Skip to main content

குரலற்றவரின் குரல் ஒரு பார்வை - தனிமரம் நேசன்.


புலம்பெயர் ஈழத்து இலக்கியத்துக்கு பாரிஸ் அதிகபங்களிப்பை வழங்கியிருக்கின்றது! தொடர்ந்தும்வழங்கிவருவது பாராட்டுக்குரிய ஒரு விடயம். அந்த வகையில் இவ்வாரம் பாரிசில் இன்னொரு இலக்கியமலரினை கைகளில் பெறும் வாய்ப்பு கிடைத்ததுமகிழ்ச்சி எனலாம்.


நேர்காணல்கள் இன்று ஊடகங்கள் எங்கும் இடம்பெறுகின்ற ஒரு விடயமாகிவிட்டது .என்றாலும்இலக்கிய ஆளுமைகளுடன் நேர்காணல் செய்யும்போது பல சொல்லப்படாத மூன்றாவது கோணத்தில்இருந்து சமூகத்திக்கு கருத்தாளம் மிக்க செய்திகள்வந்தடைகிறது.


பாரிசில் வாழும் கோமகன் என்றுஇலக்கியவட்டத்தில் அறியப்படும் மூத்த படைப்பாளிதியாகராஜா ராஜ ராஜன் அவர்கள் பல்வேறுசஞ்சிகைகளுக்காக தான் நேர்கொண்டஈழத்துப்படைப்பாளிகள் /புலம்பெயர்படைப்பாளிகள் என 14 பேரிடம் தொடர்பைஏற்படுத்தி அவர்களிடம் பெற்ற பதில்களைதொகுத்து அச்சில் கொண்டுவந்து இருக்கின்றார்குரலற்றவன் குரலாக!

இந்த நூல் இப்போது தாயகத்தில் பல இடங்களில்வெளியீட்டு விழாவைக்கண்டு கொண்டேவருக்கின்றது சிறப்பாக .

இனி வரும் நாட்களில் பாரிசிலும் வெளியீட்டுவிழாநிகழும் என்ற நம்பிக்கையோடு! தனிமரமும் காத்துஇருக்கின்றேன் நேரம் ,காலம் கூடிவந்தால்வாசகனாக கலந்துகொள்வதுக்கு.

கோமகன். அவர்கள் வலைப்பதிவும் எழுதும் ஒருவர்-http://koomagan.blogspot.fr/

முன்னர் கோமகன் சிறுகதைகள் தொகுப்பைவெளியீடு செய்து இருந்தவர் அதன் தொடர்ஆர்வத்தில் தான் இந்த இரண்டாவது நூல் கைகளில்புரள்கின்றது.
ஈழத்து இலக்கியத்தின் தாக்கம் அல்லது அதன்ஆராட்சித்தேடல் என்பது ஒரு வரையறைக்குள்அடக்கமுடியாத ஒருவிடயம் எனலாம்.

மூத்தபடைப்படைப்பாளிகளுடன், இளையபடைப்பாளிகளையும் இணைக்கும் ஒரு தராசுபோலகோமகனின் நேர்காணல் நூலினைப்பார்க்கின்றேன்.

நூலில் தாயக விடுதலைக்கு உயிர்கொடுத்தமாவீர்கள் முதல் சாதாரண அப்பாவி மக்களுக்கும்சமர்ப்பணம் செய்து தன் நேர்காணலுக்கு வாசல்திறக்கும் ஆசிரியர்.

முதலில் கேள்விகளை இன்றைய ஈழத்து இளையபடைப்பாளி யோ. கர்ணன் அவர்களுடனானஇலக்கிய ,சமூக ,கலாச்சார ,போரியல் முடிவு,போரியல் இலக்கியம் அதன் மெளனம் அதன்குறுக்குவெட்டுக்கள் அதன் பின் இன்றைய தேக்கஅரசியல் ,பின் நவீனத்துவம் அடிப்படைமக்களின்வாழ்வாதார நிலை ,அரசியல் தீர்வுத்திட்டம்,இலங்கை ஆட்சியார்களின் நாடகம், புலம்பெயர்நிதிப்பாச்சல், முகநூல் , குறுபடம் பற்றிய பார்வைஎன்பன பற்றியும் கேள்விகள் என்னிடம் பதில்கள்உங்களிடம் இருந்து வரட்டும் என்ற தோரணையில்மிகவும் அதிகமான நேர்காணலை காலத்தின்தேவையை உணர்ந்து கேட்டு இருக்கின்றார். யோ .கர்ணன் படைப்புக்கள் ஏதும் இதுவரைவாசிக்கதோன்றவில்லை இனி தேடி தனிமரம்வாசிக்கவேண்டும் ஐயா!

ஒவ்வொரு பதிலையும் வாசகர்கள் தேடி வாசிக்கவேண்டும் .அவர்களின் சுய பதில்கள் பற்றியபன்முகக்கேள்விகள் இன்னும் பல கேள்விகளைபுரட்டி புதிய மெருகூட்டலுக்கு இன்னும் இந்த நூலும்கைகொடுக்கும் ஒரு குறிப்பேடு இனி வரும்காலங்களில் நேர்காணல் செய்வோருக்கு. இந்நூல்ஒரு அச்சில் இருக்கும் ஆதார அட்டை போல ))). 11-26வரை!

அடுத்த பக்கம் -என் பார்வையில் (201-218)புலம்பெயர் தேசத்தில் வாழும் மூத்த படைப்பாளிஇளவாலை விஜயேந்திரன் அவர்களின்கவிதைத்துறை அனுபவம் ,அவர்காலத்தின் இலக்கியபோக்கும் ,அரசியல் புறச்சூழல் என்பவற்றின் இன்ஊடாக அக்கால வாழ்க்கை முறையும் அவர் போலபலர் புலம்பெயரக்காரணம் என்ன என்பன பதிவுசெய்யப்படுகின்றது.

அவரின் புதிய இலக்கிய வருகை பற்றி , தேக்கநிலை,சோம்பல் ,எல்லாம் இந்த நேரடி முகத்தேடலில்நிறைய காத்திரமான கருத்துக்கள் பகிரப்பட்டுஇருக்கின்றது .

இலக்கியத்தில் திறனாய்வு என்பது ஒரு குருடன்யாணை பார்த்த கதை போல எனலாம்.தடவிக்கொடுத்தல், தாக்குதல் ,ஆரத்தழுவுதல்,அறுத்து எறிந்து, அலட்சிப்படுத்தல் என்று ஈழத்துஇலக்கியத்தின் ஆளுமைகளின் முகத்திரைகள் பற்றிஇங்கே சொல்ல ஆயிரம் குற்றட்ச்சாட்டுக்கள்கொட்டிக்கொண்டே போகலாம் !


என்றாலும் இந்தப்பணியைச் செய்வதுக்கும் மொழிஆளுமை ,வித்துவப்படிப்பு என்பனவும் தேவைஎனலாம்.
அந்த வகையில் நேர்காணலுக்குபொருத்தமானவராக அ .ஜேசுராசு (49- 61) அவர்களின்ஆளுமை ,அவரிடம் நூலாசியர் கேட்கும் இன்றையஅரசியல், சமூக /கலாச்சார, இலக்கியபின்நவீனத்துவ போக்கு பற்றி பார்வைக்கு .அழகியல்பதில்கள் அதிகம் அலட்டாத ,சுருக்கமான பதில்கள்என்று நீண்டு செல்கின்றது .

முகநூல் முதல் வலைப்பதிவு , குறுந்திரைப்படம்பற்றிய பார்வைகள் எல்லாம் அலசப்படுகின்றது.சகோதரமொழி(சிங்கள) இலக்கிய வாசகர்கள்,அவர்களின் மனநிலைப்பாடுகள் இலக்கியப்பாலம் ,எல்லாம் கேள்விகள் கேட்டே ஒப்பாரி வைத்துஇருப்பது பற்றிய நூலாசியரின் கேள்வி பதில்!

வாசிப்பு அனுபவத்தை கிரகித்துக்கொண்டே அடுத்தயார் என்று தேடல் கொண்டால் அங்கே !

ஈழத்து இலக்கியத்தில் பிரபல்யம் லெ.முருகபூபதியின் (62- 91) அவுஸ்ரேலியாபுலம்பெயர் வாழ்வியல் , புலம்பெயர் இலக்கியம் ,இலக்கியம் தான் அடுத்த யதார்த்த இலக்கியம் என்றபோர் முரசு கொடிய அதன் எதிர்வினைகள் பெற்றஇலக்கிய கலகக்கார் , ஆளுமைமிக்க படைப்பாளி /ஈழத்து/புலம்பெயர் இலக்கிய பணியில் மூத்தபடைப்பாளியின் இன்னொரு முகம் இது என்று மூத்தவர் எஸ் . பொ முதல், கொழும்பு இலக்கியமுற்போக்கு, பின்போக்கு அணிகள் பற்றியும்.கூழ்முட்டை எறிந்த வரலாற்றுக்கதைகள் எல்லாம் இலக்கிய கலகங்கள் பற்றி எல்லாம் நீண்ட தேடல்கேள்விகள் ஆசிரியருகும் ,எஸ் .பொ அன்புடன்அழைக்கும் முருகுக்கும் இடையில் உள்ள இலக்கியஉள்குத்துக்கள் பவணி வருகின்றது.

அந்தக்கால இலக்கியம் கொஞ்சம் சுவாரசியம்மிக்கது காரணம் இந்த உரையால்களின் /கேள்விகளின் புறச்சூழல் பின்னனி இலங்கைகல்வியல்த்துறையிலும் உயர்தரத்தில் தமிழ்இலக்கியப்பாடத்தில் இருக்கின்றது எனலாம். கொஞ்சம் பள்ளிக்காலத்துக்கும் போய் வந்த சுவாரசியம் .சுருட்டு குடித்தால் இலக்கிய போதைஎப்படி இருக்கும் என்பதை என் பள்ளி தமிழ்ஆசானையும் சேர்த்தே நினைக்கின்றேன் (வடக்கு,கிழக்கு ராசி அப்படி)

மிகவும் நேர்த்தியான பல சொல்லப்படாத கொழும்பு/ வடமேல் மாகாண இலக்கியம் பற்றி அறிந்துகொள்ள முடிகின்றது . முருகுவின் நேர்காணல்ஆனால் அவரின் இன்னொரு மனநிலை பற்றியஆய்வு/தேடல் பற்றி சிந்தித்தவாறே!

இவை காலத்தின் தரவுகள் அடுத்த தலைமுறைக்குஎதைக்கொடுக்கப் போறோம் என்ற கேள்விக்குபுலோலியூரானின் கேள்வி பதில்கள்சிந்திக்கவைக்கின்றது. ஈழத்தின் மூத்தவர்களில்இடைநிலைப்படைப்பாளிகளில் ஒருவர் புலோலியூரான்(156-183) .அவரின்பன்முகத்திறமையும் ,அறியாத செய்திகளையும்,தொழில்நுட்ப விரிவுகளையும் ,அலசுகின்றார்.கோமகன் அவர்கள் . நூல் ஆசிரியரின் வாசிப்புபிரமிக்கவைக்கின்றது .

இன்றைய பெண்ணியம் பேசுவோரின் குரல்களாகஇன்றைய புலம்பெயர்வாழ்க்கை , காதல், திருமணம்,எழுத்துப்பணி, அரசியல் பணி, நவீன ஆய்வுமுறைகள், முகநூல் இலக்கியப்போக்கு , போரின் பின் தாயகமக்களின் தேடல் வாழ்வியல், பெண்களின் கலாச்சாரசீரழிவு நிலை என்ற ஊடக கோஷங்கள், நிதிமோசடிசெய்த புலம்பெயர் அமைப்புக்களின் தூரோகத்தன,ஈனச்செயல்கள் முதல் இன்றைய முன்னால்போராளிகளின் அச்ச வாழ்வு வரை ! என இப்படியாகவளரும் சமூக தளங்களில் பெண் நிலை ,என்னநிலையில் இருக்கின்றது என்ற நிவேதா உதயராஜன் உடனான நேர்காணல் அதிக விடயத்தைஅலசுகின்றது .241-265)

ஒரு வானொலியில் செய்தி வாசிக்கும் ஆர்வத்தில்அவர் பெற்ற நேரடி அனுபவம் எல்லாம் இன்னும்புலம்பெயர் ஊடகத்தில் நடக்கும் தில்லுமுல்லுக்களைவெளிப்படையாக அறிய முடிகின்றது.

மரபுக்கவிதை, பின் நவீனத்துவக்கவிதை ,ஈழத்துஇலக்கிய விருதுகள் ,இலங்கை சாஹித்தியஅக்கடமியின் தேர்வுகளில் எப்படி உன்னை நான்சொரிகின்றேன் ,என்னை நீ பாராட்டு என்றபிரதேசவாத நிலையை பகிரும் நேர்காணலாகசோலைக்கிளியுடன் (283-294)கேள்விப்பதில்கள்சோலைக்கிளிக்கு வரும் காதல் கடிதங்கள் என நகைச்சுவையுடன் சிந்திக்கவும் ,சீர்தூக்கியும்பார்க்கவேண்டிய கவிதை மேடையைப்பற்றியும்இலங்கை ,இஸ்லாமிய மக்களின்தமிழ்த்தொண்டுக்கள், கிழக்குமாகாணஇஸ்லாமியர்களின் அரசியல் நிலைப்பாடு ,
அவர்களிடத்தில் இருக்கும் சாதி நிலைப்பாடு முதல்இன்றைய நவீன வருகை முகநூலில் எழுதும்கவிதைகள் நிலை பற்றிய கேள்விக்களுக்குசோலைக்கிளியின் கருத்துரை என குரலற்றவன்குரல் வாசிப்பு தேடலுக்கு ஒரு முத்துக்குவியல்! 


இந்திய எலக்கிய கோமாதாக்களின் மூத்திரம்குடிக்க ஆசைப்படும் ஈழத்து சிஹாமனிகள் பற்றி தொடர்ந்து பேசலாம்)))


http://www.thanimaram.com/2017/06/1.html
Post a Comment

Popular posts from this blog

"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் - நேர்காணல்.

ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப்,  (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும்  ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய, வளைகுடா மற்றும் ஆபிரிக்க தேசங்களில் பொருளாதாரம், திட்டமிடல், நிதி ஆலோசகராக என்று பன்முகப்படுத்தப்பட்ட இளைய தலைமுறையை சேர்ந்த புலோலியூரானை வாசகர்களுக்காக பல கட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் மூலம் நான் கண்ட நேர்காணல் இது .............
கோமகன்














000000000000000000000000000000000000
உங்களை நான் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?
" மன்னிக்கவும், நீங்கள் யார் என சொல்லுங்கள்?"!! இலங்கையில் இருந்து ஜேர்மன் வரை நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்விகளில் ஒன்று இது. என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட எனக…

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

ஈழத்தின் வடபுலத்தில்  மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும்  புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால  அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு  அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப்  போராட்ட வரலாறில் முதன் முதலாகச்  சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட  இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில்  பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக  ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப்  போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் …

"கலை உண்மையைப் பேசவேண்டும் ; கலைஞனும் உண்மையின் பக்கத்திலேயே நிற்க வேண்டும்" - நேர்காணல் யேசுராசா.

அ.யேசுராசா  தாயகத்தின்  குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் என்று பன்முக ஆளுமை  படைப்பாளி . 1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ .யேசுராசா கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமையவேண்டுமென்பதிலும், கலை இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டதோர் இலக்கியவாதி . அத்துடன் நின்றுவிடாது யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிரச் செயற்பாட்டாளராக இருந்திருக்கின்றார் .
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்துள் வாழ்வோம், தேடலும் படைப்புலகமும் ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் . காலம் எழுதிய வரிகள் கவிதைத் தொகுதியின் தொகுப்பாளராகவும் . அலை சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் - நிர்வாக ஆசிரியராகவும் பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்த அ .ஜேசுராசா , இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு அவற்றின் ஆசிரிய…