சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும் - இறுதிப் பாகம் - அறிவியல் .

வணக்கம் கள உறவுகளே!!!

வாடைக்காற்றுக் காலம் முடிவடைந்து கொண்டல் கற்று வீசுவதாலும் , எனது றோலறில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறினாலும் , எனது மடிப்பு வலையில் ஏற்பட்ட பொத்தல்களை சீர்செய்வதற்குமாக எனது றோலரை பிரான்சின் வடமேற்கு கோடியில் இருக்கும் லு ஹார்வ் ( LE HARVE ) இறங்கு துறைக்குத் திருப்புகின்றேன் . உண்மையில் இந்தப் போட்டி மிகவும் கடினமானது . ஏனேனில் மீன்களின் முக அமைப்பு எல்லாமே ஏறத்தாள ஒன்றாக இருக்கும் . அத்துடன் இந்த மீன்களைப் படம் பிடித்த புகைப்படக்கலைஞர்களது கோணங்களும் வித்தியாசப்படும் . ஆனாலும் , ஆர்வமுடன் பங்குபற்றிய அனைத்துக் கள உறவுகளுக்கும் , கரையில் நின்று விடுப்பு பார்த்த கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . நேர காலங்கள் கூடி வரும் வேளையில் இன்னுமொரு போட்டித்தொடரில் உங்களைச் சந்திக்கின்றேன் .

கோமகன் 

00000000000000000000000000000000

40 கொள்ளுக் கலவாய் -comet grouper.


படத்திலுள்ள மீனுக்கான தூயதமிழ் " கொள்ளுக் கலவாய் மீன் "ஆகும் .இந்த மீன் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே நுளையுங்கள் .

41 சேவல் மீன் -ion fish.


படத்திலுள்ள மீனுக்கான தூயதமிழ் " சேவல் மீன் " ஆகும் . இதை " சிங்க மீன் " என்றும் அழைப்பர் .  இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள் .


42 திரளி மீன் (Golden shiner fish)


படத்தில் உள்ள மீனிற்கான தூயதமிழ் " திரளி மீன் " ஆகும் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள்

43 நாக்கு மீன்- flat fish - sole fish - tongue sole fish. 


படத்தில் உள்ள மீனிற்கான தூயதமிழ் "நாக்கு மீன் " ஆகும் .இதனை " மணங்கு மீன் " என்றும் அழைப்பர் .  மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .
கோமகன் 
Post a Comment

Popular posts from this blog

"ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது"?-நேர்காணல் புஷ்பராணி சிதம்பரி.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் - அறிவியல் -இறுதிப்பாகம் பாகம் 04 ,-40. - 50 )

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் அறிவியல் பாகம் 03 - 31 - 40.