சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் 03 - அறிவியல் .


31 கிளிமூக்கு மீன் அல்லது கிளி மீன் - The bicolor parrot fish - Cetoscarus bicolor.இந்தப் படத்தில் உள்ள மீனின் தூய தமிழ் பெயர் " கிளிமூக்கு மீன் " ஆகும் . இதை "கிளி மீன்" என்றும் சொல்வார்கள் . பலரும் படகுகளைச் செலுத்தினாலும் போட்டி விதிகளின்படி இசைக்கலைஞனே சிறப்புப் பரிசான பச்சைப் புள்ளிக்கு தெரிவாகின்றார் . அவரிற்கு எனது வாழ்த்துக்கள் . மேலும் இந்த மீனைப் பற்றி அறிவதற்கு இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .
http://en.wikipedia....iki/Parrot_fish

32 கொம்பன் சுறா அல்லது உழவாரச்சுறா-HAMMERHEAD SHARK.இந்தப்படத்திலுள்ள மீனுக்குரிய தூய தமிழ் கொம்பன் சுறா மீன் ஆகும். இந்த மீனை உழவாரச்சுறா என்றும் அழைப்பார்கள் . இந்தவகையான சுறா மீன் அழிந்து கொண்டிருக்கும் இனமாக கண்டறியப்பட்டுள்ளது . சுறா மீன் பலவகைகளில் காணப்படுகின்றது . அதாவது , பால் சுறா ( Baby Shark ) , கட்டைச் சுறா, பெருந்தலைச் சுறா, கருமுடிச் சுறா ( black shark ) கோர சுறா ( Broadfin Shark ), குண்டன் சுறா ( black tip shark ,grey shark ) குமரிச் சுறா ( zebra shark ) பிள்ளைச் சுறா ( spade nose shark ) , புலிச்சுறா, வள்ளுவன் சுறா ( tiger shark ) , வழுக்குச்சுறா ( yellow dog shark ) என்று வகைப்படுத்தலாம் . இந்த மீனைப் பற்றிய மேலதிக தகவலுக்கு இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .
http://en.wikipedia....ammerhead_shark

33 செம்மீன்- red sqirrel fish.படத்தில் உள்ள மீனுக்குரிய தூயதமிழ் " செம்மீன் " ஆகும் . இந்த மீனைப் பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள்.
http://en.wikipedia....ne_squirrelfish

34 கோழி மீன்- Surgeon Fish. இந்தப்படத்திற்கான தூயதமிழ் " கோழி மீன் " ஆகும் .  மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .
http://en.wikipedia....ki/Surgeon_Fish

35 புள்ளி நண்டு- blue swimming crab- Portunus pelagicus. படத்தில் இருக்கும் மீனுக்கான தூயதமிழ் " புள்ளி நண்டு " ஆகும் . இதனை " நீலக்கால் நண்டு " அல்லது " நாச்சிக்குடா நண்டு "என்றும் இலங்கையில் அழைக்கப்படுகின்றது . இந்த மீனைப்பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளில் நுளையுங்கள் .
http://ta.wikipedia....நீலக்கால்_நண்டு

http://en.wikipedia....tunus_pelagicus

36 நெத்தலி மீன்-Stolephorus indicus. படத்தில் இருக்கும் மீனின் தூயதமிழ் " நெத்தலி மீன் " ஆகும் . இந்தமீனை " நெய்த்தோலி மீன் " என்றும் அழைப்பார்கள் . இந்த மீனைப்பிடிக்கப் பலத்த போட்டி இருந்தாலும் , வழைமைபோல இசைக்கலைஞனே அதிஉயர்விருதான பச்சைப்புள்ளிக்குத் தெரிவாகின்றார் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .
http://en.wikipedia....ephorus_indicus

37 வாளை மீன்- Belt fish- Ribbon fish- Trichiurus haumela.இந்தப்படத்தில் இருக்கும் மீனினுடைய தூய தமிழ் " வாளை மீன் "ஆகும் . இதை " வாலை மீன் " என்றும் சொல்வார்கள் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .
http://en.wikipedia....iki/Ribbon_fish

38 சள்ளை மீன் -spotted etroplus - orange chromide. படத்திலுள்ள மீனுக்கான சரியான தூயதமிழ் " சள்ளை மீன் " ஆகும் இந்த மீன் பரத்தி மீன் , பரடி மீன் . புரடி மீன் , செல்லேல் மீன் என்று தமிழகத்தில் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. மேலும் இந்த மீன் பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள்
http://en.wikipedia....Orange_chromideகோமகன்


Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.