மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் அறிவியல் - பாகம் 03.


21 வெண்தலை சிலம்பன்- தவிட்டுக் குருவி- கரியில்லாக்கிளி- புலுனி- பன்றிக்குருவி -yellow-billed babbler -Turdoides affinis.


வெண்தலை சிலம்பன், தவிட்டுக் குருவி, கரியில்லாக்கிளி (மலையாளத்தில்) என்று பலவாறு அழைக்கப்படும் பன்றிக்குருவி தென்னிந்தியா (பெல்காம், ஐதராபாத், தெற்குக் கோதாவரி பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளை வட எல்லையாகக் கொண்டது) , இலங்கைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் குருவி - பெரும்பான்மையான சிலம்பன்களைப் போலவே இக்குருவியும் குடிபெயர்வதில்லை. உருவத்திலும் செயலிலும் கள்ளிக்குருவியை ஒத்து இருப்பதால் இதை எளிதில் தவறாக கள்ளிக்குருவி என்றெண்ணக் கூடும். ஆனால், பன்றிக்குருவியின் தலை வெளிர் நிறங்கொண்டு இருக்கும்; மார்பும் தொண்டையும் சற்று கருந்தோற்றத்துடன் விளங்கும்.

22 கொசு உள்ளான்  Little Stint - Calidris minuta. 


பனிக் காலங்களில் நீண்ட தூரம் பயணித்து குடியேறும் பழக்கத்தை கொசு உள்ளான் பறவைகள் கொண்டுள்ளன. பறவைகள், கண்டத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. அந்த வரிசையில், கரைப்பறவை வகையைச் சேர்ந்த, "கொசு உள்ளான்,' தனித்தன்மை கொண்டுள்ளது. "ஸ்கோலோபசிட்' குடும்பத்தில், "சரட்ரிபார்ம்ஸ்' வரிசையில், "கலிட்ரிஸ்' வரிசையில் இவை இடம்பெறுகின்றன.சிறிய கூரான கருமை நிற அலகை கொண்ட இவை, கரையோரமாக தங்களின் இரையை தேடுகின்றன.

ஆர்ட்டிக், ஐரோப்பிய பகுதிகளில் இவை அதிகம் காணப்பட்டாலும், இனப் பெருக்கத்திற்காக தெற்காசிய நாடுகளில் குடியேறுகின்றன. இதனால், தெற்காசியாவை, இவற்றின் புகுந்த வீடாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நடுத்தர நீளத்தில் கருங்காலை கொண்ட இவற்றுக்கு, பறந்து செல்ல போதிய வசதி கிடைக்கிறது. இவற்றுக்கு பனிக்காலம் ஏற்றதாக இருப்பதில்லை என்பதாலேயே ஆப்ரிக்க, தெற்காசிய பகுதிகளை மாறி மாறி தேர்வு செய்கிறது.

இந்தியா போன்ற நாடுகளுக்கு வரும் போது, இவை பெரிய அளவில் வேட்டையாடப்படுகின்றன. இன்னும் சிலர் இவற்றை மருந்தாகவும், இதன் ரத்தத்தை மூட்டு வலிக்கு மருந்தாகவும் உபயோகித்து வருகின்றனர். இவை, அதிகளவில் இனப்பெருக்கம் செய்வதால், இவற்றின் அழிவு தவிர்க்கப்பட்டுள்ளது. கரை கண்ட இடமே சொர்க்கமாக வாழும் இவற்றுக்கு பிற உயிரினங்களால் தொல்லை ஏற்படுவதில்லை. பூச்சிகள், நத்தை, அட்டை போன்றவற்றை உண்டு உயிர் வாழ்கின்றன. குறிப்பாக கொசுக்களை அதிகளவில் உண்பதால், கொசு உள்ளான் என்ற பெயர் வந்தது. அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் இவை குறைந்த அளவே காணப்படுகின்றன.

23 மரகதப் புறா -green dove and green-winged pigeon-Chalcophaps indica. 

மரகதப் புறா வெப்ப மண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும், கிழக்கே இந்தோனேசியா, வடக்கு, கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் புறாவாகும். இப்புறவு, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்பெறுகிறது. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப் புறாவே. இப்புறாவின் பல இனங்கள் காணப்படுகின்றன.

இவ்வினம் மழைக்காடுகளிலும் அதை ஒத்த அடர்ந்த ஈரமான காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள், சதுப்பு நிலக்காடுகள், கடலோரக் குற்றுயரத் தாவரக் காடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை ஐந்தடி வரை உயரம் உள்ள மரங்களில் சில சுள்ளிகளை வைத்துக் கூடு கட்டி, இரண்டு பழுப்பு வெள்ளை நிற முட்டைகளை இடுகிறது. இனச்சேர்க்கை ஆஸ்திரேலியாவில் வசந்த காலத்திலும், தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் இளவேனில் காலத்திலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் வறட்சிக் காலத்தின் பிற்பகுதியிலும் நடைபெறுகிறது.

பறத்தல் பொதுவான புறவுகளை ஒத்த விதத்தில் வேகமாகவும் நேராகவும், முறையான இறக்கைத் துடிப்புகளுடன், அவ்வப்போது விரைந்த கூறிய துடிப்புகளுடன் காணப்படும். பொதுவாக இப்பறவை விரும்பிய காட்டுப்பகுதிகளுக்கிடையே, தாழ்வாகப் பறக்கிறது. எனினும், தொந்தரவு செய்யப்பட நேரங்களில், பறப்பதை விட நடப்பதையே விரும்புகிறது. பறக்கும்போது, அடிச்சிறகுகள் பழுப்பு மஞ்சள் நிறமாகவும், பறக்கும் இறக்கைகள் பழுப்புச் சிவப்பு நிறமாகவும் தெரிகிறது.

மரகதப் புறா தடித்த உருவமுடைய, சராசரியாக 23 முதல் 28 செ.மீ. (10 - 11.2 இன்ச்) நீளமுள்ள, நடுத்தர அளவுள்ள புறாவாகும். பின்பக்கமும் இறக்கைகளும் பளிச்சென மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். பறக்கும் போது, இறகுகளும் வாலும் கருத்தும், பின்பகுதி கருப்பு வெள்ளைப் பட்டைகளுடனும் காணப்படுகின்றது. இதன் தலையும், கீழ்ப்பகுதிகளும் கிரைசோகுலோரா (chrysochlora) இனத்தில் சிவப்பு நிறத்திலிருந்து (லாங்கிராஸ்டிரிஸ் (longirostris) இனத்தில் மர நிறத்திலிருந்து) மெதுவாகக் கீழ் வயிற்றுப்பகுதியில் பழுப்பு நிறமாக மாறுபட்டுக் காணப்படுகின்றது.கண்கள் கருத்தும், அழகும் கால்களும் சிவந்தும் காணப்படுகின்றது.

ஆண் பறவையின் தோள்ப் பகுதியில் வெளிறிய புள்ளியும், தலை பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றது. இவை பெண் பறவைக்கு இருப்பதில்லை. பெண் பறவைகள் மரப் பழுப்பு நிறம் மிகுந்தும், தோள்களில் பழுப்புக் குறியுடனும் காணப்படுகின்றன.இளம் பறவைகள் பெண் பறவைகளை ஒத்த தோற்றத்தில் காணப்படுகின்றன.

மரகதப் புறாக்கள் தனித்தோ, இரட்டையாகவோ, சிறு குழுக்களாகவோ காணப்படுகின்றன.இனச்சேர்க்கை தவிர மற்ற நேரங்களில் இவை பெரும்பாலும் நிலத்திலேயே காணப்படுகின்றன. நிலத்தில் இவை விழுந்த பழங்களைத் தேடி உண்ணுகின்றன. இவை விதைகள், பழங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களை உண்ணுகின்றன. இவை பொதுவாக அணுகக்கூடியவையாகும் பழக்கப்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன.

இவற்றின் கூப்பாடு மென்மையிலிருந்து வலுக்கும் ஆறு அல்லது ஏழு கூவல்கள் கொண்ட, மெதுவான முனகும் கூவலாகக் காணப்படுகின்றது. இவை மூக்கிலிருந்து "ஹூ-ஹூ-ஹூன்" என்றும் ஒசையிடுகின்றன.ஆண் பறவைகள் இனச்சேர்க்கையின் போது மெல்ல ஆட்டமிடுகின்றன.


24 ஆறுமணிக்குருவி - Indian Pitta- Pitta brachyura.

தோட்டக்கள்ளன் (Pitta brachyura) மைனாவின் அளவில் குட்டையான வாலுடன் காணப்படும் (மரத்தில்) அடையும் பறவைகளுள் ஒன்று. இமயமலைக்குத் தெற்கே இது இனப்பெருக்கம் செய்து, குளிர்காலத்தில் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் வலசை வரும். எனவே, இக்குருவியை தமிழ்நாட்டுப் பறவை எனக் கூறவியலாது. இப்பறவையை ஆங்கிலத்தில் இந்தியன் பிட்டா என்றழைக்கிறார்கள்.

இதன் சிறகுப் போர்வையில் பல நிறங்களைக் காணலாம் - பச்சை நிற முதுகு, நீல நிறமும் கருப்பு-வெள்ளைமும் கொண்ட இறக்கை, மஞ்சட்பழுப்பு நிற அடி, கருஞ்சிவப்புப் பிட்டம், கண்ணையொட்டி கருப்பு வெள்ளைப் பட்டைகள் - எனவே தான் இதற்கு பஞ்சவர்ணக் குருவி என்றொரு பெயருண்டு; மேலும் இதற்கு ஆறுமணிக்குருவி, பொன்னுத் தொட்டான், பச்சைக்காடை, காசிக்கட்டிக் குருவி, காளி (மலையாளத்தில்) எனப் பல பெயர்களுண்டு.

25 கல்குருவி அல்லது புதர் ஆரச்சிட்டுக் குருவி - Common Stonechat or Indian Courser- Cursorius coromandelicus.


மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்துங்கள்.

26 . கள்ளிக் குயில் அல்லது சிறுகீற்றுப் பூங்குயில்-sirkeer malkoha or sirkeer cuckoo Phaenicophaeus leschenaultii 

இவை 42 செமீ வரை வளரக்கூடிய பெரிய பறவையினமாகும். இப்பறவையினம் பொதுவாக மண்ணிறம் அல்லது செம்மண்ணிறம் கொண்டதாகக் காணப்படும். நிறை கூடியதாயும் நீண்டும் காணப்படும் இப்பறவையினத்தின் வால் நுனியில் வெண்ணிறமான பக்கக் கோட்டமைப்பில் அமைந்த இறகுகளைக் கொண்டிருக்கும்.

இது செம்பகங்களை ஒத்துக் காணப்படும். இதன் சொண்டு கீழ் நோக்கி வளைந்தும் பிரகாசமான சிவப்பு அல்லது மஞ்சள் நிறம் கொண்டு காணப்படும். இவற்றின் ஆண், பெண் பறவைகள் நிறத்தினடிப்படையில் ஒரே மாதிரியாகக் காணப்பட்டாலும் குஞ்சுகள் நிறம் மங்கியனவாக இருக்கும். இதன் ஒலி "பிசுக்...பிசுக்" என்பது போலிருக்கும். சில வேளைகளில் "ப்..தங்" என்பது போன்ற ஒலியையும் ஏற்படுத்தும்.

சிறுகீற்றுப் பூங்குயில்கள் பொதுவாக பெரு நிலப் பகுதியில், திறந்தவெளிப் புதர்கள், முட்காடுகள், சிறு காடுகள் போன்றவற்றிலேயே காணப்படும். இவை தனித்தோ, சோடியாகவோ காணப்படலாம். இவை பூச்சிகள், பல்லிகள், சிறு பழங்கள் போன்றவற்றை உணவுக்காகப் பெறத் தக்க வகையில் இவற்றில் உடலமைப்பு வளைந்து காணப்படும்.

இப்பறவைகள் புதர்களுக்கிடையே கீரிப்பிள்ளைகள் போன்று மிக வேகமாக ஓடக்கூடியனவாகும். மிகக் குறைவாகவே பறக்கக்கூடிய இப்பறவைகள் கிளைக்குக் கிளை தாவி மரங்களில் மிக வேகமாக ஏறக்கூடியனவாகும். (Glaucidium radiatum)
இவை பூச்சிகளையும், மயிர்க்கொட்டிகளையும், சிறு முண்ணாணிகளையுமே உணவாகக் கொண்டபோதிலும் சிறு பழங்களையும் சில வேளைகளில் உண்பதுண்டு.

சிறுகீற்றுப் பூங்குயில் ஏனைய பூங்குயில்களைப் போன்றே ஒட்டுண்ணியல்லாததாகும். இதன் பொதுவான இனப்பெருக்க காலம் மார்ச்சு முதல் ஓகத்து வரையிலுமாயினும், இது வாழும் இடத்துக்கேற்ப சற்று வேறுபடும்.

முட்தாவரங்களில் 2 முதல் 7 மீற்றர் வரையான உயரத்தில் இது பசிய இலைகளைக் கொண்டு கூடுகளை அமைத்துக்கொள்ளும். ஒரு முறைக்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். முட்டைகள் வெண்கட்டி போன்ற நிறத்திற் காணப்படும்.

27 உண்ணிக்கொக்கு- cattle egret -Bubulcus.

மாட்டுக்கொக்கு என்றும் அழைக்கப்படும் இந்தப்பறவை மேய்ச்சல் புல்வெளிகளிலும் நெல்வயல்களிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் அதிகளவில் காணப்படும் ஒரு கொக்கு ஆகும். சிறு வெண்கொக்கை ஒத்த உடலமைப்பு கொண்டது இது; தடித்த, அளவில் சற்று சிறிய, மஞ்சள் நிற அலகும் இனப்பெருக்க காலங்களில் சிறகுத்தொகுதிகளில் ஏற்படும் நிற மாற்றங்களும் இதனை சிறு வெண்கொக்கிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.

இது பெரும்பாலும் பூச்சிகளையே உண்ணும்; மாடுகளை அண்டிச்செல்லும் இவை மாடுகள் நடக்கும் போது கிளறிவிடப்படும் வெட்டுக்கிளிகள், தத்துக்கிளிகள் போன்றவை பறக்கும் போது கொத்தித் தின்னும்.

27 கம்பிவால் தகைவிலான் - Wire-tailed Swallow-Hirundo smithii.

மேலதிக விளக்கத்திற்கு இங்கே சொடுக்குங்கள்.


28 செம்மீசைச் சின்னான் -Red-whiskered Bulbul - crested bulbul-Pycnonotus jocosus .

செம்மீசைச் சின்னான் (சிவப்பு மீசைச் சின்னான் அல்லது சிவப்பு மீசை புல்புல் என்பது சின்னான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாடும் பறவை. இதன் கொண்டையையும் சிவப்பு நிறமான புழையையும் மீசையையும் கொண்டு இதனை இனங்காணலாம். இதன் கொண்டை காரணமாக இது கொண்டைக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பறவை பழங்களையும் பூச்சிகளையும் முதன்மை உணவாகக் கொள்கிறது.

இப்பறவை 20 செ.மீ நீளம் இருக்கும். இப்பறவையின் அடிப்பகுதி வெண்ணிறத்திலும் மேற்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் வாழ்நாள் சுமார் 11 ஆண்டுகள் ஆகும். இது பரவியுள்ள பகுதிகளில் மலைக் காடுகளிலும் நகர்ப்புறங்களில் உள்ள தோட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது.

தெற்காசியாவின் சில பகுதிகளில் இப்பறவை மனிதர்களால் பிடிக்கப்பட்டு செல்லப் பறவையாக கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.

29 பச்சைக் குக்குறுவான்-Brown-headed Barbet- large green barbet - Psilopogon zeylanicus.

பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet) என்பது ஒரு ஆசிய குக்குருவான் பறவை ஆகும். குக்குறுவான் மற்றும் தூக்கான் பறவை என்பன வெப்பமண்டல நாடுகளின் காணப்படுகின்றன. குக்குருவான் எனும் பெயர் அதன் மயிர்சிலிர்ப்பு போன்ற தோற்றத்தாலும் பெரிய அலகினாலும் ஏற்பட்டது. இது ஒரு மரம்வாழ், பழந்தின்னிப் பறவை.

தடித்த செவ்வலகும் புல்லின் நிறமுங்கொண்ட இக்குக்குறுவானின் தலை, கழுத்து, மார்பு, பின்புறத்தின் மேல்பகுதி அனைத்தும் பழுப்பு நிறத்தில் வெண்கீற்றுகளுடன் காணப்படும். எஞ்சிய சிறகுப் பகுதிகள் பச்சை நிறத்தையுடையன. வளர்ந்த குக்குறுவான் 27 செ.மீ. நீளமுடையது. கண்ணைச் சுற்றி இருக்கும் செம்மஞ்சள் வட்டம் அலகின் அடிவரை செல்லும் . குறுகிய கழுத்தையும், பெரிய தலையையும், குறுகிய வாலையும் உடையது. ஆண், பெண் இரண்டுமே ஒற்றுமையான தோற்றத்தையுடையன.

பச்சைக் குக்குறுவானின் மூன்று இனங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன(M. z. zeylanica, M. z. caniceps, M. z. inornata). இலையுதிர் காடுகளிலும் மரங்களடர்ந்த பகுதிகளிலும் அதையொட்டிய மனிதர்-வாழ்விடங்களிலும் கிராம தோட்டங்களிலும் இவை வாழ்கின்றன.

பச்சைக் குக்குறுவான் மா, பலா, வாழை, பப்பாளி போன்ற சதைக்கனிகளை விரும்பி உண்ணும்.

இது அழுகிய மரங்களில் பொந்தை அமைத்து அதில் 2-4 முட்டைகளை இடுகின்றது . இப்பறவை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தங்கியிருந்து முட்டையிடுகின்றது. ஆணும் பெண்ணுமாக அடை காக்கும்.

பச்சைக் குக்குறுவான்கள் தங்களுக்கிடையே பெரும் சத்தம் எழுப்பி தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. குட்ரூ .. குட்ரூ .. குட்ரூ .. என்ற தொனியில் தொடர்ந்து கூவும் ; ஒரு பறவையைத் தொடர்ந்து மற்றவையும் கூவும். மழைக்காலத்தில் இவை அவ்வளவாகக் கூவுவதில்லை.

30 மாம்பழச்சிட்டு -Common Iora - Aegithina tiphia. 

மாம்பழச்சிட்டு (Common Iora - Aegithina tiphia) என்பது தெற்காசிய வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் (மரங்களில்) அடையும் (passerine) பறவைகளுள் ஒன்றாகும்; இதற்கு மஞ்சள் சிட்டு என்றொரு பெயரும் உண்டு.


இது ஊர்க்குருவியிலும் சற்று சிறிதாய்க் கீழ்ப்பக்கம் பசுமஞ்சளாய் இருக்கும் 14 செமீ . ஆண், பெண் இரண்டுமே இனப்பெருக்கமல்லா காலத்தில் பசுமை கலந்த மஞ்சள் நிறவுடலும் இறக்கைகளில் வெண்பட்டைகளும் கொண்டிருக்கும்; ஆனால் பெண் சிட்டின் மேல்பாகம் பசுமையாக இருக்கும், ஆணின் இறக்கைப்பகுதி கருமை அதிகமாயிருக்கும்; இனப்பெருக்க காலத்தில் ஆணின் முதுகும் தலையும் வாலும் கருத்திருக்கும்; மஞ்சள் நிறம் தூக்கலாகத் தெரியும். குளிர்காலத்தில் ஆண் சிட்டு தன் கருமையை இழந்து பேடையைப் போல் பசுமை போர்த்திருக்கும். மர நெருக்கமுள்ள இடங்கள், தோட்டங்கள், சிறு காடுகளில் இவை இணையுடன் வாழும்.
கோமகன் Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.