Posts

Showing posts from 2013

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Image
வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே !

ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஒரு மரத்தின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த மரத்துக்கான தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . ஒருவர் ஒரு முறை மட்டுமே பெயர் தர முடியும் பெயரை அழித்து எழுத முடியாது . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட மரத்தின் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே சிக்கிய மரம் என் கையில் , சில்லெடுத்த பெயர்கள் உங்கள் கையில் ...........


0000000000000000000000000
01 செங்காந்தாள் அல்லது கார்திகைப்பூ - glory lily - Gloriosa superba.


செங்காந்தள் அல்லது காந்தள் ஐந்து அல்லது ஆறு சிற்றினங்களை கொண்டுள்ளது. இது கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்தது. ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வகையினைத் சேர்ந்ததாகும். இது வெப்ப மண்டல ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறத…

தமிழன் கண்ட சித்திரக்கவி பாகம் 02

Image
போன தொடரில் சித்திரக் கவியின் தோற்றத்தையும் அதன் பன்னிரெண்டு வகைகளையும் , அதில் நான்கு வகைகளை அதற்கான விதிமுறைகளையும் உதாரணங்களுடன் பார்த்தோம் . இந்தத் தொடரில் மிகுதி நான்கு வகைகளையும் பார்க்கலாம் .

05 நாக பந்தம்: 
இந்தக் கவிதை இரண்டு பாம்புகள் எப்படி மேல்நோக்கி பிணிப் பிணைந்து இருக்கின்றனவோ அப்படி அமைந்திருக்கும் இதன் விதிமுறையாக , இது வெண்பா யாப்பில் அமைக்கப் பெறவேண்டும்; அறம் உரைப்பதாக அமைய வேண்டும்; ஒரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும், மற்றொரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும் ஒன்றாக இருக்கும் அமைப்பில் பாடுவது இந்த நாக பந்தக் கவிதையாகும் .
ஆகவே நாகபந்தம் என்பது இரண்டு வெண்பாக்களின் இணைப்பால் அமைவது என்பது பெறத்தக்கது. (நாகம் = பாம்பு ; பந்தம் = கட்டுதல்) உதாரணமாக 
வெண்பா - 1
அருளின் றிருவுருவே அம்பலத்தா யும்பர் தெருளின் மருவாரு சிர்ச்சீரே - பொருவிலா வொன்றே யுமையா ளுடனே யுறுதிதரு குன்றே தெருள வருள். 
பாடலின் பொருள் : 
அருளின் திருவுருவாகவும், அம்பலத்தில் ஆடுபவராகவும், தேவரின் துயர் தீர்ப்பவராகவும், உமையாளுடன் இருப்பவராகவும், உறுதிதரும் குன்…

தமிழன் கண்ட சித்திரக்கவி

Image
தமிழர்களது அழிந்து கொண்டுவரும் கலைகளில் ஒன்றான சித்திரக் கவி பற்றி ஆராய்வது எங்கள் முன்னே உள்ள தேவையை உணர்த்தி நிற்கின்றது . இந்த சித்திரக் கவி எப்படிப்பட்டது என்று பார்பதற்கு முதல் , சித்திரக் கவி என்றால் என்ன என்பதும் அதன் ஆதிமூலத்தையும் நாம் பார்க்க வேண்டும் .

தமிழ் மொழியில் உள்ள ஐந்து வகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவற்றில் , அணி இலக்கணத்தை விளக்குமுகமாக எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம் ஆகும் . இந்தத் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் அண்ணளவாக பனிரண்டாம் நூற்றாண்டுகளாகும் ( (1133-1150) . இந்த தண்டியலங்காரம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டு ( பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் ) சொல்லணியியலில் சித்திரக் கவி பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன .

எங்களால் உருவாகப்பட்ட அனைத்துக் கலை வடிவங்களுமே இலக்கியத்தை மையபடுத்தியே சுற்றிச் செல்கின்றன . எப்படி என்றால் , ஒரு இலக்கியத்தைக் கேட்பதாலும், எழுதுவதாலும், பேசுவதாலும், உணருவதாலும், காட்சியாக வரைவதாலும், காட்சியாகக் காண்பதாலும் மனித மனத்தை மகிழ்ச்சி அடையச் செய்ய இயலும் ஒரு கவிதையை இசையோடு இனிமையாகப் பாடினால் அதைக்…

படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் - அறிவியல் - இறுதிப் பாகம்

Image
வணக்கம் கள உறவுகளே !!

படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் என்ற போட்டித் தொடரை இத்துடன் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . இத்தொடரில் ஆர்வமுடன் பங்கு பற்றி பரிசில்களை அள்ளிக் குவித்த அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது தலை சாய்கின்றது . பொதுவாகப் பாம்பு என்றாலே பயமும் அருவருப்பும் அடைகின்றோம் . அதனால் தானோ " பாம்பென்றால் படையும் நடுங்கும் " என்ற பழமொழியையும் " பாம்பின் காலைப் பாம்பு அறியும் " என்ற சொலவடையையும் எமது முன்னோர் விட்டுச் சென்றுள்ளனர் . தமிழர் வாழ்வில் நாக வழிபாடு அவர்கள் பாரம்பரியத்தில் ஊறிவிட்டதொன்று . இதற்கு ஈழத்திலே பரந்து விரிந்துள்ள நாகதம்பிரான் ஆலயங்கள் சாட்சியாக எம் முன்னே இருக்கின்றன . அத்துடன் ஈழத்திலே நாகர்கள் வாழ்ந்ததிற்கான பல வரலாற்று தடையங்கள் உள்ளன . நாகர்கள் பாம்பை தெய்வமாக வழிபட்டவர்கள் , இவாறான காரணங்களாலேயே இந்தத் தொடரை பொங்குதமிழ் பகுதியில் ஆரம்பித்தேன் . நேர காலங்கள் கூடிவரும் வேளையில் மீண்டும் ஒரு போட்டித் தொடரில் சந்திக்கும்வரை....................

கோமகன்0000000000000000000000000

25 கருப்பு மாம்பா - The black mamba - Dendroaspis …

படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் - அறிவியல் -பாகம் 02

Image
11 சங்கிலிப் பாம்பு  Rattlesnake - Crotalus Linnaeus.


படம் பதினொன்றுக்கான பதில் சங்கிலிப் பாம்பாகும் . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....iki/Rattlesnake
12 உருட்டு வீரியன் Bothrops alternatus.


இந்த பாம்பின் பெயர் உருட்டு வீரியன் ஆகும் . இது தென் அமெரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றது . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia.org/wiki/Urutu
13 அரத்தோல் பாம்பு - file snake - Acrochordidae. படம் பதின்மூன்றிற்கான சரியான பதில் அரத்தோல் பாம்பாகும் . இதை எமது நாட்டில் புடையன் பாம்பு என்றும் ( Little filesnake ) அழைப்பார்கள் அனால் புடையன் பாம்பு தோற்றத்தில் சிறிது வித்தியாசமானது . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் : http://en.wikipedia....i/Acrochordidae
14 மினுங்கல் பாம்பு -Sunbeam snake - Xenopeltidae. பதின்நான்காம் படத்தில் உள்ள பாம்பின் பெயர் மினுங்கல் பாம்பாகும் . இந்தப் பாம்புகளின் தோலானது வெளிச்சத்துக்கு வானவில்லைப் போல நிறங்கள் மாறும் இயல்பு உடையது . இந்த வகையான பாம்புகள் தென்னாசியாவிலேயே அதிகம் காணப் படுகின்றன . மேலதிக விபரங்கள…