Skip to main content

Posts

Showing posts from October, 2016

குதிரை இல்லாத ராஜகுமாரன் -ஒரு நோக்கு -கோமகன்.

ஓர் சிறுகதைத்தொகுதியை வாசிக்கும் பொழுது அதன் ஊடாக வருகின்ற புரிதல்கள் /கிரகிப்புகள் வாசகனுக்கு வாசகன் வேறுபடும் அந்தவகையில் அண்மையில் கனடாவில் வதியும் ராஜாஜி ராஜகோபாலனின் "குதிரை இல்லாத ராஜகுமாரன் " சிறுகதைத்தொகுதி என்னுள் ஏற்படுத்திய அலைகளை பதியலாம் என எண்ணுகின்றேன்.ராஜகுமாரன் என்றாலே வெண்புரவி அல்லது கரும்புரவியில் ஓர் கம்ரபீமான தோற்றத்துடன் ராஜபாட்டையில் குளம்பொலியுடன் கடுகி விரைவார். அனால் இங்கு குதிரையே இல்லை.இந்த ராஜகுமாரன் எப்படி இருக்கப்போகின்றாரோ என்ற ஐயப்பாட்டுடன் சிறுகதைத்தொகுதியில் உலா வந்தேன்.இந்த சிறுகதைத்தொகுப்பில் மொத்தம் பதினைந்து சிறுகதைகள் பல்வகை ரசங்களுடன் வெளியாகி இருக்கின்றன.
நிகழ்காலத்தில் தொலைந்ததை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கும் நாங்கள் எமது வாழ்க்கையின் அனுபவங்களைச் தொலைக்கச்செய்கின்றோம் ஆனால் யாருமற்ற தனிமையில் இருக்கும் பொழுது அந்தத் தொலைந்த அனுபவக் குப்பைகளைக் கிளறிப் பார்த்தால், காலமாற்றங்களினால் தூக்கிப் போட்ட கனவுகளும், இழந்துவிட்ட உண்மையான நம்முடைய முகங்களும், இழந்துவிட்ட வாய்ப்புகளும், வலிகளும், வேதனைகளும், காதலும், தோல்வியும், சந்தோஷங்களும் இர…

"ஓர் கவிஞன் எதுவாக இருக்கின்றானோ அவ்வாறே அவனது கவிதைமொழியும் அமையும்"- நேர்காணல் -இளவாலை விஜேந்திரன்.

ஈழத்தின் வடபுலத்தின் இளவாலை மண்ணுக்குச் சொந்தக்காரரான இளவாலை விஜயேந்திரன் ஈழத்துக் கவிகளில் தனக்கென்று தனிமுத்திரையைப் பதித்தவர். எனது பதின்மவயது காலத்தில் இவரது கவிதைகள் ஈழத்தின் அனைத்து சஞ்சிகைகளிலும் இடம்பிடித்திருந்தன. இவரது கவிதைகள் போர்க் குணாம்சம் கொண்டவை. வாசகனின் நாடிநரம்புகளை முறுக்கேற்றும் வல்லமை கொண்டவை. உதாரணமாக,  தனது ” ஆண்ட பரம்பரைக்கு ” என்ற கவிதையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் …………..
எமதூரின் மன்னவரை எங்கேனும் கண்டீரோ? வான முகட்டில் வழி தெரியாச் சேனைப் புலத்தில் காடுகளில் ஊர்ப் புறத்துத் திண்ணைகளில் அவருலவும் அந்தப் புரங்களில். பாவம், ஊர் முழுக்கக் குலுங்கியதில் ஒப்பாரி வைத்தழுது பிறகும், வீசுகிற எலும்புக்காய் விழுந்தெழுந்து ஓடி அலுப்புற்றும் சாகாமல் உயிர் வாழ்ந்தார். கோடிப் புறமிருக்கும் குதிரை லாயங்களில் இரவுகளில் வந்து தங்குவாரோ? பிடியும், சேணம் இட்டுவையும். தொலைநீளக் கடற்பரப்பில் நீந்தித் தொலைத்தாரோ? மறுகரையில், இன்னும் ஒருதடவை அழுது தொலைத்தாரோ?
பொழுதின் இருட்டோடு இராவணனின் புஷ்பகத்தில் போய்ச் சேர்ந்து விட்டாரோ? சிம்மாசனம் அமர்ந்த மாபெரிய மன்னவனின் படையெடுப்பை விழிபதிக்க நாதியற்றுப் போனோரோ? பா…