில் உள்ளது. அதற்காக நான் சயந்தனை, "நீ இன்ன இடத்தில் இருந்து எழுதுகின்றாய். உனது படைப்பை வாசிக்க மாட்டேன்" என்று சொல்ல முடியுமா ? சாத்திரியோ ,சயந்தனோ, குணா கவியழகனோ, ஷோபா சக்தியோ வேறானவர்கள். தனிப்பட்ட குணாம்சம் உள்ளவர்கள். அவர்களது படைப்புகள்தான் பேசப்பட வேண்டுமே ஒழிய அவர்கள் இல்லை.

நான் அண்மையில் புலோலியூரானை முகடு சஞ்சிகைக்காக நேர்காணல் செய்திருந்தேன். அந்த நேர்காணல் அரசியல் வெடிலை அள்ளி வீசியது. அதில் புலோலியூரான் தனது நிலைப்பாட்டை சொல்லி இருக்கின்றார். இது தேசிய கோப்பிசங்கள் ,சிலாகையள், தீராந்தியள், ஆணியள் போன்றோருக்கு இடியாக போய் விட்டது. உடனே சிவா ஏரம்பு என்ற தேசியம் என்னை ஈ பி டீ பி என்று சேறடிக்கின்றது.

ஒரு படைப்பை வாசிக்கின்ற வாசகன் அதில் முரண்கள் இருந்தால், அந்த படைப்புக்கு வாசகனானவன் பொது வெளியில் விமர்சனம் அல்லது எதிர்வினை வைக்க வேண்டும். அதுவே இலக்கிய மரபு. அதை விடுத்து எழுதியவரின் மீது வசைபாடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.இதனாலேயே நான் யாழ் இணையத்தை விட்டு விலக வேண்டி வந்தது . சிவா ஏரம்புவுக்கு கவிஞர் கருணாகரன் சொல்லியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன் "பொதுவெளி என்பது துடக்குப் பார்க்கும் இடமல்ல ". உங்களுக்கு நேர்காணலில் முரண்கள் இருக்கா ? நேரிடையாக முகடு சஞ்சிகைக்கு உங்கள் எதிர்வினையை வையுங்கள். அவர்கள் பிரசுரம் செய்வார்கள். அதுவே எழுத்து அறமாகும் . அதை விடுத்து எனது நதிமூலம் ஆராய வேண்டாம்.நன்றி வணக்கம்.

2 comments

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்

00000000000000000000000உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக்கான அடையாளத்…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா தாயகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…