சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 02 -அறிவியல்.21 களுவாய் அல்லது கச்சுளுவை மீன் - Whitefin Wolf Herring -Guitarfish.


இந்த மீனுக்கான தூயதமிழ் " களுவாய் மீன் " ஆகும். இதை " திமிறி அல்லது கச்சுளவை " என்றும் அழைப்பர். இந்த மீன் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

22 கருவௌவ்வால் மீன் அல்லது கருவாவல் மீன் -black pomfret.


இந்த மீனுக்கான தூய தமிழ் " கருவௌவ்வால் மீன் " ஆகும் . இந்த மீன் " கருவாவல் " என்றும் அழைக்கப்படுகின்றது .

23 கீச்சான் மீன்- Tigerfish -The goliath tigerfish. 


இந்த மீனுக்கான தூயதமிழ் " கீச்சான் மீன் " ஆகும் . இதை " கீளி மீன் " அல்லது " "மொண்டொழியன் மீன் " என்றும் அழைக்கின்றார்கள் . உண்மையில் இந்த மீன் எனக்குச் சில்லெடுத்ததாகவே போய்விட்டிருந்தது . மேலும் " கோலியாத் " எனபது தமிழ் பெயரா என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதே. இந்த மீனைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

24 குதிப்பு மீன் அல்லது சுதும்பு மீன் - False trevally. 


இந்த மீனுக்கான தூயதமிழ் " குதிப்பு மீன் " ஆகும் . இந்த மீன் தமிழகத்தின் வடக்குப்பக்கத்திலே " சுதும்பு மீன் " என்றே இனங்காணப்பட்டுள்ளது . இந்த மீன் பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

25 கும்புளா - blue runner. 


இந்தப் படத்தில் இருக்கும் மீனுக்கான சரியான தூயதமிழ் " கும்புளா மீன் " ஆகும் . இந்த மீனை " கும்புளா பாரை மீன் "என்றும் அழைப்பர் . சிலவேளைகளில் இது பாரை மீன் வகையைச் சேர்ந்ததால் வேறுபடுத்திக் காட்டுவதற்காக அப்படி அழைக்கின்றார்களோ எனக்குத் தெரியவில்லை . மீன் பிரியர்கள்தான் எனக்கு இதை தெளிவுபடுத்த வேண்டும் . கும்பிளா மீன் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

26 கொண்டை மீன் அல்லது காலா மீன் - Salmon Fish. 


இந்த மீனுக்குரிய தூயதமிழ் பெயர் " கொண்டை மீன் " ஆகும் இதை " காலா மீன் " என்றும் இதை அழைப்பார்கள் . இந்த மீன் அத்திலாந்திக் பசுபிக் சமுத்திரங்களில் துள்ளித் திரிந்து கரடிகளின் விருப்ப உணவாக இருப்பதால் என்னவோ உங்கள் வலைகளில் மாட்டவில்லை . இந்த மீனைப் பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .


27 குருவித்திருக்கை மீன் அல்லது வௌவால் திருக்கை மீன்-  spotted eagle ray. 


இந்த படத்துக்குரிய தூயதமிழ் பெயர் " குருவித் திருக்கை மீன் அல்லது வௌவால் திருக்கை மீனாகும் " . இந்த மீனைப் " புள்ளித் திருக்கை மீன் " என்றும் கூறுவார்கள் . இந்த மீனுக்கு உடலை விட வால் மிகவும் நீளமாக இருக்கும் . அந்தக்காலத்தைய ஊர் சண்டியர்கள் " திருக்கைவார் "கொண்டு ஆட்களைத் தாக்குவதாகக் கேள்விப் பட்டிருக்கின்றேன். இந்த மீன்பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்புகளில் செல்லுங்கள்:28 கொய் மீன் அல்லது நுணலை மீன் - gizzard shad. 


இந்தப் படத்திற்கான தூயதமிழ் " நுணலை மீன் " ஆகும் . இதைக் " கொய் மீன் " என்றும் அழைப்பர். இந்த மீன் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பினுள் செல்லுங்கள்


29 கொப்பரன் மீன் - black marlin-Istiompax indica . 
இந்தபடத்தலுள்ள மீனுக்கான தூயதமிழ் " கொப்பரன் மீன் " ஆகும் . இதை தமிழ்நாட்டில் சில இடங்களில் " மயில் மீன் " என்னும் அழைப்பார்கள் . தலபத்து மீனா கொப்பரன் மீனா என்று அலசி ஆராய்ந்ததில் இரண்டுமே வகைப்படுத்தலில் ஒன்றானாலும் , குடும்பங்களில் வேறுபடுகின்றன . தலபத்து மீனில் தலையில் இருந்து வால்வரை உயரங்கூடிய சிறகுகள் காணப்படும் . ஆனால் கொப்பரன் மீனில் தலையில் மட்டுமே சிறகு காணப்படும் . உருவத்திலும் இவை வித்தியாசப்படும் . தலபத்து மீன் நீளத்தில் குறைவாகவும் , கொப்பரன் மீன் கருப்பு நிறத்துடன் நீளம் கூடவாக இருக்கும் . இவையிரண்டுமே அதிவேகமாக மணிக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் நீந்தக்கூடியவை . இந்த மீன்னைப்பற்றிய விளக்கத்திற்கு இங்கே நுளையுங்கள் .

30 செவ்விளைமீன் - RED SNAPPER. 


இந்தப் படத்தில் உள்ள மீனுக்குரிய தூயதமிழ் " செவ்விளை மீன் " ஆகும் . இதனை " சங்கரா செவ்விளை மீன் " , " செப்பலி மீன் " , " செப்பிலி மீன் " என்றும் அழைப்பர். இந்த மீன் பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள்.கோமகன் 

2 comments

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.