மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் -அறிவியல் - பாகம் 04.


31 கடல்ப் புறா - Seagull. 
மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துக


32 பாம்புத் தாரா - Darter - Anhinga- Anhinga anhinga.


பாம்புத் தாரா  நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு பறவை இனமாகும். இப் பறவையை ஆங்கிலத்தில் டார்டர் (Darter) என்று அழைப்பார்கள். இந்தப் பறவையின் பிரதான உணவு மீன்கள் ஆகும். இப்பறவை மீன் பிடிப்பததற்கும் மீன் கொத்தி, கொக்கு, நாரை போன்ற மற்ற மீனுண்டு வாழும் பறவைகள் மீன் பிடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பறவைகள் மரக் கிளைகளிலோ அல்லது ஆகாயத்தில் பறந்தபடி இருந்து கொண்டோ நீரின் மேல் பரப்பிற்கு வரும் மீன்களைக் கொத்திப் பிடிக்கும். ஆனால் இந்தப் பறவையோ தண்ணீரில் தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு நீந்திக் கொண்டிருக்கும். அப்போது எதிர்ப்படும் மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்த படியே உண்ணும். இது தன் உடல் பூராவையும் நீருள் வைத்துக் கொண்டு நீந்தும்போது பாம்பு நீரில் நீந்திச் செல்வது போலவே தோன்றும். இப்பறவைக்கு பாம்புத் தாரா எனப் பெயர் வரக் காரணமும் இதுவே.

மீன் ஒன்றைப் பிடித்த உடன் கழுத்தை மட்டும் நிருக்கு வெளியே நீட்டி அந்த மீனின் தலை முதலில் வாயுள்ளே செல்லும்படி தூக்கிப் போட்டு பிடித்து பின் விழுங்கும். மற்ற நீர் வாழ் பறவைகள் தண்ணீரில் இருக்கும்போது அவற்றின் உடல் நீரில் மூழ்கிடாது மிதந்திடும். அவற்றின் சிறகுகளில் தண்ணீர் ஒட்டாது. காரணம் அவற்றின் சிறகுகளில் ஒரு வகை எண்ணைப் பசை இருக்கும். தவிரவும் சிறகுகளுக்கிடையே இருக்கும் காற்று அப்பறவைகளை மிதக்கச் செய்யும். ஆனால் பாம்புத் தாராவின் சிறகுகளில் அந்த எண்ணைப் பசை இல்லாதலால் தண்ணீர் சுலபமாக ஒட்டிக் கொண்டு, பளுவாக்கி, அதன் உடலை நீருக்கடியில் கொண்டு செல்லும்.

இனப் பெருக்கக் காலத்தில் பாம்புத் தாரா குடும்பம் நடத்துவது நீர் நிலைகள் அருகேயுள்ள, மரக் கிளைகளில் குச்சி, சுள்ளிகளைக் கொண்டு கட்டிய கூடுகளில் ஆகும்.

33 கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் - Bay-backed Shrike - Lanius vittatus.


மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்துங்கள்


34 குங்குமப் பூச்சிட்டு - Scarlet Minivet - Pericrocotus speciosus )


மேலதிக தகவல்களுக்கு இங்கே அழுத்துங்கள் .


35 வெண்புருவக் கொண்டலாத்தி -White-browed Bulbul- Pycnonotus luteolus.


இது இலங்கையிலும் இந்திய தீபகற்பத்திலும் வாழ்கின்றன. மேற்பகுதி ஒலிவ நிறத்திலும், கீழ்ப் பகுதி வெண்மையாகவும் காணப்படும். இதன் கண் புருவம் மங்கலாகவும் பின் புறம் மஞ்சளாகவும் காணப்படும். இவற்றின் வாழ்விடம் அடர்த்தியான குறுங்காடுகள். இங்கே இவை மறைந்து வாழும் இவற்றை காண்பது கடினம். ஆயினும் அவற்றின் பலத்த ஒலி மூலம் அவற்றின் இருப்பை கண்டுபிடித்துவிடலாம்.

வெண்புருவக் கொண்டலாத்தியின் நீளம் 20 செ.மீ (7 அங்குலம் 8) ஆகும். இவற்றின் மேற்பகுதி ஒலிவ நிறமும் கீழ்ப் பகுதி வெண்மையாகவும் இருக்கும். இப் பறவைகளின் வெண் கண் புருவம், கண்ணுக்கு கீழான வெள்ளை நிற பிறை வடிவம் மற்றும் மீசை போன்ற கரிய கோடு என்பனவற்றால் அடையாளம் காணலாம். பின்புறம் மஞ்சள் தன்மையுடனும் முகவாய் மஞ்சலாகவும் காணப்படும். தொண்டைப் பகுதி வெண்மையானது. பிடரியில் மூன்று அல்லது நான்கு மயிர் போன்றன தென்படும். இறகின் அமைப்பில் ஆணும் பெண்ணும் ஒருமித்தவை. இவை பலத்த ஒலியினை புதரின் மேலிருந்து எழுப்பி, புதரின் உள் சென்று மறைந்துவிடும்.

இப்பறவை வட இந்தியா மற்றும் இலங்கைக்குரிய பறவையாகும். இவை உலர்ந்த பரந்த கிராமப்புற குறுங்காடுகளிலும், அடர்த்தியான புதர்களுள்ள குறுங்காடுகளிலும் தோட்டங்களிலும் காணப்படும்

வெண்புருவக் கொண்டலாத்தி தனியாகவும் சோடியாகவும் காணப்படும். இவை பழங்கள், மலர்த்தேன், புழு, பூச்சி என்பவற்றை உணவாகக் கொள்ளும். பங்குனி முதல் புரட்டாதி வரையான காலப்பகுதியில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இவை வருடத்தில் இரு தடைவைகள் குஞ்சு பொரிக்கும். மாசியும் புரட்டாதியும் இனப்பெருக்கத்தின் உச்ச காலமாகும். இவை மரக்கிளையில் இலகுவான கிண்ணம் போன்ற கூட்டினைக் கட்டி இரண்டு முட்டைகளை இடும். ஒரு பறவை 11 வருடங்களுக்கு மேல் வாழக் கூடியது.

36 மலபார் சாம்பல் இருவாச்சி - Malabar-Grey-Hornbill - Ocyceros griseus. 


மலபார் சாம்பல் இருவாச்சி என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் அதனையொட்டிய தென்னிந்திய மலைப்பகுதிகளிலும் மட்டுமே காணப்படும் இருவாச்சி இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவைகள் நீண்ட அலகினைக் கொண்டிருந்தாலும் மற்ற இருவாச்சிகளில் காணப்பபடும் அலகிற்கு மேலுள்ள புடைப்பு காணப்படுவதில்லை. இவை அடர்ந்த காடுகளிலும் அதனைச்சுற்றியுள்ள இரப்பர், பாக்குத் தோட்டங்களிலும் காணப்படுகின்றன. இப்பறவைகள் சிறு கூட்டமாக வாழும். பழங்களே இவற்றின் முதன்மையான உணவு. எளிதில் அடையாளங்கண்டுகொள்ளத் தக்கவகையில் இவை ஒலி எழுப்புகின்றன.

37 கருங்கொண்டை நாகணவாய்-brahminy myna Brahminy Starling -Sturnia pagodarum .


மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்துங்கள் .http://en.wikipedia....ahminy_Starling

38 வெள்ளைக் கண்ணி -Oriental White-eye- Zosterops palpebrosus. 


வெப்பமண்டல ஆசியாவில் கிழக்கிலிருந்து இந்தியத் துணைக்கண்டம் முதல் தென்கிழக்காசியா வரையிலும் இந்தோனேசிய, மலேசியா நாடுகள் வரை பரந்து காணப்படுகின்றன. சிறு கூட்டமாக உணவைத் தேடும் இவை மலர்த்தேன் மற்றும் சிறு பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. இவற்றின் வேறுபட்ட கண்ணைச் சுற்றிக் காணப்படும் வெள்ளை வளையத்தைக் கொண்டும், மேற்பகுதி முழுவதும் காணப்படும் மஞ்சள் நிறத்தைக் கொண்டும் இப்பறவையினை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். சிறகின் கீழ் காணப்படும் நிழல் போன்ற தன்மையினைக் கொண்டு இதன் துணை இனம் அழைக்கப்படுகிறது.

8-9 செ.மீ நீளமுடைய இச்சிறு பறவை மஞ்சள் தன்மையுள்ள ஒலிவ நிறத்தை மேற்பகுதியில் கொண்டும், கண்ணைச் சுற்றி வெள்ளை வளையமும், கீழ்ப்பகுதியும் கழுத்தும் மஞ்சளாகவும் காணப்படும். வயிற்றுப் பகுதி வெள்ளையான சாம்பல் நிறத்தையுடையது. ஆயினும் சில இனங்கள் மஞ்சள் நிறத்தையுடையன. இருபாலினங்களும் ஒத்த தோற்றத்தையுடையன.

இப் பறவை இனம் குறுங் காடுகளிலும் ஈரலிப்பான காடுகளிலும் வாழ்கின்றன. சில வேளைகளில் சதுப்பு நிலங்களிலும் தீவுகளிலும் பூச்சிகளை உண்டு வாழ்கின்றன.

இப் பறவைகள் சமூகப்பாங்கானவை. கூட்டமாக வாழும் இவை இனப்பெருக்கக் காலத்தில் பிரிந்து வாழும். அநேகமாக மரங்களில் காணப்படும் இவை மிகக் குறைவாகவே தரைக்கு வரும். மாசி தொடக்கம் புரட்டாதி வரை இவற்றின் இனப்பொருக்க காலம். சித்திரை உயர் இனப்பெருக்க காலமாகக் காணப்படுகிறது. மரக்கிளை பிரியுமிடத்தில் தொட்டில் போன்று நெருக்கமாக கூடு கட்டும். கூடானது சிலந்திவலை, மரப்பாசி, மரநார் முதலியவற்றால் அமைக்கப்படும். கூடு கட்ட 4 நாட்கள் எடுத்துக் கொள்ளும் இப் பறவை, இரண்டு வெளிறிய நீல நிற முட்டைகளை இரண்டு நாட்கள் இடைவெளியில் இடும். 10 நாட்களுகளில் குஞ்சு பொரிக்கும். ஆணும் பெண்ணும் குஞ்சுகள் கவனித்து, உணவூட்டும். 10 நாட்களின் பின் குஞ்சுகள் பறக்கத் தயாராகிவிடும். பூச்சிகளை பிரதான உணவாகக் கொள்ளும் இவை மலர்த்தேன் மற்றும் சில பழங்களையும் உணவாகக் கொள்ளும்.


39 பனங்காடை - Indian roller-Coracias benghalensis.


பனங்காடை என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும்.இது ஈராக் முதல் தாய்லாந்து வரை காணப்படுகிறது. இப்பறவை நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். திறந்த புல்வெளிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படும். ஆண், பெண் பறவைகளுக்கிடையே தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. கொண்டை, வால், இறக்கைப் பகுதிகள் நீலநிறத்திலும் கழுத்து உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

இப்பறவைகள் சிறு பூச்சிகள், ஊர்வன, தவளை முதலானவற்றை உணவாகக் கொள்ளும். மார்ச் முதல் சூன் வரையான காலம் இவற்றின் இனப்பெருக்க காலம். பொதுவாக மரப்பொந்துகளில் மூன்று முதல் ஐந்து வரை முட்டைகள் இடும். இவற்றின் ஒலி காக்கை கரைவது போல் இருக்கும்.

இப்பறவை கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, பீகார் மாநிலங்களின் மாநிலப்பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனங்காடையைப் பார்த்தால் நல்ல சகுனம் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. முன்பு மேனாட்டுச்சீமாட்டிகள் உடையலங்காரத்திற்கு இதன் சிறகுகளைப் பயன்படுத்தியதால் இவை வேட்டையாடப்பட்டு இதன் இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.


40 இலங்கைக் காட்டுக்கோழி - Sri Lankan junglefowl -Gallus lafayetii.


இது இலங்கைக்கு உரியது. இது வீட்டில் வளர்க்கும் கோழிகளை உருவாக்கிய காட்டுக்கோழியான, இந்தியாவின் சிவப்புக் காட்டுக்கோழி எனப்படும் கல்லஸ் கல்லஸ் வகைக்கு நெருங்கிய உறவுள்ளது.

இவை அளவிற் பெரிய பறவைகள், ஆண் பறவைகள் பல நிறம் கொண்ட இறகுகளைக் கொண்டவை, எனினும் அடர்த்தியான காடுகளில் இவற்றைக் கண்டுகொள்வது கடினம். இவை காடுகளிலும், பற்றைகளிலும் வாழுகின்றன. இலங்கையில் இவற்றை, கித்துல்கல, யால, சிங்கராஜ ஆகிய இடங்களில் காணலாம்.

இது கல்லஸ் இனத்தைச் சேர்ந்த நான்கு வகைப் பறவைகளில் ஒன்று. இது ஒரு நிலத்தில் கூடு கட்டும் பறவை. இது ஒரு கூட்டில் 2 - 4 முட்டைகள் வரை இடும். பெசண்ட் குடும்பத்தைச் சேர்ந்த பல பறவைகளைப் போலவே இவ் வகையிலும், ஆண் பறவைகள், அடைகாப்பதிலோ அல்லது பொரிக்கும் குஞ்சுகளை வளர்ப்பதிலோ எவ்வித பங்கும் வகிப்பதில்லை. இவ் வேலைகளை மங்கலான நிறத்துடன், சிறப்பான உருமறைப்புக்கான உடலைக் கொண்ட பெண் பறவைகளே செய்கின்றன.

ஆண் இலங்கைக் காட்டுக்கோழி சுமார் 66 - 73 சமீ. வரை நீளம் கொண்ட பறவையாகும். இது நாட்டுக் கோழி போன்ற உடலமைப்பும், செம்மஞ்சள் கலந்த சிவப்பு நிற உடல் நிறமும், கடும் ஊதா நிற சிறகுகளையும், வாலையும் கொண்டது. தலையின் பின்பகுதியும், கழுத்தும் பொன்னிறமானவை. முகம் வெறுமையான சிவப்புத் தோலையும், முகப்பகுதியிலிருந்து மடிந்து நீண்டு தொங்கும் செந்நிறத் தோற் பகுதியையும் கொண்டது. உச்சியிலமைந்துள்ள "கொண்டை" யும், மஞ்சளான மையப் பகுதியுடன் கூடிய சிவப்பு நிறமானதே.

பெண் மிகவும் சிறியது, 35 சமீ. நீளம் மட்டுமே கொண்டது. இவை அடிவயிற்றிலும், மார்பிலும் வெள்ளை நிறம் அமைந்த, மண்ணிற உடல் நிறம் கொண்டவை.பெரும்பாலான பெசண்ட் குடும்பப் பறவைகளைப் போலவே இலங்கைக் காட்டுக்கோழியும் நிலத்தில் வாழும் வகையாகும். இவை நிலத்தைக் கால்களால் கிளறி, பல்வேறு விதைகள், விழுந்த பழங்கள், மற்றும் பூச்சிகள் போன்றவற்றை எடுத்து உண்கின்றன. காட்டுக்கோழி இலங்கையின் தேசியப் பறவையாகப் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோமகன் Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.