Skip to main content

Posts

Showing posts from June, 2016

சுந்தரி - சிறுகதை -கோமகன்.

வேம்படியில் வாழ்ந்த வந்த தங்க வேலாயுதத்தாருக்கும் தெய்வானைபிள்ளைக்கும் மூத்த மகளாக பிறந்த கனக சுந்தரிக்கு நண்டும் சிண்டுமாக நான்கு தம்பிகளும் மூன்று சகோதரிகளும் இருந்தார்கள். தங்க வேலாயுதம் ஆசிரியர் தொழிலுடன் பதினைந்து பட்டி தோட்டமும் செய்துவந்ததால் அந்தப் பெரிய குடும்பம் ஓரளவு வசதியாக இருந்து வந்தாலும் ,யுத்தத்தின் கோரப்பிடியினுள் சிக்கிய அந்தக் குடும்பம் படிப்படியாக அதன் வளங்களை இழக்கத் தொடங்கியது. தங்க வேலாயுதத்துக்கு  பிள்ளைகளின் எதிர்காலம் அவரை பயமுறுத்தியது. கனக சுந்தரி வேறு கலியாண வயதை எட்டி விட்டாள் .கனக சுந்தரியின் பலகலைக்கழகப் பட்டப் படிப்பும் முடிந்து விட்டிருந்தது .கடவுள் அவளது அழகில் எதுவித வஞ்சகமும் செய்வில்லை. கனக சுந்தரியின் அழகில் மயங்காத பெடியளே வேம்படியில் இல்லை. .ஆனாலும் கனகசுந்தரிக்கு பேசிவந்த கலியாணங்கள் எல்லாம் அவளது செவ்வாய் குற்றத்தினால் தட்டுப்பட்டுக் கொண்டே வந்தன . இது தெய்வானைப்பிள்ளைக்கு மனதளவில் பெரிய தாக்கமாக இருந்தது. இதன் தொடராக தெய்வானைபிள்ளை பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டாள். பாரிசவாதத்தல் பாதிக்கப்பட்ட தெய்வானைக்கு பிறகு  கனகசுந்தரியிடமே குடும்ப பொறுப…